Pages

Thursday, January 17, 2013

அலெக்ஸ் பாண்டியன்: அதிர்ச்சியை தந்தது!


        சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் மற்றும்பலர் நடித்து பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளிவந்த படம்தான் "அலெக்ஸ் பாண்டியன்" தேவிஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும் ஆட்டம் போட வைத்தது நம்மளை இல்லை , மூன்று கதாநாயகிகளுடன் கார்த்தியை.


       படம் ஆரம்பித்ததும் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இது சினிமாதான் என்றாலும் நம்ப முடியாத சண்டைக் கட்சி, அதுவும் ஓடும் ரயிலில் பறந்து பறந்து அடிப்பது கொஞ்சம்கூட பொருந்தவில்லை, ஏன் எதற்கு என்ற எதிர்பார்ப்புகள் இருந்தாலும் ஏனோ ஏமாற்றத்தைதான் கொடுத்தது. சரி இந்த சண்டைக் காட்சி முடிந்ததும் கதைக்கு போகலாம் என்று நினைத்தால், அங்கும் பெரிய குழப்பம்தான் வந்தது, சண்டைக் காட்சியில் கண்ட அனுஷ்காதான் கதாநாயகியா? அல்லது சந்தானத்தின் மூன்று தங்கைகளான நிகிதா, சனுஷா, அக்கான்ஷா'களில் ஒருவர்  கதாநாயகியா? என்ற குழப்பமும், பருத்திவீரன் படத்தில் "சித்தப்பவாக வந்த சரவணன் அரசியலில் பெரிய தாதாவாக காண்பித்து ஒரு கொலையும் செய்துவிட்டு ஜெயிலுக்கு போகிறார். அவர் தம்பிக்கு மொட்டை போடுகிறார் கார்த்தி, இதை கண்டதும் கதை அரசியல் பக்கம் திரும்புமா என்ற குழப்பமும் வந்தது. நல்லவிதமாக கதை திசைமாறிச் சென்றாலும், எதையோ சொல்லவந்துவிட்டு சொல்லாமல் போவதுபோல் தோன்றியது.

      சில காமெடிகள் குடும்பத்துடன் மட்டும் இல்லை தனியாக சென்று பார்த்தால்கூட ரசிக்கமுடியாத அந்தளவுக்கு ஆபாசமா முகம் சுழிக்க வைக்கிறது. அடிதடியில் துவங்கிய படம் அனுஷ்காவை கடத்திய பிறகு காட்டில் அமைதியானது. கொஞ்சம் வெறுப்பையும் கொடுத்தது.
இதையெல்லாம் இந்த காலத்து இளைஞர்கள் ரசிப்பார்கள் என்று நினைத்த இயக்குநர் கண்டிப்பாக ஒண்ணாங்கிளாஸ் படிக்கத்தான் வேண்டும்.

           திரைப்படத்தின கதையை முழுவதும் சொல்ல விருப்பம் இல்லை, இருந்தாலும் இந்த படத்தின் திரைக்கதை என்னவோ கதை துவங்கும்போதே முடிவும் தெரிந்துவிடுகிறது. கார்த்தி சொல்லும் அளவுக்கு சிறப்பாக நடிக்காதது அவரின் எதிர்காலத்தை பாதிக்கும், சகுனியில் வரும் அதே ஸ்டைல்தான். சண்டை காட்சிகள் மூலம்தான் படம் ஓடும் என்கிற நினைப்பை மாற்றவேண்டும்.

       அனுஷ்கா எதற்கு இந்த படத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார் என்றே தெரியவில்லை, தனது திறமையை வெளிப்படுத்த இந்த படத்தில் அவருக்கு ஒண்ணுமே இல்லை, கிளாமரை தவிர. மொத்தத்தில் படம் சொதப்பல். பாடல்களும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. கார்த்தி ஒரே ஸ்டைலில் நடிக்காமல், நடிப்பில் கொஞ்சம் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். இதுதான் ரசிகர்களின் எதிபார்ப்பாக இருக்கும்.

இந்த படத்தில் பாடல்களை கேட்கவும் தரவிறக்கம் செய்யவும்.


*****************************நன்றி, மீண்டும் சந்திப்போம்.******************************

0 கருத்துகள்:

Post a Comment