Pages

Tuesday, January 29, 2013

ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு சில தகவல்கள். 3


       இந்த பாடத்தில் முழுமையாக விபரிக்காமல் சுருக்கமாக எனக்கு பிடித்த ஆன்ட்ராய்டு இலவச மென்பொருள்கள்(Apps)  பற்றி சொல்கிறேன்.கண்டிப்பாக நமது மொபைலில் இருக்கவேண்டியவை.

    செல்லினம் மற்றும் சில மென்பொருள்கள் பற்றி முன்னவே எழுதி இருப்பதால் விருப்பமுள்ளவர்கள் இதற்கு முந்தைய பதிவில் சென்று படித்து பயன்பெறவும்.

      (1) SwiftKey 3 Keyboard. இது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும், சாட்டிங் செய்யவும் மிகவும் எளிமையானது. முதல் வருடம் இலவசமாக கிடைக்கும் இரண்டாம் வருடத்தில் இருந்து சிறிய தொகையை செலுத்தவேண்டி இருக்கும். முதல் வருடம் இலவசம் அதைப் பாருங்க. இரண்டாம் வருடத்திற்கு முன்பு இன்னும் நிறைய மென்பொருள்கள் வந்தவண்ணம் இருக்கும்.

    (2) AVG Anti Virus. இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருள் நமது மொபைலுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதில் பயமில்லை.

       (3) U Torrent Beta - Torrent App. இந்த அப்ளிகேசன் ஐ போனில் இல்லாதது, ஆன்ட்ராய்டு போன்களில் மட்டும் இணைக்கமுடியும். எப்பொழுதும் மொபைல் போன் ஆனில் இருப்பதால், இதமூலம் சினிமா வீடியோக்களை தரவிறக்கம் செய்து USB  கேபிள் மூலம் எளிதில் கணினிக்கு மாற்றிக்கொள்ளலாம். கணினியை ஆன் செய்துவைத்து எப்படி தரவிறக்கம் செய்வது என்ற கவலை வேண்டாம்.(WiFi Connection இருக்க வேண்டியது அல்லது அன்லிமிட்டேடு இன்டர்நெட் கனெக்ஷன் இருக்க வேண்டியது  மிக மிக முக்கியம் இல்லையென்றால் பில் கூடிவிடும்.)

         (4) Temple Run 2. இதைப்பற்றி உங்களுக்கு சொல்லவே தேவையில்லை, இப்போது புதியதாக வந்த எல்லோரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு விளையாட்டு மென்பொருள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு அருமையான முடிவே இல்லாத விளையாட்டு. நேரம் போவதே தெரியாது அப்படி ஒரு விளையாட்டு. இதற்கு முன் Temple Run மட்டும் இருந்தது. இப்போது Temple Run 2 இரண்டையும் தரவிறக்கம் செய்து விளையாடி மகிழுங்கள்.

      (5) Skype - IM & Free Video Calls. இந்த  மென்பொருளைப் பற்றியும் சொல்லவே தேவையில்லை என்று நினைக்கிறேன். வீடியோ சாட் செய்வதற்கும் ஆடியோ சாட் செய்வதற்கும், பைல் ட்ரான்ஸ்பர் செய்வதற்கும், ரிமோட் கண்ட்ரோல் போல் பயன்படுத்துவதற்கும் மிகவும் பயனுள்ள மென்பொருள். சில இடங்களில் இன்டர்நெட் இணைப்பு சரியாக இல்லாத இடங்களில் சரியாக வேலை செய்யாது என்பதே கொஞ்சம் கஷ்டமான விஷயம். இணைப்புகள் சரியாக இருந்தும் கேக்கமுடியவில்லை என்றால் VPN ஏதாவது பயன்படுத்தினால் சரியாக கேட்கலாம்.

        (6) ZEDGE. இதில் இலவசமாக ரிங்க்டோன்ஸ், வால்பேப்பர்கள், லைவ் வால்பேப்பர்கள், கேம்ஸ் என பல பயன்படும் படங்களை இலவசமாகவும், மிக குறைந்த அளவுள்ள மென்பொருள்களாகவும் கிடைக்கும். தரவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

     (7) TuneIn Radio. இணைய இனைப்பு இருந்தால் போதும் எல்லா இடங்களிலும் மிகத் துள்ளியமாக FM சேனல்களை கேட்டு மகிழலாம். தமிழ் மட்டுமில்லாமல் பழமொழி FM  சேனல்களும் கிடைக்கும். 

    (8) Clean Master (Cleaner).தேவையில்லாதவற்றை மிக எளிதில் சுத்தம் செய்யக்கூடியவை. மொபைல் போனில் உள்ள இடத்தை மிச்சமாக்கலாம்.

     (9)  MX Player Codec.  இதன்மூலம் எல்லாவகையான விடியோவையும் பார்க்கமுடியும். சில வீடியோக்கள் ஓப்பன் ஆகவில்லை என்ற கவலையே வேண்டாம். நல்லதொரு மென்பொருள்.

      (10) Speed Test.Net.  இதன் மூலம் உங்களுடைய இன்டர்நெட் வேகம் எவ்வளவு என்பதை தெரிந்துக்கொள்ளமுடியும். 3G,WiFi ஆகியவற்றை தெரிந்துக்கொள்ளமுடியும்.

      (11) News Hunt. தமிழ் சரியாகத் தெரியாத ஆன்ட்ராய்டு மற்றும் அனைத்து போன்களிலும் செய்தித்தாள்களை படிக்கமுடியும். இது ஒரு அருமையான மென்பொருள் எல்லா போன்களிலும் பயன்படும் என்பதே இதன் சிறப்பு.

     (12) Brightest Flash Light Free. இந்த மென்பொருள் மூலம் நமது மொபைல் போனை ஒரு ட்டார்ச் லைட் போல் பயன்படுத்தலாம், வேற எதுவும் இல்லாமால் ஒரு ஆன் ஆப் ஸ்வீட்ச் போல் பயன்படுகிறது.

        (13) Pixlr Express. இது போட்டோஷாப் மென்பொருள்போல் பயன்படுகிறது. போட்டோஷாப்பில் என்ன என்னவெல்லாம் செய்கிறோமோ அதையெல்லாம் கிட்டத்தட்ட அதேபோல் செய்யமுடியும். மிகவும் அருமையான மேன்போரும் முற்றிலும் இலவசமானதும் கூட.

      (14) Tube Video Downloader.  இந்த மென்பொருள் மூலம் யூ ட்டுபில் வரும் வீடியோக்களை எளிதில் தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம். நல்ல மென்பொருள்.

        (15) ASTRO File manager/ browser.  நமது போனில் உள்ள பைல்களை சரிபடுத்த பயன்படும் அருமையான மென்பொருள், இதன் மூலம் நிறைய பைல்கள் இருப்பதை ஒருங்கிணைக்கலாம்.

இது மட்டுமில்லாமல் இன்னும் நமது போனில் வந்த மென்பொருள்கள் பற்றி தெரியும் என்று நினைக்கிறன். Facebook, Google Search, Twitter போன்ற சமூக தளங்களுக்கான மென்பொருள்கள் இருக்கும். இல்லையென்றால் அவற்றையும் தரவிறக்கம் செய்துக்கொள்ளவும்.

தொடரும்....

Thursday, January 24, 2013

விஸ்வரூபம் படத்தை பார்த்து படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்ததே ஒரு முஸ்லிம் தான்!

