Pages

Tuesday, December 4, 2012

நாஞ்சில் சம்பத்தின் கட்சித் தாவுதலுக்கான காரணங்கள் சில உங்கள் பார்வைக்கு...

நாஞ்சில் சம்பத் அவர்கள் சொன்ன காரணங்கள்.

             ஒன்பதாம்  வகுப்பு பாடப் புத்தகத்தில் ஒரு சர்ச்சைக்குரிய பாடத்தை நாஞ்சில் சம்பத்தை எரிப்பதுபோல் எரித்து களையுங்கள் என்று வைகோ சொன்னார். 19 வருடகாலமாக கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த என்னைப் பார்த்துச் சொல்ல இவருக்கு எப்படி மனசு வந்தது. 

              நான் கட்சியின் கருத்துவேறுபாடு காரணமாகவே கட்சியை விட்டு வெளியே வந்தேனே தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை. நான் இதுவரையில் எனக்கென்று தனிப்பெயர் சேர்த்துக்கொள்வதற்காக தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. எப்பொழுதும் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவே இயங்கி வந்தேன். கட்சிக்கு எந்த தீங்கும் விளைவிக்கவில்லை.


         நான் சில சொந்த காரணத்திற்காக ஒரு கட்சி கூட்டத்தில் கலந்துக்கொள்ளமுடியவில்லை அதை மனதில் வைத்துக்கொண்டு, நான் வெளிநாடு சென்றிருந்த நேரத்தில் என்னைப்பற்றி ஊடகங்களுக்கு அவதூறாக பேட்டியளித்தும், நான் கட்சியைவிட்டு விலகுவதாகவும் சொல்லியிருக்கிறார். மேலும்  எனது கொடும்பாவிகளை எரித்தும் தொண்டர்கள் மத்தியில் என்னை கேலிக்கூத்தக்கிவிட்டார்.

             இதுகுறித்து கட்சித் தலைமையோ அல்லது கட்சி உறுப்பினர்களோ என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தவே தயாராக இல்லை, நானும் 67 நாட்கள் காத்திருந்தேன், ஆனால் அவர்கள் என்னிடம் எந்த பேச்சுவார்த்தைகளுக்கும் தயாராக இல்லை,

              என்ன நடந்தாலும் சகித்துக்கொண்டு இந்த கட்சியிலேயே தொடர்வதாகத்தான் இருந்தேன் மேலும் மேலும் என்னை கடுமையாக விமர்சித்ததால்தான் இறுதியில் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்தேன். எனக்கு அதிகாரம் கிடைக்காத காரணத்தால்தான் கட்சியை விட்டு விலகுகிறேன் என்பது முற்றிலும் பொய்யானது. இப்போதுகூட அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் இதுவரை நீங்கள் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்று கேட்டார். அதற்கும் இதே பதில்தான் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

             எந்த கட்சிக்கு நான் விசுவாசமாக இருந்தேனோ, அந்த கட்சி என்னை நிராகரித்தப்போது, எந்தக் கட்சி என்னை தாயைப் போல தழுவியதோ அந்த கட்சியின் கொள்கைகளை மட்டுமே பேசுவேன். இதில் எந்த முரண்பாடும் எனக்கில்லை. இலங்கைத்தமிழர் விவகாரத்தில் அதிமுக எப்பொழுதும் முரண்பாடாக இல்லை, ராஜபக்சே விவகாரத்தில் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்ததை நான்தான் முதன்முதலில் வரவேற்றேன். அதனால் எனக்கும் எனது கொள்கைக்கும் எந்த முரண்பாடும் இல்லை.

            அதிமுக கட்சியில் சேர்ந்த நிமிடம் முதல் எனக்கு ஒரு பொறுப்பையும் கொடுத்திருக்கிறார்கள் அதை நான் பொறுப்புடன் நின்று காப்பாற்றுவேன். எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது. இதுவரை மதிமுகவின் கட்சிக் கொள்கைகளையும், மக்கள் உரிமைகளையும் பொதுமக்களிடம் மேடைகளில் பேசிவந்தேன். இனிவரும் காலங்களில் அதிமுகவின் கட்சிக் கொள்கைகளையும், அதிமுக இதுவரை செய்த நன்மைகளையும் பொதுமக்களிடம் பேசிப் புரியவைப்பேன்.

