Pages

Wednesday, December 5, 2012

முடி உதிர்கிறதா? முடி உதிரும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!

               முடி உதிர்கிறதா? முடி உதிரும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! இதோ வந்துவிட்டது. இப்படிதான் தினமும் துபையில் ஒலிபரப்பாகும் எல்லா "FM" சேனல்களிலும் ஒரு விளம்பரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இப்போதும் ஒலிக்கிறது. சொல்லப்போனால் இப்போது அதிகமாகவே இந்த விளம்பரம் ஒலிக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு இதன் விற்பனை கூடிவிட்டது என்று நினைக்கிறேன்.

           அது என்ன என்று கேட்க்கிறிர்களா? அதுதான் "இந்துலேகா பிரிங்கா" 12 வாரங்களிலேயே வலுவான முடிகளைப் பெறமுடியுமாம். துபையில் உள்ள எல்லா கடைகளிலும் கிடைக்குமாம். இப்படிதான் விளம்பரம் செய்கிறார்கள் ஆனால் ஒருசில கடைகளிலேயே கிடைக்கிறது. நானும் ஒரு 100 ML அளவுள்ள ஒரு சிறிய 'Bottle' ஐ விலை 37.50 திராம்ஸ் கொடுத்து வாங்கினேன். இது இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 560 ரூபாய் ஆகும். 
          இந்த எண்ணெயை பற்றி பல நண்பர்களிடம் கேட்டபோது எல்லோரும் சொன்ன பதில்கள், இப்படிதான் சொல்கிறார்கள் ஆனால் இதன் விலையும் அதிகம் அதேசமயம் சரியான தீர்வு காணமுடியவில்லை. 30% மக்கள் அருமையான கண்டுபிடிப்பு எனக்கு இப்பொழுது நிறைய மாற்றங்கள் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள். 30% மக்கள் எனக்கு பெரிய மாற்றம் ஒண்ணுமில்லை இங்கே உள்ள தண்ணீர்ப் பிரட்சினையால்தான் முடி உதிர்கிறது. எந்த எண்ணெய் தேய்த்தாலும் தீர்வு கிடைக்காது என்று சொல்கிறார்கள். மீதமுள்ளவர்கள் அந்தந்த வயதில் சில பல மாற்றங்கள் ஏற்படும் அதை சந்தோஷமாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தந்த வயதில் வரும் மாற்றத்திற்கேற்ப இருந்தால்தான் அழகு என்று சொல்கிறார்கள்.

        இது இப்படி இருக்க இதன் விற்பனை என்னவோ நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது. ஒரு சூப்பர்மார்க்கெட்டில் உள்ள நண்பரிடம் கேட்டேன். இந்த எண்ணெய் எப்படி பயனுள்ளதா? அவர் சொன்ன பதில்கள், ரொம்ப ரொம்ப நல்லது முடி உதிர்வது குறைகிறது. மக்கள் தினமும் வந்து கேட்டுக்கேட்டு வாங்கிக்கொண்டு போகிறார்கள், அதிலும் ஒரு சிலர் இரண்டு மூன்று கூட வாங்கிச் செல்கிறார்கள்.
               இதைப்பற்றி துபாய் செய்தித்தாளில் கடந்த மே மாதம் Emirates247  ல் ஒரு செய்தி வந்தது. அதன் விபரத்தை இந்த லிங்கில் சென்று படிக்கலாம். ஆனால் இந்த செய்தியில் சொல்வதைப்போல் 'ஆயுர்வேதிக்' பொருள்களுக்கு தடை என்பதெல்லாம் கிடையாது, துபையில் அனுமதிப் பெற்ற 'ஆயுர்வேதிக்' கடைகள் ஏராளம் இருக்கிறது. "ஆயுர்வேதிக்" என்ற பெயரில் இதன் விலையைக் கூட்டி விற்கிறார்கள் என்பது உண்மை. இதை கூடுதல் விலைக்கு விற்பதற்கான காரணம் விளம்பரம்கள்தான் அதற்கு செய்யும் செலவையும் இந்த எண்ணெய் வாங்கும் வாடிக்கையாளர்களின் மேல்தான் திணிக்கப்படுகிறது. 
             சரி தாத்ரி எண்ணெய் என்று ஒன்று இருக்கிறது அதன்விலை இதைவிடக் குறைவுதான், ஆனால் இந்த அளவுக்கு இல்லை என்று நினைக்கிறேன். இந்துலேகா எண்ணெய்யை ஆன்லைனிலும் வாங்க முடியும். வாங்க இங்கு . இன்னும் இதைப்பற்றி முழுவதும் சொல்லவில்லை அதற்குள் வாங்க சொல்கிறேன் என்று கேட்பது புரிகிறது. வாங்கியவர்களில் அதிகம்பேர் குறை சொல்லவில்லை. வாங்காதவர்கள்தான் அப்படி இப்படி என்று தங்களுடைய போலியான கருத்துகளை சொல்கிறார்கள்.
 "இந்துலேகா பிரிங்கா" என்ன சொல்கிறது என்று பார்ப்போம்:
         
