Pages

Thursday, December 20, 2012

அன்றொருநாள் சின்னப்பிள்ளையிலே!

       நான் சிறுவயதில் சாப்பாடு சரியாக சாப்பிடாத போது அம்மா சொல்வாங்க ஒரு கதை, அதோ அங்கே பாரு தூரத்தில் தெரிகிறதே ஒரு நிலா, அதுக்குள்ள கொஞ்சம் கருப்பா தெரியுது பாரு அது யாரும் இல்லை அதுதான் உன்னோட பாட்டி, அது செத்துப்போன பிறகு அங்கதான் போயி வடை சுட்டுகிட்டு இருக்கு, பாட்டி தம்பிக்கு ஒரு வடை கொடுன்னு சொல்வாங்க, நானும் வாயை திறந்து ஆ..ஆ 'ன்னு பார்த்துகிட்டு இருப்பேன், இந்தா அப்படின்னு என் வாயில் ஊட்டிவிடுவாங்க, நானும் நாம் சாப்பிடுவதுதான் நிலாவில் வடை சுட்டு பாட்டி அனுப்பியது என்று தலையை ஆட்டிக்கொண்டே சாப்பிடுவேன். 

அன்று  அம்மா சொன்னது பொய் என்றாலும், இன்னைக்கு நினைத்து பார்க்கும்போது சுகமா இருக்கு! நான் ஏன் அப்படியே இருந்திருக்க கூடாது.:-)

      கொஞ்சம் விபரம் தெரிந்ததும், வலது கையால் தலையை சுத்தி இடது காதை பிடிக்க சொன்னாங்க, அட இது நம்மளால முடியாதா என்று முயற்சி செய்து தொட்டேன், உடனே நாலு வயசுலயே பள்ளிக்கூடத்தில் கொண்டி உக்கார வச்சிட்டாங்க :-) பள்ளிக்கூடம் பக்கத்தில்தான் எங்க வீடு என்பதால் அடிக்கடி வீட்டுக்கு வந்துடுவேன், திரும்ப திரும்ப கொண்டி விடுவாங்க... ஒருநாள் அம்மா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து  வீட்டுக்கு வந்தேன், அப்போதுதான் வீட்டில் இருந்து  கோழி குஞ்சுகளுடன் வெளியில் வந்தது, என்னை வீட்டுக்குள்ளே போகவிடாமல் துரத்தி துரத்தி அடித்து கையில் கொத்திவிட்டது, நான் பயந்துபோய் கையில் ரத்தத்தோடு உடல் நடுநடுங்க அழுதுகிட்டே மீண்டும் பள்ளிகூடத்தில்தான் போய் நின்றேன். அன்று முதல் இடையில் வீட்டிற்கு வரவே மாட்டேனே! :-)

       ஆனால் பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியே வந்துவிடுவேன், வீட்டிற்கு போனால் திரும்பவும் கொண்டுபோய் பள்ளிக்கூடத்தில் விடுவாங்க, யாரும் இல்லை என்றால் கோழி கொத்திடும் என்பதால் வீட்டுக்கு போகமாட்டேன். வீட்டுக்கு பக்கத்தில் ஒரு காடு இருக்கிறது அங்கு விவசாயம் செய்வதில்லை சும்மாதான் இருந்தது, நிறைய செடிகள் இருக்கும் பூக்கள் பூத்து குலுங்கும் அதில் வண்ணத்துப்பூச்சிகள் வண்ணவண்ணமாய் பறக்கும், அதன்மீதுள்ள ஆசையால் முள் அடைப்பை தாண்டி சென்று பட்டாம்பூச்சி பிடிப்பேன், தட்டான் பிடிப்பேன் மண்ணில் விழுந்து விழுந்து பிடிப்பேன், பள்ளிகூட பையை அப்படியே பட்டாம்பூச்சிமேல் போட்டு அமுக்குவேன், கொஞ்சம் கொஞ்சமா பையை நகர்த்தி பட்டாம் பூச்சியை பிடிப்பேன், சிலது என்னை ஏமாற்றிவிட்டு பறந்து போய்விடும், இருந்தாலும் சோர்ந்துபோகாமல் மீண்டும் முயற்சி செய்து பிடிப்பேன்.  சரியாக பள்ளிக்கூடம் முடியும் மணி அடித்ததும் வீட்டுக்கு போயிடுவேன். நான் நல்லா படிக்கிறேன் என்று வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷம்.

