Pages

Wednesday, January 9, 2013

ஆண்களும் அருமையான சிக்கன்கறி சமைக்கலாம் வாங்க.

            என்ன பார்க்கிறிங்க, அட ஆமாங்க நம்ம பொண்ணுங்ககிட்ட நல்லா வாய்க்கு ருசியா சிக்கன் கறி சமைத்துகொடு மிளகு கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்னு சொன்னா, என்னவோ திரும்பவும் வரதட்சினை கேட்டமாதிரி அப்படி மேல கீழ பார்க்கிறார்கள். இது மட்டும் இல்லைங்க, ரொம்ப சலிப்பா சொல்லுவாங்க பாருங்க ஒரு "டயலாக்" கேசட்டில் ரீவைண்ட் போட்ட மாதிரி  அதை கேட்டால் மனுஷனுக்கு சிக்கனே இனி சாப்பிடவேண்டாம் என்று தோணும். "உங்களுக்கு காரம் அதிகமா போட்டு அப்படியே வறுவல் செய்யனும்னு சொல்வீங்க,   உங்க பையனுக்கு காரமே இருக்ககூடாது, உங்க அப்பாவுக்கு கிரேவி அதிகமா இருக்கனும் அதுவும் சாம்பார் மாதிரி, இப்படி ஆளுக்கொரு விதமா சமைக்க என்னால முடியாதுப்பா என்று சொல்லி வாயை அடிசிடுறாங்க. என்ன கொடுமை சார் இது! ஒரு மனுஷன் வாய்க்கு ருசியா சிக்கன்கறி கேட்டா தப்பாயா??? இதுக்காக வேற பொண்டாட்டியா கட்டிக்க முடியும்.

          நம்ம நண்பர்கள் ஏன் அதிகமா ஓட்டல் பக்கம் போகிறார்கள் என்று இப்ப புரிந்திருக்கும் என்று நினைக்கறேன்.ஒரு நாளைக்காவது வாய்க்கு ருசியா சாப்பிடலாம் என்றுதான். எனக்கு என்னவோ ஓட்டலில் செய்வது நம்ம பொண்ணுங்க செய்வதைவிட ரொம்ப கொடுமையா இருக்கும். அதனால்தாங்க இப்ப நானே சமைக்க இறங்கிட்டேன். வாங்க நீங்களும் எல்லோரும் சேர்ந்து ஒரு அருமையான சிக்கன்கறி சமைக்கலாம்.

      "ஹலோ! ஹலோ! யாருப்பா அங்க பொண்ணுங்க கூட்டம் ஆணுங்களுக்கு வாசாப்பு விடுறது. கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும்." ரொம்ப பொறாமை பிடிச்சவங்களா இருப்பாங்க போலிருக்கு!, எங்க நாம நல்லா சமைக்க கத்துக்கிட்டா இவங்களை மதிக்காம போய்டுவமோ என்ற பொறாமையா  இருக்கும்.  ஹா ஹா ஹா !

           சரி சரி வாங்க  நண்பர்களே இப்போது நமக்கு பிடித்த அருமையான காரசாரமான சிக்கன் கறி சமைப்பது எப்படி என்று பார்ப்போம். சில சமையம் நம்ம நண்பர்கள் சிக்கன் எது? மட்டன் எது? என்று தெரியாமல் சொதப்பிடுவாங்க, அதுக்காக படத்துடன் விளக்குகிறேன். ( இந்த பொண்ணுங்க நம்மளை பார்த்து சிரிக்ககூடாது என்பதற்காகவும்தாங்க ) எனக்கு இப்படி அனுபவம் இருக்கு அதும் ஒரு கூட்டமா வந்து கை தட்டி சிரிச்சாங்க, போதாதற்கு அவங்களோட நண்பர்களுக்கெல்லாம் போன் போட்டு சொல்லி சொல்லி சிரிச்சாங்க, என்னைப்போல நீங்களும்கேலிகூத்தாகிட கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கம் எல்லாம், கவனாமா படிச்சி தெரிஞ்சிக்கிங்க சொல்லிட்டேன்.

தேவையான பொருட்கள்.

