Pages

Monday, December 31, 2012

வாருங்கள் நண்பர்களே! புதிய வருடத்தை வரவேற்போம்.

இனிய  புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

     ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசுவதற்காக கலைவாணர் அழைக்கப் பட்டிருந்தார். அப்பொழுது அவர் மேடையில் பேசும்போது ஒரு கேள்வியை எழுப்பினாராம்.

எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?

- என்று  கலைவாணர் அவர்கள் கேட்டதும் மக்கள் அனைவரும். பேனா மைதான். கருப்பு மை, நீல மை மற்றும் சிகப்பு மையாகத்தான் இருக்கும் என்று சொன்னார்களாம்.

அப்படி  இல்லை என்று கலைவாணர் அவர்கள் சொன்ன பதில்:

      சிலர் பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள்.  வேறு சிலர் பொறாமையிலும் தொட்டு எழுதுகிறார்கள்.  சிலர் தற்பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள்.  சிலர் பழமையிலும் தொட்டு எழுதுகிறார்கள்.

        ஆனால் தொடக்கூடாத மைகள், மடமை, கயமை, பொய்மை, வேற்றுமை.

        நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் நெஞ்சைத் தொடும்படியாக எழுத வேண்டும்.

  அவர்கள் நீக்க வேண்டிய மைகள் வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடமை, அறியாமை.

     இப்படி  அருமையான ஒரு சிந்தனையை நினைவில் கொண்டு இனிய ஆங்கில புத்தாண்டில் கால் எடுத்து வைப்போம். வாருங்கள் நண்பர்களே!
*******************நன்றி, மீண்டும் அடுத்த வருடத்தில் சந்திப்போம்.**************

Sunday, December 30, 2012

சின்னச் சின்ன சந்தோசம்தாங்க வாழ்க்கையே!


                    பொதுவாகவே! மனித வாழ்க்கையில் சந்தோசமும் துக்கமும்  நிறைந்திருக்கும், சந்தோஷம் வரும்போது சிரித்தும், துக்கங்கள் வரும்போது அழுதும் நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம். சிலருடைய வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாகவே இருக்கும், சிலருடைய வாழ்க்கை எப்பொழுதும் சங்கடமாகவே இருக்கும்.

" சந்தோஷம் வந்தால் நீயே சிரித்து மகிழ்!
 துக்கம் வந்தால் என்னிடமும் பகிர்ந்துக்கொள்!" "
           
                எங்கேயோ படித்தது இப்போது ஞாபகம் வருகிறது. மனிதன்தான் மனிதனின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளமுடியும். மனிதன்தான் மனிதனுக்கு உதவமுடியும். என்ற எண்ணம் எப்போதும் வேண்டும். 

            காதல், கவர்ச்சி, காமம், சபலம் இவைகள் எல்லாம் மனிதர்களின் மனதில் புதைந்து கிடக்கும் ஏக்கங்கள். இவற்றை எல்லோரும் எப்போதும் வெளிபடுத்துவதில்லை. வெளிபடுத்தவும் கூடாது. இவைகள் எல்லாம் எப்பொழுதும் இலைமறைகாயாகவே இருக்கவேண்டும்.

           பணம், படிப்பு இவற்றை எப்போதும் தேடிக்கொண்டே இருக்க வேண்டும், இவற்றின் தேடல் குறையும்போது நமது வளர்ச்சியும் குறைந்துவிடும். ஆசையை எப்பொழுதும் அடக்கி ஆளவேண்டும். அப்போதுதான் நிம்மதியான வாழ்க்கையை வாழமுடியும். 

          உலகில் எத்தினையோ சாதிகள், மதங்கள் இருக்கிறது. ஆனால் பணம் என்கிற பவருக்கு முன்னால் இரண்டே சதிதான், இரண்டே மதம்தான். ஒன்னு இருப்பவன், இரண்டாவது இல்லாதவன்.

        பணக்காரர்களைப் பார்த்து ஏழைகள் பொறாமை படுவார்கள் இது இயல்புதான் அதேநேரம்  ஏழைகளைப் பார்த்து பொறாமைப்படும் பணக்காரர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. இவர்களிடம் உள்ளவைகள் அவர்களிடம் இல்லை, அவர்களிடம் உள்ளவைகள் இவர்களிடம் இல்லை, இதைதான் இருப்பவன் இல்லாதவனை பார்த்து பொறாமைப்படுகிறான்  என்று சொன்னேன். 

            மனித வாழ்க்கையில் சந்தோஷத்திற்கு சாதி, மதம், பணம் காசு, இருப்பவன் இல்லாதவன் என்ற இனப்பிரிவினைகள் கிடையாது. எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்கும் விஷயங்கள்  நம் முன்னாடியே கொட்டிக் கிடக்கிறது, நாம் இதை விட்டுவிட்டு எங்க எங்கேயோ தேடிக்கொண்டு அலைகிறோம். 

           சந்தோஷத்திற்கான மந்திர வார்த்தைகள் சில  வாழ்த்துகள், நன்றி, நல்லாருக்கு, கலக்கல், அருமை இப்படிப்பட்ட சாதாரண வாரத்தைகளே போதுமானது.

உதாரணம்:-

     சாதரணமா அம்மாவோ அல்லது சகோதரிகளோ, அல்லது மனைவியோ  கஷ்டப்பட்டு சமையல் செய்வாங்க, நாம அதில் ஏதாவது குறை இருந்தால் கண்டிபிடித்து என்ன இது ச்சே! இதெல்லாம் சமையலா என்று சொல்வோம். இப்படி குறைகளை மட்டுமே கண்டுபிடித்து பேசுவது வாழ்க்கை இல்லைங்க, அதன் நிறைகளை பேசுவதுதான் வாழ்க்கையே! 

அம்மா சமையல் அருமை!
அக்கா சமையல் நல்லாருக்கு!
வாவ்! சமையல் கலக்கல், சூப்பர் என்று சொல்லிப்பாருங்க.. அன்னைக்கு முழுவதும் அவங்க சந்தோஷமா இருப்பாங்க, அவங்க மட்டும் இல்லை குடும்பத்தையே அன்றைய நாள் முழுவதும் சந்தோஷமா பார்த்துகொள்வார்கள். 

           இப்படியே ஒரு சின்ன சிரிப்புடன் வீடு, அலுவலகம், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் பேசிப்பாருங்க வாழ்க்கை சுகமா இனிக்கும்.

        வாழ்க்கையை புரிஞ்சிக்கோங்க நம் மனசுக்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுங்க, எதற்கும் கோபப்படாதிங்க சிரிச்சிகிட்டே பேசுங்க, எல்லாமே சொல்ல நல்லாருக்கும் பின்பற்றுவதுதான் கஷ்டம் என்று சொல்கிறீர்களா? முடியுங்க ஒருநாள் முயற்சி செய்து பாருங்களேன்.

" குறைகளை மறப்போம், நிறைகளை நினைவில் கொள்வோம், வாழ்க்கையை அழகாக சுவாசிப்போம்."

இந்த  வருடத்தின் கடைசி பதிவு இதுதான். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழத்துகள்.
***********************************************************************************
      

Tuesday, December 25, 2012

கும்கி - அய்யய்யய்யோ ஆனந்தமே...!, சொல்லிட்டேனே இவ காதல...!


அய்யய்யய்யோ........ ஆனந்தமே......!, நெஞ்சிக்குள்ளே......ஆரம்பமே.....!
             புதுமுக நாயகன் விக்ரம்  பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம்தான் கும்கி. திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்க, எம் சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது. அப்பப்போ "மைனா" படத்தை ஞாபக படுத்தினாலும், ச்சே! அப்படி இல்லை என்றே சொல்லவைக்கிறது. அருமையான காதல் கதை, அற்புதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.
          நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேரனும், இளைய திலகம் பிரபு அவர்களின் மகனுமான விக்ரம் பிரபு, நடிப்பில் அசத்திவிட்டார்.

 நடிப்பில் சிவாஜியையோ! பிரபுவையோ! பின்பற்றாதது ஆனந்தமே........!

*****

சொய்...சொய் ...!, கையளவு நெஞ்சத்தில.....கடலளவு ஆச மச்சான்...

         டி இமான்அவர்களின் இசையில் பாடல்கள் அனைத்தும் மிக மிக அருமை, திரும்ப திரும்ப கேட்கவேண்டும் என்று ரசிகர்கள் மனதை ஏங்க வைத்துவிட்டது என்றே சொல்லலாம். டி இமான் அவர்கள் மிக அருமையாக இசையமைத்து வருகிறார். அவரது இசையமைப்பில் வெளிவந்த பெரும்பாலான பாடல்கள் இசை பிரியர்களை கவர்ந்திழுத்திருந்து என்பது குறிப்பிடத்தக்கது. 

இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கு எனது பாராட்டுகள். அருமையான  இசையில் அனைத்து
பாடல்களும்  என் கையளவு நெஞ்சத்தில..... கடலளவு ஆசையானது!

*****

ஒன்னும்  புரியல, சொல்லத்தெரியல, கண்ணுமுழியில, கண்ட அழகுல...!
       திரைக்கதை என்று பார்த்தால் காட்டு யானையை விரட்ட கொண்டுபோகும் யானையின் பெயர்தான் "கும்கி" இதைதான் படத்தின் பெயராகவும் வைத்திருக்கிறார்கள். தம்பி ராமையாவின் நடிப்பு கதையை நகர்த்தி செல்கிறது என்று சொல்லலாம், நாயகன் எப்பவும் நாயகியை நினைத்துகொண்டிருக்க, தம்பி ராமையாதான் கதையை ஞாபக படுத்துகிறார் நாயகனுக்கு மட்டுமில்லை நமக்கும்தான். ஒளிப்பதிவாளர் சுகுமார் அடிக்கடி லட்சுமி மேனனின் கண்முழியை காட்டியதால், என்ன கண்ணுடா சாமி! 

கதையில் ஒன்னும் புரியல, சொல்லத்தெரியல..

அவ  கண்ணுமுழியில கண்ட அழகுல..........!

******
 
சொல்லிட்டாளே....அவ காதல.......!, சொல்லும்போதே சுகம்...தாளல....!

     இந்த பாடல் வரிகளை எழுதியவர் யுகபாரதி எழுத,  ரஞ்சித் மற்றும் ஸ்ரேயாகோஷல் பாடியிருக்கிறார்கள். சொல்லிட்டாளே அவ காதல....! என்று ரஞ்சித் பாடிய இந்த வரி அப்படியே என் அடிவயிற்றில் இருந்து சர்ர்ர்ர்ர்'ன்னு காதல் உணர்வை வெளிப்படுத்தியது.  இரண்டு மூன்று முறை மீண்டும் மீண்டும் கேட்டேன் இந்த வரியை, அற்புதமான உணர்வோடு பாடிய ரஞ்சித்க்கு எனது பாராட்டுகள்.அனைத்து பாடல்வரிகளையும் யுவபாரதி அவர்கள் எழுதிருக்கிறார். மிக மிக அருமையான பாடல் வரிகளை கொடுத்த அவருக்கும் எனது பாராட்டுகள்.

