Pages

Monday, December 3, 2012

உலகம் எவ்ளோ விரைவாக சுற்றுகிறது பாருங்களேன்.

        பூமி சுற்றுகிறது என்பது தமிழகத்தில் எத்தினை அளவுக்கு உண்மை என்று பாருங்க. ஆமாங்க உலகம் விரைவா சுற்றுகிறது என்றே சொல்லலாம்.

           இன்று எனது சிநேகதனுக்கு 'போன்' செய்தேன், அவன் ரொம்ப கோபமாக இரு நண்பா பிறகு நான் திருப்பி கூப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு எனது பதிலை எதிர்பார்க்கமலேயே இணைப்பைத் துண்டித்தான், அவன் துண்டிக்கும் முன் சில சப்தம் மட்டும் கேட்டது, அதைவைத்து நான் ஊகித்துக்கொண்டேன் அவன் எதையோ தேடிக்கொண்டிருக்கிறான் அது கிடைக்கவில்லை அதனால்தான் இப்படி கோபமாக இருக்கிறான் சரி பிறகு அவனாகவே கூப்பிடட்டும் என்று நானும் வேறு வேலைப்பார்க்கப் போயிட்டேன்.

ஒரு அரைமணி நேரம் கழிந்திருக்கும், நண்பன் திருப்பிக் கூப்பிட்டான்.

"ஹேலோ இப்ப சொல்லுடா என்ன கூப்பிட்டே?"

 "ஓ! அதுவா சும்மாதான் நண்பா கூப்பிட்டேன், பேசி ரொம்ப நாள் ஆச்சே! அதான், என்ன நண்பா ரொம்ப கோபமாக இருந்தபோலிருக்கே என்ன பிரச்சினை?"

  என்று கேட்டதும் அவன் மிகவும் சலித்துக்கொண்டு சொன்னான்.

" அதை ஏன் கேட்க்கிற நண்பா இந்த அம்மி, உரல்களுக்கு கொத்துப் போடுபவனை தேடிச்சென்றேன், அவன் இதோ இப்பதான் போனான் என்று சொன்னாங்க பின்னாடியே போனால் அவனுக்கு ஒரு ஊருலியே இரண்டு மூன்று நாட்களுக்கு வேலை இருக்குதாம். இன்னும் ஒரு வாரத்தில் உங்க ஊருக்கு வருகிறேன் என்று சொல்கிறான்."

"என்ன சொல்கிற நண்பா அவனுக்கு அவ்வளவு கிராக்கியா? நம்பவே முடியலை"

"ஆமாம் நண்பா, இப்பலாம் அவனுக்குதான் நல்ல வருமானம், பேசாம நானும் அந்த தொழிலைக் கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன், சமயத்துக்கு உதவுமே! அதுமட்டும் இல்லாமல் செய்த வேலைக்கு கையிலையே காசும் கிடைத்துவிடும்."

"ஹா ஹா ஹா ! டேய் டேய் என்னடா இப்படி இறங்கிட்ட? உன்னோட பழுதுபார்க்கும் தொழில் என்ன ஆச்சி?"

"இதுவும் தொழில்தான் நண்பா, எப்படியோ நல்ல வருமானம் கிடைத்தால் சரிதானே?"

"ம்ம்ம், சரி சரி எப்படியோ குடும்பத்தை காப்பாற்றினால் சரிதான். மேலும் குடும்ப நலங்களை எல்லாம் விசாரித்துவிட்டு தொடர்பை துண்டித்தேன்"

       பிறகுதான் நான் யோசித்துப்பார்த்தேன், ஆமாங்க மின்சாரம் இல்லாததால்  நாம் நமது பழைய பொருட்களைக் கூர்மை திட்டச் செல்கிறோம், எனது நண்பன் "எலெக்ட்ரானிக் பொருட்களை பழுதுப் பார்ப்பவன்" அவன் ஏன் கொத்து வேலை கற்றுக்கொள்ளக்கூடாது என்று யோசிக்கிறான். விஞ்ஞானம் வளர்ந்தது, நாமும் வளர்ந்தோம் ஒவ்வொரு நாளும் நமது வேலைப்பளுவைக் குறைப்பதற்காக அதன் பின்னாலையே சென்றோம், ஏனோ இதெல்லாம் மின்சாரம் இல்லாவிட்டால் இயங்காது என்பதை மறந்துவிட்டோம்.
இப்படிதான் நமது தாய் தந்தை காலத்தில் நெல் குத்தி சோறு சமைத்தார்கள், ஆனால் நாம் நெல் அரைக்க மில்லுக்கு போனோம், மாவு அரைக்க கிரைண்டரை நாடினோம்.