              12 வாரங்களிலேயே புதிய வலுவான முடிகளை வரவேற்பீர்!  மனிதர்களுக்கு முடி உதிர்வதென்பதுஒரு சாதாரண விஷயமே! பொதுவாக ஒருவரின் தலையிலிருந்து ஒரு நாளைக்கு 50 முதல் 75 முடிகள் வரை உதிரலாம் என்பது நிபுணர்களின் கருத்து. ஒவ்வொரு முடி உதிர்ந்த இடத்திலிருந்தும் புதியதாக முடி வளர்வது என்பது இயற்கையே. உதிர்ந்துப்போன முடிக்கும் அங்கே வளரவேண்டிய முடியின் எண்ணிக்கையின் அளவுக்கும் பெரிய வித்தியாசம் ஏற்படும்போதுதான் முடி மெலிதாகிப்போவதும் வழுக்கை விழுவதும் ஏற்படுகிறது. எனவே மெலிதாக மாறிப்போவதை தவிர்ப்பதற்கான தீர்வு முடி கொட்டுவதை கட்டுப்படுத்துவதில் மட்டுமல்ல அதற்கு பதிலாக முடி உருவாவதற்கு உதவவேண்டும்.

        அதைத்தான் 'இந்துலேகா பிரிங்கா'கூந்தல் தைலம் விஞ்ஞான அடிப்படையில் சிறப்பாக செய்கிறது. முடியை தாங்கி நிற்கும் சிறிய குமிழ்(உரை) போன்ற அமைப்பு ஆரோக்கியமானதாகவும், அசையாமல் உறுதியானதாகவும் இருந்தால்தான் முடி உதிர்ந்த இடத்தில் இயற்கையாக மீண்டும் முடி வளரும். இந்துலேகா கூந்தல் தைலம் வழுக்கை தலையின் தோல்பகுதிக்கு தீவிரமாக சத்துகளை அளித்து முடியின் அடிப்பகுதியில் இருந்து குமிழ் போன்ற அமைப்புக்கு ஊக்கமளித்து எந்தவிதப் பக்கவிளைவுமின்றி ஆரோக்கியமான முடி வளர உதவுகிறது. 

          முடியின் படிப்படியான மூன்று கட்ட பாதுகாப்பு ஆயுர்வேதத்தில் கீழ்காணும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேசவர்த்தனம் : முடி வளர்ச்சி.
கேச ஸ்தாபனம் : முடி உதிர்வதை தடுத்தல்.
பலிட்டம்(பலிதம்) : இளநரை வரமால் தடுத்தல்.

இந்துலேகா கூந்தல் பிரிங்கா எப்படி செயல்படுகிறது:

        இதில் சக்திவாய்ந்த மூலிகைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளதால் அவை முடிகளுக்கு மீண்டும் சக்தியை வழங்கி முடியின் வேர்ப்பகுதியை பாதுகாக்கிறது என்பது விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது. 'இந்துலேகா பிரிங்கா' தலையில் தடவும்போது உடல் உறுப்புகளுக்கு எந்தவித பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தாமல் அடர்த்தியான மூலிகை கலவையின் தீவிரமான மருத்துவ பலனை முடியின் அடிபாகத்துக்கு இது அளிக்கிறது.
     தலையின் தோல் பகுதியில் இரத்த ஓட்டத்தை மேல்படுத்தி முடி உதிர்வதை இது தடுக்கிறது.
            முடி உதிர்வதை தவிர்க்கும்பொருட்டு முடியின் நுட்பமான உள்பாகத்தில் சென்று வேலை செய்து தோலின் உட்புறத்தில் ஊடுருவிச்சென்று இறந்துபோன செல்களை ஊக்கப்படுத்தி முடியின் வேர்ப்பகுதியில் சத்துகளை வாரி வழங்குகிறது.
            தலையின்மேல்  தோலில் உள்ள விஷத்தன்மையை நீக்கி, முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, முடியின் வேர்களை பலப்படுத்தி நீண்ட பளபளப்பான ஆரோக்கியமான முடிவளர்ச்சியை மேம்படுத்துகிறது. இந்துலேகா பிரிங்காவில் உள்ள சில குறிப்பிட்ட மூலிகைப் பொருட்கள் தீவிரமாக செயல்பட்டு முடியின் அடர்த்தியைக் கூட்டி ஆரோக்கியமான அடர்த்தியான பளபளப்பான முடியைப் பெற ஊக்கமளிக்கிறது.

          இந்துலேகா பிரிங்காவிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்றால் 2-4 வார காலத்திற்குள் இந்துலேகா பிரிங்கா அடிபாக குமிழ்வளர்ச்சியின் சுழற்சியை ஊக்குவிக்கிறது. மந்தமான நிலையில் உள்ள முடிகள் விழுந்து முடியின் அடிப்பாகத்திலுள்ள குமிழ்போன்ற பகுதிபுதிய வளர்ச்சி நிலைக்கு உள்ளாகி புதிய மற்றும் ஆரோக்கியமான முடியை உருவாக்கும். 

          8-12 வாரக்காலத்திற்க்குள் குறிப்பிடும்படியான அளவுக்கு முடி உதிர்வு குறைவதுடன் தற்போதுள்ள முடி அடர்த்தியாக வளர்வதையும் காணலாம்.

பயன்படுத்தவேண்டிய அளவு:

      முதல் 8 நாள் வரையில், இந்துலேகா பிரிங்காவை முந்தையநாள் தலையின் மேல் தோல் பகுதியில் தடவி மறுநாள் காலையில்தான் கழுவவேண்டும்.

               அடுத்துவரும் நாட்களில், இந்துலேகா பிரிங்காவை முடியில் தடவி தலையின் மேல் தோல் பகுதியில் மென்மையாக தேய்த்து சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் நன்றாக கழுவிவிட வேண்டும். அலர்ஜி ஏதாவது இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று செய்யவும்.

மூலிகைப்பொருட்க்கள்:

       தேங்காய், ஸ்வேத குட்ஜா, பிரிங்கராஜ, அமிர்தா, ஆம்லா, கைதார்ய, யஷ்டி, பால், எலுமிச்சை, பிரம்மி, கேரத் தைலம், கற்பூரம், வடத, குமரி, திராட்சை ஆகும்.

          நான் வாங்கி பயன்படுத்தி வருகிறேன் முடி உதிவது குறைந்துள்ளது, அதே இடத்தில் புதியதாக முடி வளர்ந்தால் மிகவும் சந்தோசப்படுவேன், ஆனால் இப்போது முடி உதிர்வது குறைதிருப்பதால்  உள்ள முடியையாவது காப்பாற்றிக் கொள்ளலாமே என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். இதோ! உங்களிடமும் பகிர்கிறேன், விருப்பமுள்ளவர்கள் வாங்கி பயன்பெறவும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~நன்றி, மீண்டும் சந்திப்போம்.~~~~~~~~~~~~~~~~~~~~
29 கருத்துகள்:

கவியாழி கண்ணதாசன் said...

தகவலுக்கு நன்றி

T.N.MURALIDHARAN said...

தொலைக் காட்சிகளிலும் விளம்பரம் வந்து கொண்டு இருக்கிறது.உண்மையில் தரமானதாக இருந்தால் சரி.

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

சேட்டைக்காரன் said...

ஓஹோ! நீங்களும் நம்ம ‘கட்சி’தானா? சீக்கிரமே தலை செழிக்க வாழ்த்துகள்! :-)

உஷா அன்பரசு said...