இந்த படத்தை பார்த்தேன், பாடல்களை ரசித்தேன் என்றே சொல்லலாம், சரியான நேரத்தில் சரியான இடத்தில் பாடலை அமைத்திருக்கிறார்கள். ரொம்ப நாளைக்கு பிறகு பாடல்களோடு படத்தையும் ரசித்து பார்க்க வைத்தது. இயக்குனர் பிரபு சாலமன் அவர்களுக்கு மீண்டும் பாராட்டுகள்.

     சினிமா விமர்சனம் என்பது அவரவர்களின் ரசனைதானே! நாம் யார் இதுக்கு மார்க் போட? நான் ரசித்த காட்சிகளையும், வசனங்களையும் மற்றும் பாடல்களையும்  ரசனையோடு சொல்லிட்டேன்.

சொல்லிட்டேனே இவ காதல...!, சொல்லும்போதே சுகம் தாளல...!

பாடல் வரிகளைக் கேட்டு மகிழுங்கள்:தரவிறக்கம் செய்யவும், கேட்டு ரசிக்கவும்.

Sunday, December 23, 2012

காதலின் குணமும்! பெற்றோர்களின் மனமும்!

{சற்றே பெரிய சிறுகதை!}


"ஹலோ! சந்தியா"

 "ம்ம்ம்ம் சொல்லுங்க சரத்"

 "நான் சொல்வதைக் கவனமாக கேட்டுக்கோ, நாளை ஒருநாள்தான் இருக்கிறது, நாளைமறுநாள் காலை 6 மணிக்கு நீ ஸ்ரீரங்கம் வந்துடு, உன்னுடைய தோழி ஒருத்தியையும் கூப்பிட்டுக்கோ?"

"யாரை கூப்பிடுவது என்று தெரியவில்லை சரத், அதுதான் குழப்பமா இருக்கு"

"உன்கூடவே எப்பவும் வருவாளே ஒரு மொக்க பிகரு (ஹா ஹா ) அவளை கூப்பிடு, அவள் வந்தா நிறைய விஷயங்களை சொல்ல தேவையில்லை, அவளுக்கே தெரியும்."

"ஆமாம் சரத் 'கரெக்ட்' நானும் அவளைத்தான் கூப்பிடலாம் என்று நினைத்தேன், எல்லாத்தையும் சொல்லி புரிய வைக்கிற நேரம் மிச்சமாகும்."

"ம்ம்ம் சரி, அப்படியே உனக்கு தேவையானதை எல்லாவற்றையும் நாளைக்கே எடுத்து வைத்துவிடு, மறுநாள் அதிகாலையிலையே கிளம்ப வேண்டி இருக்கும்."

"சரி சரத், செலவுக்கு பணமெல்லாம் இருக்கா?"

"ம்ம்ம் ஓரளவுக்கு இருக்கு, பத்தாதத்துக்கு நண்பர்களிடம் கேட்டிருக்கேன், அவன் ரமேஷ் எடுத்து வருவதாகச் சொன்னான். அதெல்லாம் பார்த்துக்கலாம் வா!"

"என்ன சரத் இப்படி அசால்ட்டா இருக்க? தாலி வாங்கணும் மாலை வாங்கணும், தங்குவதற்கு ரூம் எல்லாம் வேண்டாமா? அதுமட்டுமில்லாமல் கொஞ்ச நாளைக்கு நீங்க வேலைக்கு போகமுடியாது, அதுவரைக்கும் என்ன செய்வது?"

"என்ன செய்ய அப்பாகிட்ட கேட்கவும் முடியலை, அம்மாகிட்ட கொஞ்சம் இருந்தது , இருத்ததை ஆட்டைய போட்டுட்டேன்."

"அச்சச்சோ! அவங்களுக்கு தெரிஞ்சிட்டா நாம மாட்டிக்குவோம்"

"அதெல்லாம் அப்ப பார்த்துக்கலாம், ஏதாவது சொல்லி சமாளிக்கலாம்."

"என்னமோ செய்ங்க, எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு சரத், இன்னும் கொஞ்சநாள் போகட்டுமே!"

"திரும்ப திரும்ப இதே புராணத்தை பேசாதே, எனக்கு எரிச்சலா இருக்கு, உனக்கு வர விருப்பம் இல்லை என்றால் எப்படியோ போ, நாங்க நேற்று அவ்வளவு சொல்லியும், திரும்ப திரும்ப இப்படி பேசறது நல்லாருக்கா உனக்கு? இதுக்குதான் பொண்ணுங்களையே நம்பக்கூடாது என்கிறது. இப்ப முடிவா என்னத்தாண்டி சொல்ல வர?"

"ஒரு முறை வீட்டில் பேசி பார்க்கலாம் என்றுதான் நான் அப்போதில் இருந்தே சொல்கிறேன்."

" ஏய்! சத்தியமா சொல்கிறேன், எங்க வீட்டில் ஒத்துக்க மாட்டாங்க! எங்க அப்பாவைப்பற்றி எனக்கு நல்லாவே தெரியும், அம்மா எவ்வளவு நல்லவங்களாக இருந்தாலும் 'காதல்" என்று சொன்னாலே எரிந்து விழுவாங்க!"

"நான் எங்க வீட்டில் பேசிப்பார்க்கட்டுமா? இல்லை என்றால் நீ வந்து பேசு சரத், வந்து பொண்ணு கேளுங்க!"

"ஐயோ! என்னால் முடியாது, உனக்கு ஒரு பையன் லெட்டர் கொடுத்தான் என்பதற்காக அவனை கட்டிவைத்து அடித்து போலிஸ் வரை போனவர் உங்க அப்பா. இப்ப நான் வந்து ஏதாவது கேட்க, அவர் எடக்குமடக்கா ஏதாவது செய்தால் என் மானம் மரியாதை எல்லாம் போய்விடும். பிறகு நான் உயிரோடவே இருக்கமாட்டேன்."

"நான் பேசுறேன் சரத்!"

"நீ எல்லா ப்ளானையும் சொதப்ப போற, என்னை அவமானபடுத்தி பார்க்கணும் என்று அப்படி ஒரு ஆசையாடி உனக்கு?"

"ஐயோ! சரத் கொஞ்சம் நான் சொல்வதையும் புரிந்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்!"

"இதெல்லாம் சரிபட்டு வராது சந்தியா!, நாளைமறுநாள் நான் சொன்னப்படி வீட்டைவிட்டு வருவதென்றால் வா!, இல்லை என்றால் என்னை மறந்திடு!"

"சரத்த்த்த்த்த்த்த்த்"

"உன்னோட முடிவை இப்பவே சொல்லிடு!"

"சரத், நான்தான் சொல்லிட்டேனே உங்க விருப்பம் ஆனால் வீட்டில் சொல்ல ஒரு அவசரம் கேக்கிறேன் அவ்ளோதான்."

"வீணா குழப்பிக்காதே! சந்தியா நாம் ஒருவரின்மேல் ஒருவர் அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருக்கிறோம், பிரிய முடியாது அதனால்தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். மனச போட்டு குழப்பிக்காம வந்துசேரு! எல்லாத்தையும் அப்பறம் பார்த்துக்கலாம்."

"சரி சரத் நாளை பேசுகிறேன்."

"ம்ம்ம் சரி, நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்."

        இது என்னவோ ஒரு அவசர முடிவாகவே இருக்கிறது என்று சந்தியாவுக்கு தெரிந்திருந்தாலும், இதற்கெல்லாம் ஒரே காரணம் இவர்களின் ஜாதிதான். என்பதும் புரிந்தது, சமூகத்தில் இவர்களின் சாதிகளின் பெரிய வித்தியாசம் இல்லை என்ற போதிலும், "சரத்" அப்பா ஜாதி வெறியர். இதையறிந்துதான் "சரத்" இப்படி அவசர முடிவு எடுக்கிறார் என்பதும், "சரத்"தின் மீதுள்ள காதலும், நண்பர்களின் அட்வைசும்  அவளை பேசவிடவில்லை. எல்லாத்துக்கும் ம்ம்ம் என்று தலையசைத்தவாறு ஏதோ தப்பு செய்கிறோம் என்ற குழப்பத்தோடு வீடு வந்து சேர்ந்தாள்.
**********************************************************************************

         சந்தியா தனது கல்லூரி படிப்பை தற்போதுதான்  முடித்துவிட்டு ஒரு கம்பேனியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறாள், "சரத்"தை இவள் முதலாம் ஆண்டு கல்லூரி படிக்கும்போதுதான் தெரியும். அதே கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தான், இருவரும் ஒரே பேருந்தில் சென்று வரும்போது பழக்கம், சாதரணமாக பேசிப்பழக ஆரம்பித்தவர்கள் "காதல்" வலையில் விழுந்தனர். முதலில் காதலை தெரிவித்ததும் "சரத்"தான். "சரத்" மிகவும் திறமையானவன் தனது படிப்பை முடித்த அடுத்தமாதம் முதல் வேலைக்கு போக தொடங்கிவிட்டான். இரண்டு வருடத்தில் பதவி உயர்வு பெற்று இப்போது நல்லநிலையில் உள்ளான். இவனது அழகான பேச்சும்  அடுத்தவர்கள் மீது காட்டும் அக்கரையுமே சந்தியாவை கவர்ந்ததாக இருந்தது. அவன் தனது காதலை சொன்னவிதமும் மிகவும் பிடித்திருந்தது.

"சந்தியா  உங்ககிட்ட ஒரு நிமிடம் பேசணும் கொஞ்சம் நில்லுங்க ப்ளீஸ்."

"என்ன பேசணும் சரத், சீக்கிரம் சொல்லுங்க  நான் வீட்டுக்கு போகணும்.

"சந்தியா எனக்கு சுத்தி வலைச்சி பேசத்தெரியாது, நேரா மேட்டருக்கு வருகிறேன். இரண்டு வருடமாகவே உங்களை எனக்கு பிடித்திருந்தது, உங்களது கல்லூரி படிப்பு முடித்த பிறகு  சொல்லலாம் என்று காத்திருந்தேன். ஒரு ஆணுக்கு சம்பாத்தியம் என்பது மிக மிக முக்கியம். நானும் நல்லவேலையில் சேர்ந்தபிறகு சொல்லலாம் என்று இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன். இப்போது அந்த நேரம் வந்துவிட்டது. நான் உங்களை காதலிக்கிறேன் கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் நாளை காலை நேரம் சரியாக 11 மணிக்கு திருச்சி மலைகோட்டை அருகில்  உனது பதிலுக்காக காத்திருப்பேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் அங்கு வரவும், இல்லை என்றால் வரவே வேண்டாம். நான் புரிந்துக்கொள்வேன் என்று சொல்லிவிட்டு அவளது பதிலுக்கு எதிர்பாராமல் ஒரு பதட்டத்தோடும், எதையோ சாதித்துவிட்ட உணர்வோடும் அங்கிருந்து வேகமாக புறப்பட்டான்."

