Pages

Thursday, February 28, 2013

எங்கே இருக்கிறாள் அவள்? அவளைத்தேடி ஒரு பயணம். பாகம் 2

வணக்கம் நண்பர்களே! முதல்  பாகத்தைப் படிக்க இங்கு . தொடர்ந்து படிக்க தொடரவும்.
பாகம் 2
      "வீட்டிற்கு வந்ததும் அம்மா கேட்டாள் என்னப்பா பொண்ணு பிடிச்சிருக்கா? எந்த பொண்ணு பிடிச்சிருக்கு? முதலில் எங்க போனீங்க? அவங்க வீட்டில் என்ன சொன்னாங்க? இப்படி பல கேள்விகள்."

    "பார்த்தேன் அம்மா முதலில் சொந்தகார பொண்ணைப் பார்த்தேன், அவங்களுக்கு நம்ம குடும்பத்தைப்பற்றி முன்னவே தெரியும் என்பதால் எந்த கேள்வியும் கேட்கவில்லை, சாப்பிட சொன்னாங்க இட்லி சாப்டேன். பொண்ணுகிட்ட என்ன செய்றீங்க என்று கேட்டேன். படிச்சிகிட்டு இருக்கேன். இப்போ கோடை விடுமுறை என்பதால் கம்ப்யூட்டர் கிளாஸ் போகிறேன், அதற்காகத்தான் கிளம்பி ரெடியாக இருக்கேன் பஸ் வந்துவிடும் நான் போகணும் என்று சொல்லிவிட்டு போய்விட்டது. இரண்டாவது பொண்ணு வீட்டுக்கு போனேன் அவங்க வீட்டில் யாரும் இல்லை, அதனால் எதுவும் பேசவில்லை, பொண்ணும் பக்கத்துவீட்டு அக்காவும் இருந்தாங்க, அந்த பொண்ணுக்கு நான் அந்த தெருவு பக்கம் போனதுமே அவங்க வீட்டுக்குத்தான் வருகிறேன் என்று தெரிந்து கையில் தண்ணீரோடு நின்றது. ஆச்சர்யமாக இருந்தது."

"ஓ! அப்படியா! உனக்கு எந்த பொண்ணை பிடிச்சிருக்கு? இரண்டாவது பொண்ணுக்கு உனது போட்டோ கொடுத்திருக்கேன் அதனால் இருக்கும் முதல் பொண்ணு ஒரு வகையில் சொந்தம் என்பதால் போட்டோ கொடுக்கவில்லை."

"என்ன சொல்ல அம்மா? முதலில் பார்த்த பொண்ணு ரொம்ப ஒல்லியா இருக்காங்க, அதைவிட படிக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது பார்த்தால் கல்யாணப் பொண்ணு மாதிரியே இல்லை. இரண்டாவது பொண்ணு கொஞ்சம் ஆரோக்கியம் இருக்கு, ஆனால் பேசவில்லை அவங்க விபரம் எதுவும் தெரியாது இன்னொருநாள் போய் பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று சுரேஷ் முடித்தான்."

"சரிப்பா நாளைக்கு இன்னும் இரண்டு இடத்திற்கு போய் அந்த பொண்ணுங்களையும் பார்த்துட்டு வா, பிறகு உங்க ஒன்னுவிட்ட அக்காவீட்டுக்கும் போய்ட்டு வந்திடு, அவங்களுக்கும் உங்க அப்பாவுக்கும் ஏதோ தர்க்கம் அதனால் நாங்க பொண்ணைப் பற்றி எதுவும் கேட்கவில்லை, அவதான் சின்னத்தில் இருந்தே உனக்குத்தான் பொண்ணை கொடுப்பதாக சொல்லிக்கிட்டு இருந்தாள் இப்ப காலேஜ் வேற படிக்கிறாள். இப்ப பொண்ணு கொடுப்பாங்களா? அல்லது படிப்பு முடியட்டும் என்று சொல்லுவாங்களா? தெரியாது எதுக்கும் போய்ட்டு வந்திடு."

"அம்மா நான்தான் முன்னவே சொல்லிருக்கேனே அப்பாவிடம் கோபமாக பேசியவர்கள் வீட்டில் எனக்கு பொண்ணு வேண்டாம்."

"அதில்லைப்பா, அவளுக்கு நம்மளைப்பற்றி தெரியும்,ஆனால் அவங்க சொந்த பந்தங்களுக்கு நம்மளைப்பற்றி தெரியாது. அன்னைக்கு பேச்சு வாக்கில் அவளின் சொந்தத்தில் ஒருத்திதான் உங்க அப்பாகிட்ட ஒரு மாதிரி பேசுனாங்க, அதன்பிறகுதான் இவளும் தம்பி வரட்டும் பார்த்து பேசிட்டு பொண்ணு கொடுக்கிறேன் என்று சொன்னாள்."

"ஓ! இவ்ளோ நாளா என்னைப்பற்றி தெரியாதா அந்த அக்காவுக்கு, அல்லது மாவுக்குதான் தெரியாதா? அந்த பொண்ணுக்கும் என்னைத் தெரியுமே, அக்கா பொண்ணுதானே என்பதால் அதிகம் பேசவில்லை அவ்ளோதான். சரி விடும்மா, அவங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னைப் பார்க்க வருவதைப்போல் இங்கு வருவாங்க இல்லை என்றால் போகட்டும் விடுங்களேன்."

"எப்படியோ போப்பா! உங்க அப்பாவின் பிடிவாதக் குணம்தான் உனக்கும் இருக்கு. உங்க அக்கா வீட்டுக்கு அருகில் ஒரு பொண்ணு இருக்கு உங்க அக்காவுக்கு அவளை உனக்கு கட்டிவைத்தால் நல்லாருக்கும் என்று விருப்பம் அதனால் நாளைக்கு அக்கா வீட்டுக்கு போய்ட்டு அப்படியே அந்த பொண்ணைப்பற்றியும் விசாரித்துவிட்டு வந்திடு."

"ம்ம்ம் சரிம்மா!, அக்காவீட்டுக்கு கூட சும்மா போகக்கூடாதா? எல்லாத்துக்கும் ஒரு ப்ளான் போட்டு வச்சிருக்கியே! இந்த முறை எவ கையிலாவது என்னை பிடிச்சி கொடுக்காம விட மாட்ட போலிருக்கே!"

"இதை கேட்ட சுரேஷின் அண்ணி, ஆமாம் ஆமாம் எனக்கும் இந்த வீட்டில் தனியா போர் அடிக்குது, சீக்கிரம் கல்யாணம் பண்ணு அப்பதான் எனக்கும் ஒரு துணை கிடைக்கும். ஹீ ஹீ ஹீ !!!"

"ஓ! உங்களுக்கு துணை வேணும் என்பதற்காக நான் கல்யாணம் பண்ணிக்கனுமா என்ன? "

"ஆமாம், இல்லைனா உனக்கு வயசாகிவிட்டது என்று யாரும் பொண்ணு கொடுக்கமாட்டாங்க..:-))"

"என்ன கிண்டலா..." 

இப்படி சுரேஷ் வீட்டில் எல்லோரும் கல்யாணத்திலே குறியாக இருந்தார்கள். விடாமல் அம்மாவின் தொல்லையும், மறுநாள் காலையில் அக்காவிடம் இருந்து போன் வந்தது.