        
         விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் முஸ்லிம்  அமைப்புகள், விஸ்வரூபம் படத்தை பார்த்து படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்ததே ஒரு முஸ்லிம் தான்.......ஹாசன் முகமது ஜின்னான்னு இருக்கே அவரு முஸ்லிம் தானே? அங்கு இன்னும் சிலரும் இருக்கிறார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள்?
      முதலில் படம் வெளிவரட்டும் அதை மக்கள் பார்த்துவிட்டு பிறகு எதிர் கருத்துகள் சொன்னால் தடை விதிக்கலாம் என்பதே என்னுடைய கருத்து. சமீப காலங்களாகவே ஒவ்வொரு படம் இறங்கும்போதும் இப்படிதான் ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்க்கு முன் விஜய் படம்"துப்பாக்கி" வெளிவருவதற்கு முன்பு இப்படிதான் சொன்னதாக ஞாபகம். இப்போது இந்த படத்திற்கும்.

        இப்போது பல சமூக தளங்களிலும் இதைப்பற்றித்தான் கேலிக்கூத்தாக ஒண்ணுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்கள்.  போகிற போக்கைப் பார்த்தால் எதிர் காலத்தில்தமிழ் சினிமா எப்படி இருக்கும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

        இதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் அவர்களும்தான். முதிலில் DTH வெளியிடுவதாக சொன்னார், அதனால் எந்த தியேட்டர் உரிமையாளர்களும் இந்த திரைப்படத்தை வாங்க முன்வராததால் வெளியிடும் தேதியை மாற்றி வைத்தார்கள். இப்போது இந்த காரணம், இதன் பின்னில் இன்னும் என்ன என்ன காரணங்கள் இருக்கிறதோ தெரியவில்லை?

*************************நன்றி, மீண்டும் சந்திப்போம்,**************************


Monday, January 21, 2013

சமர் = சமர்ப்பணம் (திரை விமர்சனம்)

       
சமர் = சமர்ப்பணம்
        இயக்குநர் திரு அவர்களுக்கு எனது நன்றியை முதலில் சமர்ப்பணம் செய்கிறேன். ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு கிடைத்தது. நிறைய எதிர்பார்ப்புகள் அடுத்து என்ன நடக்குமோ என்பதை ஆவலுடன் பார்த்து ரசித்தேன். இரண்டு நாயகிகள் என்றதும் தீராத விளையாட்டுப்பிள்ளை போல்இருக்குமோ என்று நினைத்தேன், ஆனால் முற்றிலும் மாறாக காதலை மட்டும் சொல்லாமல் காதலோடு அருமையான கதையை மிக சிறப்பாக எழுதி இயக்கிய திருஅவர்களுக்கு மிக்க நன்றி.
     விஷால், திரிஷா, சுனைனா மற்றும் சம்பத், ஜெயபிரகாஷ், மனோஜ் பாஜ்பாய், ஜே.டி. சக்கரவர்த்தி ஆகியோர் நடித்து வெளிவந்த படம்தான் "சமர்" யுவன் சங்கர் ராஜா இசையில் இரண்டு பாடல்கள் மனதை கவர்ந்தது, ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம். நாதன் அருமையாக ஒவ்வொரு காட்சியையும் படமாக்கி இருக்கிறார், சுனைனா கொஞ்ச காட்சிகள் வந்தாலும் ரசிகர் மனதை புரிந்துகொண்டு நடித்துள்ளார். திரிஷா தனது உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொண்டு மீண்டும் கொஞ்சநாள் நடிக்கலாம் என்ற கனவோடு தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்திருக்கிறார், ஆனால் சினிமா உலகம் இவரை எப்படி ஏற்றுக்கொள்ளும் என்பதுதான் தெரியவில்லை. 

         கதை  முதலில் சாதரணமாக மலைக்காடுகளில் ஆரம்பித்தாலும் படம் முழுக்க நகரத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு காட்சியும் ஏதோ ஒரு புரியாத புதிராகவே இருந்தது. முதலில் ஊட்டியில் சுனைனாவை காதலிக்கும் விஷால் தனது காதலின் ஆழத்தை கணக்கு பார்க்காமல் இருப்பதாகவும், இவை ஒவ்வொன்றுக்கும் சுனைனா கணக்கு வைத்திருப்பதாகவும் சுனைனாவின் கேள்விகளுக்கு பதில் கூற இருவரும் பிரிகின்றனர். மூன்று மாத இடைவெளிகளுக்கு பிறகு சுனைனாவிடம் இருந்து ஒரு பார்சல் வர மீண்டும் தனது காதலியை பார்க்க "பாங்காக்" செல்கிறார், அங்கு செல்லும்போதுதான் திரிஷாவின் நட்பு கிடைக்கிறது, பிறகு அதுவே காதலாக மாறுகிறது. கடைசியில் யாரோடு இணைகிறார் என்பதுவே காதலின் கதை.

         வில்லன்களாக மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மனோஜ் பாஜ்பாய், மற்றும் ஜே.டி.சக்கரவர்த்தி இருவருக்கும் எனது பாராட்டுகள். இவர்கள் இருவரும் மிகப்பெரிய பணக்காரர்கள், இவர்களின் பொழுது போக்கிற்காக விளையாடும் விளையாட்டுதான் மீதி படமும். விஷால் தன்னைச் சுற்றி பின்னப்பட்ட சதிகளை புரியாமல் தவிப்பதுபோல் உள்ள காட்சிகள், அவரின் முக பாவனை கைதட்டலை பெறுகிறது. இதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் கதையின் கரு. மிக அருமையாக மக்கள் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார் இயக்குநர் திரு.

அழகோ  அழகு அவள் கண்ணழகு!
01. Oru Kannil vegam…Singers: K.G.Ranjith,Naveen Madhav,Suchitra
Lyricis : Na.Muthkumar
02. Azhago Azhagu…Singers: Naresh Iyer
Lyricis : Na.Muthkumar

     நா. முத்துகுமார் பாடல் வரிகள் இந்த இரண்டு பாடலும் என்னை கவர்ந்தது. கேட்டு மகிழுங்கள்.

      மொத்தத்தில் "சமர்" பார்க்கலாம் நல்ல படம். போர் இல்லாமல் கதை வேக வேகமாக நம்மையும் கூடவே இழுத்துச் செல்கிறது.   விஷால் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

************************நன்றி, மீண்டும் சந்திப்போம்.**************************
 

Sunday, January 20, 2013

ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு சில தகவல்கள். 2

பாடம் 2
(Security Apps)

    நமது போனில் படங்கள் அல்லது விடியோக்கள் வைத்திருப்போம், அல்லது நிறைய தகவல்கள், ரகசிய எண்கள், என வைத்திருப்போம் , அதனை எல்லோரும் பார்க்காமல் நமக்கு மட்டும் தெரிந்தால் நல்லாருக்கும் என்று நினைப்போம் இல்லையா? அப்படியென்றால் இது உங்களுக்கான அப்ளிகேசன்தான் APP LOCK  இதை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு ஸ்க்ரீன்ஷாட் இணைக்கிறேன். 
இந்த ஒரு அப்ளிகேசன் போதும் என்று நினைக்கிறேன். மிகவும் அருமையானது ஒவ்வொன்றையும் தனித்தனியாக லாக் செய்து வைக்கமுடிகிறது. கூகிள் ப்ளே ஸ்டோர் சென்று தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும். முற்றிலும் இலவசமானது.

Whats App Messenger 
  
      மிகவும் பயனுள்ள அப்ளிகேசன், எல்லோரிடமும் இருக்கவேண்டியது. என்ன ஒரு கஷ்டம் என்றால் இணைய இணைப்பு இருக்கவேண்டும். இணைப்பு இல்லை என்றால் மெசேஜ் அனுப்பமுடியாது. இதை நிறுவியதும் அதில் ஒருமுறை ரிஜிஸ்டர் செய்தால் போதும், உங்களுடைய நண்பர்கள் யார் யார் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துகிறார்களோ அனைவரையும் உங்க Contact List  ல் காண்பிக்கும். மிக எளிதாக அவர்களிடம் சாட் செய்ய முடியும். Whats App Messenger இது முற்றிலும் இலவசமானது, தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும். 
இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்றால், குறுஞ்செய்திகள் மட்டுமில்லாமல் ஆடியோ மெசேஜ், விடியோ மெசேஜ், படங்கள் அனுப்பமுடியும். மிக ஈசியாகவும் பயன்படுத்தமுடியும் என்பதுதான் இதன் சிறப்பம்சம். மேலும் Android, BlackBerry, iPhone, Windows Phone and Nokia phones. என அனைத்திலும் பயன்படுத்தமுடியும்.

