Pages

Saturday, December 8, 2012

துபாய் மீன் மார்கெட் பற்றி ஒரு பார்வை!

            
எனது அனுபவம்:
    நான் துபாய் வந்தது 1999 ஜூன் மாதம் முதல் தேதியன்று, வந்த மறுநாள்காலை எனது  நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக சென்றேன், அவர் மீன் மார்கெட் பக்கத்தில் இருப்பதாகவும், மீன் மார்கெட் வந்தால்கூட போதும் நான் அங்கு வருகிறேன் என்று சொல்லிருந்தார். எனக்கு இடம் தெரியாததால் வேறு ஒரு நண்பர் உதவியுடன் அங்கு சென்றேன். நண்பரிடம் ஊரில் உள்ள செய்திகளை எல்லாம் சொல்லிமுடிதேன். அப்படியே பேசிக்கொண்டே  என்னை மீன் மார்கெட் பக்கம் அழித்துச் சென்றார்.

        அங்கு சென்றதும் எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது! ஆமாங்க ஒரு 'ஈ' - 'எறும்பு'கூட இல்லாமல் மிகவும் சுத்தமாக இருந்தது. பார்த்ததும் என்னால் நம்பவே முடியவில்லை எங்க  ஊர் பக்கம் எவ்ளோ 'ஈ' - 'எறும்பு' களோடு மிகவும் அசுத்தமான இடத்திலும் இருக்கும், மீன் வாங்கவே பிடிக்காது. ஆனால் இங்கு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.

    
 பார்த்தவுடனேயே எல்லா மீன்களிலும் ஒரு ஒரு கிலோ வாங்கனும் போலிருந்தது. நண்பன் இரண்டு கிலோ மீன் வாங்கினார், அவர் அறைக்குச் சென்று சமைத்து கொடுக்கச்சொல்லி சாப்பிட்டுவிட்டுதான் வந்தேன்.

       எனது அண்ணன் இங்கு இருந்தார் அவருடன்தான் நானும் தங்கிருந்தேன், சமைத்துதான் சாப்பிடவேண்டும் கம்பெனியில் ரூம் மற்றும் சமையலுக்கு தேவையானப் பொருட்க்களை மட்டும் வாங்கிக் கொடுப்பார்கள். எனக்கு சமைக்கத்தெரியாது அதனால் அண்ணன்தான் சமைப்பார். நான் காய்கறிகளை நறுக்கிக்கொடுப்பேன், அவ்ளோதான் அப்பறம் சாப்பிட மட்டும் நன்றாகத் தெரியும். அண்ணன் மீன் சாப்பிடமாட்டார் என்பதால் மீன் மட்டும் சாப்பிட நண்பர்கள் ரூம் பக்கம் போனால்தான் சாப்பிட முடியும், அதுவும் நான் போகும் நாட்களில் அவர்கள் 'மீன்' சமைத்திருந்தால் மட்டும் கிடைக்கும். 


        நான் அந்த பக்கமாக போகும்போதும், வரும்போதும் மீன் வாங்கி வறுத்து சாப்பிடவேண்டும் என்று ஏக்கமா இருந்தது. ஒரு வருடத்துக்கு பிறகு எனக்கு மலையாளி நண்பர் ஒருவர் கிடைத்தார். நான் எப்பவும் அவர்கூடவே ஊர் சுற்றுவேன், அடிக்கடி அவரது அறையில் மீன் வறுவல் செய்து சாப்பிட்டு வந்தோம், அவருக்கும் மீன் குழம்பு வைக்கத்தெரியாது. 

          மேலும் ஒரு வருடத்திற்கு பிறகு அவரது மனைவியும் இங்கு வந்தாங்க, அதன் பிறகுதான் எனக்கு மீன் ஏக்கமே குறைந்தது. அவங்க அடிக்கடி மீன் வறுவல் மீன் குழம்பு என்று செய்து கொடுத்துஅசத்தினாங்க... மீன் இல்லாமல் சாப்பாடே சாப்பிட மாட்டார்கள். நாங்களும் மீன் குழம்பு விதவிதமாக வைக்கக் கற்றுக்கொண்டோம். பிறகு எனக்கும் வேலை மாற்றம் கிடைத்தது தினமும் இரண்டுமுறை இந்த மீன் மார்க்கெட்டுக்குப் போகவேண்டிய வேலை. பிறகென்ன வாரத்தில் இரண்டுநாள் எனக்குப் பிடித்த மீன்களை வாங்கிக்கிட்டு வந்து எனது சுவைக்கு தகுந்தவாறு சமைத்து சாப்பிடுவேன்.