     ஒருநாள் அம்மா பார்த்துட்டாங்க, ஓடி வந்து அடிபிண்ணிட்டாங்க, பள்ளிக்கூடம் அனுப்பினால் அந்த காட்டுலியா போய் விளையாடற.. ச்சி ச்சி அங்கேயா போய்  விளையாடுவாங்க என்று திட்டிகிட்டே குளுப்பாட்டினாங்க நானும் அழுதுகிட்டே குளிச்சேன், ஆனால் மனசெல்லாம் ஓடிப்போன பட்டாம்பூச்சிகள் மேலேயே இருக்கும். கொஞ்ச நாளுக்கு அப்பறம் ஓடை பக்கம் போய் தண்ணீரில் மீன் பிடித்து மீண்டும் தண்ணீரில் விட்டு விளையாடுவேன், காரணம் வீட்டுக்கு கொண்டுபோனால் பள்ளிக்கூடம் போகவில்லை என்பது தெரிந்துவிடுமே! பிறகு எனக்கு கூட்டாளியும் கிடைத்தார்கள், ஒருவருக்கு இருவரானோம், இருவருக்கு மூவரானோம்.

வண்ணத்துப்பூச்சியை பிடித்து அதன் வாலில் நூல் கட்டி வானத்தில் பறக்கவிட்டதேல்லாம் ஒரு கதை, இப்பவும் அதெல்லாம் நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது, பொன்வண்டு பிடித்து தீப்பெட்டியில் அடைத்து வைத்து அதுக்கு வேலம்மரத்து தவையை உணமாக கொடுத்ததும், அது முட்டையிட்டு குஞ்சி பொறிக்கும் என்று காத்திருந்த நாட்கள் மிகவும் சுகமானது.

       பூனை என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், காரணம் அது பாருங்க குட்டியோண்டு காலால் அப்படி இப்படியெல்லாம் பாவனை செய்து விளையாடும் பார்க்க சூப்பரா இருக்கும். முகம் பார்க்கவும் அழகா இருக்கும். நான் அதுகூடதான் அதிகம் விளையாடுவேன், ராத்திரியில் எனது அருகில் வந்து படுத்துக்கொள்ளும் "ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" ஒரு சத்தம் கொடுக்கும் பாருங்க சூப்பரா இருக்கும். அம்மா அதை அடிச்சி துரத்திவிட்டுடுவாங்க கேட்டால் பூனையை பிடித்தால் மாந்தம் வரும் என்பாங்க. இருந்தாலும் குட்டி பூனைகள் அழுகுதான். எனக்கு இப்பவும் விளையாட பிடிக்கும்.ஒரு எலியை வச்சி விளையாடும் பாருங்க சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கும். :-)

       எங்க வீட்டில் ஒரு நாய் வளர்த்தோம், அதன் பெயர் ராமு! குட்டி முதலே எங்கள் வீட்டில் வளர்த்தோம் நான் எங்க போனாலும் கூடவே வரும், காரணம் அப்பா எனக்கு வாங்கி கொடுக்கும் பாதி பிரிட்டானி பிஸ்கட்டை அதுதான் சாப்பிடும். நான் குட்டியோண்டு இருப்பேன் ஆனால் அது பெருசா இருக்கும், என்னை ஏமாற்றிவிட்டு கையில் இருந்து பிடிங்கிக்கொள்ளும் இருந்தாலும் அவன் என் நண்பன், நான் கிணற்று மோட்டாரில் குளிக்க போனால் அவனும் கூடவே வருவான் நான் சோப்பு போட்டு குளுப்பாட்டிவிடுவேன், அதை நன்றாக குளுப்படிவிடுவேன் நான் சரியாக சோப்பு தேய்த்து குளிப்பதில்லை "நாய் வெளுத்துபோனது , நான் கருத்துவிட்டேன்"   :-)