"சந்தியாவுக்கு சற்று குழப்பமாக இருந்தாலும், அவனது நடவடிக்கைகள் ஏற்கனவே பிடித்திருந்ததால் யோசித்தவாறு வீட்டிற்கு சென்றாள். பல முறை யோசித்தும் அவளாள் இவன் காதலுக்கு மறுப்பு சொல்ல ஒரு காரணம்கூட கிடைக்கவில்லை, இரவு தூக்கமும் வரவில்லை. எப்படி வரும் ஒரு தகுதியுள்ள இளைஞன் தானே முன்வந்து தனது காதலை வெளிப்படுத்தியப்பிறகு எப்படி தூக்கம் வரும். இதை நண்பர்களிடம் சொல்லலாமா? இல்லை இல்லை அப்பா அம்மாவிடம் சொல்லலாம். ஐயோ! வேண்டாம் அவர்கள் இவ்ளோ நாளா நீ கல்லூரிக்கு போனது இதுக்குதானா  என்று பல புராணங்களை இழுப்பார்கள். யாரிடமாவது சொல்லவேண்டும் என்று இருந்தது. தனது தம்பி மிக சிறியவன் அவனுக்கு அந்த அளவுக்கு பக்குவம் போதாது. என்பதால் அவளுடைய பாலிய சிநேகிதி அம்ரிதாவுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னாள்.

"அம்ரிதா ஒரு ஓட்ட வாயி, எப்பவும் ஏதாவது மொக்கை போட்டுகிட்டே இருப்பாள், அழகானவள் இருந்தாலும் சக தோழிகள் இவளை மொக்கை மொக்கை என்றே அழைப்பார்கள். இருந்தாலும் சற்றும் மனம் தளராமல் எல்லோரையும் சிரிக்கவைப்பாள்."

"யே! சந்தியா என்னடி சொல்ற? எப்பவும் பஸ்ல வருவாரே "சரத்" அவரா?"

"ஆமாண்டி! அவரேதான். இப்ப நான் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவிக்கிறேன். ஒரே குழப்பமா இருக்குடி! அப்பா அம்மாகிட்ட சொல்லலாம் என்று பார்த்தேன். அவர்கள் திட்டி தீர்த்துவிடுவார்கள் என்பதால் சொல்லவில்லை. யார்கிட்டயாவது சொல்லனும்போல் இருந்தது அதனால்தான் உனக்கு போன் செய்தேன்."

"நல்லவேளை நீ அப்பா அம்மாகிட்ட சொல்லவில்லை, நான் நச்சுன்னு சொல்லட்டா?"

"ம்ம்ம் சொல்லுடி! அதுக்குத்தானே உனக்கு போன் செய்தேன்."

" ஐ லவ் யூ டூ'ன்னு " சொல்லிடு!"

"கொஞ்சம்கூட யோசிக்காமலா?"

"அதான் நீ நிறைய யோசிச்சி இருக்கியே இது போதாதா? இல்லை என்றால் இந்த ராத்திரிக்கு எனக்கு போன் பண்ணுவியா? இதுவரை என்னைக்காவது பண்ணிருக்கியா? அவர் எல்லாத்தகுதியோடும், குறை ஏதும் சொல்லாத அளவுக்கு தனது காதலை சொல்லிருக்கார். இதை மிஸ் பண்ணின அப்பறம் வாழ்க்கை பூராவும் இதை நினைத்து அழவேண்டியிருக்கும் சொல்லிட்டேன்."

"சரிடி! நீயும் வரியா? நாளைக்கு மலைகோட்டைக்கு போய்ட்டு வரலாம்."

"ஐயோ! நானா? வேண்டாம் தாயே நீ மட்டும் போ அதுதான் நல்லது."

"எனக்கு பயமா இருக்குடி! ப்ளீஸ் நீயும் வாயேன். நீ கிட்ட வரவேண்டாம் அங்க வந்து பக்கத்தில் எங்கேயாவது ஒளிந்துருந்தால் போதும். நான் சொல்லிட்டு ஓடி வந்துடுறேன்."

"அப்போ! சரி வரேன். வாழ்த்துகள்டி!" 

"நன்றி! சரி நாளை மறந்துவிடாதே! ஓகே பை குட் நைட்!"

      அன்று இரவு முழுக்க சந்தியாவுக்கு உறக்கமே வரவில்லை!இன்னுமா விடியவில்லை என்பதுபோல் இருந்தது. விடியற்காலையில் சந்தியா உறங்கிவிட்டாள். அம்ரிதா போன் செய்யவே எழுந்து சீக்கிரம் சீக்கிரம் கிளம்பினாள். தன்னிடம் உள்ளதிலேயே நல்ல உடையையும், நல்ல போட்டும் வைத்துக்கொண்டு தன்னால் முடிந்தவரை தன்னை அழகுபடுத்திக்கொண்டு புறப்பட்டாள். 

"அம்ரிதாவும் வந்து சேர்ந்தாள், இருவரும் வேக வேகமாக ஓடினார்கள், என்றும் இல்லாமல் இன்று எல்லாமே புதுமையாக தெரிந்தது சந்தியாவுக்கு, பஸ்கூட லேட்டா வருவதாக திட்டிக்கொண்டிருந்தாள். 

" காதல் வந்துவிட்டால் நினைவுகள் எல்லாம் கனவுகளாகவே இருக்கும் என்பது உண்மைதான்."

        எப்படியோ! திருச்சி மலைகோட்டையை வந்தடைந்தார்கள் இருவரும். சந்தியாவுக்கு பதற்றம் மேலும் அதிகமானது, தன்னை அறியாமல் உடல் நடுங்க ஆரம்பித்தது. கண்கள் அலைமோதியது, காண்பவர்கள் எல்லோரும் "சரத்" ஆகா இருக்குமோ! என்று தோன்றியது. நேரம் நெருங்க நெருங்க தோழியின் கையை பிடித்துக்கொண்டாள். ப்ளீஸ்பா நீ எங்கேயும் போயிடாதா! எனக்கு பயமா இருக்கு, நீயும் கூடவே இரு ப்ளீஸ்.... ப்ளீஸ்...., அவளும் தனது தோழியின் பதற்றத்தை புரிந்துக்கொண்டு கூடவே நின்றாள்.

          "சரத்" சொன்ன நேரம் கடந்தது ஆனால் "சரத்" இன்னும் வரவில்லை, மனதில் என்ன என்னவோ எண்ணங்கள் தோன்றி மறைந்தன...கண்கள் எல்லா பக்கமும் பார்வையிட்டது, வருவாரா? மாட்டாரா? மனம் பதறியது. அப்போதுதான் "சரத்" வருவது கண்ணில் பட்டது. 

"மன்னிக்கவும்...மன்னிக்கவும், வந்து ரொம்ப நரமாகிவிட்டதா? சந்தியா."

"............."

"உங்களைத்தான் கேக்கிறேன்."

"அம்ரிதாதான் பதில் சொன்னாள், மேடம்  காலை 8 மணிக்கே வந்துட்டாங்க!"

"ஐயோ! இவ்வளவு சீக்கிரமாவா?"

"இல்ல.....இல்ல....இப்பதான்...வ......"

இந்த காதல் வந்தால் கூடவே ஒரு வெக்கமும் வரும் பாருங்க! ஐயய்யோ! அது எதையும் பேசவிடாதுங்க..!

"அம்ரிதாதான் தொடங்கினால், நான் எதுக்கு நந்திமாதிரி! நான் அந்த பக்கமா எவனாவது சிக்குரானான்னு பாக்கிறேன். நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க, போகும்போது மறக்காம கூப்பிடுங்க மேடம்." 
சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

"என்ன சந்தியா நல்லா யோசிச்சிங்கிகளா? உங்களை  இங்க பார்த்ததும்தான் எனக்கு மூச்சே! வந்தது ஒவ்வொரு நொடியும் செத்து செத்து பிழைத்துக்கொண்டிருந்தேன்.நல்லவேளை ஆண்டவன் என்னை கைவிடவில்லை!"

"ம்.... யோசிச்சேன், நீங்க காதல் சொன்னவிதம் அருமை, அப்பவே நீங்க பதில் கேட்டிருந்தாலும் நான் ஓகே சொல்லிருப்பேன். ஒரு நாள் சமயம் கொடுத்து காதலை எடைபோட்டுப்பார்க்க வச்சிட்டிங்க.."

"சரத்'க்கு வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை, மெதுவாக கையை பற்றிக்கொண்டான். இருவரும் அப்படியே அமைதியாக ஓரிரு நிமிடங்கள் நின்றனர்கள்."

              மௌனத்திற்கு பிறகு இருவரும் மனம்விட்டு பேசினார்கள், அம்ரிதாவையும் அழைத்துக்கொண்டு தங்களின் காதலுக்கு சாட்ச்சியாக மலைக்கோட்டை ஏறினார்கள். இப்படி தனது காதலை பொறுமையாக  அற்புதமான தருணத்தில் வெளிப்படுத்திய "சரத்" கல்யாணத்தில் ஏன் இப்படி அவசர அவசரமாக முடிவு எடுக்கிறார் என்று சந்தியாவுக்கு குழப்பமாகவே இருந்தது.

           காதலிக்கத் தொடங்கி ஒரு வருடம் ஆகாப்போகிறது, இதுவரை அதிகம் ஊர் சுற்றியதும் கிடையாது, சமூகம் நமது காதலை கொச்சைப்படுத்தி விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாகவும் ஒரு பொறுப்புடன்  இருந்தான். இப்படி பல நல்ல குணங்களைக் கொண்டுள்ள "சரத்"தை எக்காரணம் கொண்டும் இழக்க விரும்பவில்லை சந்தியா!. அதனால்தான் அவன்கூட வீட்டைவிட்டு ஓடிப்போகவும் தயாராக இருக்கிறாள்.

        இப்ப என்ன செய்வதென்றே தெரியாமல் சந்தியா குழப்பத்தோடு அறையின் ஒரு மூலையில் அமர்ந்தாள். வெளியில் அப்பா சதாசிவம் மிக கோபத்துடனும் ஆவேசத்துடனும் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார். சற்று காது கொடுத்து கேக்க தொடங்கினாள் சந்தியா!
***********************************************************************************

"டீஈஈ! சாரதா, உனக்கெதுக்கு அண்ட வீட்டு அடுத்தவீட்டுப் பேச்செல்லாம்."

"இது 'புரளி' இல்லைங்க, நல்ல மனிதன் எப்படி அவமானப்பட்டு நிக்கிறார் என்று பாருங்க!"

"நீ சொன்னா கேக்கவே மாட்ட, இருக்கிற டென்ஷன்ல, இது ஒரு தேவையில்லாத டென்ஷனும் தேவையா நமக்கு, "இதுதான் தெருவே போகிற ஓணான பிடிச்சி வேட்டிக்குள்ள விட்டுகிட்டு குத்துதே! குடையுதே!" என்று சொல்வது."

"ஏங்க இப்படி புரிஞ்சிக்காம பேசுறிங்க, நான் சொல்வதை கொஞ்சம் முழுசா கேளுங்க, அப்பறம் சொல்லுங்க இதைப்பற்றி நாம் பேசலாமா?  வேண்டாமா? என்று."

"சரிஎன்னத்த சொல்லிடப்போற, சொல்லு சொல்லு கேட்க்கிறேன்."

"கொஞ்சம் நிதானமா கேளுங்க சொல்றேன். நம்ம தெருவுல இருக்கிற கிருஷ்ணன் அண்ணனை தெரியுமா? அவருக்கு இரண்டு பொண்ணும், கடைசியா ஒரு ஆண் பிள்ளையும் இருக்கு, அந்த அம்மா பேரு சீதா."

