Pages

Monday, December 10, 2012

தங்க ஆபரணங்களினால் வரும் நன்மை - தீமைகள்! பற்றி ஒரு பார்வை!

           
       நமது அன்றாட வாழ்க்கையில் 'தங்க ஆபரணத்திற்கென்று' ஒரு தனி இடம் இருக்கிறது. கல்யாணம் என்றால் சொல்லவே வேண்டாம் 'தாலி' முதல் தொடங்கி வரதட்சணை நகைகள், நன்கொடையாக தங்க நகைகள் என்று ஒரு கலைக்கட்டும். சிலருக்கு இதுதான் வியாபாரமே! சிலர் இதில்தான் முதலீடு செய்வார்கள். சிலர் ஆடம்பரத்திற்காக புதுப்புது டிசைன்களை வாங்கி அணிந்து மகிழ்வார்கள், நடுத்தர குடும்பத்தினர்கள் தங்களின் அவசரங்களுக்கு தங்களிடம் உள்ள தங்க ஆபரணங்களை வங்கிகளில் அடகுவைத்து தங்களது தேவையை நிறைவேற்றிக்கொள்கிரார்கள். இப்படி எல்லோருக்கும் பயன்படும் தங்கத்தின் நன்மை - தீமைகளைகள் மற்றும் இதனை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும் வங்கியில் அடகுவைக்கும்போது வட்டியின் விகிதம் எப்படி உள்ளது என்பதைப்  பற்றியும் பார்ப்போம். முதலில்    தங்க ஆபரணங்களினால் வரும் ஆபத்துகள் பற்றிப் பார்ப்போம். தங்க ஆபரணத்தினால் மிகப்பெரிய ஆபத்துகள் காத்திருக்கிறது. நண்பர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவும். 
          
 இது ஒரு உண்மைச்சம்பவம்:
             நாம் நமது 'தங்க ஆபரணங்களைப்' பாதுகாப்பாக வைத்திருப்பது மிக மிக முக்கியம். வீட்டில் 'ஆபரணங்கள்' வைத்திருந்தால் பாதுகாப்பு இல்லை! இப்ப தமிழ்நாடே இருண்டு கிடக்கும் இந்த சூழ்நிலையில் வீட்டில் 'ஆபரணங்களை' வைத்திருப்பதும் அளவுக்கு அதிகமாக நகைகளை அணிவதும் மிகவும் ஆபத்தானது.  நான்கு கிராம் தங்கத்திற்காக கொலை செய்யும் அளவுக்கு துணிந்துவிட்டார்கள் மர்ம ஆசாமிகள். ஆபரணங்களால் ஆபரணங்களுக்கு மட்டும் ஆபத்து இல்லை, கூடவே நமது உயிருக்கும் ஆபத்து என்ற நிலை உருவாகிவிட்டது.  

        ஆம், கிராமப்புறங்களில் இரவு 8 மணிக்கு மேல் குடும்பத்தோடு  "பைக்ல" இருசக்கரவாகனத்தில் வாகனத்தில் வெளியூர்களுக்கு போய்ட்டு வருவது மிக மிக ஆபத்தாக மாறிவிட்டது, பகலிலும் பல சம்பவங்கள் நடக்கிறது. இருந்தாலும் இரவு நேரங்களில்தான் அதிகம் என்றே சொல்லலாம். கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு வாரம் - பத்து நாட்களுக்கு முன்பு 4 மர்ம ஆசாமிகள் சேர்ந்து 9 பேரை வெட்டிருக்கிறார்கள். இதில் இரண்டு குழந்தைகளும் அடங்கும். கேட்கும்போதே மனதுக்குள் பதட்டமாக இருக்கிறது. நகை மற்றும் பணத்தை கைப்பற்றிக் கொண்டு ஓடிவிட்டார்கலாம். தகவல் அறிந்த போலீசார்கள் இரவு நேரங்களில் ரோந்து பணியில் சுற்றிவருகிறார்கலாம். 
         ரொம்ப கொடுமையாக இருக்கிறது. கிராமப்புறங்களில் இருப்பவர்கள் இரவுநேரங்களில் குடும்பத்தோடு வெளியூர்களுக்கு போவதை முடிந்தவரை மாற்றி வைக்கவும். அப்படியே தவிர்க்கமுடியாத சூழ்நிலை வந்தால் "பஸ்ல" போவது பாதுகாப்பானது. ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி இரவு நேரங்களில் வெளியே போகும்போது ஆபரணங்கள் அணியவேண்டாம் என்பது எனது கருத்து. நகர்ப்புறங்களிலும் அளவுக்கு அதிகமாக தங்க ஆபரணங்கள் அணிவது ஆபத்துதான். இதற்கு ஆதாரமாக தினமும் பத்திரிக்கையை எடுத்து பார்த்தால் இதுபோல் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும். இதற்கென்றே சில மர்ம ஆசாமிகள் இருக்கிறார்கள் அவர்களின் டார்கெட் மாதத்திற்கு ஒருநாள் இப்படி மோசடி செய்தால் போதும் ஒரு மாதத்திற்கான செலவுக்குப் பணம் கிடைத்துவிடுகிறது. மீண்டும் அந்த மாதத்தில் எந்த சம்பவமும் நடக்காது, போலிஸ் அவரவர்களின் வேலையை பார்க்க போய்விடுவார்கள் மீண்டும் இவர்கள் தங்களது வேட்டையை ஆரம்பிக்கிறார்கள். 
          மாதாமதாம் இப்படி ஏதாவது ஒரு சம்பவம் நடக்கிறது என்பதை மனதில் கொண்டு இதுதான் அவர்களது "டார்கெட்டாக" இருக்கும் என்பது எனது கருத்து. போன மாதமும் இதேபோல் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது ஐந்து சவரன் தங்க ஆபரணத்தை உறங்கிக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து இரண்டு மர்ம நபர்கள் உருவிக்கொண்டு ஓடிவிட்டார்கள் என்றும்  அந்த பொண்ணு எழுந்து சத்தம்போடுவதற்குள் அந்த மர்ம ஆசாமிகள் தலைமரிவாகிவிட்டார்கள் என்றும் எனது நண்பர் சொன்னார். அவர் வீட்டுக்கு பக்கத்து வீடாம் அதனால் அவர் பயந்து பயந்து வாழ்கிறார்.