"ஹலோ அம்மா"

"ம்ம்ம், சொல்லுடி! நான் இப்பதான் உனக்கு போன் செய்யலாம் என்று இருந்தேன், உன் தம்பி உன்னைப் பார்க்க வருகிறான். அப்படியே நீ சொன்ன பொண்ணையும் அவன்கிட்ட காட்டிவிடு"

"ஐயோ! அம்மா அதுக்காகத்தான் நானும் போன் செய்தேன், அந்த பொண்ணோட அப்பாவுக்கு நம்ம வீட்டில் கொடுக்கத்தான் இஷ்டம், ஆனால் அவங்க அம்மாவுக்கு அவங்க சித்தப்பா மகனுக்கு கொடுக்க விருப்பம், அதனால் அவங்க வீட்டில் நேற்று பெரிய சண்டை, அதனால் தம்பி இப்ப இங்க வரவேண்டாம். அவங்க முடிவு சொன்னதும் நானே போன் செய்கிறேன்."

"ஓ!  அப்படியா! அவங்க இருவருக்கும் விருப்பம் இருந்தால் மட்டும் சொல்லு, இல்லை என்றால் வேண்டவே வேண்டாம். வேற இடம் பார்த்துக்கொள்ளலாம்." 

"சரிம்மா, இதையெல்லாம் தம்பிகிட்ட சொல்லவேண்டாம்."

"அவன்தான் பக்கத்தில் இருக்கான், சரி விடு அவனை வேறு ஊருக்கு அனுப்புகிறேன்."

இப்போதுதான்  புரிந்தது சுரேஷ்க்கு, ஒரு கல்யாணத்தில் பொண்ணுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் போதாது, அவங்க வீட்டில் எல்லோருக்கும் விருப்பம் இருக்கணும், அதுமட்டுமில்லாமல், அவங்க சொந்தத்தில் மாப்பிள்ளை இருக்ககூடாது. என்ன கொடுமை சார். இப்படி தேடி தேடி எங்க பொண்ணைப் பார்ப்பது, அப்படி ஒரு நல்ல பொண்ணு அமைந்தால் இந்த காதல் ஒரு பக்கம் இருக்கு அதையும் விசாரிக்கனும். போற போக்கைப் பார்த்தால் காதலிக்காமல் ஒரு பொண்ணு கிடைக்க ரொம்ப கஷ்டமா இருக்கும் போலிருக்கே! குழப்பத்தில் அம்மாவிடம் சொன்னான் அம்மா நான் இன்னைக்கு எங்கேயும் போகவில்லை, வேணும் என்றால் நீங்களே போய் விசாரித்துவிட்டு வாங்க, மாப்பிள்ளையை பார்க்கணும் என்றால் மட்டும் நான் வருகிறேன். அல்லது அவர்கள் இங்கு வரட்டும், எனக்கு பொண்ணைப் பார்க்கணும் என்றால் நான் போய் பார்த்துக்கிறேன். ஒன்னும் அவசரம் இல்லை. பொறுமையா எல்லாம் நடக்கட்டும். என்று முடிவாக சொல்லிட்டான். இது மட்டுமா இதற்குமேல் ஜாதகம் குலம் கோத்திரம் என்று எல்லாம் பார்ப்பிங்களே அதையும்  பார்த்துவிட்டு ஒரு வழிக்கு வாங்க கடைசியா நான் வருகிறேன் என்று சொல்லிட்டான்.

அப்போதுதான் தன் மனதில் உள்ளதை யாரிடமாவது சொல்லணும் என்று தோன்றியது உடனே சந்தியாவுக்கு போன் செய்தான்.

"ஹலோ சந்தியா"

"ம்ம்ம் சொல்லுங்க மாமா, எப்ப வந்திங்க? வந்து ஒரு போன்கூட காணுமேன்னு தவிச்சிகிட்டு இருந்தேன். நல்லவேளையாக இப்ப போன் பண்ணிட்டிங்க. என்னை எப்ப பார்க்க வரிங்க?"

"ஐயோ! இங்க அம்மா தொல்லை தாங்கமுடியவில்லை! அங்க போய் பொண்ணைப் பாரு, இங்க போய் பாருன்னு தொல்லையா இருக்கு.. என எல்லாத்தையும் சொல்லி முடித்தான்."

"ஒரு கல்யாணம் என்றால் இப்படித்தான், சும்மாவா பெரியவங்க இவ்ளோ கஷ்டப் படுறாங்க."

"சரி நான் இன்னைக்கு உன்னை பார்க்கணும் எங்க வரட்டும்"

"நேரா எங்க வீட்டுக்கே வாங்க, நான் மாமியார் பசங்க மட்டும்தான் இருக்கோம். நான் அவங்ககிட்ட எங்க தூரத்து வகையில் அத்தை பையன் என்று சொல்லி சமாளிச்சிக்கிறேன் வாங்க."

"எத்தினை நாளா இப்படி யோசித்து வச்சிருக்க?"

"அதெல்லாம் எப்பவே, நீங்க வந்தா என்ன சொல்வதென்று இன்னும் பல வழி யோசித்து கடைசியாக கண்ட வழிதான் இது!"

"யப்பாப்பா! எல்லோரும் ரொம்ப விபரமா இருக்கிங்கப்பா, நான்தான் இன்னும் பழையதையே நினைச்சிகிட்டு முட்டாளா இருக்கிறேன்."

"ஹீ ஹீ ஹீ !!! , நாங்கலாம் அப்பவே உங்களை லவ் பண்ண பல பொய் சொன்னவங்க...!"

"அடிப்பாவி! அதுதான் தெரியுமே! என்கிட்டயே அப்படி வாயடிப்ப இப்ப உன் கணவர் பாவம்."

"அதெல்லாம் உங்ககிட்ட மட்டும்தான், அவர்கிட்ட ஒன்னும்பேசமுடியாதுஎதிர்த்து பேசினால் அடி உதைதான். ஐ மிஸ் யூ.. மாமா!"
(சிறிய வேதனையுடன் )

"ஏய்!..............நீதானே சொன்ன இனி இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று. இப்ப நீயே இப்படி பேசினால் எப்படி?"

"மனதை எப்படி சமாதானம் செய்தாலும் இழந்த இழப்பை ஈடுகட்ட முடியவில்லை, ஒவ்வொரு செய்கையிலும் உனது ஞாபகம் வந்து வந்து போகிறது. உங்களை கல்யாணம் செய்திருந்தால் இப்படி இருந்திருக்கலாமோ என்று ஒப்பிட்டு பார்க்கிறது மனசு. நினைக்காத நாட்களே இல்லை. மறந்துவிட்டேன், மறந்துவிடலாம் என்பதெல்லாம் பொய்."

" சந்தியா! நீ இப்போ இரண்டு குழந்தைக்கு தாய், இப்படியெல்லாம் பேசக்கூடாது, நான் துபையில் இருக்கும்போது ரொம்ப தெளிவா பேசின உனக்கு இப்போ என்ன ஆச்சி?"

"தூரத்தில் இருக்கும்போது தெரியவில்லை, இப்போ அருகில் வந்ததும் மனதோடு தோற்றுப் போகிறேன். உங்களை நேரில் பார்க்கும்போது இன்னும் எப்படி பேசுவேன் என்றே தெரியவில்லை!"

"அடிப்பாவி! அப்பறம் எந்த தைரியத்தில் என்னை வீட்டுக்கு வரச்சொன்னே??"

"ஏதோ! ஒரு ........ முடியல, நீங்க என்னை பார்ப்பதற்கு முன் இறந்துவிட்டால் போதும் என்று தோன்றுகிறது. எனக்கு பைத்தியம்தான் பிடித்துவிட்டது  என்று நினைக்கிறேன் மாமா, வாங்க நேரில் மனம்விட்டு பேசணும்."

"இல்லை! வேண்டாம். எனக்கு என்னவோ உன்னை இப்போது பார்ப்பது சரியாகத் தெரியவில்லை! சந்தியா என்னை அழ வச்சிடாதே! ப்ளீஸ்மா!"

"அப்போ! என்னை பார்க்கவே வரமாட்டியா???"