"ம்ம்ம்ம்,சொல்லு அவர் ரொம்ப மரியாதையான மனிதர், அவ்வளவு பக்குவமா பேசுவார். எந்த பிரச்சினையையும் எளிதில் தீர்த்துவிடுவார். ஊரே அவரை கண்டால் மரியாதையாக பேசுவார்கள். சிலர் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்வார்கள். நான் அடிக்கடி பார்த்ததில்லை, அவர் அதிகம் வெளியில் வரமாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். சில சமூக பிரச்சினையை தீர்த்து வைப்பார். நல்ல விபரம் தெரிந்தவர் என்று எல்லோராலும் மதிக்க படுபவர். அவருக்கு என்ன இப்ப?"

"அவரும் அவரது மனைவி மற்றும் இரண்டாவது மகளும் ஆஸ்பத்ரியில் கவலைக்கிடமாக இருப்பதாக சொல்கிறார்கள். பையனுக்கு மட்டும் இப்ப பரவாயில்லை."

"என்னடி சொல்ற..! என்ன ஆச்சி அவங்களுக்கு?????/"

"அவருடைய மூத்தப்பொண்ணு "மைதிலி" யார்கூடவோ நேற்றிரவு ஓடி போய்ட்டாலாம்."

"அச்சச்சோ! அப்பறம்?"

"அந்த அவமானம் தாங்க முடியாமல் இன்று காலையில் இவர்கள் குடும்பத்தோடு சோற்றில் விஷத்தை கலந்து சாப்பிட்டுவிட்டார்கலாம். பக்கத்து வீட்டுக்காரர்கள் எதுக்கோ அவங்க வீட்டுக்கு போனப்போது எல்லோரும் மயங்கி கிடப்பதைப் பார்த்துவிட்டு கொண்டுபோய் ஆஸ்பத்ரியில் சேர்த்திருக்காங்கலாம்."

"இதை கேட்ட சதாசிவம், அப்படியே ஆடிப்போய்ட்டார். ஒன்றும் பேசமுடியாமல் திகைத்தார்."

"என்னங்க, என்ன ஆச்சி?"

"ஒன்னும் இல்லடி!,

"எதையும் மனசுல வைக்காதிங்க, கொட்டி தீர்த்துடுங்க..."

     "என்ன சொல்ல, எந்த ஒரு மனிதனுக்கும் அவமானம் என்று வந்தால் தாங்கிக்கொள்ள முடியாது. நமக்கு விபரம் தெரிந்தகாலம் முதலே நம்மை அவமானப்படுத்தும் யாரையும் நமக்கு பிடிக்காது. சில இடத்தில் பட்ட சிறு சிறு அவமானங்கள்கூட நமது வாழ்வில் மறக்கமுடியாத ஓவியமாக அப்பப்ப கண்ணில் வந்துபோகும்.   ஒவ்வொரு நிமிடமும் நம்மளை யாரும் தப்பாக பேசிவிடக்கூடாது என்று பார்த்துப் பார்த்து நடக்கிறோம். எதற்கும் யாரிடமும் கையேந்தக்கூடாது என்றும், எதற்காகவும் யாரிடமும் தலைக்குனியக்கூடாது என்றும் பார்த்துப் பார்த்து பயந்து நடக்கிறோம்."

"ஆமாங்க.."

        "நாம் நம் பிள்ளைகள்தான் உலகம் என்றும், அவர்களுக்கு பார்த்துப் பார்த்து தேடித்தேடி வாங்கிக்கொடுக்கிறோம். நமது ஆசைகளைகூட கைவிட்டு விட்டு பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைக்கிறோம். பிள்ளைகளைவிட எதுவும் நமக்கு முக்கியமாக தெரியவில்லை. ஆனால் "காதல்" என்ற ஒன்று வந்துவிட்டால் பிள்ளைகளுக்கு அதைவிட முக்கியம் எதுவும் இல்லை என்று எப்படி'டீ...' தோன்றுகிறது?. எல்லாத்தையும் இது இவர்களுக்கு பொருத்தமா இருக்குமா என்று ஆயிரமாயிரம்முறை யோசித்து யோசித்து வாங்கும் நமக்கு . இவர்களின் வாழ்க்கை துணையை கண்டுபிடித்து தரமாட்டோமா என்ன?" 

      "அதுதாங்க எனக்கும் புரியவில்லை, பிள்ளைகள் காதலிக்கும் ஆண் நல்ல பையனாக இருந்தால் பெற்றோரிடம் வந்து சொல்லலாமே! பெற்றோர்கள் "காதலுக்கு" எதிரி இல்லை. விசாரித்து நல்ல காதல் என்றால் அவர்களின் வீட்டிலும் பேசி சேர்த்து வைத்துவிடப்போகிறோம். இதில் குடும்பமோ! ஜாதியோ! குறுக்கிட்டால் மட்டுமே கொஞ்சம் சொந்த பந்தங்களிடம் பேசி முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்துவிடுகிறோம்."

     "ஆமாண்டி!. பிள்ளைகள் படித்து பெருசா வளர்ந்துவிட்டால் தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும், அப்பா அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியாது என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதுவும் முக்கியமாக "காதல்" வந்துவிட்டால் அப்பா அம்மா எதிரியாகிவிடுகிரார்கள். ஒருமுறையாவது சொல்லிப் பார்ப்போம். என்று ஏன் அவர்களுக்கு தோன்றவில்லை. பிள்ளைகள் தவறு செய்யும்போது அடிக்கும் அதே பெற்றோகள். அவர்களின் சரியான முடிவுகளை கண்டு ரசித்ததை மறந்து விடுகிறார்கள்.  எப்போது கண்டித்த பெற்றோர்களின் முகம்தான் அவர்களின் மனதில் இருக்கிறதே தவிர, தூக்கி கொஞ்சிய நிமிடங்களும், நமக்காகவே வாழும் பெற்றோர்களின் முகமும் அவர்களுக்கு மறந்து விடுகிறது."

  "என்ன செய்வதுங்க எல்லாம் அவரவர்களின் தலைவிதி, இவ்ளோ நாள், மான-மரியாதையோடு வாழ்ந்த அவர்களுக்கு, திடீரென்று மூத்தவள் இப்படி செய்ததால் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. "

      "எப்படி முடியும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் தனக்கோ தனது குடும்பத்திற்கோ எந்த ஒரு அவமானமும் வந்துவிடக்கூடாது என்று நினைத்து நினைத்து வாழ்ந்த அவர்களால் எப்படி முடியும். தனது சந்தோஷத்தை மட்டும் பார்க்கும் பிள்ளைகள், பெற்றோர்களின் சந்தோஷத்தை ஏன் மறந்துவிடுகிறது. எனக்கு அது வேணும், இது வேணும் என்று அழுதழுது கேட்டு வாங்கும் பிள்ளைகள். இந்த விஷயத்தில் ஏன் அப்படி இல்லை? எல்லாம் நம் தலைவிதி!"

அவர்கள் குழந்தையாக இருக்கும்போது நாம் பெரியவர்களாக அவர்களுக்கு வழி கட்டுகிறோம், அவர்கள் வளர வளர நாம் முதிர்ந்த பருவத்தை (குழைந்தையாக) அடைகிறோம். அவர்களுக்கும் நம்மைப்போல எல்லாவிஷயங்களும் தெரிய வரும்போது சில கருத்து வேறுபாடுகள் வருகிறது. இதெல்லாம் அவரவர்களின் புரிதல்கள். இந்த சமையத்தில்தான் ஒருவரையொருவர் உனக்கென்ன தெரியும் என்று குற்றம் சாட்டிக்கொள்கிறோம்.
***********************************************************************************

       இப்படி அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட சந்தியா, வாய்விட்டே அழுதுவிட்டாள். நாம் செய்ய இருந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதும் புரிந்தது. நமது சந்தோஷத்தைமட்டும் பார்த்த நாம், அப்பா அம்மாவும் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசிக்காமல் விட்டுவிட்டோமே! என்பதும் புரிந்தது.

"ஹேலோ! சரத் "

"சொல்லு சந்தியா?"

"நாளைக்காலையில் உன்னை சந்திக்கணும், கொஞ்சம் பேசணும் ஸ்ரீரங்கம் காவேரி கரைக்கு வந்துடுங்க.."

"சந்தியா என்ன ஆச்சி! இப்பவே போன்ல சொல்லு"

"இல்லை சரத், சில விஷயங்களை போன்ல பேசமுடியாது. நேரில்தான் சொல்லமுடியும், முக்கியமான பேசணும் மறக்காம வந்துடுங்க" என்று சொல்லி போன் தொடர்பை துண்டித்தாள்.

      மறுநாள் காலை எந்தவித குழப்பமும் இல்லாமல் எழுந்தாள், சொன்ன நேரத்திற்கு அங்கு சென்றாள். "சரத்" முன்கூட்டியே சென்று இவளின் வருகைக்காக காத்திருந்தான்.

கொஞ்ச  நேர மௌனத்திற்கு பிறகு, சந்தியாதான் பேசத்தொடங்கினாள்.

"சரத், நான் உங்களை மனசார நேசிக்கிறேன், நீங்க இல்லாமல் எனக்கு வாழ்க்கையே கிடையாது. இந்த ஜென்மத்தில் உங்களைத்தவிர யாரையும் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன். வாழ்ந்தால் உங்களோடு இல்லை என்றால். இல்லையென்றால் எனக்கு வாழ்க்கையே இல்லை. உங்களுக்காக எத்தினை காலம் வேண்டும் என்றாலும் காத்திருக்கிறேன். எங்க வீட்டிலும், உங்க வீட்டிலும் அப்பா அம்மாக்களோட சம்மதத்தோடுதான் நமது கல்யாணம் நடக்கணும்."

"சந்தியா இதெல்லாம் நடக்கிற காரியமா?"

"ஏன் நடக்காது? நீங்க உங்க அப்பா அம்மாகிட்ட என்னைக்காவது ஒருநாளாவது நமது காதலை சொல்லிருக்கியா? "

"இல்லை, அவங்களைப்பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்ட்ரார்கள்."

"இதெல்லாம், உனது கற்பனை "சரத்", உங்களுக்கு பேச தைரியம் இல்லை, நீங்க எதுவும் பேசவேண்டாம். நமது காதலுக்காக நான் முதலில் எங்க வீட்டில் பேசுகிறேன். எனது அப்பா அம்மாவை அழைத்துவந்து உங்க வீட்டில் பேசுகிறேன்."

"இதெல்லாம் நடக்குமா?"

"கண்டிப்பாக நடக்கும். நமக்கு காதலிக்க எல்லா தகுதியும் இருக்கிறது. வீட்டில் சொல்லத்தான் மனசு இல்லை, இதுவரை தவறு செய்யாத நாம் இப்போதுதான் தவறு செய்கிறோம். நமது உண்மையான காதலை அவர்களிடம் சொல்வோம், புரிய வைப்போம். அவர்கள் ஏற்றுக்கொள்கிற வரைக்கும் போராடுவோம். முடியவே முடியாது என்று சொல்லிவிட்டால், அன்னைக்கே நான் உங்ககூட வந்துவிடுகிறேன். இப்ப சொல்லாமல் போவதைவிட அன்னைக்கு சொல்லிவிட்டே உங்ககூட வருகிறேன். நமக்கு சட்டத்தில் இடம் இருக்கு."