சிக்கன் : 1 கிலோ(கடைக்காரனிடம் ஒரு அஞ்சோ பத்தோ கூடுதல் கொடுத்து லெக் பீஸா கேட்டு வாங்கிடுங்க)

பெரியவெங்காயம் : 4 (சின்ன வெங்காயம் வேண்டாம் நண்பர்களே, சிரமம் அதிகம், வெங்காயம் வெட்டும்போது அழுது தொலைச்சிடாதிங்க அப்பறம் மானம் கப்பல் ஏறிடும். தம்கட்டி அழாம நீளவாக்குல வெட்டு வச்சிடுங்க)

பச்சைமிளகாய் : 4 அல்லது 5 (பொண்ணுங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் வேண்டாம் அதனால் நடுவுல கீறி ரெண்டா வெட்டிடுங்க போதும்)

பூண்டு : 1 கட்டி. (இதுதாங்க ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலை, வீட்டில வேடிக்கை பார்த்துகிட்டு யாராவது இருந்தால் அவங்ககிட்ட கொடுத்து உரிக்க சொல்லிடுங்க, பிறகு எப்படியாவது கட் பண்ணிடுங்க.)
இஞ்சி : 1 ஒரு எலுமிச்சம் பழம் அளவு. (தோல் நீக்கிவிட்டு குறுக்க நறுக்க நறுக்கி வைக்கவும்.)
தக்காளி : 2 (கொஞ்சம் சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும், இதுக்கு யார் உதவியும் தேவையில்லை, அப்படியே பக்கத்தில் யாராவது இருந்தால் செம பார்வை ஒன்னு பார்த்துக்கோங்க)
கறிவேப்பிலை : தேவையான அளவு. (இதுதான் நிறைய இருக்கிறது என்று ஒரு மரத்து இலையையே போட்டுடாதிங்க, )
இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், மிளகு : எல்லாத்திலும் 3 எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ளவும். (கவனமா இருங்க அதிக போட்டுவிட்டால் வாயில் வைக்க முடியாது அவ்ளோ காரமா இருக்கும்.)
கொத்தமல்லி இலை : சிறிதளவு (நம்ம சமையலின் கலர் கொஞ்சம் முன்ன-பின்ன இருந்தால் கடைசியில் இதை வெட்டிப்போட்டு சாமாளித்துவிடலாம்)
மசாலாதூள் : 50 கிராம். (இதை எங்க போய் வாங்குவது என்று நினைத்து ஏதாவது சிலதை எடுத்து அரைக்க தொடங்கிடாதிங்க, கடைசியில நம்மளை கவுத்துடும் ஜாக்கிரதை!)
இதை எப்பவும் ஒரு பாக்கெட் வாங்கி வீட்டில் வச்சிக்கோங்க, சமயத்தில் கை கொடுக்கும். கலர் நல்லாயிருக்கணும் என்றால் காஷ்மீரி மிளகாய்த்தூள் கொஞ்சம் வாங்கி வச்சிக்கோங்க, இந்த ரகசியம் எல்லாம் நமக்குள்ளவே இருக்கட்டும் வெளியில சொல்லிடாதிங்க.

பட்டர் அல்லது நெய் : கொஞ்சம் (இதுவும் ரகசியமாக இருக்கட்டும், காரம் அதிகமாக தெரிந்தால் ஒரு எலுமிச்சம்பழத்தை சிறிதளவு பிழிந்து விடவும்.)
எண்ணெய் : தேவையான அளவு.(கவனம் கொஞ்சம் போதும் ஏன் என்றால் நாம கடைசியில் பட்டர் சேர்ப்போம் அதுமட்டுமில்லாமல் சிக்கனிலும் எண்ணெய் இருக்கும். சூரியகாந்தி எண்ணெய் வாங்கிக்கோங்க, அதுதான் நம்ம சமையலுக்கு வலு சேர்க்கும்.)
யாரும் போயி சூரியனிடம் கேட்ககூடாது என்பதற்காகத்தான் படத்தோடு இணைத்துள்ளேன்.