Gallery Lock 

இந்த  மென்பொருள் அதிகமாக பயன்படுத்தும் மென்பொருளில் ஒன்றுதான், இதன் உதவியுடம், ஒவ்வொரு படங்களையும் தனித்தனியாக (ஹிட்டன்) மறைத்து வைக்கமுடியும். சில படங்களை மட்டும் பாதுகாப்பாக வைக்க நினைத்தால் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவி பயன்பெறலாம். Gallery Lock  மிகவும் தேவையான மென்பொருளும்கூட 
 எல்லோருடைய மொபைலிலும் இருக்க வேண்டியது. 

Tiny Flashlight +LED

இரவு  நேரங்களில் ஒரு "பிரைட்லைட்" போல் பயன்படுத்தலாம், அதற்கு இந்த மென்பொருள் மிகவும் சுலபமாக இயக்க பயன்படுகிறது, பல வண்ண வண்ண நிறங்களில் ஸ்க்ரீனில் வெளிச்சம் தெரியும், ஒரு ட்ராபிக் சிக்னல் போல லைட் கூட இருக்கிறது. Flashlight இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவி பயன்பத்திக்கொள்ளவும். 

போட்டோ  பிளாஷ் போல் நின்று நின்று எரியும். அருமையான மென்பொருள்.

Auto SMS Sender 

இது  மிகவும் அருமையான அவசியமான மென்பொருளும்கூட, நமது நண்பர்களுக்கு பிறந்தநாள், திருமணநாள், அல்லது மறுநாள் யாரிடமாவது அவசியம் பகிர்ந்துகொள்ளவேண்டிய செய்தியை, நமக்கு ஞாபகம் இருக்கும்போது அல்லது நேரம் இருக்கும்போது தட்டச்சு செய்து நேரம், காலத்தை செட்டிங் செய்து வைத்தால் போதும், அது தானாகவே உரிய நேரத்தில் சென்றடையும்.Auto SMS Sender இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.
 எல்லோரிடமும் இருக்கவேண்டிய அருமையான மென்பொருள். இதுபோல் இன்னும் நிறைய அப்ளிகேஷன்கள் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன்.

தொடரும்...
   
*************************நன்றி, மீண்டும் சந்திப்போம்.*******************************

Friday, January 18, 2013

ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு சில தகவல்கள்.1

           பாடம் 1
தமிழில் எழுதுவது எப்படி?, ஸ்க்ரீன்ஷாட்கள் எடுப்பது எப்படி?

        ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு சில தகவல்கள். எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம், அல்லது  ரொம்ப காலதாமதமாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இருந்தாலும் இப்போது புதியதாக போன் வாங்கியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

                போன் வாங்கியதும் முதலில் என்ன செய்ய விரும்புவோம், நமக்கு தேவையான மென்பொருள்கள் எல்லாவற்றையும் நிறுவுவோம், பிறகு இணையதளத்தில் நமக்கு தெரிந்த மொழிகளில் படிக்க எழுத முடிகிறதா என்று பார்ப்போம். இன்னும் பல பல காரணங்கள் இருக்கிறது. அவரவர்கள் தேவைகளுக்கு தகுந்தாற்போல் மாறுபடும். எது எப்படி இருந்தாலும் நமக்கு பிடித்த மென்பொருள் பற்றியும், அதன் பயன்பாடுகள் பற்றியும் சொன்னால் நாம் சொல்லும்போது நண்பர்கள் படித்து பயனடைவார்கள். அவர்களுக்கும் பிடித்திருந்தால் நிறுவி பயன்பெறுவார்கள். நான் சாம்சங் எஸ் 3 பயன்படுத்துவதால், நான் சொல்லும் எல்லா விபரங்களும் இந்த போனை பொறுத்தே அமையும்.

ஆன்ட்ராய்டு போனில் தமிழ் எழுதுவது எப்படி என்று பார்ப்போம்.
   
          தமிழில் எத்தினை மென்பொருள்கள் இருந்தாலும், மொபைல் போன்களில் அதிகம் பயன்படுத்துவது தமிழ்விசை, செல்லினம் ஆகிய இரண்டு மென்பொருள்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். தமிழ்விசை இதுவரை ஒருமுறைகூட "அப்டேட்" செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. "செல்லினம்" மென்பொருள் எப்பொழுதும் "அப்டேட்" வந்த வண்ணம் இருக்கிறது, மிகவும் அற்புதமான மென்பொருளாகும். எல்லோரும் இப்போது அதைதான் பயன்படுத்துகிறார்கள். ஆன்ட்ராய்டு மற்றும் ஐ போன், ஐ போடுகளிலும் பயன்படுத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி வாங்க எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
      முதலில் தமிழ்விசை, அல்லது செல்லினம் (என்னுடைய சாய்ஸ் செல்லினம்தான்) மென்பொருளை play store ல் இருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். பிறகு நீங்கள் தட்டச்சும் இடத்திற்கு சென்று மேலே தெரியும் தட்டச்சு பலக்கை போல் உள்ளதை கீழே இழுக்கவேண்டும் (ஸ்வைப்). உங்களுக்கு மிக எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் இங்கு சில ஸ்க்ரீன்ஷாட் இணைக்கிறேன் பாருங்கள்.
படத்தில் உள்ளதை கவனிக்கவும், சிகப்பு வட்டமிட்டிருக்கும் இடத்தில் விரல் வைத்து கீழே (ஸ்வீப்) இழுக்கவும். 
இந்த இரண்டாவது படத்தில் தெரிவதை தேர்ந்தெடுக்கவும். 

இந்த படத்தில் தெரிவதைப்போல் "செல்லினம்" என்பதை தேர்ந்தெடுக்கவும். அல்லது "தமிழ்விசை" தான் நல்லது என்று நினைப்பவர்கள் அதையும் தேர்ந்தெடுக்கலாம்.
இவ்ளோதான் , சிகப்பு வண்ணத்தில் வட்டமிட்டுள்ளதை உங்களின் வசதிகேற்ப மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம். ஆங்கிலம், தமிழ், தங்கிலிஷ் என பலவிதத்திலும் தட்டச்சு பலகையை மாற்றிக்கொள்ளலாம். Samsung Galaxy S 3 ல் Screen Shot/Capture/ Screen print  செய்வது எப்படி?

Go to "Setting", Motion, Enable to Palm swipe to capture.
பிறகு இடது புறம் இருந்து வலதுபுறமாக அல்லது வலது புறமிருந்து இடதுபுறமாக   ஸ்க்ரீன்ல கையால் துடைப்பதுப்போல் செய்தால் போதும் ஸ்க்ரீன்ஷாட்கள் காலரியில் சென்றுவிடும். மேலும் சந்தேகம் உள்ளவர்கள் இந்த கீழே உள்ள படத்தை உன்னிப்பாக கவனிக்கவும்.
நண்பர்களுக்கு மிக எளிதில் புரிந்துகொள்ளதான் படத்துடன் விளக்கம் அளிக்கிறேன், நிறைய பேருக்கு இதில் சந்தேகம் உள்ளது என்னிடம் நிறையப்பேர் கேட்டனர், எல்லோருக்கும் உதவும் வகையில்தான் இந்த பதிவு.

