Pages

Friday, January 4, 2013

என்னவோ தெரியவில்லை வாழ்க்கையே வெறுமையாக தோன்றுகிறது.


           என்னவோ தெரியவில்லை வாழ்க்கையே வெறுமையாக தோன்றுகிறது, ஒவ்வொருநாளும் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் மனது என்னவோன்னு இருக்கிறது, ஒரு காரணமும் புரியவில்லை. எதையோ யோசித்துக்கொண்டு ரொம்ப தூரம் போகிறேன் அங்கு சென்றுதான் யோசிக்கிறேன் ஆமாம் இங்கு எதற்கு வந்தோம் காரணம் புரியாமல் திகைக்கிறேன். 

          சிலநேரம் மனத வாழ்க்கையை நினைத்து சந்தோசபட்டாலும், பலநேரம் வெறுக்கிறேன். என்ன வாழ்க்கை இது என்று தோன்றுகிறது. எத்தினை எத்தினையோ பேர் சொல்லிருக்கிரார்கள் வாழ்க்கையை அப்படி வாழனும், இப்படி வாழ கத்துக்கணும்னு என்று சொல்லிருந்தாலும் இது எல்லாமே அவரவர்களுடைய அனுபவமா இருக்குமா? அல்லது அவர்களின் மனதில் தோன்றிய எண்ணமா இருக்குமா? தெரியவில்லை, ஆனால் கேட்க நல்லாருக்கு, சபாஷ் என்று கை தட்டுகிறோம்  என்னாமா எழுதிருக்கார் என்று ஆச்சரியப்படுகிறோம். ஆனால் அதே நமது வாழ்க்கையில் நேரும்போது அவர்கள் சொன்னதெல்லாம் என்னவோ ஒத்துபோகவில்லை, காரணம் கேட்டாலும் தெரியவில்லை.

"  வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில் "

       காலையில்  இருந்து இந்த பாடலை ஆயிரம் முறை பாடிருப்பேன். மனதில் ஏதாவது மாற்றம் வருகிறதா என்பதற்காகவே ஆனால் இதுவரை ஒரு மாற்றமும் இல்லை என்பதே உண்மை. பல நண்பர்களிடம் இதை பகிர்ந்துள்ளேன் என்ன செய்வது என்றும் கேட்டேன். சிலர் சொன்னார்கள் விடாத வேலை, தூக்கம் குறைவு, இதனால் டென்சன் இருக்கலாம் நல்லா தூங்குங்க எல்லாம் சரியாகிடும் என்று சொன்னார்கள். ஒரு சிலர் இந்த வயதில் இப்படி தோன்றுவதனால்தான் எல்லோரும் "மது" அருந்துகிறார்கள், போதையில் எதையும் யோசிக்காமல் நிம்மதியாக தூங்கலாம், நிறைய பேர் அடிக்கடி "சிகரெட்" அடிக்கிறார்கள் எதனால் தெரியுமா? இப்படி பலவற்றை யோசித்து யோசித்து வரும் டென்சனால்தான் என்றார்.
       எனக்கு என்னவோ இது சரியாக தெரியவில்லை, இதெல்லாம் ஒரு பழக்கம் அதுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை, அவர்கள் செய்யும் தீய பழக்க வழக்கங்களுக்கு சொல்லும் "நியாங்களாகவே" தெரிகிறது. மது அருந்தியவர்கள்தான் சில பல கொடூரமான வேலைகளை செய்துள்ளார்கள் என்பதும், விபத்துகளை ஏற்படுத்திருக்கிரார்கள் என்பதும் நாம் தினம் தினம் பார்க்கிறோம் படிக்கிறோம். அதனால் இது கண்டிப்பாக சரியான தீர்வாக இருக்காது என்று உணர்ந்து இது எனக்கு சரிப்பட்டுவராது என்று சொல்லிவிட்டேன்.