ஆஹா தலையாய பிரச்சினையை சொல்லி விட்டீர்கள்.. கவனிக்க பட வேண்டியதுதான். தலைமுடி உதிர்வுக்கு காரணம் டென்ஷன், தூக்கமின்மை, தண்ணீர், ஷாம்பூ .. இன்னும் சில காரணங்களும் கூட. என் வீட்டில் அவருக்கும் இந்த பிரச்சினைதான்.. நான் எதாவது ஆயில் யூஸ் பண்ண சொல்லி அட்வைஸ் பண்ணினால், அவரோ " போகட்டும் விடு.. தலை வாரும் நேரம் மிச்சம் .."னு கூலா சொல்லிட்டார். ஆனா அப்படியெல்லாம் விட்டுடாதீங்க.. சுத்த வழுக்கையானா இதெல்லாம் நடக்கும்: " ரோட்ல போற யாராச்சும்," எக்ஸ்க்யூஸ் மீ..ஒரு நிமிஷம்னு.. நிக்க வச்சி.. கண்ணாடி மாதிரி மின்னிட்டிருக்க மண்டையை பார்த்து அவங்க பாக்கெட்ல இருக்க சீப்ப எடுத்து அவங்க தலையை வாரிப்பாங்க. ச்சோ.. சும்மா..சிரிக்க ஜோக்கா சொன்னேன்ங்க... இந்து லேகா பெஸ்ட்தான் நிறைய பேரு சொன்னாங்க. அதைவிட அமேசான் காட்டிலிருந்துன்னு விளம்பரம் வருதே.. ஹெர்போமேட்டிக்.. பாட்டில் ஒன்றின் விலை இந்திய ரூபாய் 1250/- இரண்டு பாட்டிலாகதான் வரும்.. ஒரு பேக். அதை பயன்படுத்தினால் ஆறு மாதத்தில் வழுக்கை தலையில் கூட முடி வளர்வது கேரண்டியாம். எல்லாம் பாலோ பண்ணுங்க.. கடைசியா எதுவும் நடக்கலன்னாலும் இருக்கவே இருக்கு.. ஹேர் பிளாண்ட்.. ! காலத்துக்கும் கொட்டாது.. நரைக்காது..! அய்யோ நான் எஸ்கேப் ஆகறேன்ங்க.. நீங்க திட்டறது கேக்குது..

semmalai akash said...

ஹா ஹா ஹா !!! ஆமாம் அண்ணா,

வருகைக்கு மிக்க நன்றி அண்ணா.

semmalai akash said...

ரோட்ல போற யாராச்சும்," எக்ஸ்க்யூஸ் மீ..ஒரு நிமிஷம்னு.. நிக்க வச்சி.. கண்ணாடி மாதிரி மின்னிட்டிருக்க மண்டையை பார்த்து அவங்க பாக்கெட்ல இருக்க சீப்ப எடுத்து அவங்க தலையை வாரிப்பாங்க. ச்சோ.

என்ன கிண்டல் ஆஹா!!! ஆண்கள் எல்லோரும் சேர்ந்து சாபம் விட்டுடுவோம். ஹா ஹா ஹா !!! உங்களுடைய எழுத்துகளை மிகவும் ரசிதேன்.

இராஜராஜேஸ்வரி said...

தகவல் பகிர்வுக்கு நன்றி ...

semmalai akash said...

வருகைக்கு மிக்க நன்றி சகோ!

முத்தரசு said...

நன்றி

முத்தரசு said...

நன்றி

கோவை நேரம் said...

நமக்கு முடி இருக்குங்க...

வே.நடனசபாபதி said...

செய்திக்கு நன்றி. ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு இது தாமதமாக கிடைத்த செய்தி!

Sasi Kala said...

ஆமா எனக்கு ஒரு சந்தேகம் பெண்களை விட இப்பவெல்லாம் ஆண்கள் என்ன அலங்காரத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டிங்க ஸம்திங் ராங்.... சரிங்க அப்படியே இந்த இளநரைக்கு என்ன பயன்படுத்தலாம்னு சொல்றிங்களா (கோவிக்காதிங்க) சும்மா சொன்னேன் நல்ல பகிர்வுங்க.

semmalai akash said...

இரண்டுமுறை நற்றி சொல்வதைப் பார்த்தால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பிங்க போலிருக்கே! :-)))))சும்மா சொன்னேங்க... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

semmalai akash said...