இதனைத்தொடர்ந்து ஆன்ட்ராய்டு போனில் பயன்படும் பல பயனுள்ள மென்பொருள்கள் பற்றியும் எழுத போகிறேன். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தாலும், அல்லது வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் மூலம் தெரிவிக்கவும். அடுத்த பாடத்தில் அதற்கான விளக்கமும் என்னால் இயன்றவரையில் தெரிவிக்கிறேன்.

தொடரும்....

******************நன்றி, மீண்டும் சந்திப்போம்.******************

Thursday, January 17, 2013

அலெக்ஸ் பாண்டியன்: அதிர்ச்சியை தந்தது!


        சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் மற்றும்பலர் நடித்து பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளிவந்த படம்தான் "அலெக்ஸ் பாண்டியன்" தேவிஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும் ஆட்டம் போட வைத்தது நம்மளை இல்லை , மூன்று கதாநாயகிகளுடன் கார்த்தியை.


       படம் ஆரம்பித்ததும் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இது சினிமாதான் என்றாலும் நம்ப முடியாத சண்டைக் கட்சி, அதுவும் ஓடும் ரயிலில் பறந்து பறந்து அடிப்பது கொஞ்சம்கூட பொருந்தவில்லை, ஏன் எதற்கு என்ற எதிர்பார்ப்புகள் இருந்தாலும் ஏனோ ஏமாற்றத்தைதான் கொடுத்தது. சரி இந்த சண்டைக் காட்சி முடிந்ததும் கதைக்கு போகலாம் என்று நினைத்தால், அங்கும் பெரிய குழப்பம்தான் வந்தது, சண்டைக் காட்சியில் கண்ட அனுஷ்காதான் கதாநாயகியா? அல்லது சந்தானத்தின் மூன்று தங்கைகளான நிகிதா, சனுஷா, அக்கான்ஷா'களில் ஒருவர்  கதாநாயகியா? என்ற குழப்பமும், பருத்திவீரன் படத்தில் "சித்தப்பவாக வந்த சரவணன் அரசியலில் பெரிய தாதாவாக காண்பித்து ஒரு கொலையும் செய்துவிட்டு ஜெயிலுக்கு போகிறார். அவர் தம்பிக்கு மொட்டை போடுகிறார் கார்த்தி, இதை கண்டதும் கதை அரசியல் பக்கம் திரும்புமா என்ற குழப்பமும் வந்தது. நல்லவிதமாக கதை திசைமாறிச் சென்றாலும், எதையோ சொல்லவந்துவிட்டு சொல்லாமல் போவதுபோல் தோன்றியது.

      சில காமெடிகள் குடும்பத்துடன் மட்டும் இல்லை தனியாக சென்று பார்த்தால்கூட ரசிக்கமுடியாத அந்தளவுக்கு ஆபாசமா முகம் சுழிக்க வைக்கிறது. அடிதடியில் துவங்கிய படம் அனுஷ்காவை கடத்திய பிறகு காட்டில் அமைதியானது. கொஞ்சம் வெறுப்பையும் கொடுத்தது.
இதையெல்லாம் இந்த காலத்து இளைஞர்கள் ரசிப்பார்கள் என்று நினைத்த இயக்குநர் கண்டிப்பாக ஒண்ணாங்கிளாஸ் படிக்கத்தான் வேண்டும்.

           திரைப்படத்தின கதையை முழுவதும் சொல்ல விருப்பம் இல்லை, இருந்தாலும் இந்த படத்தின் திரைக்கதை என்னவோ கதை துவங்கும்போதே முடிவும் தெரிந்துவிடுகிறது. கார்த்தி சொல்லும் அளவுக்கு சிறப்பாக நடிக்காதது அவரின் எதிர்காலத்தை பாதிக்கும், சகுனியில் வரும் அதே ஸ்டைல்தான். சண்டை காட்சிகள் மூலம்தான் படம் ஓடும் என்கிற நினைப்பை மாற்றவேண்டும்.

       அனுஷ்கா எதற்கு இந்த படத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார் என்றே தெரியவில்லை, தனது திறமையை வெளிப்படுத்த இந்த படத்தில் அவருக்கு ஒண்ணுமே இல்லை, கிளாமரை தவிர. மொத்தத்தில் படம் சொதப்பல். பாடல்களும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. கார்த்தி ஒரே ஸ்டைலில் நடிக்காமல், நடிப்பில் கொஞ்சம் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். இதுதான் ரசிகர்களின் எதிபார்ப்பாக இருக்கும்.

இந்த படத்தில் பாடல்களை கேட்கவும் தரவிறக்கம் செய்யவும்.


*****************************நன்றி, மீண்டும் சந்திப்போம்.******************************

Saturday, January 12, 2013

பொங்கலோ பொங்கல் சிறப்பு பதிவு!

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

           நமது முன்னோர்கள் காலத்தில் பொங்கல் பண்டிகையை  கொண்டாடிட பல இடங்களிலும் பல காரணங்களை அடிப்படையாக வைத்திருந்தார்கள். ஆனால் பொதுவாக சொல்லப்பட்டது ஒரே காரணம்தான் ஒரே கருத்துதான். விவசாயிகள்  ஆடியில் விதை விதைத்து அறுவடைக்காக காத்திருக்கும் மாதம்தான் மார்கழி மாதம். இந்த மாதத்தில் தங்களுடைய உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கவும், அறுவடை காலங்களில் நல்ல மழை பொழிந்து கதிர் அறுக்கவும், நல்ல காற்று அடித்து தானியங்களை தூற்றி எடுக்கவும், நல்ல வெயில் அடித்து எல்லா தானியங்களையும் பதமாக காயவைத்து பாதுகாத்திடவும், உதவிய  இயற்கைக்கு நன்றி கூறுவதற்காகவும். விஞ்ஞானம் வளராத காலத்தில் தங்களால் முடியாத எல்லா வேலைகளுக்கும் உதவிய கால்நடைகளுக்கும் நன்றி கூறும் சிறப்பு நாள்தான் பொங்கல் திருநாள்.  வீட்டிற்கு கொண்டுவந்த முதல் தானியத்தை சக்கரை பொங்கல் வைத்து இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் முதலில் படைத்து நன்றிகூறும் சிறப்பான நாள்தான் நாம் கொண்டாடும் இந்த பொங்கல் திருநாள்.

இந்த பொங்கல் திருநாளை ஒரே நாட்களில் கொண்டாடாமல், மொத்தம் நான்கு நாட்களாக முதல்நாள் போகிப்பண்டிகை, இரண்டாம்நாள் இயற்கையின் பொங்கல் அதாவது சூரிய பொங்கல், மூன்றாம்நாள் மாட்டுப்பொங்கல் அதாவது கனுமாட்டுப் பொங்கல், நான்காம் நாள் உழவர் திருநாள் என்றும் இப்படி ஒவ்வொன்றிற்கும் ஒரு நாளாக பிரித்து கொண்டாடினார்கள்.

முதல்நாள் போகிப்பண்டிகை:-

      "பழையன கழித்து புதியன புக" அக்காலத்தில் தமிழ் மாதத்தின் கடைசி நாளாக மார்கழி மாதத்தின் கடைசி நாளை கருதினர். இந்த மாதத்தில்தான் காலையில் எழுந்து வாசலில் கோலமிட்டு பஜனைகள் பாடி பல பூஜைகள் செய்து விரதம் இருப்பார்கள். பெருமாள் கோவில்களில் அதிகாலை முதல் பாடல்கள் ஒலிக்க தொடங்கிவிடும்." பழையன கழித்து " என்பதற்கு பொருள்படும் வகையில் வீட்டில தேவையில்லாதவற்றை நீக்கிவிட்டு தேவையானவற்றை சுத்தம் செய்தும், வீடுகளுக்கு புது வர்ணங்கள் பூசி "பூலாப்பூ, வேப்பிலை தோரணங்கள் கட்டி அழகு பார்த்தனர்.குழைந்தைகளும் பெரியோர்களும் புத்தாடைகள் அணிந்து புதுப்பிக்கப்பட்ட அனைத்திற்கும்,

புதியவற்றிற்கும் பொட்டு வைத்து, வெள்ளை நூலில் மஞ்சள் தடவி, தங்களுக்கும், வீட்டிற்கும், கால்நடைகளுக்கும் காப்பு கட்டி  போகிப் பண்டிகையை வரவேற்பார்கள். வயல்களில் பூலாப்பூ, வேப்பிலை,ஆவாரம்பூ ஆகியவற்றை சேர்த்து காப்பு கட்டுவார்கள். இப்படி செய்வதை நிலத்திற்கும் தங்களுடைய நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதாக உணர்ந்தார்கள்.