துபாய் மீன் மார்கெட்:
      இங்கு எல்லாவகையான மீன்களும் கிடைக்கும். மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பார்கள். மீன் சாப்பிடாதவர்கள்கூட இங்கு வந்து மீன் சாப்பிடக் கற்றுக்கொண்டார்கள், மீன் விற்பனையாளர்களில் அதிகமாக மலையாளிகள்தான் இருப்பார்கள். இவர்களிடம் சென்றால்தான் நமக்கு பெயர் தெரியாத மீன்களையும் கேட்டு வாங்கலாம் என்று இந்தியர்கள் எல்லோரும் இங்குதான் கூட்டம் கூட்டமாக செல்வார்கள்.
      முதலில் உள்ள மூன்று வரிசைகளில் மலையாளிகல்தான் இருப்பார்கள். நான் எப்போது சென்றாலும் இந்த பக்கத்தில் இருந்துதான் வலம் வருவேன். மலையாளிகள் மிகவும் அதிகமாக விரும்பி சாப்பிடும் மீன் 'மத்தி' மீன், 'ஐலா' மீன் இது இரண்டுதான், அவர்கள் இந்த இரண்டுவகையான மீன்களை அதிகம் விருப்புவதற்கு காரணம், மீனில் உள்ள "சுவை" என்று சொல்லிவிட முடியாது, விலைக் குறைவான மீன்கள் என்றால் இந்த இரண்டு வகைகள்தான். அதனாலும்தான் இந்த மீன்கள் மீது இவ்ளோ விருப்பம். இதன் விலை காலையில் கிலோவுக்கு 5 திராம்ஸ், அல்லது 10 திராம்ஸ், ஒரு மன் (நாலுகிலோவுக்கு) 20 திராம்ஸ்தான், கடை அடைக்கும் நேரத்தில் போனால் இரண்டு கிலோவுக்கு  5 திராம்ஸ் கொடுத்தால் போதும்.

       இங்கு மீதமுள்ள மீன் விற்பனையாளர்கள் யார் என்று பார்த்தால் பாகிஸ்தானிகள்தான். ஒன்று இரண்டு சதமானம் பங்காளாதேஷ்காரர்கள். இன்னும் ஓரிரு சதமானத்தவர்கள் வேறு நாட்டை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.  மீனைக் "கிளீன்" செய்து கொடுக்க கிலோவுக்கு 1:50 திராம்ஸ்தான், தலை இருக்கணுமா? அல்லது வேண்டாமா? என்று கேட்பார்கள் நமக்கு எப்படி வேண்டுமோ! அப்படி சொன்னால் போதும், சிரியவகை மீன்களை சுத்தம் செய்யும்போது தலை கிடைக்காது என்று சொல்லிவிடுவார்கள்.
             இதுதான் "மத்தி" மீன் கிழேயுள்ள படத்தில் பார்க்கவும், இந்த மீன்கள் ஓமன் மற்றும் துபாய் கடல்ப் பகுதிகளில் அதிகம் கிடைப்பதாக ஒரு மீன் வியாபாரி சொன்னார்.
            காலையில் 4 மணிக்கு தொடங்கி 11 மணிவரை விற்பனை நடக்கும், 11:30 க்கு பிறகு சுத்தம் செய்வார்கள் மருந்து அடித்து மேலும் தூய்மை படுத்திவிடுவார்கள். மதியம் அங்கு சென்று பார்த்தால் அந்த இடம் மிகவும் சுத்தமாக இருக்கும்.

         மீன் மார்கெட் என்பதால் மீன்கள் மட்டும்தான் கிடைக்கும் என்று நினைத்துவிடக்கூடாது.பழங்கள், பச்சைக் காய்கறிகள் , அரிசி , ஆட்டுக்கறி , மாட்டுக்கறி, கருவாடு, இளநீர், பேரீச்சம்பழம் என எல்லா உணவுப் பொருட்களும் கிடைக்கும்.
         இங்கு வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காகவும், மீன்களை கொண்டுவரும் வாகனங்களை நிறுத்துவதற்காகவும், மிகப்பெரிய அளவில் 'பாக்கிங்' வசதிகள் உள்ளன. வாடிக்கையாளர்களின் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு கட்டணம் செலுத்தவேண்டும். விடுமுறை நாட்களிலும்கூட இந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தினால் கண்டிப்பாக கட்டணம் செலுத்தவேண்டும். இந்த 'பார்கிங்கிற்கு' விடுமுறை கிடையாது. ஒரு மணி நேரத்திற்கு இரண்டு திராம்ஸ் என கொடுக்கவேண்டும்.
            அதிக மீன்களை வாங்குபவர்களுக்கும், மீனை கையால் தொடுவதற்கு அச்சப்படுபவர்களுக்கும் பிரச்சினை இல்லாமல் இருக்க இங்கு கூலி ஆள்களும் கிடைக்கும். மேலும் சில படங்கள் உங்கள் பார்வைக்காக . (படங்கள் எல்லாம் கூகுள் உதவியோடு இணையத்திலிருந்து)
  உதவி செய்வதற்காக தயார் நிலையில் இருக்கும் கூலி ஆட்கள். சில நேரங்களில் நாம் கூப்பிடாமலேயே நமது கையில் இருக்கும் மீன்களை வாங்கி அவர்கள் வண்டியில் வைத்துக்கொள்வார்கள். ஒருமுறை எனக்கும் இதுபோல் அனுபவம் கிடைத்தது.
        மீன்கள் மட்டும் இல்லை, கடலில் வாழும் அனைத்தும் இங்கு கிடைக்கும், தனித்தனியாக பிரித்து வைத்திருப்பார்கள்.