இப்போது "சரத்"க்கும், சந்தியா சொல்வது சரியாகப்பட்டது.

             இருவரும் நாளை திருட்டுத்தனமாக போவதை மறந்துவிட்டு, எப்படி அப்பா அம்மாவிடம் சொல்வது என்பதைப்பற்றி தீவிரமாக கலந்து ஆலோசித்தனர். எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையும் வந்துவிட்டது. குழப்பங்கள் வெளியேறியது, முயற்சிகள் முன்னில் நின்றது.

      நம்பிக்கையோடு! கைகோர்த்து நடக்கையில் எங்கோ தூரத்தில் இந்த பாடல் ஒலித்தது.
            "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு!

முற்றும்.

*****************நன்றி, மீண்டும் சந்திப்போம்.******************* 

Thursday, December 20, 2012

அன்றொருநாள் சின்னப்பிள்ளையிலே!

       நான் சிறுவயதில் சாப்பாடு சரியாக சாப்பிடாத போது அம்மா சொல்வாங்க ஒரு கதை, அதோ அங்கே பாரு தூரத்தில் தெரிகிறதே ஒரு நிலா, அதுக்குள்ள கொஞ்சம் கருப்பா தெரியுது பாரு அது யாரும் இல்லை அதுதான் உன்னோட பாட்டி, அது செத்துப்போன பிறகு அங்கதான் போயி வடை சுட்டுகிட்டு இருக்கு, பாட்டி தம்பிக்கு ஒரு வடை கொடுன்னு சொல்வாங்க, நானும் வாயை திறந்து ஆ..ஆ 'ன்னு பார்த்துகிட்டு இருப்பேன், இந்தா அப்படின்னு என் வாயில் ஊட்டிவிடுவாங்க, நானும் நாம் சாப்பிடுவதுதான் நிலாவில் வடை சுட்டு பாட்டி அனுப்பியது என்று தலையை ஆட்டிக்கொண்டே சாப்பிடுவேன். 

அன்று  அம்மா சொன்னது பொய் என்றாலும், இன்னைக்கு நினைத்து பார்க்கும்போது சுகமா இருக்கு! நான் ஏன் அப்படியே இருந்திருக்க கூடாது.:-)

      கொஞ்சம் விபரம் தெரிந்ததும், வலது கையால் தலையை சுத்தி இடது காதை பிடிக்க சொன்னாங்க, அட இது நம்மளால முடியாதா என்று முயற்சி செய்து தொட்டேன், உடனே நாலு வயசுலயே பள்ளிக்கூடத்தில் கொண்டி உக்கார வச்சிட்டாங்க :-) பள்ளிக்கூடம் பக்கத்தில்தான் எங்க வீடு என்பதால் அடிக்கடி வீட்டுக்கு வந்துடுவேன், திரும்ப திரும்ப கொண்டி விடுவாங்க... ஒருநாள் அம்மா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து  வீட்டுக்கு வந்தேன், அப்போதுதான் வீட்டில் இருந்து  கோழி குஞ்சுகளுடன் வெளியில் வந்தது, என்னை வீட்டுக்குள்ளே போகவிடாமல் துரத்தி துரத்தி அடித்து கையில் கொத்திவிட்டது, நான் பயந்துபோய் கையில் ரத்தத்தோடு உடல் நடுநடுங்க அழுதுகிட்டே மீண்டும் பள்ளிகூடத்தில்தான் போய் நின்றேன். அன்று முதல் இடையில் வீட்டிற்கு வரவே மாட்டேனே! :-)

       ஆனால் பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியே வந்துவிடுவேன், வீட்டிற்கு போனால் திரும்பவும் கொண்டுபோய் பள்ளிக்கூடத்தில் விடுவாங்க, யாரும் இல்லை என்றால் கோழி கொத்திடும் என்பதால் வீட்டுக்கு போகமாட்டேன். வீட்டுக்கு பக்கத்தில் ஒரு காடு இருக்கிறது அங்கு விவசாயம் செய்வதில்லை சும்மாதான் இருந்தது, நிறைய செடிகள் இருக்கும் பூக்கள் பூத்து குலுங்கும் அதில் வண்ணத்துப்பூச்சிகள் வண்ணவண்ணமாய் பறக்கும், அதன்மீதுள்ள ஆசையால் முள் அடைப்பை தாண்டி சென்று பட்டாம்பூச்சி பிடிப்பேன், தட்டான் பிடிப்பேன் மண்ணில் விழுந்து விழுந்து பிடிப்பேன், பள்ளிகூட பையை அப்படியே பட்டாம்பூச்சிமேல் போட்டு அமுக்குவேன், கொஞ்சம் கொஞ்சமா பையை நகர்த்தி பட்டாம் பூச்சியை பிடிப்பேன், சிலது என்னை ஏமாற்றிவிட்டு பறந்து போய்விடும், இருந்தாலும் சோர்ந்துபோகாமல் மீண்டும் முயற்சி செய்து பிடிப்பேன்.  சரியாக பள்ளிக்கூடம் முடியும் மணி அடித்ததும் வீட்டுக்கு போயிடுவேன். நான் நல்லா படிக்கிறேன் என்று வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷம்.

     ஒருநாள் அம்மா பார்த்துட்டாங்க, ஓடி வந்து அடிபிண்ணிட்டாங்க, பள்ளிக்கூடம் அனுப்பினால் அந்த காட்டுலியா போய் விளையாடற.. ச்சி ச்சி அங்கேயா போய்  விளையாடுவாங்க என்று திட்டிகிட்டே குளுப்பாட்டினாங்க நானும் அழுதுகிட்டே குளிச்சேன், ஆனால் மனசெல்லாம் ஓடிப்போன பட்டாம்பூச்சிகள் மேலேயே இருக்கும். கொஞ்ச நாளுக்கு அப்பறம் ஓடை பக்கம் போய் தண்ணீரில் மீன் பிடித்து மீண்டும் தண்ணீரில் விட்டு விளையாடுவேன், காரணம் வீட்டுக்கு கொண்டுபோனால் பள்ளிக்கூடம் போகவில்லை என்பது தெரிந்துவிடுமே! பிறகு எனக்கு கூட்டாளியும் கிடைத்தார்கள், ஒருவருக்கு இருவரானோம், இருவருக்கு மூவரானோம்.

வண்ணத்துப்பூச்சியை பிடித்து அதன் வாலில் நூல் கட்டி வானத்தில் பறக்கவிட்டதேல்லாம் ஒரு கதை, இப்பவும் அதெல்லாம் நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது, பொன்வண்டு பிடித்து தீப்பெட்டியில் அடைத்து வைத்து அதுக்கு வேலம்மரத்து தவையை உணமாக கொடுத்ததும், அது முட்டையிட்டு குஞ்சி பொறிக்கும் என்று காத்திருந்த நாட்கள் மிகவும் சுகமானது.

       பூனை என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், காரணம் அது பாருங்க குட்டியோண்டு காலால் அப்படி இப்படியெல்லாம் பாவனை செய்து விளையாடும் பார்க்க சூப்பரா இருக்கும். முகம் பார்க்கவும் அழகா இருக்கும். நான் அதுகூடதான் அதிகம் விளையாடுவேன், ராத்திரியில் எனது அருகில் வந்து படுத்துக்கொள்ளும் "ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" ஒரு சத்தம் கொடுக்கும் பாருங்க சூப்பரா இருக்கும். அம்மா அதை அடிச்சி துரத்திவிட்டுடுவாங்க கேட்டால் பூனையை பிடித்தால் மாந்தம் வரும் என்பாங்க. இருந்தாலும் குட்டி பூனைகள் அழுகுதான். எனக்கு இப்பவும் விளையாட பிடிக்கும்.ஒரு எலியை வச்சி விளையாடும் பாருங்க சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கும். :-)

       எங்க வீட்டில் ஒரு நாய் வளர்த்தோம், அதன் பெயர் ராமு! குட்டி முதலே எங்கள் வீட்டில் வளர்த்தோம் நான் எங்க போனாலும் கூடவே வரும், காரணம் அப்பா எனக்கு வாங்கி கொடுக்கும் பாதி பிரிட்டானி பிஸ்கட்டை அதுதான் சாப்பிடும். நான் குட்டியோண்டு இருப்பேன் ஆனால் அது பெருசா இருக்கும், என்னை ஏமாற்றிவிட்டு கையில் இருந்து பிடிங்கிக்கொள்ளும் இருந்தாலும் அவன் என் நண்பன், நான் கிணற்று மோட்டாரில் குளிக்க போனால் அவனும் கூடவே வருவான் நான் சோப்பு போட்டு குளுப்பாட்டிவிடுவேன், அதை நன்றாக குளுப்படிவிடுவேன் நான் சரியாக சோப்பு தேய்த்து குளிப்பதில்லை "நாய் வெளுத்துபோனது , நான் கருத்துவிட்டேன்"   :-)

        நான் எப்போது பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தாலும் ஓடி வருவான். என்மேல் தாவுகால் போட்டு நலம் விசாரிப்பான். நான் குட்டியோண்டு பையன் என்பதால் சிலநேரம் விழுந்து விடுவேன். எப்பவும் என்னை இடித்துகொண்டே நிற்பான் கோபம் கோபமா வரும் ஆனால் அடிக்க மனசு வராது. ஒருநாள் நான் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் என்மீது தவுகால் போட்டான், நான் விழுந்துட்டேன் பையில் இருந்த "கல் சிலேட்டு" உடைந்து விட்டது. அப்பாவிடம் அழுகிட்டே சொன்னேன், அப்பா எனது "சிலேட்டை" கூட படிக்கிற பையன் உடைச்சிட்டான் என்று சொன்னேன் இருந்தாலும் இவனை காட்டி கொடுக்கவில்லை. அவ்வளவு பாசம் அவன்மேல் நாங்க இல்லாத நேரத்தில் வீட்டுக்கு யாரும் வரமுடியாது, இரவு முழுக்க முழித்திருப்பான் எப்ப தூங்குவான் என்றே தெரியாது. அவ்ளோ நன்றியுள்ளவன். 

     தொழில்நுட்ப வளர்ச்சி குறைவு என்பதால் பொழுது போக்கு என்பது இப்போது இருப்பதுபோல் சீரியல் பார்ப்பது, சினிமா பார்ப்பது என்பதெல்லாம் இல்லை தாயம் கட்டை, பல்லாங்குழி, அஞ்சாங்கல் ஆடுவது என்று மாணவிகள் விளையாடுவார்கள். மாணவர்களாகிய நாங்கள் கிட்டிப்புள்(கில்லி), கபடி, கோலி  என விளையாடுவோம். ஒருநாள் கில்லி  விளையாடும்போது ஒரு பாட்டி நெற்றியில் பட்டு ரத்தம் வந்துவிட்டது. நாங்க பயந்துகிட்டு ஓடிபோய் ஒளிந்துக்கொண்டோம் பாவம் அந்த பாட்டி மயங்கி விழுந்துவிட்டது. நான்தான் தண்ணீர் கொண்டி கொடுத்தேன் பிறகுதான் எழுந்தது என்னை அடிக்கவில்லை அதுக்கு பதிலா, ஆள்கள் வருகிறார்களா என்று பார்த்து விளையாடுங்க ராசா, என்னால் ஓடமுடியாது அதனாலதான் அடி பட்டுவிட்டது என்று சொன்னது. என்ன இருந்தாலும் "தாய்குலம் தாய்குலம்தான்" அழகா எடுத்து சொன்னதும் அதன்பிறகு அப்படி ஒரு தவறு நடக்கவே இல்லை.
 