 இதையெல்லாம் எனதுமனைவியிடம் சொன்னதும் திட்ட ஆரம்பித்துவிட்டார். இது எல்லாம் எங்க நினைப்புதான். குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்டு ரசிக்காமல் போகிறதே என்கிற ஏக்கமாக இருக்கும். நமக்கு உள்ளது போதும், அதிகமாக எதுவும் வேண்டாம்   சீக்கிரம் இங்க வந்துடுங்க நாம எப்படியாவது பிழைத்துக்கொள்ளலாம் என்று அழ ஆரம்பித்துவிட்டார்.

         வேறு ஒரு நண்பரிடம் சொன்னேன், அவர் சொன்ன முதல் பதில் இதெல்லாம், நாம் ஒன்றின்மேல் அதிக ஆர்வம் கொண்டும், அடைந்தே தீரவேண்டும் என்று ஆசைப்பட்டும், மிகுந்த எதிர்பார்ப்புடம் இருக்கும்போது அது நமக்கு கிடைக்காமல் போய்விடும்போது இப்படி தோன்றும் என்று சொன்னார். அப்படி ஒன்றும் இல்லை என்று சொன்னதும் காதல் தோல்வியா என்றும், கடன் பிரச்சினையா என்றும் பல கேள்விகள் கேட்டார். இது எதுவும் பெரிதாக இல்லை என்றாலும் அவ்வப்போது சமாளிக்கும் அளவே உள்ளது இதனால் இப்படி தோன்றுவது என்பது சாத்தியம் இல்லை என்று நினைத்தேன்.

          வேறு ஒரு தோழியுடன் கேட்டேன் அவரும் இதே கேள்விகளை தவறாமல் கேட்டார், கூடவே மேலும் இரு கேள்விகள். எல்லாத்துக்கும் காரணம் நீங்க உங்க குடும்பத்துடன் இல்லாததுதான், முதலில் உங்க குடும்பத்தை பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள் எல்லாம் சரியாகும் என்றார். நமக்குள்ள கஷ்டம் மட்டும்தான் பெரியது என்று நினைக்காமல் நம்மைவிட இன்னும் பல பிரச்சினைகளுடன் வாழ்பவர்களும் உண்டு என்பதையும் கொஞ்சம் யோசியுங்கள். ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பங்களும் இருக்கிறது, அவர்கள் எல்லாம் இப்படி சிந்தித்தால் உலகின் நிலைமையை யோசித்துப்பாருங்கள் என்றார். சரியாயாக சொன்னார்கள் யோசித்துதான் பார்க்கவேண்டும். இப்பொழுது முடியாத சூழ்நிலை..

        இதனைத் தொடர்ந்து எனது நண்பர் குடும்பத்திற்கு போன் செய்து விஷயங்களை பகிர்ந்துக்கொண்டேன். அவர்கள் சொன்ன பதில் "டேய்" இதெல்லாம் ஒரு மேட்டரா, என்னிடம் சொல்லிட்ட இல்ல கவலையை விடு, எது வந்தாலும் நாங்க இருக்கிறோம். வாழ்வோ சாவோ எல்லோரும் சேர்ந்தே எதிர்கொள்வோம், எதுவாக இருந்தாலும் சமாளிக்கலாம் கவலையை விடு நிம்மதியாக தூங்கு காலையில் நேரில் வருகிறேன். எல்லாவற்றிற்கும் தீர்வு இருக்கிறது. அது எது என்று கண்டு பிடிக்கலாம் என்று நம்பிக்கை வார்த்தைகளை சொன்னார். தொடர்ந்து அவரது மனைவி இப்படி வரும் சூழ்நிலையில் இடம் மாறி தங்கி இருப்பது நல்லது, இன்னைக்கு பாருங்க சரியாகவில்லை என்றால் ஒரு வாரம் எங்ககூட வந்து தங்கிக்கோங்கஎன்று சொன்னார்கள். சில வார்த்தைகள் என் மனதில் நீர் ஊற்றியதைப்போல் இருந்தது. அதோடு வந்து தூங்கிவிட்டேன்.