        நான் எப்போது பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தாலும் ஓடி வருவான். என்மேல் தாவுகால் போட்டு நலம் விசாரிப்பான். நான் குட்டியோண்டு பையன் என்பதால் சிலநேரம் விழுந்து விடுவேன். எப்பவும் என்னை இடித்துகொண்டே நிற்பான் கோபம் கோபமா வரும் ஆனால் அடிக்க மனசு வராது. ஒருநாள் நான் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் என்மீது தவுகால் போட்டான், நான் விழுந்துட்டேன் பையில் இருந்த "கல் சிலேட்டு" உடைந்து விட்டது. அப்பாவிடம் அழுகிட்டே சொன்னேன், அப்பா எனது "சிலேட்டை" கூட படிக்கிற பையன் உடைச்சிட்டான் என்று சொன்னேன் இருந்தாலும் இவனை காட்டி கொடுக்கவில்லை. அவ்வளவு பாசம் அவன்மேல் நாங்க இல்லாத நேரத்தில் வீட்டுக்கு யாரும் வரமுடியாது, இரவு முழுக்க முழித்திருப்பான் எப்ப தூங்குவான் என்றே தெரியாது. அவ்ளோ நன்றியுள்ளவன். 

     தொழில்நுட்ப வளர்ச்சி குறைவு என்பதால் பொழுது போக்கு என்பது இப்போது இருப்பதுபோல் சீரியல் பார்ப்பது, சினிமா பார்ப்பது என்பதெல்லாம் இல்லை தாயம் கட்டை, பல்லாங்குழி, அஞ்சாங்கல் ஆடுவது என்று மாணவிகள் விளையாடுவார்கள். மாணவர்களாகிய நாங்கள் கிட்டிப்புள்(கில்லி), கபடி, கோலி  என விளையாடுவோம். ஒருநாள் கில்லி  விளையாடும்போது ஒரு பாட்டி நெற்றியில் பட்டு ரத்தம் வந்துவிட்டது. நாங்க பயந்துகிட்டு ஓடிபோய் ஒளிந்துக்கொண்டோம் பாவம் அந்த பாட்டி மயங்கி விழுந்துவிட்டது. நான்தான் தண்ணீர் கொண்டி கொடுத்தேன் பிறகுதான் எழுந்தது என்னை அடிக்கவில்லை அதுக்கு பதிலா, ஆள்கள் வருகிறார்களா என்று பார்த்து விளையாடுங்க ராசா, என்னால் ஓடமுடியாது அதனாலதான் அடி பட்டுவிட்டது என்று சொன்னது. என்ன இருந்தாலும் "தாய்குலம் தாய்குலம்தான்" அழகா எடுத்து சொன்னதும் அதன்பிறகு அப்படி ஒரு தவறு நடக்கவே இல்லை.
 
    நானும் எனது நண்பர்களும் மண்வீடுகட்டி விளையாடுவது வழக்கம், எப்பவெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பவும்,  பள்ளி விடுமுறையில் முழுநேரமும் இதேவேளைதான். களிமண்ணால் வீடு கட்டி அதற்கொரு வாசப்படியும் வைத்து இடதுபுறம் புல்களும், வலதுபுறம் வீட்டு விலங்குகளுக்கென ஒரு கொட்டகையும் அமைத்து விளையாடுவோம். வீட்டிற்கு வெளிச்சம் கிடைக்க இரவு நேரத்தில் அப்பா உதவியோடு மின்னல் பூச்சிகளைப் பிடித்து களிமண்ணில் ஓட்டிவைத்துவிடுவோம். இதுபோல் குருவிக்கூடுகளில் பார்த்திருக்கிறோம் அதைப்பார்த்த பிறகுதான் எங்களுக்கும் இந்த ஐடியா வந்தது, வீட்டில் ஒரு வேலையும் செய்யமாட்டோம், ஆனால் வீட்டில் ஏதாவது புதியதாக ஒன்றைக் கண்டால்போதும் உடனே அதுபோல் எங்கள் வீட்டிலும் இருக்கவேண்டும் என்று எப்படியாவது செய்து வைப்போம்.

          இப்படி  எல்லா நினைவுகளையும் இன்று நினைத்துப்பாருங்கள் சுகமாக  இருக்கும்.

***********************************நன்றி, மீண்டும் சந்திப்போம்**********************

25 கருத்துகள்:

Unknown said...

Eppo thaan oluga pallikoodam pooniga? Malarum ninaivuhal arumai...

ப.கந்தசாமி said...

நல்லா இருக்குங்க.

கவியாழி said...

நல்ல பதிவு ,மீண்டும் வராத நாட்கள்

வெங்கட் நாகராஜ் said...