    நானும் எனது நண்பர்களும் மண்வீடுகட்டி விளையாடுவது வழக்கம், எப்பவெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பவும்,  பள்ளி விடுமுறையில் முழுநேரமும் இதேவேளைதான். களிமண்ணால் வீடு கட்டி அதற்கொரு வாசப்படியும் வைத்து இடதுபுறம் புல்களும், வலதுபுறம் வீட்டு விலங்குகளுக்கென ஒரு கொட்டகையும் அமைத்து விளையாடுவோம். வீட்டிற்கு வெளிச்சம் கிடைக்க இரவு நேரத்தில் அப்பா உதவியோடு மின்னல் பூச்சிகளைப் பிடித்து களிமண்ணில் ஓட்டிவைத்துவிடுவோம். இதுபோல் குருவிக்கூடுகளில் பார்த்திருக்கிறோம் அதைப்பார்த்த பிறகுதான் எங்களுக்கும் இந்த ஐடியா வந்தது, வீட்டில் ஒரு வேலையும் செய்யமாட்டோம், ஆனால் வீட்டில் ஏதாவது புதியதாக ஒன்றைக் கண்டால்போதும் உடனே அதுபோல் எங்கள் வீட்டிலும் இருக்கவேண்டும் என்று எப்படியாவது செய்து வைப்போம்.

          இப்படி  எல்லா நினைவுகளையும் இன்று நினைத்துப்பாருங்கள் சுகமாக  இருக்கும்.

***********************************நன்றி, மீண்டும் சந்திப்போம்**********************

Monday, December 17, 2012

வரதட்சினை கொடுமைகளால் பாதிக்கப்படும் ஆண்கள்.


வணக்கம் நண்பர்களே! கொஞ்சநாள் வேலைப்பளுவின் காரணமாக எந்த பதிவும் எழுதவில்லை. மேலும் நண்பர்களின் வலைப்பதிவு பக்கமும் வரமுடியவில்லை. இந்த மாதம் வருட முடிவு என்பதால் வேலைப்பளு அதிகம். சரி பதிவுக்கு போவோம்.

     இதற்கு முன் மொய் இல்லாமல் திருமணம் செய்வோம் என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தேன் அதைப்படிக்க இங்கு செல்லவும்.

     வரதட்சினை வாங்குவதற்கு மிகவும் முக்கியமானவர்கள் யார் என்று கேட்டால் மணமகன் அல்லது மணமகன் வீட்டார்கள் என்றுதான் பதில் சொல்கிறார்கள். காரணம் ஒரு சில இடங்களில் மணமகனோ அல்லது மணமகனின் தாய்-தந்தையோ, அல்லது உறவினர்களோ என்று யாராவது ஒருவர் வரதட்சினையை கேட்டு வாங்குவார்கள். 

       மணமகன் வீட்டார்கள் வரதட்சினையை கேட்டு வாங்குவதற்கு என்ன காரணம்? என்று பார்ப்போம். சுருக்கமாகவே சொல்ல நினைக்கிறேன்.
 • தங்கள் வீட்டில் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டும் என்றால் அவர்களையும் அறியாமல் வரதட்சினை கேட்க்கிறார்கள்.
 • மணமகன் படித்து வேலையில் இருந்தால் அதற்கு தகுந்தாற்போல் வரதட்சினை கேட்க்கிறார்கள்.
 • வரதட்சினை கேட்கவில்லை என்றால் மணமகள் வீட்டார்கள் மணமகனுக்கு ஏதோ குறை இருக்கிறது என்று எண்ணுகிறார்கள்.
 • அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒண்ணுமே இல்லாமல் கல்யாணம் செய்துகொண்டு வந்திருக்கிறார்கள் என்று ஏளனம் பேசுவார்கள்.
 • சொந்தப் பந்தத்தில் இருக்கும் பெண் வீட்டார்கள், ஆமாம் இவ என்னத்த அள்ளிகிட்டு வந்துட்டா? என் பொண்ணை கட்டியிருந்தால் எல்லாமே அவனுக்குதான் என்று சொல்வார்கள்.
 • பொண்ணு நிறத்திலோ? அல்லது உயரத்திலோ? அல்லது உருவத்திலோ? குறை இருந்தால் வரதட்சினையை கூடுதலாக கேட்பார்கள்.     
 •  பணக்காரர்கள் வீட்டுப் பொண்ணாக இருந்தால் வேண்டும் என்றே கேட்டு வாங்குவார்கள்.
 • மணமகன் வீட்டில் அதிகசொத்துக்கள் இருந்தால் வருகிற பொண்ணும் அந்தளவுக்கு இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
இவைகள் எல்லாம் எனது அனுபவத்தில் தெரிந்தவைகள் இன்னும் நிறைய காரணங்கள் இருக்கிறது.
       ஆனால் வரதட்சினை வாங்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் மணமகளின் வீட்டார்கள் என்பதையும் ஒத்துகொள்ளவேண்டும். மணமகன் வீட்டார்கள் வரதட்சினை கேட்டாலும் சில மணமகன்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள். அப்படி சொன்னதும் மணமகள் வீட்டார்கள் சந்தேக கண்ணோடு பார்க்கிறார்கள். அச்சோ! மாப்பிள்ளைக்கு ஏதாவது குறை இருக்குமோ? அல்லது கெட்டப் பழக்கங்கள் அதிகமாக இருக்குமோ? என்றெல்லாம் கற்பனை செய்து விசாரிக்கிறார்கள். பல இடங்களில் இந்துபோல் வரும் பிரட்சினைகளால்தான் மணமகன் அமைதியாகவே இருந்துவிடுகிறார்கள்.

          இந்த பதிவிற்கான காரணமே இதுதான். இவுலகில் வரதட்சினையே வேண்டாம் என்று சொல்லும் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். தயவு செய்து அவர்களின்மேல் இப்படி அபாண்டமான பழியை சுமத்தாதீர்கள். மணமகள் வீட்டார்கள் பொண்ணை படிக்க வைப்பதற்கும், நல்ல முறையில் வளர்ப்பதற்கும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று நன்றாகவே இந்த கால இளைஞர்களுக்கு தெரியும். படித்த விபரம் தெரிந்த பெண் வேண்டும் என்று நினைக்கும் எந்த மணமகனும் வரதட்சினையை எதிர்ப்பார்ப்பதில்லை. எனது நண்பர்கள் மருத்துவர், என்ஜினியர், ஆசிரியர்கள் என்று பல படிப்பை முடித்துவிட்டு நல்ல உத்தியோகத்தில் இருந்தும், வரதட்சினையே வாங்காமல் திருமணம் செய்திருக்கிறார்கள்.

      மணமகள் வீட்டார்கள் அவர்கள் விருப்பத்திற்கு தனது மகளுக்கு கொடுக்கும் தங்க ஆபரணங்களுக்கும், பொருளுக்கும் பெயர் வரதட்சினை கிடையாது. கேட்டு வாங்குவதற்கு பெயர்தான் வரதட்சினை. அதேசமயம் வரதட்சினையை கேட்டு கேட்டு வாங்கும் மணமகனும், மணமகன் வீட்டார்களும் இருக்கிறார்கள் என்பதையும் மறுக்கவில்லை, அவர்கள் மனிதர்களே இல்லை. நல்ல மனிதர்களை "புண்" படுத்தவேண்டாம். நல்லவர்களை சோதனை செய்யவேண்டாம். மீண்டும் மீண்டும் நீங்கள் இந்த தவறை செய்தால் நாட்டில் நல்லவர்களே இருக்கமாட்டார்கள்.

Thursday, December 13, 2012

உலகம் அழியப்போகுதாம்! பயமா இருக்கு!


"அப்பா!"

"ம்ம், சொல்லும்மா!"

"உலகம் அழியப்போகுதாம்! பயமா இருக்குப்பா! எப்படிப்பா உலகம் அழியும்? "

"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, உனக்கு யார் சொன்னா?"

"ஐயோ! அப்பா உங்களுக்குத்தான் ஒண்ணுமே தெரியவில்லை, எங்க ஸ்கூல்ல எல்லா பசங்களும் சொல்றாங்க, அதுமட்டுமில்லாம இன்டர்நெட், டிவி, செய்தித்தாள்கள், வார இதழ்கள் என எல்லாவற்றிலும் வருகிறதாம்."

"ஓ! அப்படியா! இன்னும் என்னென்னவெல்லாம் சொல்றாங்க?"

"அதுவா மாயன்கள் என்று ஒரு இனத்தவர்கள் இருந்தார்களாம், அவர்களின் காலண்டர் வருகிற டிசம்பர் 21 ம் தேதியோடு முடிவடைகிறதாம், அதுமட்டுமில்லாமல் அவர்களில் யாரும் இப்போது உயிருடன் இல்லையாம்."

"ம்ம்ம், அப்பறம்?"

"ஒரு சாரார்கள் அவர்கள் பூமியில் இருந்து மாற்றுகிரகத்துக்கு போய்விட்டதாகவும், ஒரு சாரார் அவர்கள் மாயமாக போய்விட்டதாகவும் கூறுகிறார்கள்."

"ம்ம்ம், பரவாயில்லையே உங்களுக்கு இவ்வளவு செய்திகள் தெரிந்திருக்கே! மேலே சொல்லும்மா?"

"பூமியை நோக்கி ஒரு கோள் வந்துகொண்டிருப்பதாகவும், அந்த கோள் பூமியில் மோதும்போது பூமி உடைந்து தூள்தூளாக நொறுங்கிவிடுமாம்."

"அச்சச்சோ! அப்பறம்?"

"அந்த கோள் பூமியிலுள்ள நீர் பகுதியில் மோதினால், அந்த நீர் பீச்சியடித்து 'சுனாமிபோல்' வரும்போது இந்த உலகம் நீரில் மூழ்கிவிடுமாம். அல்லது நிலப்பரப்பில் மோதினால் 'பூகம்பம்' வந்து இந்த உலகம் மண்ணில் புதைந்துவிடுமாம்."

"பயங்கரமா இருக்கே! பிறகு?"

"அவ்ளோதாம்பா சொன்னாங்க, இதைக் கேட்டவுடன் எனக்கு பயம் வந்துவிட்டது அதனால் ஓடி வந்துட்டேன்."

"நீதான் ரொம்ப தைரியமான பொண்ணாச்சே! இதைக்கேட்ட பயந்துட்டே!"

"ஆமாம்ப்பா!, சரி நாம இப்ப என்னப்பா செய்யறது?"

"என்ன செய்யனும் புரியலையே! புரியும்படி சொல்லும்மா?"