 இரண்டாம்நாள் தைப்பொங்கல்:-
      
         அந்த காலத்தில் சிலர் இந்த நாளை வருடத்தின் முதல் நாளாகவும், சிலர் தை மாதத்தின் முதல்நாள் பொங்கல் திருநாளாகவும் கருதி சிறப்பாக கொண்டாடினார்கள். சில இடங்களில் வெடிகள் வெடித்து பொங்கலை வரவேற்பார்கள். அதிகாலையில் எழுத்து முற்றத்தில் கோலமிட்டு, பொங்கல் வைப்பதற்கு தேவையான அனைத்தையும் கொண்டுவந்து வைத்து அதுக்கு மஞ்சள்நூல் காப்பு கட்டுவார்கள், புதுப்பானையில் அரிசியை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒவ்வொரு பிடியாக அள்ளி போடுவார்கள்.

கூடவே சக்கரையும் சேர்த்து பொங்கல் வைப்பார்கள். நுனி வாழை இலையை படையலுக்காக விரித்து வைத்தும், கரும்பு முற்றத்தில் கட்டி வைத்தும், வீட்டின் வாசலில் மாவிலை தோரணம் அணிந்தும், பொங்கல் பொங்கிவரும் வரும்வரை காத்திருப்பார்கள். சரியாக சூரியன் உதிக்கும் நேரத்திற்கு பொங்கல்  பொங்கிட "பொங்கலோ பொங்கல்!, பொங்கலோ பொங்கல்!, பொங்கலோ பொங்கல்! எனக் கூவி தங்களுடைய மகிழ்ச்சியையும், நன்றியையும் இயற்கைக்கு வெளிப்படுத்துவார்கள். உழவர்களுக்கு இதுதான் ஆனந்தத்தின் உச்சகட்டமான இடம் என்றே சொல்லலாம்.

மூன்றாம்நாள் கனுமாட்டுப் பொங்கல்:-

         மூன்றாம் நாளான இன்று தங்களளோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கு தங்களுடைய மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவிக்கும் நாளாக கருதி மிகவும் கடமை உணர்ச்சியோடு, கால்நடைகளை குளுப்பாட்டி பொட்டு வைத்து, பல பல வர்ணங்கள் அடித்து , கொம்பு சீவி அதில் சலங்கைகள் அணிந்து அல்லது கொப்பி அணிந்து, கழுத்தில் வெண்கல மணி மாலை அணிந்தும், அழகுபடித்தி பார்ப்பார்கள். ஆடு, மாடு என இரண்டிற்கும் ஒரேநேரத்தில் பொங்கல் வைத்து படிப்பவர்களும் உண்டு, பல இடங்களில் செம்மறியாடு வைத்திருப்பவர்கள் காலையில் ஆட்டுப் பொங்கலாகவும், மாலையில் மாட்டுப் பொங்கலாகவும் தனித்தனியாக கொண்டாடுவார்கள்.

காலையில் எட்டு மணிக்கு தொடங்கி ஆடுகளை குளுப்பாட்டி பொட்டு வைத்து மாலையிட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து அதன் அருகில் பொங்கல் வைத்து, பொங்கிய கஞ்சி நீரை தொட்டில்போல் செய்து அதில் ஊற்றி வைப்பார்கள். அதில் ஒரு குட்டி ஆட்டை நடக்கவைத்து வேடிக்கை பார்ப்பார்கள். வேப்பிலையின் மீது மஞ்சள் நூலையும் கட்டு சில ஆடுகளுக்கு கப்பு கட்டுவார்கள். மூன்று அல்லது ஐந்து கெடாக்களை பிடித்து அதன் கொம்பில் தேங்காயை உடைத்து படைப்பார்கள். படித்தபிறகு மஞ்சள் நீரை மாவிலையால் ஆட்டின்மேல் தெளிப்பார்கள். சிலர் ஆடுகளை பிடித்து படைத்த படையலை ஊட்டுவார்கள். இதேபோல்தான் மாலையில்

மாட்டுக்கும் பொங்கல் வைத்து படைத்து மாட்டுக்கும் ஊற்றுவார்கள். இந்த நாளை தங்களுடன் உழைத்த கால்நடைகளுக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாளாக கருதி சந்தோஷப்படுவார்கள்.

நான்காம்நாள் உழவர் திருநாள் அல்லது கரிநாள்:-

         முதல் மூன்று நாட்களை வீட்டை சுத்தம் செய்தும், மனதை சுத்தம் செய்தும், இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நற்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தவர்கள், பண்டிகையின் கடைசிநாளை தங்களுக்காக கொண்டாடினார்கள், முந்தையநாள் இரவு முதலே ஆட்டம்பாட்டம் எல்லாம் தொடங்கிட, மறுநாள் அதிகாலையில் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு சூரியன் வருவதற்குள் வீடு வந்து சேர்வார்கள். பெரியவர்கள் தங்களுடன் உழைத்த கூலி தொழிலாளிகளுக்கு பரிசுகளையும், புதிய ஆடைகளை வழங்கியும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். சில இடங்களில் பணமாக கொடுப்பதும் வழக்கம். சிறிய குழந்தைகள் காலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிவாதம் வாங்குவதும், பிறகு அருகில் உள்ள விளையாட்டு அரங்கிலோ

அல்லது ஆற்று மணலிலோ விளையாடுவார்கள். பெண்கள் தங்களுக்கு தெரிந்த கோ கோ , கும்மிப்பாட்டு, ஊசிநூல் கோர்ப்பது என பல விளையாட்டுகளை விளையாடி பரிசுகளை தட்டிச் செல்வார்கள். ஆண்கள் விளையாட்டுகள் எல்லாம் வீர விளையாட்டுகளாக இருக்கும், ஜல்லிக்கட்டு காளையை அடக்குதல், கபடி கபடி, மல்யுத்தம், ஓட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், மாட்டுவண்டி பந்தயம், பட்டி மன்றம், வழுக்குமரம் ஏறுதல் இப்போது

 புதியதாக கிரிகெட் போட்டிகள், என ஆங்காங்கே கலை கட்டும். இப்படிதான் நம் தமிழர்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

 பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!
நண்பர்கள்  அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!

***********************************************************************************

Wednesday, January 9, 2013

ஆண்களும் அருமையான சிக்கன்கறி சமைக்கலாம் வாங்க.