"லூசா நீ, எப்படி பார்க்க வராமல் இருப்பேன், வருவேன் இப்ப வேண்டாம் அதுவும் உங்க வீட்டில் வேண்டாம் என்று நினைக்கிறேன்."

"மாமா, நான் வெளியில் தனியாக வரமுடியாது எங்கு சென்றாலும் மாமியாரை கூடவே அழைத்துச்செல்ல வேண்டும் என்பதுதான் கட்டளை! அம்மா வீட்டுக்கு போனால்கூட அம்மா வந்துதான் அழைத்துக்கொண்டு போகணும், இப்படி இருக்க நான் எப்படி உங்களை பார்க்க முடியும்."

"சரி நீ எப்ப உங்க அம்மா வீட்டுக்கு வருவியோ சொல்லு அன்னைக்கு வந்து பார்க்கிறேன், தேவையில்லாமல் மாமியாரை சந்தேகப்பட வைத்துவிடாதே!" 

" சரி மாமா நான் இப்பவே அம்மா வீட்டுக்கு புறப்படுகிறேன்  மாமியார் கொண்டு வந்து விடுவாங்க, பிறகு மாமியார் போனதும்  உங்களுக்கு போன் செய்கிறேன் வாங்க, இல்லை என்றால் மதியம் சாப்பாட்டுக்கு அம்மா வீட்டுக்கு வந்துடுங்க."

"சந்தியா, நீ நல்லா யோசித்துதான் பேசுறியா, அங்க உங்க அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, அண்ணன் பசங்க, தம்பி எல்லோரும் இருப்பாங்களே, அதுவும் சாப்பாட்டுக்கு வரச்சொன்னால் எப்படி நான் வருவேன், இதற்கு முன்பு வந்தேன் என்றால் நமது காதல் உங்க அம்மா, அண்ணன் அண்ணிக்கு தெரியும் என்ற தைரியம், அதுமட்டுமில்லாமல் உனது நடு அண்ணன் எனது நண்பனும்கூட இப்ப அவனும் இல்லை, எங்கேயோ வெளிநாட்டில் இருக்கான் இப்ப எந்த உரிமையில் அங்கு வருவேன், அப்படியே வந்தாலும் நல்லாவா இருக்கும்."

"யோவ்! உனக்கு என்னை பார்க்கவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதா? இல்லையா? அதைச் சொல்லுங்க முதல்ல.."

"ஐயோ! கொஞ்சம் புரிஞ்சிக்குப்பா,"

"முதல்ல நீங்க என்னை புரிஞ்சிக்கோங்க, அம்மாதானே என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்தால் அவன் முன்னாடியே நாம பேசலாம் தவறில்லை. அண்ணன் அண்ணி தனிக்குடித்தனம் போயிட்டாங்க, அப்பா வேலைக்கு போய்டுவார், நீங்க வாங்க காத்திருப்பேன் வரவில்லை என்றால் என்ன நடக்குமென்றே தெரியாது."

பதிலுக்கு காத்திருக்காமல் போன் துண்டித்தால்......

சுரேஷ்க்கு ஒன்றுமே புரியவில்லை, நாம் செய்வது சரியா தவறா? தெரியவில்லை ஆனால் அவளை ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்று மட்டும் மனதுக்கு தோன்றியது. சரி என்ன நடந்தாலும் நடக்கட்டும்துபாய் போவதற்கு முன்பு அவங்க அம்மாகிட்டதானே இன்னும் இரண்டு வருடத்தில் திரும்ப வந்து திருமணம் செய்துக்கொள்கிறேன், உங்கள் பொண்ணு தொடர்ந்து படிக்கட்டும் என்று சொல்லிவிட்டு போனோம். அதனால் அவங்க முன்னால் பேசமுடியும் ஏதாவது திட்டினால் திரும்ப வந்துவிடலாம், முதல் சந்திப்பு என்பதால் நிறைய பேச இருக்கிறது. சந்தியா கோபத்தில் தவறான முடிவு எடுத்துவிட்டால் என்ன செய்வது அதனால் போய்தான் ஆகவேண்டும் என்று தனது அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு இருசக்கரவாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

போகும் வழியில்....(மனதில்)

(ச்சே! என்ன கொடுமையான வாழ்க்கை இது! காதல் செய்வதை அந்த பெண்ணிடம் சொல்லவே தயங்கும் காலத்தில் தைரியமாக அவளிடம் சொன்னேன், அவங்க வீட்டிலும் இருவரும் சேர்ந்தே சொன்னோம், அப்போதெல்லாம் ஒன்றும் சொல்லாமல் கடைசியில் எங்களை பிரிக்க எப்படி அவர்களுக்கு மனம் வந்தது. ஒருவேளை அவளுக்கு கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் நாம் இப்படி பொண்ணு தேடி அலையவேண்டிய அவசியம் வந்திருக்காது. இப்ப பாரு ஒரு பொண்ணைப் பார்த்தால் அவங்க வீட்டில் மட்டும் சம்மதம் சொன்னால்கூட போதாது, அவளிடமும் தனியாக பேசி காதல் ஏதாவது இருக்கிறதா? அப்படி இருந்தால் தைரியமாக சொல்லுங்க நானே சேர்த்துவைக்கிறேன் என்றெல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கவேண்டி இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன சொல்ல எல்லாம் நம் தலைவிதி என்றுதான் நினைத்துகொள்ளவேண்டும்.)

இப்படி பல சிந்தனையுடம் சுரேஷ் இருக்க வண்டி அவளது ஊரில் சென்று நின்றது.சட்ரென்று பிரேக் அடித்து நிறுத்தினான். இதுவரை இருந்த தைரியம் ஏனோ இப்போது காணாமல் போனது. போயிதான் ஆகணுமா என்று யோசித்தான். சந்தியா வந்திருப்பாளா? அவங்க அம்மா ரொம்ப கோபப்பட்டு திட்டிவிட்டால் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றான். 

சந்தியாவுக்கு போன் போட்டான். ஆனால் அவள் எடுக்கவில்லை, எடுத்தால் எங்க ஏதாவது காரணம் சொல்லி எஸ்கேப் ஆகிடுவானோ என்கிற பயத்தில் சந்தியா இவனது போனை எடுக்கவில்லை. திரும்பவும் போன் செய்தான் "ம்ம்கும்" எடுக்கவில்லை, மீண்டும் மீண்டும் முயற்சி செய்தான் பதில் இல்லை, கடைசியாக ஒரு மெசேஜ் வந்தது நான் வந்து ஒருமணி நேரமாகுது உங்களுக்காக காத்திருக்கேன் சீக்கிரம் வாங்க அவ்ளோதான் சொல்வேன்.

இதைப்  படித்த சுரேஷ்க்கு என்ன செய்வதென்றே புரியவில்லை, சரி என்ன நடந்தாலும் நடக்கட்டும், உசுரே போனாலும் போகட்டும் என்று துணிச்சலுடன் அவளது வீட்டின் அருகில் சென்று வண்டியை நிறுத்தினான்.  தயங்கி தயங்கி வீட்டின் வாசல்படியில் கால் வைக்க முயன்றான் அப்போது ஒரு குரல்....

"அம்மா நம்ம வீட்டுக்கு யாரோ வந்திருக்காங்க...!"

"....(ஏதோ சவுண்ட் ஆனால் கேட்கவில்லை)"

சுரேஷ் காத்திருக்காமல் உள்ளே செல்ல....

"வா, சுரேஷ். துபையில் இருந்து எப்ப வந்தே?"
(சந்தியாவின் அம்மா, கையில் ஒரு குழந்தையோடு)

வந்து இரண்டு நாட்கள் ஆகிறது அத்தை, அக்கா வீட்டுக்கு போகலாம் என்றுஇந்த வழியாக வந்தேன் அப்படியே உங்களையும் பார்த்துவிட்டு போகலாம் என்று வீட்டிற்கு வந்தேன். 