நன்மைகள்:

        ஆரம்ப காலத்தில் தங்களது மகளை கல்யாணம் செய்து கொடுக்கும்போது
தங்க ஆபரணங்களையும் சீதனமாக கொடுத்தனுப்புவார்கள். இதற்கு பெயர் வரதட்சணை இல்லை, மகளுக்கு தனது வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான சூழ்நிலை வந்தாலோ! அல்லது தனக்கோ தனது குடும்பத்திற்கோ வரும் கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க இந்த ஆபரணங்கள் உதவியாக இருக்கும் என்றுதான் பெண் குழந்தைகளுக்கு சீதனமாக தங்க ஆபரணங்களையும், ஆண் குழந்தைகளுக்கு தங்களிடம் உள்ள வீடு சொத்துக்களையும் கொடுத்தனர். தங்களது காலத்திற்கு பிறகு மகள் தாய்வீடு என்று வந்தாலும் சகோதரன் எப்போதும் ஆதராவாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் தங்களது கடைசிக் காலத்தை மகனுடன்தான் கழிக்கப்போகிறோம் என்பதனாலும்தான் வீடு மற்றும் சொத்துகளை மகனுக்கு கொடுத்தார்கள். 

            இப்போது சில கிராமப்புறங்களில் இந்த முறையைத்தான் கையாண்டு வருகிறார்கள். ஆனால் பல இடங்களில் இது ஒரு வியாபாராமாகவே மாறிவிட்டது. வரதட்சினை என்ற பெயரில் மிகப்பெரிய கொடுமைகள் நடைபெறுகிறது.  இந்த தங்க ஆபரணங்களின் விலை கூடுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். பெண்கள் தங்களின் அழகை மென்மேலும் அதிகப்படுத்திக்கொள்வதற்கு இந்த தங்கத்தை பயன்படுத்துவதனாலும் இதன் விலைகூடுகிறது. மேலும் உலக பணக்காரர்கள் அனைவரும் தங்களுடைய பணத்தை வெறும் பணமாகவே வைத்திருந்தால் அதன் மதிப்பு கூடவும் குறையவும் செய்யும் அதனால் எல்லோரும் தங்க ஆபரணங்களை வாங்கி வைத்துள்ளனர்கள் அதனாலும் தங்கத்தின் விலை நாளுக்குநாள் கூடியவண்ணம் இருக்கிறது. இதன் மதிப்பு குறையவேண்டுமானால் உலகப் பணக்காரர்கள் மனசு வைத்தால் இதன் இறுக்கம் சற்று குறைந்து சாதாரண மக்களும் வாங்கி பயன்பெறலாம்.

 வங்கியில் அடகு வைக்கும்போது கவனிக்கவேண்டியவைகள்:
        
             நடுத்தரக் குடும்பத்தினர்களுக்கு தங்களது அன்றாட வாழ்க்கையில் வரும் சிறு சிறு கஷ்டங்களைக் குறைப்பது இந்த தங்க ஆபரணங்கள்தான் என்றே சொல்லலாம், அவசரத்துக்கு பணம் யாரிடமாவது கேட்டால் கொடுக்கமாட்டார்கள் அப்படியே கொடுத்தாலும் போதுமான அளவு இருக்காது. அப்படிப்பட்ட நேரத்தில் இந்த தங்க ஆபரணங்கள் கை கொடுக்கும். 