            என்ன பார்க்கிறிங்க, அட ஆமாங்க நம்ம பொண்ணுங்ககிட்ட நல்லா வாய்க்கு ருசியா சிக்கன் கறி சமைத்துகொடு மிளகு கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்னு சொன்னா, என்னவோ திரும்பவும் வரதட்சினை கேட்டமாதிரி அப்படி மேல கீழ பார்க்கிறார்கள். இது மட்டும் இல்லைங்க, ரொம்ப சலிப்பா சொல்லுவாங்க பாருங்க ஒரு "டயலாக்" கேசட்டில் ரீவைண்ட் போட்ட மாதிரி  அதை கேட்டால் மனுஷனுக்கு சிக்கனே இனி சாப்பிடவேண்டாம் என்று தோணும். "உங்களுக்கு காரம் அதிகமா போட்டு அப்படியே வறுவல் செய்யனும்னு சொல்வீங்க,   உங்க பையனுக்கு காரமே இருக்ககூடாது, உங்க அப்பாவுக்கு கிரேவி அதிகமா இருக்கனும் அதுவும் சாம்பார் மாதிரி, இப்படி ஆளுக்கொரு விதமா சமைக்க என்னால முடியாதுப்பா என்று சொல்லி வாயை அடிசிடுறாங்க. என்ன கொடுமை சார் இது! ஒரு மனுஷன் வாய்க்கு ருசியா சிக்கன்கறி கேட்டா தப்பாயா??? இதுக்காக வேற பொண்டாட்டியா கட்டிக்க முடியும்.

          நம்ம நண்பர்கள் ஏன் அதிகமா ஓட்டல் பக்கம் போகிறார்கள் என்று இப்ப புரிந்திருக்கும் என்று நினைக்கறேன்.ஒரு நாளைக்காவது வாய்க்கு ருசியா சாப்பிடலாம் என்றுதான். எனக்கு என்னவோ ஓட்டலில் செய்வது நம்ம பொண்ணுங்க செய்வதைவிட ரொம்ப கொடுமையா இருக்கும். அதனால்தாங்க இப்ப நானே சமைக்க இறங்கிட்டேன். வாங்க நீங்களும் எல்லோரும் சேர்ந்து ஒரு அருமையான சிக்கன்கறி சமைக்கலாம்.

      "ஹலோ! ஹலோ! யாருப்பா அங்க பொண்ணுங்க கூட்டம் ஆணுங்களுக்கு வாசாப்பு விடுறது. கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும்." ரொம்ப பொறாமை பிடிச்சவங்களா இருப்பாங்க போலிருக்கு!, எங்க நாம நல்லா சமைக்க கத்துக்கிட்டா இவங்களை மதிக்காம போய்டுவமோ என்ற பொறாமையா  இருக்கும்.  ஹா ஹா ஹா !

           சரி சரி வாங்க  நண்பர்களே இப்போது நமக்கு பிடித்த அருமையான காரசாரமான சிக்கன் கறி சமைப்பது எப்படி என்று பார்ப்போம். சில சமையம் நம்ம நண்பர்கள் சிக்கன் எது? மட்டன் எது? என்று தெரியாமல் சொதப்பிடுவாங்க, அதுக்காக படத்துடன் விளக்குகிறேன். ( இந்த பொண்ணுங்க நம்மளை பார்த்து சிரிக்ககூடாது என்பதற்காகவும்தாங்க ) எனக்கு இப்படி அனுபவம் இருக்கு அதும் ஒரு கூட்டமா வந்து கை தட்டி சிரிச்சாங்க, போதாதற்கு அவங்களோட நண்பர்களுக்கெல்லாம் போன் போட்டு சொல்லி சொல்லி சிரிச்சாங்க, என்னைப்போல நீங்களும்கேலிகூத்தாகிட கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கம் எல்லாம், கவனாமா படிச்சி தெரிஞ்சிக்கிங்க சொல்லிட்டேன்.

தேவையான பொருட்கள்.

சிக்கன் : 1 கிலோ(கடைக்காரனிடம் ஒரு அஞ்சோ பத்தோ கூடுதல் கொடுத்து லெக் பீஸா கேட்டு வாங்கிடுங்க)

பெரியவெங்காயம் : 4 (சின்ன வெங்காயம் வேண்டாம் நண்பர்களே, சிரமம் அதிகம், வெங்காயம் வெட்டும்போது அழுது தொலைச்சிடாதிங்க அப்பறம் மானம் கப்பல் ஏறிடும். தம்கட்டி அழாம நீளவாக்குல வெட்டு வச்சிடுங்க)

பச்சைமிளகாய் : 4 அல்லது 5 (பொண்ணுங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் வேண்டாம் அதனால் நடுவுல கீறி ரெண்டா வெட்டிடுங்க போதும்)

பூண்டு : 1 கட்டி. (இதுதாங்க ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலை, வீட்டில வேடிக்கை பார்த்துகிட்டு யாராவது இருந்தால் அவங்ககிட்ட கொடுத்து உரிக்க சொல்லிடுங்க, பிறகு எப்படியாவது கட் பண்ணிடுங்க.)
இஞ்சி : 1 ஒரு எலுமிச்சம் பழம் அளவு. (தோல் நீக்கிவிட்டு குறுக்க நறுக்க நறுக்கி வைக்கவும்.)
தக்காளி : 2 (கொஞ்சம் சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும், இதுக்கு யார் உதவியும் தேவையில்லை, அப்படியே பக்கத்தில் யாராவது இருந்தால் செம பார்வை ஒன்னு பார்த்துக்கோங்க)
கறிவேப்பிலை : தேவையான அளவு. (இதுதான் நிறைய இருக்கிறது என்று ஒரு மரத்து இலையையே போட்டுடாதிங்க, )
இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், மிளகு : எல்லாத்திலும் 3 எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ளவும். (கவனமா இருங்க அதிக போட்டுவிட்டால் வாயில் வைக்க முடியாது அவ்ளோ காரமா இருக்கும்.)
கொத்தமல்லி இலை : சிறிதளவு (நம்ம சமையலின் கலர் கொஞ்சம் முன்ன-பின்ன இருந்தால் கடைசியில் இதை வெட்டிப்போட்டு சாமாளித்துவிடலாம்)
மசாலாதூள் : 50 கிராம். (இதை எங்க போய் வாங்குவது என்று நினைத்து ஏதாவது சிலதை எடுத்து அரைக்க தொடங்கிடாதிங்க, கடைசியில நம்மளை கவுத்துடும் ஜாக்கிரதை!)
இதை எப்பவும் ஒரு பாக்கெட் வாங்கி வீட்டில் வச்சிக்கோங்க, சமயத்தில் கை கொடுக்கும். கலர் நல்லாயிருக்கணும் என்றால் காஷ்மீரி மிளகாய்த்தூள் கொஞ்சம் வாங்கி வச்சிக்கோங்க, இந்த ரகசியம் எல்லாம் நமக்குள்ளவே இருக்கட்டும் வெளியில சொல்லிடாதிங்க.

பட்டர் அல்லது நெய் : கொஞ்சம் (இதுவும் ரகசியமாக இருக்கட்டும், காரம் அதிகமாக தெரிந்தால் ஒரு எலுமிச்சம்பழத்தை சிறிதளவு பிழிந்து விடவும்.)
எண்ணெய் : தேவையான அளவு.(கவனம் கொஞ்சம் போதும் ஏன் என்றால் நாம கடைசியில் பட்டர் சேர்ப்போம் அதுமட்டுமில்லாமல் சிக்கனிலும் எண்ணெய் இருக்கும். சூரியகாந்தி எண்ணெய் வாங்கிக்கோங்க, அதுதான் நம்ம சமையலுக்கு வலு சேர்க்கும்.)
யாரும் போயி சூரியனிடம் கேட்ககூடாது என்பதற்காகத்தான் படத்தோடு இணைத்துள்ளேன்.

உப்பு தேவையான அளவு,மஞ்சள்தூள், மிளகுதூள் கொஞ்சம் கொஞ்சம். சுவை கூடுவதற்காக சிக்கன் மசாலாவை வறுத்து எடுக்கவும், அதாவது தனியாக ஒரு குட்டி வானலில் உப்பு , மஞ்சள்ப்பொடி,மிளகுப்பொடி மற்றும் சிக்கன் மசாலாவையும் சேர்த்து சிறிய சூட்டில் லைட்டா வறுத்தெடுக்கவும்.