"ஓ! அப்ப எங்களை பார்க்கவரவில்லை அப்படித்தானே!" 

"உங்களையும் பார்க்கத்தான், உங்க ஞபகம் இல்லையென்றால் இங்கு வந்திருப்பேனா?"

"ம்ம்ம், சுரேஷ் இந்த பசங்க இருவரும்தான் சந்தியாவின் பசங்க. இதோ இவனைப்பாரு அப்படியே அவங்க அம்மா மாதிரியே!" 

இந்த  வார்த்தையை கேட்டது சுரேஷ் மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் அந்த குழந்தையை கையில் வாங்கி அப்படியே அணைத்துக்கொண்டான். 

" அத்தை சந்தியா இல்லையா?"

"வந்திருக்கா!  அவளும் இப்பதான் வந்தா அடுப்புகிட்ட புள்ளைக்கு பால் சுடவைத்துக்கொண்டு இருக்கிறாள், இருப்பா கூப்பிடுகிறேன்."

சந்தியா................
 சந்தியா........

சுரேஷ் மனதில் ஒரு பதற்றம், கை கால் தானாகவே நடுங்க ஆரம்பித்தது, அவளிடம் முதன் முதலில் தனது காதலை சொன்னப்போதுகூட இப்ப டென்ஷனாக இருந்ததில்லை,  கொலுசு சத்தம் கேட்டது ... இதோ வருகிறாள் வருவது அவள்தான் முதல் வார்த்தை என்ன பேசுவது, எப்படி இருக்கும் அவளது ரியாக்ஷன், அவங்க அம்மா என்ன நினைப்பாங்க..புரியாமல் தவித்தான்.

ஆனால் சந்தியா சாதாரணமாகவே தொடர்ந்தாள் ...

"வாங்க மாமா, எப்படி இருக்கீங்க? எப்ப வந்தீங்க? இப்பதான் எங்க ஞாபகம் வந்ததா?" இப்படி விடாமல் பல கேள்விகளை அடுக்கினாள்...

"நல்லாருக்கேன் சந்தியா, வந்து இரண்டுநாள் ஆகுது."

அருகில் வந்து குழந்தையை வாங்குவதைப்போல், அதுதான் தெரியுமே என்று காலை மிதித்தாள், இவனுக்கு என்ன பெயர் தெரியுமா? சுரேஷ் குமார்.என்று சொல்லிவிட்டு ஒரு நமட்டு சிரிப்போடு குழந்தையை குழந்தையை கையில் வாங்கினாள்.

சுரேஷ்க்கு மனதில் சிறிய சந்தோஷம் என்றாலும் இவள் எப்படி சமாளிக்கிறாள் என்று வியப்பாக இருந்தது, எவ்வளவு தைரியமாக சுரேஷ்குமார் என்று பெயர் வைத்திருக்காளே, இதற்காகவும் அடி வாங்கிருப்பாளோ? இவள் இன்னும் மாறவேயில்லை, இரண்டு குழந்தைகள்தான் ஆகிவிட்டதே தவிர ஒரு மாற்றமும் இல்லை, சற்று தடித்திருந்தாள். இப்படி இன்ப அதிர்ச்சியில் திகைத்து நின்ற சுரேஷ்க்கு அடுத்த கேள்வியும் வந்தது.

"என்ன மாமா, துபாய் போய்ட்டு வந்ததும் முன்னமாதிரி பேசமாட்டேன்ங்குரிங்க, என்ன கொஞ்சம் குண்டான மாதிரி இருக்கு, தொப்பையெல்லாம் வந்திருக்கு, பார்க்கவும் ஹீரோ மாதிரி இருக்கீங்க? அதனால எங்ககிட்ட பேச கவுரவம் பார்க்கிறிங்களா?"

"அப்படியெல்லாம் இல்லை சந்தியா!" 

அதற்குள் அவளின் அம்மா கையில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்து கை கழுவிகிட்ட வாப்பா சாப்பிடலாம் என்று சொன்னாள்.

"ஐயோ! வேண்டாம் அத்தை இப்பத்தான் சாப்பிட்டுவிட்டு வந்தேன், நான் அக்காவீட்டுக்கு போகணும் புறப்படுகிறேன் அத்தை."

சந்தியா ஒரு பக்கமிருந்து கண்களாலும், கை சைகைகளாலும் மிரட்ட...

"இந்த வெயிலில் எங்கப்பா போற, கை கழுவிக்கிட்டு வா கொஞ்சமா சாப்பிடு என்று சொல்லிவிட்டு கிச்சன் பக்கம் போனால்."

"மாமா இங்க வந்து உட்க்காருங்க."

"ஏய்! வேண்டாம் நீ இப்பவே அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி கொடுக்கிறாய் என்னால் எதுவும் பேசமுடியவில்லை. நீ சும்மா இரு நான் புறப்படுகிறேன் இன்னொரு நாளைக்கு வருகிறேன்."

"(அழுகையோடு) ஏன் என்னைப் பிடிக்கவில்லையா?"

சுரேஷ்க்கு அப்படியே அவளை கட்டிபிடித்து அழனும்போல் தோன்றியது, எதுவோ தடுக்க கையேடு கையை பிசைந்துகொண்டு இருக்கையில் உட்கார்ந்திருந்தான், ஆனால் சந்தியா தனது குழந்தையை படுக்கையில் போட்டுவிட்டு அவனது தோலில் வந்து சாய்ந்துக்கொண்டாள்.


தொடரும்.....

*****************************நன்றி, மீண்டும் சந்திப்போம்.*****************************

Tuesday, February 26, 2013

எங்கே இருக்கிறாள் அவள்? அவளைத்தேடி ஒரு பயணம்.

  (ஒரு கிராமத்து 'ஆட்டோகிராப்' இன்று வெவ்வேறுபட்ட உருவத்தில் தொடர்கிறது இதற்குப் பெயர் காதலா? அல்லது இதற்குப் பெயர் என்ன?)

"ஹலோ!"
தம்பி...நான் அப்பா பேசுறேன்.

"ம்ம்ம்" சொல்லுங்கப்பா!

"அம்மா உன்கிட்ட பேசணுமாம் நீ வீட்டுக்கு போன் பண்ணுப்பா!"

"சரிங்கப்பா, நான் இப்போது வேலையில் இருக்கேன் மலையில் பேசுகிறேன். ஏன்ப்பா அம்மாவுக்கு உடம்பு ஏதும் சரியில்லையா? ரொம்ப அவசரமா பேசணுமா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லை, நீ பொறுமையாகவே பேசுப்பா, நான் வச்சுடுறேன்."

"ம்ம்ம் சரிப்பா!"

     ஆமாம்  இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லை, எப்ப பார்த்தாலும் ஊருக்கு எப்ப வர? நான் மூச்சோட இருக்கும்போதே உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி உன்னோட குழந்தையையும் பார்த்துட்டேனா என் ஆத்மா சாந்தியடையும் என்று புலம்பிகிட்டே இருப்பாங்க. என்று சலித்துக்கொண்டான் சுரேஷ்.