        காலையில் எழுந்தேன் ஏதோ ஒரு சிறிய மாற்றம் இருந்தது. நண்பரின் நம்பிக்கை வார்த்தையில் மட்டும் இல்லை நேரிலும் வந்தார், தோலில் கைபோட்டு என்னடா ஆச்சி உனக்கு என்று அன்போடு விசாரித்தார். நண்பரின் மனைவியும் நம்மைப்போல உள்ளவர்களுக்கு நாமதாங்க ஒருவருக்கு ஒருவர் ஆதரவு ,ஏன் இப்படி இருக்கீங்க வாங்க எங்ககூட தங்கிங்க என் பையன்கூட விளையாடுபோது எல்லாம் மறந்துபோகும் என்று சொன்னாங்க, ஒண்ணுமே தெரியாத அந்த பையன் "மாமா" எனக்கு ஒரு புதிய கிப்ட் வாங்கி கொடுத்திருக்கார் அப்பா, நீங்க இதுவரை பார்க்கவில்லையே வாங்க வீட்டுக்கு போகலாம் என்று அழைத்ததும் எல்லாம் பறந்து போச்சிங்க...

      பாருங்க நண்பர்களே நம்பிக்கையும், மருந்தும் எங்கிருந்து கிடைக்கிறது என்று, போலி வாழ்க்கை போலி நம்பிக்கையை எல்லாம் மறந்துவிட்டு, மனிதனுக்கு மனிதன்தான் ஆதரவு என்று வாழுங்கள். நண்பர்களுக்கு கவலையும் குழப்பமும் வரும்போது அறிவுரைகள் ஒரு பொழுதும் மருந்தாகாது, மாறாக நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும், தொட்டுபேசும் உணர்வும், கட்டியணைத்து பேசும் விளையாட்டான வார்த்தைகளுமே போதுமானது. 

இது ஒரு சாதாரண பதிவாக இப்போது தோன்றலாம் என்னுடைய இந்த நிலைமை வருபோது உங்களுக்கும் ஊக்கமாக இருக்கும்.

*********************************நன்றி, மீண்டும் சந்திப்போம்.****************************

38 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி said...

போலி வாழ்க்கை போலி நம்பிக்கையை எல்லாம் மறந்துவிட்டு, மனிதனுக்கு மனிதன்தான் ஆதரவு என்று வாழுங்கள். நண்பர்களுக்கு கவலையும் குழப்பமும் வரும்போது அறிவுரைகள் ஒரு பொழுதும் மருந்தாகாது, மாறாக நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும், தொட்டுபேசும் உணர்வும், கட்டியணைத்து பேசும் விளையாட்டான வார்த்தைகளுமே போதுமானது.

ஊக்கமும் உற்சாகமும் ததும்பும்
அருமையான அனுபவ வரிகள்..

புலவர் சா இராமாநுசம் said...

தங்கள் பதிவு உண்மை நிகழ்வு என்றால் மேலும் குழப்பம் வேண்டாம்!தங்களின நண்பர் சொல்வழி செல்லல் நன்று !

s suresh said...

உண்மைதான்! நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் உற்சாகமூட்டும் டானிக்! அருமையான பகிர்வு! நன்றி!

T.N.MURALIDHARAN said...

சில நேரங்களில் வெறுமை ஏற்படுவது இயற்கைதான்.உங்கள் தோழி சொன்னதுதான் சரியாக இருக்கக் கூடும்.அனைத்தயும் புறம் தள்ளுங்கள்.
உற்சாகமாக இருங்கள். நல்லதே நடக்கும்.

King Raj said...

வாழ்க்கையில் இப்படி ஒரு வெறுமை, ஒரு கால கட்டத்தில் எல்லோருக்கும் தோன்றும்...அதையெல்லாம் விரட்டத்தான் நண்பர்களும்,குழந்தைகளையும் படைத்தானோ இறைவன்.என்று நினைக்க தோன்றுகிறது...நல்ல பதிவு ....வாழ்த்துக்கள்.!!!....

அருணா செல்வம் said...