அம்மியில் அரைத்து கொழம்பு வைத்தால்தான் சுவையாக இருக்கும் என்று நமது தாத்தா, பாட்டிகள் சொல்வதுண்டு, ஆனால் அதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை அதற்குக் காரணம் இயலாமை இல்லை. இப்போது நாம் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்கிறோம் காரணம் மின்சாரம் இல்லாமை.
இப்போது 'மிக்ஸி'க்கு ஓய்வு கொடுத்துவிட்டோம் , இந்த நிலை தொடருமானால் மறந்தேவிடுவோம் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காலம் எப்படி வேகமாக சுழல்கிறது பாருங்க...
இதுமட்டுமா? 'கேஸ் சிலிண்டர்கள்' ஆண்டுக்கு ஆறுதானாம் அதனால் மக்கள் எங்கு சென்றிருக்கிறார்கள் தெரியுமா? ஒரு சாதாரணத் தனிக்குடும்பத்திற்கு போதுமானதாக இருக்கலாம், கூட்டுக்குடும்பம் அல்லது ஒரு குடும்பத்தில் ஐந்து ஆறு நபர்களுக்கும் மேல் இருக்கும் குடும்பத்தார்கள் என்ன செய்வார்கள்
பாவம் அவர்கள், மழை நாட்களில் எல்லோருக்கும் வெந்நீர் வேண்டும் இல்லை என்றால் குளிக்கவே முடியாது. பெரியவர்கள்கூட கஷ்ட்டத்தை நினைத்து குளிர்ந்த நீரில் குளித்துவிடுவார்கள், பாவம் குழந்தைகள் என்ன செய்யும். சாதாரணமாகவே குழந்தைகளை குளுப்பாட்டி பள்ளிக்கு அனுப்புவதற்குள் தாய்மார்களுக்கு போதும் போதுமென்று ஆகிவிடுகிறது. குளிர்ந்த நீரில் குளுப்பாட்டி அனுப்பவேண்டும் என்றால் யப்பாப்பா அவர்கள் பாடு திண்டாட்டம்தான். இப்போதுதான் கிராமப்புறங்களில் "கேஸ் அடுப்பு" வாங்க ஆரம்பித்தார்கள்

அதற்குள் வந்துவிட்டது பற்றாக்குறை, நகர்புறத்தில் இன்னும்முன்னேற்றம் அடைந்து மின்சார அடுப்புக்கு மாறினார்கள்.
அதுவும் போதாது என்று "ஓவன்" க்கும் மாறினார்கள் எல்லாவற்றிக்கும் மின்சாரம் வேண்டுமே என்பதை மறந்துவிட்டார்கள்.
இதோ இப்போது திரும்பவும் பழைய பொருட்களை நோக்கி பயணம் செய்கிறார்கள் "மண் அடுப்பு" மண்ணெண்ணெய் அடுப்பு என்று பலதையும் தேடிச் செல்கிறார்கள். ஏன் இன்னும் சொல்லப்போனால் விறகுகள் வாங்கவும் செல்கிறார்கள்.
இதையெல்லாம் "மியூசியத்தில்" வைத்துதான் வருங்கால மக்களுக்கு காட்டவேண்டும் என்று நினைத்தேன், இப்போது அதற்கு அவசியமில்லாமல் போய்விட்டது
"ம்ம்ம்ம்ம்ம்ம்" என்ன செய்ய மின்சாரம் என்பதே ஒரு உலக அதிசியமாக மாறிவிடும் போலிருக்கிறதே! இன்னும் சொல்ல நிறையவே இருக்கிறது பதிவின் நீளத்தை நினைத்து இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

இதனால் சில நன்மைகள்:

இப்பலாம் மீண்டும் அம்மாக்கள் மொட்டைமாடியில் நின்று குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டுகிரார்கள்.