:-)))))

semmalai akash said...

அப்ப ஓகே நீங்க தப்பிச்சிங்க....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

semmalai akash said...

ஹா ஹா ஹா !!!

எனக்கே இப்பதான் தெரியும் நண்பரே,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

semmalai akash said...

சும்மாதான், ஆண்கள் மேக்கப் போடக்கூடாதா என்ன? ஹீ ஹீ ஹீ !!

ம்ம்ம் சரிங்க.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said...


வணக்கம்!

முடிகுறித்து இங்கே மொழிந்த கருத்தைப்
படியெடுத்துக் கொண்டேன் பரப்ப! - வடிவாய்
இருக்க வழிசொன்னார் செம்மலை! இன்பம்
பெருக்க வழிசொன்னார் பேணு!


முடியென்ன? முகமென்ன? என்றே எண்ணி
மூலிகையைத் தேடுதற்குக் காலம் இல்லை!
அடியென்ன? சீா்என்ன என்றே எண்ணி
அருந்தமிழைப் படைக்கின்ற கவிஞன் யானே!
இடியென்ன? வெடியென்ன பகைவா் தம்மை
இடுப்பொடித்துத் துாளாக்கும் மொழிப்போர் வீரன்!
செடியென்ன? கொடியென்ன? தமிழைத் தாங்கித்
செழிக்கின்ற தலையெனக்கு! முடியும் ஏனோ?

அருணா செல்வம் said...

கவிஞரே... முடியில்லாதவங்க இப்படி பாடித்தான்
மனத்தைத் தேத்திக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அருணா செல்வம் said...

பதிவு அருமை நண்பரே...
முடியில்லாதவர்களுக்கு நிச்சயம் உதவும்.

Anonymous said...

எண்ணெய் யூஸ் பண்றதோட நிறுத்திடாம, கூடவே காய் கணிகள், கீரைகள் நிறைய எடுத்துக்கிட்டா நல்லது! முடிந்தால் கரிவேப்பிலையை பச்சையாக மென்று காலை வெறும் வயிற்றில் சாப்பிட முடி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்! என்னதான் வெளியில சரிபண்ணினாலும், உள்ளே சரி பண்ணாட்டி நிரந்தரமான தீர்வு கிடைக்காதே!

குட்டன் said...

நல்லது நடந்தாச் சரி!

சிட்டுக்குருவி said...

ஹா ஹா ஹா

irfan said...

மிக்க பயனுள்ள் பதிவு..ஆனல் முதல் எட்டு நாள் நீங்கள் குறிபிட்ட தலையின் மேல் தோல் பகுதி எதுன்னு சொன்னா இன்னும் தெளிவா இருக்கும்...????முதல் எட்டு நாள் முடியில் தேய்க்க கூடாதா?இரவு தேச்சிட்டு காலையில் குளித்தால் போதுமா>?தயவு செய்து விள்கம் தரவும்...நன்றி....

irfan said...

மிக்க பயனுள்ள் பதிவு..ஆனல் முதல் எட்டு நாள் நீங்கள் குறிபிட்ட தலையின் மேல் தோல் பகுதி எதுன்னு சொன்னா இன்னும் தெளிவா இருக்கும்...????முதல் எட்டு நாள் முடியில் தேய்க்க கூடாதா?இரவு தேச்சிட்டு காலையில் குளித்தால் போதுமா>?தயவு செய்து விள்கம் தரவும்...நன்றி....

irfan said...

நல்ல பதிவு நண்பரே...ஆனல் எனக்கு சில சந்தேகம்..நீங்க்ள் சொன்னது போல் முதல் 8 நாள் வரையில், இந்துலேகா பிரிங்காவை முந்தையநாள் தலையின் மேல் தோல் பகுதியில் தடவி மறுநாள் காலையில்தான் கழுவவேண்டும்....

தலையின் மேல் தோல் பகுதி இது எந்த இடம் என்று எனக்கு சரியா புரியல..கொஞ்சம் தெளிவா சொல்லுங்க...அதே போல இரவு தலையில தேச்சிட்டு கலையில் குளிக்கும் போது சாம்பு பயன்படுத்தலாம?இதனால் எதும் பிரச்சனை வருமா?தயவு செய்து கூறவும்...

Post a Comment