நல்ல பகிர்வு நட்பே.
எனக்குக்கூட இப்படி தோன்றி இருக்கிறது.
இதற்கு காரணம் தனிமை தான் நம்மை பயமுறுத்துகிறது
என்பதைப் புரிந்து கொண்டேன்.
நம்மிடம் பெசுவதற்கு யாருமே இல்லாதது போன்ற உணர்வு.
அது கொடுமையாக இருந்தது.
நல்ல வேலை வலையில் பதிவெழுதுவதைக் கற்றுக்கொண்டேன்.
உண்மையில் நல்ல நண்பர்கள் தோழிகள் என்று கிடைத்தது மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நவில்தொறும் நுால்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. குறள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஃபிரெண்ட்.
த.ம. 3

கவியாழி கண்ணதாசன் said...

குழப்பம் தீர பாட்டு கேட்பதோடு மட்டுமின்றி நண்பரிடமும் பகிந்ததாலே மனபாரம் குறைந்திருக்கும் என்பதை உணர்ந்து அவரிடமும் அவரின் மனைவியிடமும் சொன்னதால் உங்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் வந்தது மகிழ்ச்சியே

Haja Mohaideen said...

நல்ல பதிவு ஆகாஷ்

குட்டன் said...

குடும்பத்தைப் பிரிந்து இருக்கையில் தனிமை கொல்லும்;நல்ல நண்பர்கள் அமைந்தால் நலம்;

Avargal Unmaigal said...

வாழ்க்கையில் இப்படிபட்ட ஒரு வெறுமை ஒரு கால கட்டத்தில் எல்லோருக்கும் வருவது உண்மை..அதிலும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு நிச்சயம் வரும் அதனால்தான் வசிக்கும் இடத்தில் நல்ல நண்பர்களை பெற வேண்டும். அவர்களை உங்கள் இல்லத்திற்கு அழைக்க வேண்டும் அல்லது நீங்கள் அவர்கள் இல்லத்திற்கு செல்ல வேண்டும் அல்லது ஒரு நாள் நீங்கள் லீவு எடுத்து வேறுபகுதிக்கு சென்று வர வேண்டும் வாருங்கள். அல்லது தினமும் வேலைக்கு போகும் அல்லது வரும் வழியை தவிர்த்து புதிய வழியாக சென்று வர வேண்டும் தினமும் காரில் சென்றால் மாறுதலுக்காக பஸ் அல்லது ரயிலில் செல்ல வேண்டும்.

எனக்கு இப்படிபட்ட நிலமை தோன்ருவதுண்டு அதனால்தான் வார இறுதியில் அட்லீஸ்ட் ஒரு குடும்பத்தையாவது எனது இல்லத்திறகு அழைத்துவிடுவேன் இல்லையென்றால் நண்பர்கள் வீட்டில் இருந்து எனக்கு அழைப்பு இருக்கும். அப்படி இல்லையெனில் அந்த வாரம் எதோ இழந்த மாதிரி பீலிங்க் வந்து விடும்.

நமது மனைதை திருப்புவதற்கு இப்போது வலைதளம் நம்மொடம் இருக்கிறது அதனால் கவலைப்படாமல் வாழுங்கள் நண்பரே, வாழ்க வளமுடன்

Ranjani Narayanan said...

எவ்வளவுதான் நண்பர்கள் இருந்தாலும் இந்தத் தனிமை மாறாது. உங்களைபோலத் தான் உங்கள் மனைவியும் தனிமையில் இருப்பார்கள். கூடிய சீக்கிரம் குடும்பத்துடன் சேர்ந்திருக்க வழிதேடுங்கள். குழந்தையின் விளையாட்டை இப்போது ரசிக்காமல் எப்போது ரசிப்பீர்கள்?

சீக்கிரமே எல்லோரும் சேர்ந்திருக்கும் காலம் வர வாழ்த்துக்கள்.

Sasi Kala said...

தங்கள் மனநிலையில் தான் தற்போது நானும் இருக்கிறேன். எதனால் எப்படி என்ற காரணம் விளங்கவில்லை.