உப்பு தேவையான அளவு,மஞ்சள்தூள், மிளகுதூள் கொஞ்சம் கொஞ்சம். சுவை கூடுவதற்காக சிக்கன் மசாலாவை வறுத்து எடுக்கவும், அதாவது தனியாக ஒரு குட்டி வானலில் உப்பு , மஞ்சள்ப்பொடி,மிளகுப்பொடி மற்றும் சிக்கன் மசாலாவையும் சேர்த்து சிறிய சூட்டில் லைட்டா வறுத்தெடுக்கவும்.

இவ்ளோதான் தேவையான பொருட்கள், பாத்திரம் அடுப்பு எல்லாம் தேவையில்லையா என்று கேக்கப்பிடாது ஆமா. அவ்வளவுக்கு நம்ம ஆளுங்க விபரம் இல்லாதவர்கள் இல்லை என்பதால் சொல்லாமால் போறேன். ஒரு முக்கியமான விஷயம் இதையெல்லாம் எடுத்து வச்சிட்டு அப்படியே காத்து வாங்க போறமாதிரி வெளியில போயி மொபைல்ல கடலை போடுங்க, அப்படியே ஏமார்ந்த பொண்ணுங்க யாராவது கிடைச்சா சமையலில் ஏதாவது டவுட்டு இருத்தால் விஷயத்தை கேட்டு கறந்துக்கோங்க, இதெல்லாம் ரகசியமாகவே இருக்கணும் சொல்லிட்டேன். எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் வலிக்காத மாதிரியே நடிக்கணும் ஆமா....

செய்முறை :

        ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைக்கவும். அதில் சிறிதளவு எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் இலவங்கப்பட்டை, கிராம்பு , மிளகு, ஏலக்காய், பெருஞ்சீரகம் அனைத்தையும் சேர்க்கவும். கொஞ்சம் பொன்னிரத்திற்கு மாறியதும் அதில் நறுக்கு வைத்திருக்கும் பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தையும் சேர்க்கவும். வெங்காயம் வனங்கியதும் அதில் நறுக்கு வைத்திருக்கும் சிக்கனை சேர்க்கவும் சிறிய தீயில் வைத்து வேக வைக்கவும்.எண்ணெய் மற்றும் சிக்கனில் உள்ள கொழுப்பில் உள்ள எண்ணையில் வேகும்.

      இஞ்சி பூண்டை மிக்ஸ்யில் போட்டு அரைத்தெடுக்கவும், இப்போது இதையும் சேர்த்து வேக வைக்கவும். இப்ப பாருங்க நல்ல ஒரு வாசனை வரும் . அப்படியே அக்கம் பக்கம் ஒரு பார்வை பார்த்துக்கோங்க, நம்ம சமையல் வாசனையை யாராவது மோப்பம் பிடிக்கிறார்களா என்று. தக்காளி மற்றும் கறிவேப்பிலையையும் சேர்த்து வனக்கவும். எண்ணெய் பதம் குறைவாக இருந்தால் கொஞ்சம் பட்டர் அல்லது நெய் விட்டு வனக்கவும்.

        இப்போது பாருங்க சிக்கன் நன்றாக வெந்திருக்கும் அதனுடன் வறுத்து வைத்திருக்கும் மசாலா கலவையையும் சேர்க்கவும். சிறிய சூட்டில் இரண்டு மூன்று நிமிடம் வேகவைத்து இறக்கிவிடவும். இவ்ளோதாங்க சுவையான சிக்கன்கறி ரெடி. இதுக்குதாங்க இந்த பொண்ணுங்களெல்லாம் ஓவரா சீன் போடுதுங்க....:-))).
         தண்ணீர் சேர்க்காமல் செய்ததால் இப்படிதான் கொஞ்சம் வறுவல் மாதிரி இருக்கும். சப்பாத்தி, புரோட்டா, சாதம் என்று எதனுடன் வேண்டும் என்றாலும் சேர்த்து சாப்பிடலாம். கடைசியில் இதுபோல் பாத்திரத்தில் தனியாக எடுத்து அதன்மேல் கொத்தமல்லி இலையை போடவும்.

சரி நண்பர்களே எல்லோரும் சிக்கன்கறி செய்ய கத்துகிட்டிங்களா? சபாஷ்! இனி யாரு தயவும் இல்லாமல் வாய்க்கு ருசியான சிக்கன் சமைத்து சாப்பிடவும்.