சுகமான நினைவுகள் தான். அப்படியே என்னையும் சிறுவயதிற்கு அழைத்துச் சென்ற நினைவுகள்! பாராட்டுகள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இனிமையான பள்ளிப் பருவ நினைவுகள்.எங்களுக்கும் நினைவுபடுத்திவிட்டீர்கள் ஆகாஷ் .அழககா விவரித்திருக்கிறீர்கள்.

சேக்கனா M. நிஜாம் said...

ஆஹா நெஞ்சம் நெகிழும் மலரும் நினைவுகள் !

தொடர வாழ்த்துகள்...

இராஜராஜேஸ்வரி said...

மனதில் மலர்ந்த நினைவுகள் அருமை !

உஷா அன்பரசு said...

அய்யோ.. அய்யோ..! இப்படில்லாம் வேற நினைச்சி பார்க்கனுமா? வாழ்க்கையின் எல்லா காலங்களும் ரசிக்க கூடியதும்,சந்தோஷமானதுதான் சகோ!
வளர்ந்த பிறகு எதிர்பார்ப்புகள்,பேராசை எல்லாம் வந்து ஒட்டிக்கிடறதாலதான் வாழ்க்கை எந்திரத்தனமா ஓடும். அப்ப கவலையில்லாம குழந்தை மாதிரி இருந்திருக்கலாமோன்னு தோணும். எப்போதும் இயல்பா இருந்தா மகிழ்ச்சியா இருக்கலாம். எனிவே.. உங்க மலரும் நினைவுகள் வாசம் நிறைந்து இருந்தது. சேரனின் டூரிங் டாக்கீஸ் தொடர் படித்திருக்கிறீர்களா? அவரோட சின்ன வயது நாட்கள் அத்தனையும் வறுமை எழுதிய கவிதை..என் மனதுக்குள் அப்படியே உட்கார்ந்து விட்டது. வாழ்க்கையில் தினம் ஒரு நிகழ்வுகள் இருந்து கொண்டேதானிருக்கும் நாளைய நினைவுகளின் அச்சாரமாய்..!

semmalai akash said...

ஐந்தாம் வகுப்புக்கு மேல் ஒழுங்கா போனேன்! :-)))))))))

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!

semmalai akash said...

கண்டிப்பாக இப்ப உள்ள எந்திரதனமான வாழ்க்கையை அனுபவிக்கும்போதுதான் அந்த ஞாபகங்கள் எல்லாம் வருகிறது.அந்த தொடர் படிக்கவில்லை படிக்க முயற்சி செய்கிறேன். உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

”தளிர் சுரேஷ்” said...

சுகமான நினைவுகள்! அருமையான பகிர்வு! வாழ்த்துக்கள்!

Jayadev Das said...

என்னோட சின்ன வயசுக்கு அப்படியே கூட்டிகிட்டு போயிட்டீங்க.........!!

சசிகலா said...

அடடா மறக்க முடியாத அற்புதமான நினைவுகள் நெஞ்சை விட்டு அகலாத மலரும் நினைவுகள். இன்றும் மனது அந்த நாட்களுக்கு திரும்ப சென்றால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என்ற ஏக்கத்திலேயே அல்லவா கழிக்கிறோம் மீதி வாழ்வை.

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பா!

RajalakshmiParamasivam said...

ஆகாஷ்,
நீங்கள் என்னை என்னுடைய பள்ளிக் கூட பருவத்திற்கே கொண்டு சென்றுவிட்டீர்கள். எத்தனை எத்தனை சந்தோஷங்கள்.அது ஒரு கனாக்காலம் தான்.
அழகாக பதிவிட்டுள்ளீர்கள்.பாராட்டுக்கள்
பகிர்வுக்கு நன்றி.
ராஜி

Ranjani Narayanan said...

நம் எல்லோருக்குமே சின்ன வயசு நினைவுகள் இனிமைதான். நான் ஆண்பிள்ளைகளுக்கு சமமாக கிட்டுப்புள், கோலி விளையாடியது நினைவுக்கு வந்தது!

அருமையான மலரும் நினைவுகளுக்குப் பாராட்டுக்கள்!

semmalai akash said...

ஆஹா ரொம்ப சந்தோசங்க...

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க....

semmalai akash said...

ஆஹா ரொம்ப சந்தோசங்க அம்மா ...

உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க அம்மா ....

சாந்தி மாரியப்பன் said...

குழந்தைப்பருவத்தின் இனிமையே தனிதான் :-)

Post a Comment