இராஜராஜேஸ்வரி said...


வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..
http://blogintamil.blogspot.in/2013/01/6.html

semmalai akash said...

ரொம்ப நன்றிங்க..

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க..

semmalai akash said...

சரிங்க ஐயா.


தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க..

semmalai akash said...

ஆமாம் நண்பரே!


தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க..

semmalai akash said...

ஆமாங்க, கண்டிப்பாக சரியாதான் சொன்னாங்க..


தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க..

semmalai akash said...

சரி நண்பா.

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க..

semmalai akash said...

ஆமாம் நண்பரே!

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க..

semmalai akash said...

ஆமாம் ஐயா.

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க..

semmalai akash said...

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க..

semmalai akash said...

ஆமாம் நண்பா.

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க..

semmalai akash said...

ஆஹா! அப்படியா சகோ!

மனசு சரியில்லாததால் இந்த ஐந்து நாட்களாக யாருடைய வலைப்பதிவு பக்கமும் போகவில்லை,படிக்கவேண்டியது நிறைய கிடக்கிறது. தெரியப்படுத்தியதர்க்கு மிக்க நன்றி சகோ!

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க..

semmalai akash said...

அச்சச்சோ!

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க..

semmalai akash said...

ஆமாங்க அம்மா, அதுக்குதான் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

semmalai akash said...

ஆமாம் நண்பா, தனிமைதான் எல்லாத்துக்கும் காரணம், நீங்களும் சீக்கிரம் குடும்பத்துடன் வந்து சேருங்க..நானும் அதைதான் முயற்சி செய்கிறேன்.ரொம்ப நன்றி நண்பா ஆருதலாக இருக்கிறது.


தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க..

Anonymous said...

I feel this many times. You are right. A kind word,a hug can take you out of the wold.
Listen music. That what i do. Be happy. Life is short.

Jayadev Das said...

யப்பா அந்த டபுள் கண்ணு வச்ச பொண்ணு படத்தை பார்த்து மிரண்டு போயிட்டேன். அந்தப் படம் கண்ணை ரொம்ப strain பண்றது. ஏற்கனவே கண்ணு டாக்டர்கிட்ட போய்கிட்டு இருக்கேன், இதையெல்லாம் போட்டு மிரட்டாதீங்கப்பு.........

மாற்றுப்பார்வை said...

பயனுள்ள தகவல்கள்

சேக்கனா M. நிஜாம் said...

மன நிலை சார்ந்த பதிவு !

அருமை ! தொடர வாழ்த்துகள்...

SENTHIL KUMAR said...

நன்றி நண்பரே .....கிட்டத்தட்ட நானும் இந்த நிலையில் தான் இருக்கிறேன்,ஆம் தூக்கம் இல்லாமல் இந்த நேரத்தில் உங்களுக்கு பின்னுட்டம் போடும் போதே தெரிகிறதா.சரியான தீர்வாக எனக்கும் அமையும் என்று நினைக்கிறன்.இதை முயற்சி செய்து பார்கிறேன்

semmalai akash said...

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க...

semmalai akash said...

இந்த அளவுக்கு நானும் குழம்பி கிடக்கிறேன் நண்பரே! அதனால்தான் இணைத்தேன், இனி கவனமாக இருக்கிறேன்.

semmalai akash said...

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க...

semmalai akash said...

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க...

semmalai akash said...

அப்படியா நண்பரே! ஒரே மன நிலையில்தான் யோசிக்கிறோம்.

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க...

வாடா மலர் said...

நல்ல பதிவு ஆகாஷ்..தனிமை என்பது நம் மனதை பொறுத்தது நாம் தான் அதை வெல்ல வேண்டும்

Anonymous said...

ஒன்றை தேடும் போது ஒன்றை இழப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது நண்பா.முடிந்த வரை போராடி தன் பார்க்க வேண்டும்.என்ன இதில் நீங்கள் மட்டும் தனியாக இல்லை,இதோ நானும்

Post a Comment