(என்னை திட்டி தீர்த்தவர்கள் அனைவருக்கும் நன்றி.)
*********************************************************************************

23 கருத்துகள்:

பழனி.கந்தசாமி said...

அருமை.

சேக்கனா M. நிஜாம் said...

ஆஹா பசியைத் தூண்டும் பதிவு !

Anonymous said...

பங்காளி கடைசி வரைக்கும் உப்பு போடவே இல்லியே..? இதுதான் உங்க டக்கா ?..

Anonymous said...

Unkakittathan Sambar kathukitten.. Ippa Chicken Curryum oralavu purinchikitten.. Seekirame try pannittu taste epadinnu unkalukku solren..! Nice..

குட்டன் said...

எனக்குச் சிக்கனும் தெரியாது,கிச்சனும் புரியாது!
கரும்புப் பொங்கல் வாழ்த்துகள்

வேகநரி said...

சாப்பாட்டு பதிவு என்றால் வந்துடுவோம்.பொங்கல் வாழ்த்துகள்.

Harry Rushanth said...

அட

semmalai akash said...

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க...

உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

semmalai akash said...

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க...

உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

semmalai akash said...

ஹா ஹா ஹா என்னங்க, இதைகூடவா நான் சொல்லி கொடுக்கணும், பாருங்க மசாலா வருக்கும்போது உப்பு சேர்த்திருக்கிறேன். தேவையான அளவு நீங்களே போட்டுக்கவும்.:-)


உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

semmalai akash said...

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க...

உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

semmalai akash said...

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க...

உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

semmalai akash said...

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க...

உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

semmalai akash said...

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க...

உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

தி.தமிழ் இளங்கோ said...

அசைவத்தில் நான் மீன் மட்டும்தான் சாப்பிடுவேன். மீன் வறுவல் எப்படி செய்வது என்று ஒரு பதிவு போடுங்கள். எனது உளங் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

விமலன் said...

நல்ல ரெசிபி.வாழ்த்துக்கள்.

Suresh Kumar said...

எல்லாத்துக்கும் படம் போட்டீங்க பாருங்க.... அங்கதான் நிக்கிறீங்க நீங்க !! நீங்க சொன்னது எல்லாத்தையும் செய்ஞ்சேன்..... ஆனா அடுப்பை பற்ற வைக்க சொல்லலியே !!

ஹைதர் அலி said...

காரத்தோடு கலகலப்பு குறையாத சமையல் அசத்தல் பதிவு
இன்றுதான் உங்கள் வலைப்பதிவு பார்க்கிறேன்

தங்கம் பழனி said...

அருமை..

(எனக்கு சாப்பிட மட்டுமே தெரியும்..ஹி..ஹி..)

thamilselvi said...

நன்று..............

வாடா மலர் said...

ஆஹா .. அசத்தல் பதிவு.. . அருமை..

naagar vamsam said...

படங்களுடன் நீங்கள் விளக்குவது மிகவும் உதவியாக இருக்கின்றது . மசாலா போன்றவையின் அளவு எவ்வளவு சேர்க்க வேண்டும் என்று சொல்லிட்டா இன்னும் சிறப்பா இருக்கும் உதாரணத்துக்கு நீங்க ஒரு கிலோ கோழி கறி எடுத்திருந்தால் இவ்வளோ மாசால என்று அளவு சொல்லிடுங்க புண்ணியமா போகும்

naagar vamsam said...

படங்களுடன் நீங்கள் விளக்கி இருப்பது மிகவும் அருமை , மசாலா அளவு எவ்வளவு சேர்க்க வேண்டும் என்று உதாரணம் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
( உதாரனத்திற்க்கு 1 கிலோ கோழி எடுத்தால் இவ்வளவு மசாலா சேர்க்க வேண்டும் ) எழுத்து பிழைகள் அதிகம் உண்டு வரும் காலங்களில் அவைகளை தவிர்க்க பாருங்கள் ,இது போன்று மேலும் உங்கள் சேவை ஆண்களுக்கு தேவை வாழ்த்துக்கள்

Post a Comment