        கீரை வகைகளும், காய்கறிகளும் "பிரெஷா" கிடைக்கும். இதை வாங்கலாமா? அதை வாங்கலாமா? என்ற ஆசைகள் வரும்.
      மீன்களை 'கிளீன்' செய்யும் இடம், இது பழைய நிலை, இப்போது உக்காரவேண்டிய  அவசியம் இல்லை, நிக்கிற நிலையிலேயே செய்யலாம்.

விற்பனை முடிந்ததும், அந்த இடத்தை சுத்தம் செய்தபிறகு இப்படிதான் இருக்கும். யாராவது ஒரு சிலர் நிழலுக்காக இங்கு பேசிக்கொண்டிருப்பார்கள்.
தர்ப்பூசணிப் பழம், மற்றும் காய்கறிகள், இங்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.
     கருவாடு, மிகவும் சுத்தமாக இருக்கும், மொத்தமாகவும் சில்லைரையாகவும் இங்கு கிடைக்கும்.
இளநீர்  ஓமன் நாட்டில் இருந்து வருவதுதான், சில சமயம் ஸ்ரீ லங்கா , மற்றும் இந்தியாவில் இருந்தும் வருவதாக சொல்வார்கள்.
         பேரிச்சம்பழங்கள், விதவிதமாக எல்லா நாட்களிலும் கிடைக்கும். இப்பவும் நான் அடிகடி இங்கு சென்று பழங்கள், காய்கறிகள் , மீன்களையும் வாங்கி வருகிறேன். மீன் வாங்குவதற்காக போவேன். இங்குதான் எல்லாமே கிடைக்கிறதே என்று வீட்டுக்கு தேவையானதையும் வாங்கி வருவேன். 

*****************************நன்றி, மீண்டும் சந்திப்போம்.********************

44 கருத்துகள்:

நம்பள்கி said...

ஒரு இளநி என்ன விலை? இந்திய ரூபாயில்.
நம்மூர் ஆட்கள் அங்கு சுயமாக வியாபாரம் செய்யலாமா?

சேக்கனா M. நிஜாம் said...

ஆஹா ! அருமை... அருமை...

நேரில் சென்று வந்ததுபோல் உள்ளது உங்களின் அனுபவங்கள்

தொடர வாழ்த்துகள்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நான் அசைவம் சாப்பிடமாட்டேன்.என்றாலும் நல்ல தகவல். சொன்ன விதம் சுவாரசியமாக இருந்தது.

Unknown said...



மீன் சுவை அறியேன்! உங்கள் பதிவு சுவையாக உள்ளது!

எம்.ஞானசேகரன் said...

நல்ல கட்டுரை! நானும் துபாயில் இருந்தபோது இதையெல்லாம் பார்த்து ஏங்கியவன்தான். எல்லாம் பணம் மட்டுமல்ல மனம் செய்யும் மாயம்தான்!

Anonymous said...

இந்த இடத்தை இரண்டு முறை பார்த்திருக்கிறேன்... இந்த இடத்திற்கு பக்கத்திலே கடல் உண்டு..அப்படியே உக்காந்து கொண்டு ரசிக்கலாம்.. காலியாக உள்ள கடற்கரை ஓரங்களில் வெள்ளிகிழமை நிறைய பாக்கிஸ்தானியர்கள் மற்றும் சில இந்தியர்கள் கிரிக்கெட் விளையாடுவதை ரசிக்கலாம்..இன்னும் நிறைய இடங்கள் உண்டு துபையில் பொழுது போக்குவதற்கும் ரசிப்பதற்கும்... நான் சென்ற வாரம் ரஸ் அல் கைமா வில் உள்ள ஐஸ்லாந்து வாட்டர் பார்க் சென்றிருந்தேன்.. மிக அருமையாக இருந்தது.. தீம் பார்க் சுவற்றை கடல் அலைகள் தழுவி செல்கிறது.. அந்த இடத்தை பார்க்கவே அவ்வளவு அருமையாக இருந்தது.. குடும்பத்துடன் சென்று வர சரியான இடம்.. நீங்கள் அங்கு சென்றும் பார்வையிட்டு அதை பற்றியும் விவ்ரிக்கலாமே அண்ணா..! நுழைவு கட்டணம் திர்ஹம்ஸ்.. ஒரு நாள் முழுவதும் எந்த விளையாட்டுகளும் விளையாடலாம்... துபாய் யூனியன் பஸ் ஷ்டஷன் இருந்து இலவசமாக சென்று வர போக்குவரத்து வசதியும் உண்டு... மேலதிக தகவல்களுக்கு http://www.icelandwaterpark.com/ கிளிக் செய்க...