ஆமாங்க சுரேஷ்கூட பிறந்தவர்கள் நான்குபேர். ஒரு அண்ணன் இரண்டு அக்கா எல்லோருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. குழந்தையும் ஆச்சி, இவன்தான் கடைசிப்பையன் இவங்க அம்மாவுக்கு இருக்கும் ஒரே கவலையே கடைசி பையனுக்கும் திருமணம் முடிசிடனும், அவனுடைய குழந்தையையும் பார்த்துவிட்டால் இந்த ஜென்மத்தின் வேலை முடிந்துவிட்டது என்று சொல்லிக்கொள்வாள். சுரேஷ் துபையில் வேலைப்பார்த்து வருகிறார், அம்மாவின் இந்த புலம்பலுக்கு பயந்துக்கொண்டே ஐந்து வருடமாக ஊருக்கே போகவில்லை. இதுமட்டும் காரணம் இல்லை. காதலித்த பொண்ணை கட்டி விட்டுவிட்டு வரமுடியாமல் இரண்டு வருடத்தில் வந்து திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தான். அவளின் பெற்றோர்களுக்கு அவசரம் தாங்காமல் இவன் வர நாள் ஆகும் அதுவரை வயசு பொண்ணை வீட்டில் வைத்திருப்பது 'மடியில் நெருப்பை கட்டி வைத்திருப்பதுபோல் உள்ளது' என்று மகளை கட்டாயப்படுத்தி தனது சொந்த அண்ணன் பயனுக்கே திருமணம் முடித்து வைத்துவிட்டாள் அவளின் அம்மா.
விருப்பம் இல்லை என்றாலும் திருமணம் செய்துகொள்ளவேண்டிய சூழ்நிலை அவளும் கடைசியில் ஒத்துக்கொண்டாள்.

சுரேஷ் காதலித்த காலத்தில் மொபைல் போன் வசதி இல்லை, அவளின் திருமணத்தின்போதும் இவர்களால் மனவிட்டு பேசமுடியவில்லை. ஆனால் அவளுக்கு திருமணம் முடிந்தபிறகு அவளின் கணவர் வெளிநாடு சென்றதால் அவளிடம் போன் கொடுத்துவிட்டு போனார். எப்படியோ? யார்யாரிடமோ கேட்டு கடைசியாக சுரேஷ் நம்பரை வாங்கி ஒருநாள் போன் செய்தாள். நான்கு வருடத்திற்கு பிறகு....

"ஹலோ!"

"ஹலோ!" யாருங்க?

"என்ன சுரேஷ் மாமா என்குரல் மறந்துபோச்சா?"

"ஏய்! ....................."
(வார்த்தைகள் வரவில்லை, ஒருபக்கம் கோபமும், மறுபக்கம் ஒரு பொண்ணு  எப்படி போராடமுடியும் அதுவும் நம்ம கிராமத்தில் என்று மனதை சற்று தேற்றிக்கொண்டு கேட்டான்.)

"எப்படி இருக்க சந்தியா?"

"நான் நல்லாருக்கேன் மாமா, நீங்க எப்படி இருக்கீங்க?"

"நானும் நலம். உன் கணவர் எப்படி இருக்கார்? உனக்கு குழந்தைகள் இருக்கிறதா?"

"அவர் நால்லாருக்கார், இப்ப சிங்கப்பூரில் இருக்கார், ஒரு பையன் இருக்கான், இப்போது வயிற்றில் ஒன்னும், ஏழு மாதம்."

"அடிப்பாவி அதுக்குள்ள ஆண்டியாகிட்டியே? அதுக்குள்ள இரண்டா?"

"ம்ம்ம், உங்களை மாதிரி அவர் என்ன படிச்சிருக்காரா? கணக்கு பண்ணி புள்ளை பெத்துக்க? கல்யாணம் பண்ணிய உடனே குழந்தை இருந்தது. இப்ப அவர் போகும் முன்பு நாள் தள்ளிப்போச்சி, போய் செக் பண்ணியபோது 'கன்பார்ம்' பண்ணிட்டாங்க, சரி இதுவும் இருக்கட்டும் என்று சொல்லிட்டு போய்ட்டார் நான் என்ன செய்வது."

"ம்ம்ம் சரி சரி வருசத்துக்கு ஒண்ணா பெத்துப்போட்டு மக்கள்தொகையை கூட்டுங்க, சைனாக்காரன பின்னுக்குத்தள்ளிட்டு இந்தியா முதலிடம் பிடிக்கட்டும்."

"ஐயே! உங்களுக்கும் திருமணம் ஆகட்டும் அப்பறம் சொல்கிறேன். நீங்க என்ன செய்றீங்கன்னு."

"..................."

"என்ன மாமா பேச்சே காணும்?"

"எனக்கா? திருமணமா? அதெல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை."

"யோவ்! என்ன சொல்றீங்க? இன்னும் என்னை மறக்கவே இல்லையா?"

"அடி போடி! ஏதாவது திட்டிட போறேன். அதுக்குள்ள போனை வச்சிட்டு ஓடிப்போய்டு!"

இப்படி  பேசிக்கொண்டிருக்கும்போது அவளின் போனில்காசு முடிந்துபோக தானாகவே கட் ஆனது. நாம் திட்டியதால்தான் போனை கட் செய்துவிட்டாள், இதைவிட எவ்வளவோ பேசிருக்கோம் இப்ப மட்டும் எங்கிருந்து வந்தாதாம் இவ்ளோ கோபம் என்று அவளின்மேல் கொஞ்சம் நஞ்சம் இருந்த காதலையும் தூக்கி எறிந்தான். ஐயய்யோ! காசு முடிந்துவிட்டதே! அவர் போன் பண்ணுவாரா? சரியான நேரத்தில் போன் கட் ஆகிவிட்டதே என்ன செய்வது என்று புரியாமல், சரி  அவருக்குதான் இப்ப நம்பர் தெரியுமே நம் மீது பாசம் இருந்தால் அவரே போன் செய்யட்டும் என்று இவள் சுரேஷ் போனுக்காக காத்திருந்தாள்.

காலம் நகர்ந்தது, இவளும் போன் செய்யவில்லை, அவனும் போன் செய்யவில்லை. ஒருநாள் தற்செயலாக அவளின் சொந்தக்காரர் ஒருவர் மூலமாக அவளுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று கேள்விபட்டான். சரி இன்னைக்கு போன் செய்து பேசலாம் என்று பேசினான்.

"ஹலோ!"

"ஹலோ!" சொல்லுங்க மாமா ...!

"என் குரல் மறக்கவில்லையா?"

"உங்களையே மறக்கவில்லை, உங்க குரலை எப்படி மறப்பேன். அன்னைக்கு காசு முடிந்து கட் ஆகிவிட்டது. அப்பறம் நீங்களே பண்ணுவிங்கன்னு எதிர்பார்த்து காத்திருந்தேன், நீங்க பண்ணவே இல்லை, சரி அவர் நம்மளை மறந்துட்டார் நாம எதற்கு ஞாபக படுத்தணும் என்று விட்டுட்டேன் ."

"ஐயோ! நான் திட்டிய கோபத்தில்தான் நீ போன் கட் பண்ணிட்ட என்று நானும் கோபத்தில் போன் செய்யவில்லை. இப்ப உங்க சொந்தகாரர் ஒருவர் மூலம் உனக்கு குழந்தை பிறந்துள்ளதை கேட்டு போன் செய்தேன். சாரிடா! ப்ளீஸ்."

"இப்படிதான் நீங்களாகவே ஏதாவது முடிவு பண்ணிக்கிறது."

"அப்பறம் என்னவாம், நீ எனக்கு செய்துகொடுத்த சத்தியத்தை மீறி கல்யாணம் பண்ணிக்கலையா? அதுமாதிரிதான் இதுவும் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்."

"யார் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா? நானா அட போயா! நான் செத்திருந்தா நீ இன்னைக்கு என்கிட்ட பேசவே முடியாது."

"ஏய்! என்ன சொல்ற.............?"

"அதெல்லாம் பெரியக்கதை...!"