            எனது  வீடு இடிக்கப்பட்டபொழுது கட்சிதான் எனக்கு வீடுகட்டிக் கொடுத்து ஆதரவு கொடுத்தது என்று கூறி வருகிறார்கள்.ஆனால் அது அப்படியில்லை  அன்று இருண்டுபேர் மத்திய அமைச்சராக இருந்தார்கள், அவர்களில் ஒருவர் நினைத்திருந்தால்கூட  எனக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கமுடியும். ஏன் வைகோவே நினைத்திருந்தால்கூட  எனக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கலாம், ஆனால் அவர் அதைச் செய்யவில்லை அப்போது அவர் சிறைச் சாலையில் இருந்தார் அங்கு சென்று சந்தித்தேன் எனக்கு வீடு வேண்டாம் ,நான் வீடு இல்லாத குடும்பமாகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்று சொன்னேன், எனக்காக யாரும் நிதி திரட்டவேண்டாம் என்றும் கூறிவிட்டேன். எனது நிலைமையை அறிந்த கட்சித் தொண்டர்கள் கண்ணீரோடு வந்து நிதி திரட்டி எனக்கு வீடு கட்டி கொடுத்தார்கள், இதை கட்சி செய்து கொடுக்கவில்லை, கட்சி தொண்டர்கள்தான் செய்துகொடுத்தார்கள் அதனால் தொண்டர்கள்மீது நான் எப்போதும் பாசத்துக்குரியவனாகவே இருப்பேன்.

      இந்த கருத்துவேறுபாடுகள் இன்று நேற்று அல்ல வைகோ அவர்கள் "பொடா" சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்த நாட்கள் முதலே இருந்து வருகிறது. மதிமுகவிற்கு இனி எதிர்காலம் இருக்கிறதா? என்று கேட்க்கிறார்கள். நிகழ் காலமே இல்லை எதிர்காலத்தைப் பற்றி ஏன் கேட்க்கிரீர்கள்,

            கட்சியில்  ஜனநாயகம் இருக்கிறது, ஆனால் எனக்கான இடம் இல்லை. என்னை இயங்குவதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை, அதனால்தான்  நான் விலகிவிட்டேன், என்னை இயங்க அனுமதிக்கும் கட்சியோடு இணைந்து இயங்கப்போகிறேன். எனக்கு கட்சியில் கொள்கை முரண்பாடு ஒன்னும் கிடையாது, எனது இருப்பை அவர் அங்கீகரிக்கவில்லை, எனக்கென்று ஒரு கூட்டம் சேர்வதை அவர் விரும்பவில்லை, என்மீது கட்சி உறுப்பினர்கள் பிரியம் வைத்திருப்பதையும் அவர் விரும்பவில்லை. இதுதான் முக்கிய காரணம் நான் கட்சியை விட்டு விலகுவதற்கு.


         இப்பொழுது அதிமுகவில் சங்கமித்த உடனே எனக்கு கொள்கைப்பரப்பு துணைச் செயலாளர் பதவியை கொடுத்திருக்கிறார்கள் எந்த உயர்வையும் நான் எதிர்ப்பார்க்கவில்லை நான் ஒரு சொற்ப்பொழிவாலனாக சுற்றி வந்தவன். இப்பவும் எனக்கு  எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லை சொற்ப்பொழிவாலனாகவே இருக்க ஆசைப்படுகிறேன். கட்சியின் மேலிடம் சொல்வதைக் கேட்டு நடப்பேன். இப்பொழுது கட்சியில் இருந்து மத்திய அரசுக்கு அனுப்பிய அனைத்து கடிதங்களையும, மேலும் சில கட்சியின் நுட்பங்களையும் என்னிடம் கொடுத்துள்ளார்கள். நான் ஒரு மாணவனாக அதையெல்லாம் படித்து பொதுமக்களிடம் எடுத்துச் செல்வேன். 