சீரியல் பார்த்துப் பார்த்து அழுத தாய்மார்கள் அடுப்பை ஊதி ஊதி அழுகிறார்கள்.

தோட்டம்  வளர்க்கிறார்கள் (காய்கறிகள் இப்போது சொந்த தோட்டத்தில்)
காய்கறிகளின்  செலவு குறைவு.

மின்சார கட்டணம் குறைவு.

தாய் தந்தைகளுக்கு குழந்தைகளுடன் பேசுவதற்கு நேரம் கிடைக்கிறது.

கணவன் மனைவியிடன் பல விசயங்களைக் கலந்து பேச நேரம் கிடைக்கிறது.

முதியோர்களிடம்  குழந்தைகளும் மகன் - மகள்களும் சில அறிவுரைகளை கேட்க்கிறார்கள்.

இன்னும் எத்தினை எத்தினையோ நீங்களே கொஞ்சம் சொல்லுங்களேன்.

தீமைகள்:

திருடர்கள் பயம் அதிகரித்துவிட்டது.

அக்கம் பக்கம் உட்க்கார்ந்து புரளி பேசுகிறார்கள்.

சிலர் போதைக்கு அடிமையாகிறார்கள் (நேரம் போக்கிற்காக)

ஊர்  சுற்றுவதே இளைஞர்களின் போழுதுபோக்காகிவிட்டது.

கிடைக்கும் நேரத்தில் (எஸ்.எம் எஸ்) அனுப்பி அனுப்பி மாணவ - மாணவிகள் கெட்டுப்போகிறார்கள்.

தேர்வு நேரத்திகூட படிக்கமுடியாத நிலைமை. வீட்டுப்பாடத்தை எழுதவும் முடியாமல் போகிறது.

(இனி உங்கள் அனுபவத்திற்கு... இதில் இணைக்கப்பட்டுள்ள படங்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து)

***********************************************நன்றி, மீண்டும் சந்திப்போம்************************************************

 

16 கருத்துகள்:

Ramani said...

நன்மை தீமைப் பட்டியல் அருமை
தலைப்பும் அதற்கான விரிவான
படங்களுடனான பதிவும் மிகச் சிறப்பு
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

tha.ma 1

சிட்டுக்குருவியின்_ஆத்மா said...

அருமையான பதிவு
அனைவரும் மறந்து போக்கக் கூடிய இந்த சந்தர்ப்பத்தில் பழைய பொக்கிஷங்கலையும் சுவை மிகு உணவுகளை செய்யக் கூடிய பொருட்கலையும் ஞாபகப்படுத்தியது நன்று

Lakshmi said...

2ஆமாங்க உண்மைதான் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு வரும்போதுதான் மற்ற பொருளின் அருமை தெரியவருது.

Sasi Kala said...

எப்படியோ பழமைகள் பாதுகாக்கப்பட்டால் சரிதான்.

desiyam Divyamohan said...

மிகவும் அருமையான பதிவு தொடருங்கள் நன்றி சகோ!

rajalakshmi paramasivam said...

அருமையான பதிவு.
பழையன கழிதல் அவ்வளவு எளிதல்ல போலும்.
உங்கள் பதிவு அதை அழகாக உண்ர்த்தி விட்டது நண்பரே.
வாழ்த்துக்கள்.

ராஜி.

Ungal Nanban said...

Super Maa...

எவ்வாறு Dropboxயினை நிறுவுவது என்பதை பற்றி தெரிந்து கொள்பவர்கள் எனது தளத்திற்கு வருகை தாருங்கள்.

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

மிக்க நன்றி அம்மா.

semmalai akash said...

ஆமாம் ஆமாம் மிக்க நன்றி.

semmalai akash said...

மிக்க நன்றி சகோ!

semmalai akash said...

ஆமாம், மிக்க நன்றிங்க..

semmalai akash said...

நன்றி நண்பா. ம்ம்ம் பார்க்கிறேன்.

King Raj said...

வாஷிங் மெஷினை விட்டுட்டீங்களே..?...
துணி துவைத்தல் எத்தனை அருமையான உடற்பயிற்சி...!!!.

Post a Comment