"என்ன நடந்தது? "

"அதுவா?
நான் கல்யாணம் செய்துக்க முடியாது என்று சொல்லி மருந்து சாப்பிட்டுட்டேன். உங்களுக்கு போன் செய்து பேச உங்ககிட்ட நம்பர் இருக்கா இல்லையா என்றே தெரியாது. கடிதம்போட அட்ரஸ்கூட இல்லை அப்பறம் எப்படி உங்ககிட்ட என் மனதில் உள்ளதை சொல்லமுடியும். நீங்களும் எங்க வீட்டுக்கு பயந்துகிட்டு ஒரு கடிதம் கூட போடவில்லை, எங்கவீட்டில் போன் வந்த பிறகு யார் யாரோ போன் செய்வாங்க, ஆனால் நீங்க ஒருநாள் கூட செய்யவில்லை, சரி உங்களுக்கு நம்பர் எப்படி தெரியும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன். கடைசியில் கல்யாணம் என்று வந்ததும் வேறு வழி தெரியாமல் இறந்துவிட முடிவு செய்தேன். அப்பறம் எப்படியோ என்னை காப்பாத்திட்டாங்க, இந்த கல்யாணம் நடக்கவில்லை என்றால் நாங்க உசுரோடவே இருக்கமாட்டோம் என்று சொல்லி அப்பா அம்மா என்னை சம்மதிக்க வைத்துவிட்டார்கள். தாலிகட்டும் வரை உங்களிடம் இருந்து எந்த ரூபத்திலாவது தொடர்பு கிடைக்கும் என்று காத்திருந்து ஏமார்ந்தேன். என்று சொல்லிமுடித்துவிட்டு அழுதாள்...."

" சந்தியா.....! சாரிடா!, நான் உன்னை தவறாக நினைத்துவிட்டேன் காதலிக்கும்போது என்ன என்னவோ பேசினாள் இப்போது திருமணம் என்று வந்ததும் என்னை மறந்துவிட்டாள் என்று திட்டிருக்கேன்."

"நினைச்சேன்! நீங்க இப்படிதான் நினைப்பிங்க என்று..!"

"சரி சந்தியா, இப்பவாவது எனக்கு உண்மை தெரிந்ததே! சந்தோஷம் இப்பவே நான் துபாய் வந்து நான்கு வருடம் ஆகிவிட்டது. அம்மா எப்பவும் ஊருக்கு கூப்பிட்டுகிட்டே இருக்காங்க!"

"ஏன் மாமா வராம இருக்கீங்க, நீங்க இத்தினை வருடமா வராமல் இருந்ததால்தான் நான் உங்களுக்கு போன் செய்தேன். நீங்க இப்படிதான் என்மேல் கோபமா இருப்பிங்க அதனால்தான் வரவில்லை என்று தெரியும். நான் அன்னைக்கே இதையெல்லாம் சொல்லி புரியவைக்க நினைத்தேன் ஆனால் காசு முடிய எல்லாம் சொல்லாமலே முடிந்துவிட்டது."

"நீ இப்படி தெளிவா யோசிப்பதை நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு."

" சரி மாமா, அப்படியே நான் சொல்வதையும் கேளுங்க, நீங்க ஊருக்கு வந்து கல்யாணம் பண்ணிக்கோங்க, அம்மாகிட்ட சொல்லி பொண்ணு பார்க்கச் சொல்லுங்க. நாம இருவரும் காதலித்தோம் ஆனால் சரியான தொடர்பு இல்லாததால் பிரிந்துவிட்டோம், இதை நாம புரிஞ்சிக்கனும், இனிவரும் காலம் நான் சந்தோஷமாக வாழனும் என்றால் கண்டிப்பா நீங்க வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும். இல்லை என்றால் உங்களுக்கு நம்ம்பிக்கை துரோகம் செய்ததை நினைத்து நினைத்தே நானும் செத்துடுவேன்."

"சரி சரி அப்படியே நீயே ஒரு பொண்ணும் பார்த்து சொல்லு."

"இதெல்லாம் என்னால் முடியாது, நாம இரண்டுபேரும் இருக்கும் போட்டோவை பார்த்துவிட்டு நான் செம அடி வாங்கிருக்கேன் அவர்கிட்ட, அதனால் இதெல்லாம் சரிபட்டு வராது. உங்க கல்யாணத்துக்கு வருவேன் எப்படியாவது அதற்காக அடிவாங்கினாலும் சரி."

" சரிப்பா, நான் அம்மாகிட்ட சொல்கிறேன். நான் கூடிய சீக்கிரம் ஊருக்கு வருவேன்.கண்டிப்பா உன்னை வந்து பார்ப்பேன்."

"கண்டிப்பா வாங்க, என் வீட்டுக்கே வாங்க, எனக்கு ஒரு மாமாவாக மட்டும் 'காதல்' கத்திரிக்காய் எல்லாம் இன்னைக்கே மறந்துடுங்க.."

"ம்ம்ம் "சொல்லிவிட்ட காதல்தானே!, நாம் காதலில் செய்த்துவிட்டோம் இணைந்து வாழ்வதில் தோற்றுவிட்டோம். இதற்கு காரணம் நாம் இருவரும் இல்லை, பெற்றோர்கள், இன்னைக்குபோல் அன்னைக்கு தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலை, நமக்கு இருவருக்கும் இருந்த தூரம். இதெல்லாம்தான் காரணமாக இருக்கமுடியும். இருந்தாலும் நானும் ஒரு நல்ல பொண்ணை காதலித்திருக்கிறேன் என்ற சந்தோசத்திலேயே வாழ்வேன்."

"நானும்தான்"

"சரிப்பா, நான் இந்த வருடம் முடித்துவிட்டு அடுத்த வருடம் வருகிறேன், அனால் திருமணம் எல்லாம் இப்போது கிடையாது, இன்னும் இரண்டு வருடம் போகட்டும் என்று இருக்கேன்."

" ஓ! அப்படியா ! ஏன் என்ன ஆச்சி? ஏன் தள்ளிபோடுறிங்க?"

"இன்னும் கொஞ்சம் நாள் ஆகட்டும், வேலையில் கொஞ்சம் மாற்றம் வரும் என்று நினைக்கிறேன், அதைவிட இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம், எந்த பொண்ணை காதலிக்கிறேன்,யாராவது தூக்கிட்டு போகும் முன்பு நாம கல்யாணம் முடிக்கணும் என்று அவசரம். இருந்த ஒரு பொண்ணையும்தான் பறிகொடுத்துவிட்டு நிக்கிறேன்."

"யோவ்! நான் இவ்ளோ சொல்லியும் இன்னும் மறக்கவில்லையா? என்மேல சத்தியமா இனி இந்த ஞாபகமே இருக்ககூடாது, என்மேல சத்தியம் பண்ணுங்க.." அதுக்காக என்னிடம் பேசக்கூடாது என்று சொல்லவில்லை எப்பொழுது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அவர் இங்கு இருக்கும்போது மட்டும் வேண்டாம்."

"வேண்டாம்பா நான் அதிகமா போனும் செய்யலை, எப்பவாவது விஷேசம் என்றால் பேசுகிறேன், அல்லது மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டுமுறை பேசுகிறேன்."

"ஏன் மாமா, ரொம்ப விலகிப் போறீங்க?"

"இது விலகல் இல்லை, இப்படி இருந்தால்தான் நாம் இருவருக்குமே நல்லது."

"சரி மாமா, உங்க இஷ்டம்."

இப்படிதான்  சுரேஷ் காதல் கை நழுவிப்போனது. என்னதான் வாயால் பெரிய பெரிய வசனம் எல்லாம் பேசினாலும், முதல் காதல் இல்லையா இருவராலும் மறக்கமுடியவில்லை, இருவர் மனதிலும் ஆழமாக பதிந்துதான் கிடக்கிறது. மனதில் உள்ள வார்த்தைகளை வெளியில் பேசமுடியவில்லை. சுரேஷ் ஐந்து வருடமாக ஊருக்கு போவாததற்கு இதுவும் ஒரு காரணம். இருந்தாலும் அம்மாவிடம் சொல்லிவிட்டான் நீங்க எந்த பொண்ணை பார்த்தாலும் நான் கல்யாணம் செய்துகொள்கிறேன். ஆனால் கல்யாணத்துக்கு முன்பு நான் அவளிடம் தனியாக பேசவேண்டும் என்ற ஒரு கண்டிஷன் மட்டும் போட்டான். அதற்கு அம்மாவும் சரிப்பா நான் இரண்டு மூன்று இடத்தில் பார்த்து வச்சிருக்கேன் நீயே வந்து பேசி முடிவு செய் என்று சொல்லிவிட்டாள்.