"ஐயோ! மக்கு அப்பா, இப்ப அந்த கோள் நீரில் மோதினால் 'சுனாமி' வரும். அல்லது  நிலபரப்பில் மோதினால் 'பூகம்பம்' வரும். அந்த கோள் எங்கு மோதும் என்று முன்கூட்டியே தெரிந்துக்கொண்டால், அழிவு 'சுனாமியாக' வருமேயானால் நாம மொட்டைமாடியில் பொய் நின்னுக்கலாம். அல்லது நிலபரப்பில் மோதி 'பூகம்பம்' வருமேயானால் நாம மைதானத்தில் போய் படுத்துக்கலாம்." 

"ஆஹா! ஐடியா சூப்பரா இருக்கே! நீ என் பொண்ணேதாம்மா!"

"காமெடி பண்ணாம சொல்லுப்பா என்ன செய்யலாம்ன்னு?

"வாம்மா இதைப்பற்றி நடந்துகிட்டே பேசலாம். எந்த விஷயத்தையும் தெரிந்துக்கொள்வதில் தவறே இல்லை, அது நன்மையாகவும் இருக்கலாம், தீமையாகவும் இருக்கலாம், கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளவேண்டும். அப்பதானே 'நன்மை' எது 'தீமை ' எதுன்னு நாம கண்டுபிடிக்க முடியும்."

"ஆமாம்ப்பா!, இப்ப அதுக்கெல்லாம் நேரம் இல்லை, சீக்கிரம் ஒரு முடிவு எடுங்கப்பா?" 

" என்ன முடிவு எடுக்க சொல்ற...?"

"நாம எங்க போயி நிக்கனும்ன்னு?"

"இப்ப அதைத்தானே சொல்லிக்கிட்டு வரேன், உனக்கு ஒரு விஷயம் ஞாபகம் இருக்கா? இந்தோனேசியாவில் 'பூகம்பம்' வந்ததனால்தான் 'சுனாமி' வந்தது. "சோ" நீ சொல்வதைப்போல் அந்த கிரகம் பூமியில் மோதினாலே அழிவு நிச்சயம்தான்."

"அச்சோ! ஆமாம்ப்பா! மறந்துட்டேன். கண்டிப்பா உலகம் அழிந்தால் நாமெல்லாம் செத்துவிடுவோமா அப்பா?"

"ஆமாம், கடிப்பாக அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நாமெல்லாம் இறப்பது நிச்சயம். ஆனால்.....!"

"என்ன ஆனால்.....!"

"இப்படி ஒரு சம்பவம் சிலப்ப நடக்கலாம், நடக்காமலும் போகலாம். இதுவரைக்கும் "NASA"இதைப்பற்றி எந்த செய்தியையும் வெளியிடவில்லை. ஆனால் ஆபத்து இருப்பதாகவும், சில சமயம் எதாவது நேரலாம் என்றும் சில விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். "

" சரிப்பா, அப்படின்னா மாயன்கள் மட்டும் எப்படி உறுதியாக நம்புகிறார்கள்? அவர்கள் இந்த அளவுக்கு நம்புவதற்கான காரணங்கள் என்ன? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கப்பா?"
"வானவியல் மற்றும் கணிதத்தில் நிபுணத்துவம் பெற்ற மாயன்களிடம்,  நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகம் தோன்றியிருக்கிறது. இவர்களின் நாட்காட்டியின் கடைசி நாளாக 21.12.2012 இருப்பதனால் இந்தப் பூமியின் இயக்கம் அன்றுடன் முடிந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்."

"இதை யார்யாரெல்லாம் நம்புகிறார்கள்?"

"சில மதவாதிகளும், வானவியல், புவியியல் விஞ்ஞானிகளும், கல்வெட்டுக்களை ஆராட்சி செய்யும் நிபுனர்க்களும்தான். ஆனால் அவர்களிடம் இதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லை, இப்படி இருக்கலாம் அப்படி என்ற யூகமும், கொஞ்ச நாட்களுக்கு முன் வந்த சில சினிமாக்களின் தாக்கமுமேயாகும்."

"அது என்ன சினிமா அப்பா?"

" Indiana jones and the kingdom of the crystal skull" , என்ற படமும், "Independence day" என்ற படமும் இதற்கும் மேல் "2012 - The End of World" இந்த படமும் மக்கள் மனதில் மட்டும் இல்லை, விஞ்ஞானிகள் மனதிலும் நம்பிக்கையை வளர்த்துவிட்டது. சும்மாவே பல கதைகளை சொல்லும் நமது மக்கள், இப்படி சில ஆதாரங்களும் கிடைத்தால் என்ன செய்வார்கள். ஒரு ஆட்டம்தாம் எப்படியாவது அவர்கள் சொல்வதை நம்ப வைக்க இப்படி பல ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள்."

"சரிப்பா, இதுவெல்லாம் பொய்க்கதை என்று 'NASA'  ஏன் சொல்லவில்லை?"

"'NASA' ரொம்ப நாட்களாகவே இதை சொல்லித்தான் பார்க்கிறது, ஆனால் வான்புவி விஞ்ஞானிகள் விடாமல் பல கதைகளை ஊடகங்கள் மூலமாகவும், இன்டர்நெட் மூலமாகவும் பரப்பி வருகிறது. 'NASA'  எதிர்த்து ஏதாவது சொன்னால் 'NASA'பொய் சொல்கிறது என்றும் உலக மக்களை ஏமாற்றுகிறது என்று கதையை திருப்பிவிடுகிரார்கள்." 

"ஓ! அப்ப இதெல்லாம் வெறும் வதந்திகள்தானா?"

"முழவதும் வதந்திகள் என்று சொல்லிவிடமுடியாது, அவர்கள் சில உண்மைகளை இதன்மூலம் வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். நம்புவதும் நம்பாததும் நமது விருப்பம். ஆனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் நாம் அவசியம் தெரிந்துக்கொள்ளவேண்டும்."

"ஏன் அப்பா?"

"இதைதான் முன்னவே சொன்னேனே, நன்மை - தீமை இரண்டையும் தெரிந்துக்கொள்ளவேண்டும் அப்போதுதான் நாம் சரியான முடிவு எடுக்கமுடியும்."

"சரிப்பா, இதைப் பற்றி மேலும் எங்கு தெரிந்துக்கொள்வது?"

"'ராஜ்சிவா, இதைப்பற்றி 202 பக்கங்கள் கொண்ட ஒரு கட்டுரையை எழுதி இருக்கார், உனக்கு நேரம் கிடைக்கும்போது அதை படித்துப்பார் என்ன சொல்லிருக்கார் என்று புரியும்." 

"சரிப்பா அது எங்கு கிடைக்கும்?"

"இதோ  அதற்கான PDF லிங்க் கொடுக்கிறேன். தரவிறக்கம் செய்துக்கொண்டு நேரம் கிடைக்கும்போது நிதானமாகப் படித்துப்பார்."

"சரிப்பா, இப்பதான் பதட்டம் குறைந்துள்ளது" அப்பான்னா அப்பாதான் உம்ம்மாஆஆ...."

"உம்ம்மாஆஆஆ... சரிம்மா."
***********************************************************************************

Tuesday, December 11, 2012

சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்.

திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.            
 இதுதான் அவரது வாழ்க்கையில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஸ்பெஷல் நாள்: 
பிறந்தநாள்
  ஒரு மனிதன் புகழின் உச்சியில் இருக்கும்போது அவங்களுடைய தன்னடக்கம்தான் அந்த மனிதனை உயர்ந்த மனிதனாகக் காட்டும். அப்படிதான் நமது ரஜினிகாந்த் அவர்களும். எந்தவொரு நிகழ்ச்சிக்குப் போனாலும், விழாக்களில் பங்கேற்றாலும் தனது எளிமையான நிலையில் சென்று இயல்பாக பேசும் ஒரு மனிதர். 


கண்ணா....!
பன்னிங்கதான் கூட்டமா வரும்...
சிங்கம்.....
சிங்கிளாதான்  வரும்.......!மலை டா......
       அண்ணாமலை.....!


என் வழி ....
  தனி...வழி! 
    சீன்டாத.....


ஆண்டவன் சொல்றான் ....
     அருணாச்சலம் முடிக்கிறான்!....
             சொல்லிட்டான்.............!
நான் எப்ப வருவேன்! 
  எப்டி வருவான்னு யாருக்கும் தெரியாது!
ஆனா வரவேண்டிய நேரத்துல ....
   கரெக்டா வந்து நிப்பேன்!


நான் ஒரு தடவ சொன்னா.....


           நூறு தடவ சொன்ன மாதிரி!....
நான் சொல்வதையும் செய்வேன்...
    சொல்லாததையும் செய்வேன்.
அதிகமா ஆசைப்படர.. ஆம்பளையும்!
    அதிகமா கோபப்படர பொம்பளையும்!
நல்லா வாழ்ந்ததா....
           சரித்தரமே கிடையாது!...

வாழ்க்கைன்னா என்னான்னு தெரியுமா உங்களுக்கு
பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட கொஞ்ச நேரத்தைத்தான் வாழ்க்கைன்னு சொல்லுவோம்!

அந்த கொஞ்ச நேரத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் துரோகம் செய்யாம, கெடுதல் எண்ணாம, நான் என்னுதுன்னு நினைக்காம கூட சேர்ந்து சந்தோஷமா வாழ்றதுதான் வாழ்க்கை! அப்படி வாழ்ரவந்தான் உண்மையான மனுஷன். இந்த உண்மை உங்களுக்கு என்னிக்கு புரியுதோ! அன்னைக்கு என்கிட்ட வாங்க ... உங்களுக்காக என் வீட்டுக்கதவு கட்டாயம் தொறந்திருக்கும். இப்ப வழிய விடுங்க .. என் வழியில நான் போகணும்...கத்தம்..... கத்தம்....
  முடிந்தது முடிந்ததுதான்......மீண்டும் ஒருமுறை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

இந்த பதிவில் உள்ள அனிமேன்களை கண்டு மகிழ சற்று பொறுமை காக்கவும்.
***********************************************************************************

Monday, December 10, 2012

தங்க ஆபரணங்களினால் வரும் நன்மை - தீமைகள்! பற்றி ஒரு பார்வை!

           
       நமது அன்றாட வாழ்க்கையில் 'தங்க ஆபரணத்திற்கென்று' ஒரு தனி இடம் இருக்கிறது. கல்யாணம் என்றால் சொல்லவே வேண்டாம் 'தாலி' முதல் தொடங்கி வரதட்சணை நகைகள், நன்கொடையாக தங்க நகைகள் என்று ஒரு கலைக்கட்டும். சிலருக்கு இதுதான் வியாபாரமே! சிலர் இதில்தான் முதலீடு செய்வார்கள். சிலர் ஆடம்பரத்திற்காக புதுப்புது டிசைன்களை வாங்கி அணிந்து மகிழ்வார்கள், நடுத்தர குடும்பத்தினர்கள் தங்களின் அவசரங்களுக்கு தங்களிடம் உள்ள தங்க ஆபரணங்களை வங்கிகளில் அடகுவைத்து தங்களது தேவையை நிறைவேற்றிக்கொள்கிரார்கள். இப்படி எல்லோருக்கும் பயன்படும் தங்கத்தின் நன்மை - தீமைகளைகள் மற்றும் இதனை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும் வங்கியில் அடகுவைக்கும்போது வட்டியின் விகிதம் எப்படி உள்ளது என்பதைப்  பற்றியும் பார்ப்போம். முதலில்    தங்க ஆபரணங்களினால் வரும் ஆபத்துகள் பற்றிப் பார்ப்போம். தங்க ஆபரணத்தினால் மிகப்பெரிய ஆபத்துகள் காத்திருக்கிறது. நண்பர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவும். 
          