      நாம் அவசரத்திற்காக நம்மிடம் உள்ள தங்க ஆபரணத்தை அடகுவைத்துவிட்டோம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு லட்சத்திற்கு வைத்துவிட்டால் அதன் வட்டிவிகிதம் 0.68 பைசா, ஒரு மாதத்திற்கு 680 ரூபாய் இதுவே  குறைந்த வட்டி. நாம் இந்த குறைந்த வட்டியில் கடன் பெற்று நமது தேவைகளைப் பூர்த்திசெய்துக் கொள்ளவேண்டுமானால் இதற்கு சில விதிமுறைகள் இருக்கிறது அதை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.

  • ஆறு மாதத்திற்குள்ளாகவே அதன் முதல் தவணை வட்டியை செலுத்திவிட வேண்டும்.  
  • அப்படி செலுத்தாவிட்டால் கூட்டுவட்டி போடுவார்கள்.( கூட்டுவட்டி என்றால் அசல் மதிப்போடு ஆறுமாதத்திற்கான வட்டியையும் அசலோடு சேர்ப்பது.)
  • வருடத்திற்கு ஒருமுறை மொத்த பணத்தையும் செலுத்தி தங்க ஆபரணத்தை மீட்டு பிறகு அடகுவைக்கவேண்டும்.
  • அப்படி மீட்டு வைக்காமல் இரண்டாவது தவணையும் வட்டியை மட்டும் செலுத்தினால் ஒரு வருடத்திற்கு பிறகு வட்டிவிகிதம் கூடிவிடும் அதாவது 0.68 லிருந்து 1 வட்டிக்கு வந்துவிடும்.
 இந்த விதிமுறைகளைப் பின்பற்றினால் வங்கியில் குறைந்த வட்டிக்கு நமது தங்க ஆபரணங்களை அடகுவைத்து பயன்பெறலாம். இது எனது அனுபவம் மட்டுமே வங்கிக்கு வங்கி மாறுபடலாம். நான் பயன்பெறும் வங்கி "ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா " இது மட்டுமில்லாமல் நாம் நமது தங்க ஆபரணத்தை அடகுவைத்தவுடன் ரூபாய் 500 கட்டணமாக வசூலித்துக்கொள்வார்கள்.

           சரி அடகுவைக்க மட்டும்தான் வங்கிகளுக்கு போவார்கள் என்ற எண்ணம் கூடாது, பணம் தேவையில்லாதவர்கள், தங்களுடைய தங்க ஆபரணங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கும் வங்கிக்கு வருவார்கள். வீட்டில் வைப்பதைவிட இது மிகவும் பாதுகாப்பானது, வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்க வேண்டாமே! வங்கியில் லாக்கர் வசதி உள்ளது. வங்கிக்கு தகுந்தவாறு அதனுடைய கட்டணமும் மாறுபடும். ரூபாய் 1000 முதல் 2000 வரை வருடத்திற்கு  ஒரே கட்டணமாக செலுத்தலாம். நமக்கு தேவையானப்போழுது எடுக்கவும் வைக்கவும் முடியும்.

*************************************நன்றி , மீண்டும் சந்திப்போம்******************************
 

21 கருத்துகள்:

Ramani said...

பயனுள்ள தகவல்களுடன் கூடிய
எச்சரிக்கையூட்டும் அருமையான பதிவுக்கு
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

GOOD POST

கோவை நேரம் said...

கரூர் வைஸ்யா வங்கியில் 1.14 பைசா வட்டி ஜீவல் லோன் க்கு...

கவியாழி கண்ணதாசன் said...

நல்ல பதிவு எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் .நகை வாங்குவதில் லாபம் இருந்தாலும் அதை பாதுகாப்பதில் பிரச்னை உள்ளதை சொல்கிறீர்கள்

ஸ்ரீராம். said...

பயன் தரும் தகவல்கள். தங்கம் ஒரு உபயோகரமான முதலீடு. அந்தஸ்தின் குறியீடு!

Lakshmi said...

GOOD POST

குட்டன் said...

பயனுள்ள தகவல்கள்.விலை எவ்வளவு ஏறினாலும் விற்பனை குறையாது

ஆத்மா said...

நல்ல பதிவு

சேக்கனா M. நிஜாம் said...

விழிப்புணர்வைத் தூண்டும் நல்லதொரு பதிவு !

தொடர வாழ்த்துகள்...

rajalakshmi paramasivam said...

மிகவும் உபயோகமான பகிர்வு.
தங்க நகைகளினால் வரும் ஆபத்துகளை நினைத்தால் தங்க ஆபரணம் அணிந்து கொள்ளவே பயமாய் தான் இருக்கிறது.
நல்லதொரு பகிர்வு.
பாராட்டுக்கள்.

ராஜி.

semmalai akash said...

உங்களுடைய முதல் வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

semmalai akash said...

நன்றி நண்பரே.

semmalai akash said...

ஐயோ! கொள்ளை வட்டியா இருக்கே, நீங்க IOB, SBI பக்கம் போகவும், இங்குதான் குறைந்த வட்டிக்கு கிடைக்கிறது.

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பா.

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க அம்மா

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க..

Jayadev Das said...

பைக்கில் நகைத் திருட்டு நடந்தது எந்த ஊரில்??

Post a Comment