வடுவூர் குமார் said...

ஒரு மதிய வேளையில் சென்றதால் இவ்வளவு மீன்கடைகளை பார்க்கமுடியவில்லை.

Aashiq Ahamed said...

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக சகோ,

ரொம்ப ரசிச்சு படிச்சேன். படங்கள் ரொம்ப அழகா இருக்கு...

பகிர்வுக்கு மிக்க நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

ஸாதிகா said...

அருமையான படங்களுடன் சுவாரஸ்யமாகன பகிர்வு!

ஸ்ரீராம். said...

இவ்வளவு சுத்தமாக விற்பனை செய்ய நம்மூரில் எப்போழுதுக் கற்றுக் கொள்வார்களோ?!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிக நேர்த்தியாக உள்ளது, இங்கும் இப்படியே பேணுவார்கள்.
நீங்கள் சொன்னவிதம் அருமை!

சென்னை பித்தன் said...

மீன்!ஐயோ!
காய்கறிகள் !ஓகே!

வே.நடனசபாபதி said...

புலவர் ஐயா அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகின்றேன்.

உஷா அன்பரசு said...

நான் சைவம். மீன் படங்களை விட காய்கனிகள் படங்கள் கவர்ந்தது.

இராஜராஜேஸ்வரி said...

மீன் விற்கும் இடத்தில் காய்கறிகள் வாங்க மனம் ஒப்புவதில்லை !!!

சிந்தையின் சிதறல்கள் said...

அனுபவித்து எழுதியிருப்பது அருமை.....

படங்களும் அருமை தொடருங்கள்.

சசிகலா said...

ஆச்சரியம் ஆனால் உண்மை அப்படியில்ல இருக்கு நீங்க சொல்றது. மீன் மார்க்கட்ல ஈ இல்லாமலா ?

படமே பார்க்க பார்க்க அழகா இருக்குங்க. காய்களும் பசுமையா வாங்கனும் போல இருக்கு.
சொல்லிச்சென்ற விதம் சிறப்பு.

மாலதி said...

அருமை... அருமை...

arasan said...

உங்கள் பதிவில் மீன் மார்கெட்டை ஒரு ரவுண்டு வந்தது போல ஒரு உணர்வு ...

Balaji said...

ஆஹா... அருமை அருமை... தம்பி...
மீன் மார்க்கெட்டைச் சுத்திப் பார்த்தாச்சு...

மனோ சாமிநாதன் said...

உங்கள் பார்வையில் மீன்மார்க்கெட் பற்றி மிகவும் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்!! வாழ்த்துக்கள்!

ஆத்மா said...

துபாய் என்னா அங்க ஈ காக்கா இருக்கவா பொகுது என்னு எங்க ஆத்தா சொல்லுறதை இப்பதான் நம்புறேன்....
அழகான பதிவு + படங்கள்

Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com/2012/12/latest-burka-abaya-models.html


ரொம்ப சூப்பரான பதிவு

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க ஐயா.

semmalai akash said...

உங்களுடைய முதல் வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

semmalai akash said...

ஆமாம் நண்பரே!உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

ம்ம்ம் மதியம் அடைத்துவிடுவார்கள்.
உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

semmalai akash said...

உங்களுடைய முதல் வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

semmalai akash said...

:-))))))))))))உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பா.

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க ஐயா.

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க ஐயா.

semmalai akash said...

அப்படியா!
உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

semmalai akash said...

மீன் பிடிக்கவில்லை என்றால் அப்படிதாங்க இருக்கும் ஆனால் இங்கு இதன் ஸ்மல்கூட குறைவுதான். சுத்தமாக இருக்கும்.
உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க அண்ணா.

semmalai akash said...

ஹா ஹா ஹா !! ஈ காக்கா எல்லாம் இருக்கு நண்பரே! ஆனால் சுத்தமா வைத்திருக்கிறார்கள் .
உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

semmalai akash said...

உங்களுடைய முதல் வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

Ranjani Narayanan said...

அசைவ பதிவு போட்டு என்னைபோல சைவப் பிரியர்கள் வரமுடியாம பண்ணிட்டீங்களே!
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

Post a Comment