சுரேஷ் மாலை வீடு வந்ததும் மறக்காமல் அம்மாவுக்கு போன் செய்தான்.

" ஹலோ அம்மா!"

"ஹலோ சொல்லுப்பா!"
(என்று சொல்லும்போதே அழுகை)

"என்னம்மா போன் செய்ய சொன்ன?"

"என் உடம்புக்கு ஒன்னும் முடியலப்பா, சரியா நடக்ககூட முடியவில்லை, ஆஸ்பத்திரிக்கு போனேன், வயசாகிவிட்டதுஇனி எந்த மருந்து கொடுத்தாலும் சரியாக வேலை செய்யாது என்று சொல்லிவிட்டார்கள்."

"நல்லா நேரா நேரத்திற்கு சாப்பிடும்மா, எந்த கவலையும் வேண்டாம்."

"உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிட்டா எனக்கு எந்தகவலையும் இல்லை, அதுக்காகத்தான் இந்த கட்டை கிடந்தது கஷ்டப்படுது."

"சரிம்மா பொண்ணு பார்த்தாச்சா? சொல்லுங்க நான் லீவு கேட்டுவிட்டு ஊருக்கு வருகிறேன்."

"இரண்டு மூன்று பொண்ணு பார்த்திருக்கேன், எல்லார்கிட்டயும் உன்னோட போட்டோ எல்லாம் கொடுத்திருக்கேன். நேரில் பார்த்துட்டுதான் முடிவு சொல்வேன் என்று சொல்லிருக்காங்க, நீ இல்லாமல் எப்படி பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ணமுடியும்."

"சரிம்மா கவலைவேண்டாம். நான் கூடிய சீக்கிரம் வருகிறேன்.ஆனால் இப்ப வந்தால் லீவு அதிகம் கிடைக்காது. "

"எனக்கு ரொம்ப முடியலப்பா, வந்து உன் முகத்தையாவது காட்டிவிட்டு போ, முடிந்தால் பொண்ணைப் பார்த்து நிச்சயம் பண்ணு இல்லை என்றால் அப்பறம் பார்த்துக்கலாம்."

"சரிம்மா, இன்னும் ஒருவாரத்தில் சொல்கிறேன். எப்ப வருகிறேன் என்று."

"இன்னும் ஒரு வாரத்திலா?அப்பாடா இப்பவே எனக்கு முழு உடம்பும் சரியாபோச்சி, வாப்பா வா"

"சரிம்மா வச்சுடுறேன்."

"சரிப்பா, நல்லா நேரா நேரத்திற்கு சாப்பிடு, எண்ணெய் தேய்த்து குளி, அப்பதான் உடம்புக்கு குளிர்ச்சி."

"சரிம்மா, ஓகே ."

இப்படியாக பேசி முடித்தான் சுரேஷ். இனியும் அம்மாவிடம் அதை இதை சொல்லி ஏமாற்ற முடியாது என்று தெரிந்தது.ஊருக்கு போக முடிவு செய்தான். அம்மாவும் இவனுக்காக பொண்ணு தேட தீவிரமாக இருந்தார். மனதில் யோசித்தாள் சொந்த பந்தத்தில் பொண்ணு இருக்கா? அல்லது யாராவது தெரிந்தவர்கள் வீட்டில் இருக்கிறதா? என்று பலபேருக்கு போன் செய்தாள், என் மகன் அடுத்தவாரம் வருகிறான், லீவு குறைவாம் அதனால் அதற்குள் கல்யாணம் முடிச்சிடனும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தாள்.

'அம்மா' பாஸில் ஊருக்கு போய்ட்டு வரும்போது எப்பவும் ஒரு பொண்ணு அம்மாவுக்கு உதவி செய்யும், அந்த பொண்ணுக்கு அம்மா இல்லையாம், அதைக்கேட்டு பரிதாப பட்ட அம்மா அவளிடம் எப்போதும் அன்பாக பேசினாள், அந்த பொண்ணு டைலர் கிளாஸ் படிக்க போய்ட்டு வருகிறாள் என்பதும் தெரிந்தது. பேச்சு நாளடைவில் அதிகமாக, ஏன் இந்த பொண்ணையே நம்ம சின்ன பையனுக்கு பேசி முடிக்ககூடாது என்று முடிவு செய்தாள். ஒருநாள் சுரேஷ் போட்டோவை காட்டி இதுதான் எனது இளைய மகன் என்று சொன்னதும், ஆஹா நல்லைருக்கார் அம்மா, என்று சொன்னதும். அம்மாவுக்கு இவளிடம் எப்படி கேட்பது என்று புரியாமல், நான் இன்னைக்கு உன் வீட்டுக்கு வரட்டுமா அம்மா என்று கேட்டாள், கண்டிப்பா வாங்கம்மா, தாத்தாதான் இருக்கார், ஒரு தங்கை அவளும் ஸ்கூல் முடித்து வந்திருப்பாள் என்று அழைத்துச் சென்றால். அங்கு சென்றது அவளது தாத்தாவிடம் உங்க பேத்தியை பஸில் போகும்போது வரும்போது பழக்கம், ரொம்ப பிடிச்சிபோச்சி, இது என் பையன் போட்டோ என் பையனுக்கு உங்க பேத்திய கேட்கலாம் என்று வந்தேன் என்று சொன்னாள். தாத்தாவும் அதற்கென்ன போட்டோ கொடுங்க, பையன் நேரில் வரட்டும் பார்த்துவிட்டு முடிவு செய்யலாம் என்று சொன்னார். இதை கேட்ட பிரியாவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை, இவ்ளோ நல்ல அம்மா நமக்கு மாமியாரா? அப்படியென்றால் அவங்க பையனும் இவங்களைப்போலத்தான் இருப்பார் என்று சம்மதம் தெரிவித்தாள்.

மறுநாள் முதல் அம்மா என்று அழைக்காமல் அத்தை என்று அழைத்தால், அப்பவே அம்மாவுக்கு புரிந்துவிட்டது இவளுக்கு மனப்பூர்வமாக சம்மதம் என்பது. சரி உங்க அப்பா என்ன செய்கிறார் என்று கேட்டதும் அவர்...அவர்.. வேறு ஒரு கல்யாணம் செய்துக்கொண்டார் என்று சொன்னாள் இதைகேட்ட அம்மாவுக்கு அதிர்ச்சி, இப்ப எங்க இருக்கிறார், உங்களை பார்க்க வருவாரா? என்று எல்லாம் விசாரித்தாள், எல்லா செய்தியும் தெரிந்துகொண்டு போகும்போது அத்தை உங்க வீட்டில் போன் இருக்கா என்று கேட்க, இருக்கும்மா என்று சொல்ல நம்பர் கொடுங்க அத்தை,என்றது மறுக்கமுடியாமல்நம்பர் கொடுத்தாள். இந்த செய்திகளை எல்லாம் வீட்டில் வந்து அப்பாவிடம் அண்ணன் அண்ணியிடம் சொன்னதும், அப்பா அந்த குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். விசாரித்ததில் மனசுக்கு திருப்தி இல்லாமல் போனது, அதனால் இருக்கட்டும் பிறகு பேசிக்கலாம் என்று தற்காலமாகநிறுத்தி வைத்தார்.