மக்கள் கருத்து:

  • நாஞ்சில் சம்பத் ஒரு நல்ல பேச்சாளர். அவர் விலகியது மாதிமுக வுக்கு  இழப்பே தவிர ஆதாயம் இல்லை.
  • அதிமுகவைப் பொருத்தவரை அந்த கட்சிக்கு மிகப்பெரிய ஆதாயம் அதிமுகவிற்கு ஒரு நல்ல பேச்சாளர் இல்லாத குறை இருந்து வந்தது, அனால் இப்போது அந்த இடம் பூர்த்திசெய்யப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
  • இந்த விஷயத்தில் வைகோ அவர்கள் செய்தது தவறாகத்தான் தெரிகிறது.
  • எல்லோரும் தங்களுடைய கட்சியில் ஒரு செல்லாக்காசாக ஆனப்பிறகே கட்சி மாறுவார்கள், அனால் நாஞ்சில் சம்பத் அவர்கள் தனது கட்சியின் பொற்காசாக இருந்தநிலையில் கட்சி மாறியிருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் கட்சித் தாவியதால் அதிமுகவிற்கு கிடைத்த புதையல் என்றே சொல்லாம்.
  • வைகோ தனியாக சென்றபோது திமுகவினர் எவ்வளவோ பணம் கொடுத்து அழைத்தும், நான் வைகோவுடன்தான் இருப்பேன் என்று சொன்னவர். ரொம்ப நல்ல மனிதர் இருந்தாலும் வைகோ இப்படி செய்திருக்கக்கூடாது.
  • பல மேடைகளில் வைகோவும் இவரும் பேசியிருக்கிறார்கள், வைகோ இருக்கும் மேடையில் சம்பத் கருப்புத்துண்டு அணிவதில்லை. அவ்வளவு மரியாதை கொடுப்பவர்.

கட்சித் தாவலால் யாருக்கு பலன்:

         கட்சித் தாவலால் கட்சிக்கு நன்மையா? அல்லது கட்சித் தாவியவருக்கு நன்மையா? என்று கேட்டால் எல்லாம் அரசியல் ஆதாயம்தான் என்று சொல்லவேண்டும். ஆனால் சம்பத் விசயத்தில் அப்படி சொல்லிவிட முடியாது.பொறுத்திருந்துப் பார்ப்போம் காலம்தான் பதில் சொல்லும்.

நன்றி, மீண்டும் சந்திப்போம்.

22 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com said...

பாரபட்சமற்ற நல்ல அலசல்
நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

ஜோதிஜி said...

தெரிந்து கொண்டேன்.

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...

semmalai akash said...

வருகைக்கு மிக்க நன்றி நண்பரே!

ஆத்மா said...

நான் அரசியல் இலாபத்தைத்தான் சொல்லுவேன் ...

ஆனால் சம்பத் விசயத்தில் அப்படி சொல்லிவிட முடியாது.பொறுத்திருந்துப் பார்ப்போம் காலம்தான் பதில் சொல்லும்.
//////////

ஏதோ நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்கள் பார்ப்போம்

semmalai akash said...

ம்ம்ம் பார்ப்போம் நண்பா,

மிக்க நன்றி நண்பரே.

Unknown said...

என்னதான் செய்வது...

உங்களுடைய Photoshop யினை Activate செய்ய எவ்வாறு Adobe Photoshop CS5.1 யினை Crack செய்து Activate செய்வது எனும் Link ஐ click செய்யுங்கள்

Balaji said...

அருமையான அரசியல் அலசல் தம்பி ...

வாழ்த்துகள்...

ஒரு வேண்டுகோள்: எ. பி. சரி செய்யவும்...

Thozhirkalam Channel said...

தகவலுக்கு நன்றி.....காலம் விரைவில் பதில் சொல்லட்டும்

settaikkaran said...

நான் சொல்ல நினைத்ததை பாலாஜி சொல்லிட்டாரு! :-)

settaikkaran said...