இவ்ளோதான் தேவையான பொருட்கள், பாத்திரம் அடுப்பு எல்லாம் தேவையில்லையா என்று கேக்கப்பிடாது ஆமா. அவ்வளவுக்கு நம்ம ஆளுங்க விபரம் இல்லாதவர்கள் இல்லை என்பதால் சொல்லாமால் போறேன். ஒரு முக்கியமான விஷயம் இதையெல்லாம் எடுத்து வச்சிட்டு அப்படியே காத்து வாங்க போறமாதிரி வெளியில போயி மொபைல்ல கடலை போடுங்க, அப்படியே ஏமார்ந்த பொண்ணுங்க யாராவது கிடைச்சா சமையலில் ஏதாவது டவுட்டு இருத்தால் விஷயத்தை கேட்டு கறந்துக்கோங்க, இதெல்லாம் ரகசியமாகவே இருக்கணும் சொல்லிட்டேன். எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் வலிக்காத மாதிரியே நடிக்கணும் ஆமா....

செய்முறை :

        ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைக்கவும். அதில் சிறிதளவு எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் இலவங்கப்பட்டை, கிராம்பு , மிளகு, ஏலக்காய், பெருஞ்சீரகம் அனைத்தையும் சேர்க்கவும். கொஞ்சம் பொன்னிரத்திற்கு மாறியதும் அதில் நறுக்கு வைத்திருக்கும் பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தையும் சேர்க்கவும். வெங்காயம் வனங்கியதும் அதில் நறுக்கு வைத்திருக்கும் சிக்கனை சேர்க்கவும் சிறிய தீயில் வைத்து வேக வைக்கவும்.எண்ணெய் மற்றும் சிக்கனில் உள்ள கொழுப்பில் உள்ள எண்ணையில் வேகும்.

      இஞ்சி பூண்டை மிக்ஸ்யில் போட்டு அரைத்தெடுக்கவும், இப்போது இதையும் சேர்த்து வேக வைக்கவும். இப்ப பாருங்க நல்ல ஒரு வாசனை வரும் . அப்படியே அக்கம் பக்கம் ஒரு பார்வை பார்த்துக்கோங்க, நம்ம சமையல் வாசனையை யாராவது மோப்பம் பிடிக்கிறார்களா என்று. தக்காளி மற்றும் கறிவேப்பிலையையும் சேர்த்து வனக்கவும். எண்ணெய் பதம் குறைவாக இருந்தால் கொஞ்சம் பட்டர் அல்லது நெய் விட்டு வனக்கவும்.

        இப்போது பாருங்க சிக்கன் நன்றாக வெந்திருக்கும் அதனுடன் வறுத்து வைத்திருக்கும் மசாலா கலவையையும் சேர்க்கவும். சிறிய சூட்டில் இரண்டு மூன்று நிமிடம் வேகவைத்து இறக்கிவிடவும். இவ்ளோதாங்க சுவையான சிக்கன்கறி ரெடி. இதுக்குதாங்க இந்த பொண்ணுங்களெல்லாம் ஓவரா சீன் போடுதுங்க....:-))).
         தண்ணீர் சேர்க்காமல் செய்ததால் இப்படிதான் கொஞ்சம் வறுவல் மாதிரி இருக்கும். சப்பாத்தி, புரோட்டா, சாதம் என்று எதனுடன் வேண்டும் என்றாலும் சேர்த்து சாப்பிடலாம். கடைசியில் இதுபோல் பாத்திரத்தில் தனியாக எடுத்து அதன்மேல் கொத்தமல்லி இலையை போடவும்.

சரி நண்பர்களே எல்லோரும் சிக்கன்கறி செய்ய கத்துகிட்டிங்களா? சபாஷ்! இனி யாரு தயவும் இல்லாமல் வாய்க்கு ருசியான சிக்கன் சமைத்து சாப்பிடவும்.

(என்னை திட்டி தீர்த்தவர்கள் அனைவருக்கும் நன்றி.)
*********************************************************************************

வேண்டும் என்றே யோசிப்போர் சங்கம் :-)

                       வணக்கம் நண்பர்களே! 
கொஞ்சநாள் இந்த பக்கமே வரவில்லை, என்னுடைய முந்தைய பதிவை படித்தவர்களுக்கு சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். படிக்காதவர்கள் இங்கே போய் படிச்சி தெரிந்துக்கொள்ளவும். நன்றி.

       சரி சரி வாங்க விஷயத்திற்குப் போவோம், நமது முன்னோர்கள் அனைவரும் சாதாரண தண்ணீரைத்தான் அதாவது கிணற்று நீர், ஆற்று நீர், ஏரி-குளத்து நீர் என அனைத்தையும்தான் காலம் காலமாக குடித்து வந்தார்கள், ஆனால் அவர்களை எந்த நோயியும் பெரியதாக பாதித்ததாக தெரியவில்லை, எனது தாத்தா 106 வயதில்தான் இறந்தார். அவர் இறப்பதற்கும் முந்தையநாள்கூட கிணற்றில் இறங்கி ஓரம்பாரம் முளைத்திருக்கும் சிறு சிறு புல்களை அகற்றிருக்கிறார்.

ஆனால்  நாம் இப்போது மினரல் வாட்டர்,"டேப்" வாட்டர் என்று குடிக்கிறேன் நமது ஆய்சு என்னவோ அவர்களைவிட குறைவாகவே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும் என்பதுதான் ரொம்ப நாட்களாகவே எனக்கு புரியாமல் இருக்கிறது. இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று நினைகிறிர்கள். இப்பொழுதும் கேரளாவில் வீடு கட்டினால் மறக்காமல் கிணறும் தோண்டுகிறார்கள் கிராமப்பகுதியில்தான், நகரங்களில் இல்லை.

***********************************************************************************

Friday, January 4, 2013

என்னவோ தெரியவில்லை வாழ்க்கையே வெறுமையாக தோன்றுகிறது.


           என்னவோ தெரியவில்லை வாழ்க்கையே வெறுமையாக தோன்றுகிறது, ஒவ்வொருநாளும் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் மனது என்னவோன்னு இருக்கிறது, ஒரு காரணமும் புரியவில்லை. எதையோ யோசித்துக்கொண்டு ரொம்ப தூரம் போகிறேன் அங்கு சென்றுதான் யோசிக்கிறேன் ஆமாம் இங்கு எதற்கு வந்தோம் காரணம் புரியாமல் திகைக்கிறேன். 

          சிலநேரம் மனத வாழ்க்கையை நினைத்து சந்தோசபட்டாலும், பலநேரம் வெறுக்கிறேன். என்ன வாழ்க்கை இது என்று தோன்றுகிறது. எத்தினை எத்தினையோ பேர் சொல்லிருக்கிரார்கள் வாழ்க்கையை அப்படி வாழனும், இப்படி வாழ கத்துக்கணும்னு என்று சொல்லிருந்தாலும் இது எல்லாமே அவரவர்களுடைய அனுபவமா இருக்குமா? அல்லது அவர்களின் மனதில் தோன்றிய எண்ணமா இருக்குமா? தெரியவில்லை, ஆனால் கேட்க நல்லாருக்கு, சபாஷ் என்று கை தட்டுகிறோம்  என்னாமா எழுதிருக்கார் என்று ஆச்சரியப்படுகிறோம். ஆனால் அதே நமது வாழ்க்கையில் நேரும்போது அவர்கள் சொன்னதெல்லாம் என்னவோ ஒத்துபோகவில்லை, காரணம் கேட்டாலும் தெரியவில்லை.