 இது ஒரு உண்மைச்சம்பவம்:
             நாம் நமது 'தங்க ஆபரணங்களைப்' பாதுகாப்பாக வைத்திருப்பது மிக மிக முக்கியம். வீட்டில் 'ஆபரணங்கள்' வைத்திருந்தால் பாதுகாப்பு இல்லை! இப்ப தமிழ்நாடே இருண்டு கிடக்கும் இந்த சூழ்நிலையில் வீட்டில் 'ஆபரணங்களை' வைத்திருப்பதும் அளவுக்கு அதிகமாக நகைகளை அணிவதும் மிகவும் ஆபத்தானது.  நான்கு கிராம் தங்கத்திற்காக கொலை செய்யும் அளவுக்கு துணிந்துவிட்டார்கள் மர்ம ஆசாமிகள். ஆபரணங்களால் ஆபரணங்களுக்கு மட்டும் ஆபத்து இல்லை, கூடவே நமது உயிருக்கும் ஆபத்து என்ற நிலை உருவாகிவிட்டது.  

        ஆம், கிராமப்புறங்களில் இரவு 8 மணிக்கு மேல் குடும்பத்தோடு  "பைக்ல" இருசக்கரவாகனத்தில் வாகனத்தில் வெளியூர்களுக்கு போய்ட்டு வருவது மிக மிக ஆபத்தாக மாறிவிட்டது, பகலிலும் பல சம்பவங்கள் நடக்கிறது. இருந்தாலும் இரவு நேரங்களில்தான் அதிகம் என்றே சொல்லலாம். கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு வாரம் - பத்து நாட்களுக்கு முன்பு 4 மர்ம ஆசாமிகள் சேர்ந்து 9 பேரை வெட்டிருக்கிறார்கள். இதில் இரண்டு குழந்தைகளும் அடங்கும். கேட்கும்போதே மனதுக்குள் பதட்டமாக இருக்கிறது. நகை மற்றும் பணத்தை கைப்பற்றிக் கொண்டு ஓடிவிட்டார்கலாம். தகவல் அறிந்த போலீசார்கள் இரவு நேரங்களில் ரோந்து பணியில் சுற்றிவருகிறார்கலாம். 
         ரொம்ப கொடுமையாக இருக்கிறது. கிராமப்புறங்களில் இருப்பவர்கள் இரவுநேரங்களில் குடும்பத்தோடு வெளியூர்களுக்கு போவதை முடிந்தவரை மாற்றி வைக்கவும். அப்படியே தவிர்க்கமுடியாத சூழ்நிலை வந்தால் "பஸ்ல" போவது பாதுகாப்பானது. ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி இரவு நேரங்களில் வெளியே போகும்போது ஆபரணங்கள் அணியவேண்டாம் என்பது எனது கருத்து. நகர்ப்புறங்களிலும் அளவுக்கு அதிகமாக தங்க ஆபரணங்கள் அணிவது ஆபத்துதான். இதற்கு ஆதாரமாக தினமும் பத்திரிக்கையை எடுத்து பார்த்தால் இதுபோல் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும். இதற்கென்றே சில மர்ம ஆசாமிகள் இருக்கிறார்கள் அவர்களின் டார்கெட் மாதத்திற்கு ஒருநாள் இப்படி மோசடி செய்தால் போதும் ஒரு மாதத்திற்கான செலவுக்குப் பணம் கிடைத்துவிடுகிறது. மீண்டும் அந்த மாதத்தில் எந்த சம்பவமும் நடக்காது, போலிஸ் அவரவர்களின் வேலையை பார்க்க போய்விடுவார்கள் மீண்டும் இவர்கள் தங்களது வேட்டையை ஆரம்பிக்கிறார்கள். 
          மாதாமதாம் இப்படி ஏதாவது ஒரு சம்பவம் நடக்கிறது என்பதை மனதில் கொண்டு இதுதான் அவர்களது "டார்கெட்டாக" இருக்கும் என்பது எனது கருத்து. போன மாதமும் இதேபோல் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது ஐந்து சவரன் தங்க ஆபரணத்தை உறங்கிக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து இரண்டு மர்ம நபர்கள் உருவிக்கொண்டு ஓடிவிட்டார்கள் என்றும்  அந்த பொண்ணு எழுந்து சத்தம்போடுவதற்குள் அந்த மர்ம ஆசாமிகள் தலைமரிவாகிவிட்டார்கள் என்றும் எனது நண்பர் சொன்னார். அவர் வீட்டுக்கு பக்கத்து வீடாம் அதனால் அவர் பயந்து பயந்து வாழ்கிறார்.

நன்மைகள்:

        ஆரம்ப காலத்தில் தங்களது மகளை கல்யாணம் செய்து கொடுக்கும்போது
தங்க ஆபரணங்களையும் சீதனமாக கொடுத்தனுப்புவார்கள். இதற்கு பெயர் வரதட்சணை இல்லை, மகளுக்கு தனது வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான சூழ்நிலை வந்தாலோ! அல்லது தனக்கோ தனது குடும்பத்திற்கோ வரும் கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க இந்த ஆபரணங்கள் உதவியாக இருக்கும் என்றுதான் பெண் குழந்தைகளுக்கு சீதனமாக தங்க ஆபரணங்களையும், ஆண் குழந்தைகளுக்கு தங்களிடம் உள்ள வீடு சொத்துக்களையும் கொடுத்தனர். தங்களது காலத்திற்கு பிறகு மகள் தாய்வீடு என்று வந்தாலும் சகோதரன் எப்போதும் ஆதராவாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் தங்களது கடைசிக் காலத்தை மகனுடன்தான் கழிக்கப்போகிறோம் என்பதனாலும்தான் வீடு மற்றும் சொத்துகளை மகனுக்கு கொடுத்தார்கள். 

            இப்போது சில கிராமப்புறங்களில் இந்த முறையைத்தான் கையாண்டு வருகிறார்கள். ஆனால் பல இடங்களில் இது ஒரு வியாபாராமாகவே மாறிவிட்டது. வரதட்சினை என்ற பெயரில் மிகப்பெரிய கொடுமைகள் நடைபெறுகிறது.  இந்த தங்க ஆபரணங்களின் விலை கூடுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். பெண்கள் தங்களின் அழகை மென்மேலும் அதிகப்படுத்திக்கொள்வதற்கு இந்த தங்கத்தை பயன்படுத்துவதனாலும் இதன் விலைகூடுகிறது. மேலும் உலக பணக்காரர்கள் அனைவரும் தங்களுடைய பணத்தை வெறும் பணமாகவே வைத்திருந்தால் அதன் மதிப்பு கூடவும் குறையவும் செய்யும் அதனால் எல்லோரும் தங்க ஆபரணங்களை வாங்கி வைத்துள்ளனர்கள் அதனாலும் தங்கத்தின் விலை நாளுக்குநாள் கூடியவண்ணம் இருக்கிறது. இதன் மதிப்பு குறையவேண்டுமானால் உலகப் பணக்காரர்கள் மனசு வைத்தால் இதன் இறுக்கம் சற்று குறைந்து சாதாரண மக்களும் வாங்கி பயன்பெறலாம்.

 வங்கியில் அடகு வைக்கும்போது கவனிக்கவேண்டியவைகள்:
        
             நடுத்தரக் குடும்பத்தினர்களுக்கு தங்களது அன்றாட வாழ்க்கையில் வரும் சிறு சிறு கஷ்டங்களைக் குறைப்பது இந்த தங்க ஆபரணங்கள்தான் என்றே சொல்லலாம், அவசரத்துக்கு பணம் யாரிடமாவது கேட்டால் கொடுக்கமாட்டார்கள் அப்படியே கொடுத்தாலும் போதுமான அளவு இருக்காது. அப்படிப்பட்ட நேரத்தில் இந்த தங்க ஆபரணங்கள் கை கொடுக்கும். 

      நாம் அவசரத்திற்காக நம்மிடம் உள்ள தங்க ஆபரணத்தை அடகுவைத்துவிட்டோம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு லட்சத்திற்கு வைத்துவிட்டால் அதன் வட்டிவிகிதம் 0.68 பைசா, ஒரு மாதத்திற்கு 680 ரூபாய் இதுவே  குறைந்த வட்டி. நாம் இந்த குறைந்த வட்டியில் கடன் பெற்று நமது தேவைகளைப் பூர்த்திசெய்துக் கொள்ளவேண்டுமானால் இதற்கு சில விதிமுறைகள் இருக்கிறது அதை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.

 • ஆறு மாதத்திற்குள்ளாகவே அதன் முதல் தவணை வட்டியை செலுத்திவிட வேண்டும்.  
 • அப்படி செலுத்தாவிட்டால் கூட்டுவட்டி போடுவார்கள்.( கூட்டுவட்டி என்றால் அசல் மதிப்போடு ஆறுமாதத்திற்கான வட்டியையும் அசலோடு சேர்ப்பது.)
 • வருடத்திற்கு ஒருமுறை மொத்த பணத்தையும் செலுத்தி தங்க ஆபரணத்தை மீட்டு பிறகு அடகுவைக்கவேண்டும்.
 • அப்படி மீட்டு வைக்காமல் இரண்டாவது தவணையும் வட்டியை மட்டும் செலுத்தினால் ஒரு வருடத்திற்கு பிறகு வட்டிவிகிதம் கூடிவிடும் அதாவது 0.68 லிருந்து 1 வட்டிக்கு வந்துவிடும்.
 இந்த விதிமுறைகளைப் பின்பற்றினால் வங்கியில் குறைந்த வட்டிக்கு நமது தங்க ஆபரணங்களை அடகுவைத்து பயன்பெறலாம். இது எனது அனுபவம் மட்டுமே வங்கிக்கு வங்கி மாறுபடலாம். நான் பயன்பெறும் வங்கி "ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா " இது மட்டுமில்லாமல் நாம் நமது தங்க ஆபரணத்தை அடகுவைத்தவுடன் ரூபாய் 500 கட்டணமாக வசூலித்துக்கொள்வார்கள்.

           சரி அடகுவைக்க மட்டும்தான் வங்கிகளுக்கு போவார்கள் என்ற எண்ணம் கூடாது, பணம் தேவையில்லாதவர்கள், தங்களுடைய தங்க ஆபரணங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கும் வங்கிக்கு வருவார்கள். வீட்டில் வைப்பதைவிட இது மிகவும் பாதுகாப்பானது, வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்க வேண்டாமே! வங்கியில் லாக்கர் வசதி உள்ளது. வங்கிக்கு தகுந்தவாறு அதனுடைய கட்டணமும் மாறுபடும். ரூபாய் 1000 முதல் 2000 வரை வருடத்திற்கு  ஒரே கட்டணமாக செலுத்தலாம். நமக்கு தேவையானப்போழுது எடுக்கவும் வைக்கவும் முடியும்.

*************************************நன்றி , மீண்டும் சந்திப்போம்******************************