அவர் இங்கேயிருந்து அங்கே ஏன் போனாருன்னுறது பெரிசில்லை. அங்கே எத்தனை நாள் இருப்பாரு, இருக்க விடுவாங்கன்னுறதுதான் கேள்வியே! :-))

semmalai akash said...

நன்றி நண்பா

semmalai akash said...

நன்றி அண்ணா.. சரி செய்துவிட்டேன்.

semmalai akash said...

சரி அண்ணா

semmalai akash said...

வருகைக்கு நன்றி நண்பரே!

semmalai akash said...

ஆமாம் ஐயா, பொறுத்திருந்து பார்ப்போம்.மிக்க நன்றி ஐயா.

முத்து குமரன் said...

அருமையான அலசல். வைகோவும் நல்ல மனிதர்தான் ஆனால் எங்கோ சருக்குகிறார் என்பது புரிகிறது. வண்டி மாடுகளை அவிழ்த்து விட்டு வண்டியை மட்டும் இழுத்துக்கொண்டு அலைகிறார். இவர் எப்போ ஊர் போய் சேர்வது...?

நன்னயம் said...

நீங்கள் சம்பத்தின் கொ.ப.செ போல் எழுதிருக்கிறீர்கள். ஒரு விடயத்தை அலசி பதிவிடும் பொது இரு பக்க நியாய கருத்துகளையும் போட்டே பதிவேழுதல் நடு நிலை தன்மை. நீங்கள் எழுதிருப்பது சம்பத்துக்கு ஜால்ரா.
"மக்கள் கருத்து:"
மக்கள் கருத்து என்று கொஞ்சம் போட்டிருக்கிறீர்கள். மக்கள் என்று யாரை கருதுகிறீர்கள். உங்கள் உறவினர்கள் மட்டுமா. அல்லது உங்களை மட்டும் கருதுகின்றதா.
நீங்கள் இருப்பது வெளி நாட்டில், இங்கு யாரும், எந்த பத்திரிகையும் கருத்து கணிப்பு நடத்தவில்லை. அப்படி இருக்கையில் எப்படி நீங்கள் மக்கள் கருத்து என்று ஒன்றை போட முடியும். அது உங்கள் கருத்து மட்டும் தான்.
(முதலில் நேர்மையாக இருக்க கற்று கொள்ளுங்கள்)

semmalai akash said...

வணக்கம் நண்பரே வருகைக்கு நன்றி.

நீங்கள் சம்பத்தின் கொ.ப.செ போல் எழுதிருக்கிறீர்கள். ஒரு விடயத்தை அலசி பதிவிடும் பொது இரு பக்க நியாய கருத்துகளையும் போட்டே பதிவேழுதல் நடு நிலை தன்மை. நீங்கள் எழுதிருப்பது சம்பத்துக்கு ஜால்ரா.

நீங்க எனது பதிவை சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன், அவர் கட்சிதாவலக்கான சில காரணங்கள்:நாஞ்சில் சம்பத் அவர்கள் சொன்ன காரணங்கள். இதை படிக்கவும், அவர் சொன்னதைத்தான் எழுதி இருக்கிறேன்.

மக்கள் கருத்து:ஒருவர் சொன்னால் தனி கருத்து , இருவர் சொன்னால் எங்கள் கருத்து, ஒரு கூட்டம் சொன்னால் அது மக்கள் கருத்து. இது புரிந்திருக்கவேண்டும் உங்களுக்கு அமீரகத்தில் எத்தினையோ லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள், தமிழ் சங்கங்கள் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நம்ம ஊரில் உள்ளவர்களுக்கு தெரியாத உண்மைகள் எல்லாம் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு தெரியும். அந்தளவுக்கு நேரிடை தொடர்பு இருக்கிறது.

வருகைக்கும் உங்களுடைய கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

சிறந்த அலசல்.

தருமி said...

//இதை கட்சி செய்து கொடுக்கவில்லை, கட்சி தொண்டர்கள்தான் செய்துகொடுத்தார்கள்//

அடடே ... இந்த லாஜிக் ரொம்ப நல்லா இருக்கே!

Post a Comment