"  வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில் "

       காலையில்  இருந்து இந்த பாடலை ஆயிரம் முறை பாடிருப்பேன். மனதில் ஏதாவது மாற்றம் வருகிறதா என்பதற்காகவே ஆனால் இதுவரை ஒரு மாற்றமும் இல்லை என்பதே உண்மை. பல நண்பர்களிடம் இதை பகிர்ந்துள்ளேன் என்ன செய்வது என்றும் கேட்டேன். சிலர் சொன்னார்கள் விடாத வேலை, தூக்கம் குறைவு, இதனால் டென்சன் இருக்கலாம் நல்லா தூங்குங்க எல்லாம் சரியாகிடும் என்று சொன்னார்கள். ஒரு சிலர் இந்த வயதில் இப்படி தோன்றுவதனால்தான் எல்லோரும் "மது" அருந்துகிறார்கள், போதையில் எதையும் யோசிக்காமல் நிம்மதியாக தூங்கலாம், நிறைய பேர் அடிக்கடி "சிகரெட்" அடிக்கிறார்கள் எதனால் தெரியுமா? இப்படி பலவற்றை யோசித்து யோசித்து வரும் டென்சனால்தான் என்றார்.
       எனக்கு என்னவோ இது சரியாக தெரியவில்லை, இதெல்லாம் ஒரு பழக்கம் அதுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை, அவர்கள் செய்யும் தீய பழக்க வழக்கங்களுக்கு சொல்லும் "நியாங்களாகவே" தெரிகிறது. மது அருந்தியவர்கள்தான் சில பல கொடூரமான வேலைகளை செய்துள்ளார்கள் என்பதும், விபத்துகளை ஏற்படுத்திருக்கிரார்கள் என்பதும் நாம் தினம் தினம் பார்க்கிறோம் படிக்கிறோம். அதனால் இது கண்டிப்பாக சரியான தீர்வாக இருக்காது என்று உணர்ந்து இது எனக்கு சரிப்பட்டுவராது என்று சொல்லிவிட்டேன்.

 இதையெல்லாம் எனதுமனைவியிடம் சொன்னதும் திட்ட ஆரம்பித்துவிட்டார். இது எல்லாம் எங்க நினைப்புதான். குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்டு ரசிக்காமல் போகிறதே என்கிற ஏக்கமாக இருக்கும். நமக்கு உள்ளது போதும், அதிகமாக எதுவும் வேண்டாம்   சீக்கிரம் இங்க வந்துடுங்க நாம எப்படியாவது பிழைத்துக்கொள்ளலாம் என்று அழ ஆரம்பித்துவிட்டார்.

         வேறு ஒரு நண்பரிடம் சொன்னேன், அவர் சொன்ன முதல் பதில் இதெல்லாம், நாம் ஒன்றின்மேல் அதிக ஆர்வம் கொண்டும், அடைந்தே தீரவேண்டும் என்று ஆசைப்பட்டும், மிகுந்த எதிர்பார்ப்புடம் இருக்கும்போது அது நமக்கு கிடைக்காமல் போய்விடும்போது இப்படி தோன்றும் என்று சொன்னார். அப்படி ஒன்றும் இல்லை என்று சொன்னதும் காதல் தோல்வியா என்றும், கடன் பிரச்சினையா என்றும் பல கேள்விகள் கேட்டார். இது எதுவும் பெரிதாக இல்லை என்றாலும் அவ்வப்போது சமாளிக்கும் அளவே உள்ளது இதனால் இப்படி தோன்றுவது என்பது சாத்தியம் இல்லை என்று நினைத்தேன்.

          வேறு ஒரு தோழியுடன் கேட்டேன் அவரும் இதே கேள்விகளை தவறாமல் கேட்டார், கூடவே மேலும் இரு கேள்விகள். எல்லாத்துக்கும் காரணம் நீங்க உங்க குடும்பத்துடன் இல்லாததுதான், முதலில் உங்க குடும்பத்தை பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள் எல்லாம் சரியாகும் என்றார். நமக்குள்ள கஷ்டம் மட்டும்தான் பெரியது என்று நினைக்காமல் நம்மைவிட இன்னும் பல பிரச்சினைகளுடன் வாழ்பவர்களும் உண்டு என்பதையும் கொஞ்சம் யோசியுங்கள். ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பங்களும் இருக்கிறது, அவர்கள் எல்லாம் இப்படி சிந்தித்தால் உலகின் நிலைமையை யோசித்துப்பாருங்கள் என்றார். சரியாயாக சொன்னார்கள் யோசித்துதான் பார்க்கவேண்டும். இப்பொழுது முடியாத சூழ்நிலை..

        இதனைத் தொடர்ந்து எனது நண்பர் குடும்பத்திற்கு போன் செய்து விஷயங்களை பகிர்ந்துக்கொண்டேன். அவர்கள் சொன்ன பதில் "டேய்" இதெல்லாம் ஒரு மேட்டரா, என்னிடம் சொல்லிட்ட இல்ல கவலையை விடு, எது வந்தாலும் நாங்க இருக்கிறோம். வாழ்வோ சாவோ எல்லோரும் சேர்ந்தே எதிர்கொள்வோம், எதுவாக இருந்தாலும் சமாளிக்கலாம் கவலையை விடு நிம்மதியாக தூங்கு காலையில் நேரில் வருகிறேன். எல்லாவற்றிற்கும் தீர்வு இருக்கிறது. அது எது என்று கண்டு பிடிக்கலாம் என்று நம்பிக்கை வார்த்தைகளை சொன்னார். தொடர்ந்து அவரது மனைவி இப்படி வரும் சூழ்நிலையில் இடம் மாறி தங்கி இருப்பது நல்லது, இன்னைக்கு பாருங்க சரியாகவில்லை என்றால் ஒரு வாரம் எங்ககூட வந்து தங்கிக்கோங்கஎன்று சொன்னார்கள். சில வார்த்தைகள் என் மனதில் நீர் ஊற்றியதைப்போல் இருந்தது. அதோடு வந்து தூங்கிவிட்டேன்.

        காலையில் எழுந்தேன் ஏதோ ஒரு சிறிய மாற்றம் இருந்தது. நண்பரின் நம்பிக்கை வார்த்தையில் மட்டும் இல்லை நேரிலும் வந்தார், தோலில் கைபோட்டு என்னடா ஆச்சி உனக்கு என்று அன்போடு விசாரித்தார். நண்பரின் மனைவியும் நம்மைப்போல உள்ளவர்களுக்கு நாமதாங்க ஒருவருக்கு ஒருவர் ஆதரவு ,ஏன் இப்படி இருக்கீங்க வாங்க எங்ககூட தங்கிங்க என் பையன்கூட விளையாடுபோது எல்லாம் மறந்துபோகும் என்று சொன்னாங்க, ஒண்ணுமே தெரியாத அந்த பையன் "மாமா" எனக்கு ஒரு புதிய கிப்ட் வாங்கி கொடுத்திருக்கார் அப்பா, நீங்க இதுவரை பார்க்கவில்லையே வாங்க வீட்டுக்கு போகலாம் என்று அழைத்ததும் எல்லாம் பறந்து போச்சிங்க...

      பாருங்க நண்பர்களே நம்பிக்கையும், மருந்தும் எங்கிருந்து கிடைக்கிறது என்று, போலி வாழ்க்கை போலி நம்பிக்கையை எல்லாம் மறந்துவிட்டு, மனிதனுக்கு மனிதன்தான் ஆதரவு என்று வாழுங்கள். நண்பர்களுக்கு கவலையும் குழப்பமும் வரும்போது அறிவுரைகள் ஒரு பொழுதும் மருந்தாகாது, மாறாக நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும், தொட்டுபேசும் உணர்வும், கட்டியணைத்து பேசும் விளையாட்டான வார்த்தைகளுமே போதுமானது. 

இது ஒரு சாதாரண பதிவாக இப்போது தோன்றலாம் என்னுடைய இந்த நிலைமை வருபோது உங்களுக்கும் ஊக்கமாக இருக்கும்.

*********************************நன்றி, மீண்டும் சந்திப்போம்.****************************