ஆனால் அம்மா சும்மா இருக்கவில்லை, அம்மா அவளுக்கு போன் செய்வதும், அவள் அம்மாவுக்கு போன் செய்வதுமாக இருந்தார்கள். பையன் வரட்டும்மா வந்ததும் உன்னை பிடித்திருந்தால் நீதான் என் வீட்டு மருமகள் என்று சொல்லிவைத்திருந்தாள். இதுவும் கடந்த ஆறு மாதமாக நடந்து வருகிறது. ஆனால் இந்த செய்தி சுரேஷ்க்கு தெரியாது. அம்மாவுக்கும் அண்ணிக்கும் மட்டும்தான் தெரியும்.

கடைசியாக அம்மாவின் விடாத போன் தொல்லையால் சுரேஷ் ஊருக்கு சென்றான். போன மறுநாள் முதல் அம்மா ஒவ்வொரு பெண் லிஸ்டாக சொன்னாள் , இன்னைக்கு இந்த இரண்டு பொண்ணுகளையும் போய் பார்த்துட்டு வா, என்று கூடவே ஒரு வீடு தெரிந்த பையனையும் அனுப்பி வைத்தாள். பெண் பார்க்கும் விருப்பம் இல்லாதபோதும் அம்மாவின் கட்டாயத்துக்காக போய் பார்த்தான் முதல் பெண், ஒருவகையில் சொந்தம், பார்த்துவிட்டு வரும்போது அம்மா எப்போதும் போனில் பேசிய பிரியா வீட்டிற்கும் போய் பார்த்தான், வீட்டில் யாரும் இல்லை அந்த பொண்ணும் பக்கத்துவீட்டு அக்க்கவும்தான் இருந்தாங்க, ஒன்னும் பேசவில்லை, சரி இன்னொருநாள் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டான்.தொடரும்......
**********************************நன்றி, மீண்டும் சந்திப்போம்.***************************


Thursday, February 7, 2013

பாலக்கீரை / பாலக்கின் பலவித சமையல்.

                       பாலக்கீரையை எப்படி சமைப்பது என்று தெரியாததால் பாலக் வாங்குவதேயில்லை, இதுமட்டும் இல்லை பாலக் கொண்டு இன்னும் நிறைய வித விதமாக சமைக்கலாம். சமைக்கத் தெரியாது என்ற ஒரே காரணத்தால் ஹோட்டலில் எப்படி சமைத்து கொடுத்தாலும் சாப்பிட்டுவிட்டு வந்துடுவேன் என்ன இருந்தாலும் நாம் சமைத்து சாப்பிடுவதைப்போல் வருமா? இதை எப்படி சமைப்பது என்று பார்ப்போம் வாங்க...இதில்  எவ்வளவு சத்துக்கள் இருக்கிறது என்று கூகுள் கூகுள் செய்து படித்தது.

பாலக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் கீரை வேறெதுவும் இல்லை. இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலை போக்கிறது.

 இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. 

ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. 

ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. 

இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.


 இவ்வளவு சத்துக்கள் இருக்கும் பாலக்கீரையை வாரத்தில் ஒருநாள் சாப்பிட்டால் உடலுக்கு ரொம்ப நல்லதுங்க... நான் எப்பொழுதும் ஆண்களுக்கு சுவையாக இருக்கும்படி சொல்லிகொடுக்கிறேன். இதையும் ஆண்களுக்காகதான் பகிர்கிறேன்.

பாலக்ரைஸ் தேவையானப்பொருட்கள்:

பாலக்                   : 2 கட்டு
கொத்தமல்லி   : 1 கட்டு 
தக்காளி               : 2 எண்ணிக்கை
பச்சமிளகாய்     : 5 எண்ணிக்கை
மஞ்சள்தூள்       : 1 சிட்டிகை
வெங்காயம்       : 2 பெரிய வெங்காயம்.
பூண்டு                   :மூன்று பல்
புளி                         : சிறிய எலுமிச்சை அளவு.
உப்பு                       : தேவையான அளவு
காய்ந்தமிளகாய் : 5 எண்ணிக்கை
எண்ணெய்            : தேவையான அளவு
கடுகு/உளுத்தம்பருப்பு : 1 சிட்டிகை

செய்முறை:

           பாலக்கீரையை நன்றாக நீரில் சுத்தம் செய்து சிறுது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். நறுமணம் ரொம்ப முக்கியம் அதனால் கொத்தமல்லி இலையையும் நன்றாக நீரில் கழுவி சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் வைத்து அதனுடன் தண்ணீர் சேர்க்கக்கூடாது  அதற்கு பதிலாக அரை டம்ளர் நீரில் புளியைக் கரைத்து இந்த நீரை சேர்த்து கூடவே பச்சமிளகாய், தக்காளி, வெங்காயம், பூண்டு அனைத்தையும் சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து வேகவைக்கவும். தேவையான அளவு உப்பும் சேர்க்கவும். இப்போது மஞ்சள்பொடியும் சேர்க்கவும். (எந்தவொரு பொருளிலும் சிறிதளவு மஞ்சள்பொடி சேர்த்தால் விஷம் முறியும் என்று எனது பாட்டி சொன்னது ஞாபகம் இருக்கிறது) இது மட்டும் இல்லை நமக்கு தேவையான கலரும் கிடைக்குமே! இன்னும் கொஞ்சம் நறுமணம் வேண்டும் என்று நினைப்பவர்கள் சிறிது பொதினா இலையையும் சேர்த்துக்கொள்ளவும். பத்து நிமிடம் வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, கீரையில் சூடு குறையும்வரை காத்திருக்கவும்.

       சூடு குறைந்ததும் மிக்ஸ்யில் போட்டு அரைக்கவும், அதிகம் மைந்து போகாமல் இருக்கவேண்டும்.  இப்போது ஒரு வாணலில் எண்ணெய்/நெய் விட்டு கடுகு/உளுத்தம்பருப்பு , காய்ந்தமிளகாய் சேர்த்து தாளிக்கவும். இவ்ளோதாங்க பாலக் தயாராகிவிட்டது.

            இனி இதை வைத்து எப்படி பலவகையானமுறைகளில் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

முதலில் பாலக்ரைஸ்.
     இதனுடன், இரண்டு கப்பு வேகவைத்த சாதத்தை சேர்த்தால் பாலக்ரைஸ் ரெடி!

பாலக் பனீர்
      இதனுடன், தேவையான அளவு பனீர் சேர்த்தால் பாலக் பனீர் ரெடி!

ஆலுபாலக் (பாலக் உருளைகிழங்கு )
        இதனுடன் இரண்டு மூன்று உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கிவிட்டு கொஞ்சம் பெரிய பெரிய சைஸில் நறுக்கு சேர்த்தால் பாலக் உருளைக்கிழங்கும் ரெடி!

பாலக் மிக்ஸ் வெஜிடபிள்:
        இதனுடன், பீன்ஸ், கேரட்,உருளைக்கிழங்கு இவற்றை சிறிது சிறிதாக நறுக்கி பேபிக்கோர்ன் மற்றும் பச்சைப் பட்டாணியையும்  சேர்த்து வேகவைத்து தேவையான அளவு உப்பும் சேர்த்தால் பாலக் மிக்ஸ் வெஜிடபிள் ரெடி!

பாலக்தோசை:
       அரிசி மாவுடன், சிறிது பாலக் கிரேவியும் சேர்த்து தோசை சுட்டால், பாலக் தோசை ரெடி!

இவ்வோதாங்க, இதை வைத்துக்கொண்டு நமக்குவிருப்பமானதை விதவிதமாக செய்து சாப்பிடலாம். இப்படிதான் இங்குள்ள ஹோட்டல்களிலும் செய்கிறார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

*****************************நன்றி, மீண்டும் சந்திப்போம்.****************************