Pages

Saturday, September 22, 2012

VIDEO GIF அனிமேஷன் உருவாக்குவது எப்படி?

VIDEO GIF அனிமேஷன் உருவாக்குவது எப்படி?


 வணக்கம் நண்பர்களே! வருகைக்கு நன்றி.


 வாழ்க்கையில சந்தோஷம் ரொம்ப முக்கியங்க, வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்ன்னு பழமொழியில் கூட சொல்லிருக்காங்க. நாம் சிரிப்பதைவிட நண்பர்களை சிரிக்கவைத்து பார்ப்பதில் இருக்கும் சந்தோஷம் இருக்கே அடடா! அது ஒரு தனி சுகம்தாங்க... அப்படி கிடைக்கும் சந்தோஷத்தை வாழ்க்கையில மறக்கவே முடியாதுங்க, அந்த ஒரு காட்சி அடிக்கடி வந்து வந்து போகும்.  நகைச்சுவை  யாருக்குத்தான் பிடிக்காது, நண்பர்களிடம் நகைச்சுவையாக பேசி அனைவரையும் சிரிக்க வைக்க வேண்டுமா? சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கீங்க.

நாம் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருக்கும்போதும், அல்லது நண்பர்களுக்கு பின்னூட்டம் அளிக்கும் போதும், ரொம்ப ரசிக்கும்படியாக இருப்பதற்கு நாம் ஒரு வீடியோவை இணைத்தால் அதை பார்ப்பதற்கு நேரம் இருக்காது, ஆனால்  ஒரு வீடியோவை சிறியதாக GIF அனிமேஷன்  வடிவில்  மாற்றி நண்பர்கள் காணும்படி செய்யலாம், நண்பர்கள் மிகவும் ரசிப்பார்கள், அதற்கு ஒரு மென்பொருள் தேவைப்படுகிறது. அந்த மென்பொருளின் உதவியோடு நமக்கு பிடித்த நகைச்சுவை காட்சிகளை எளிதில் GIF வடிவில் மாற்றமுடியும், அதற்கு நாம் முதலில் செய்யவேண்டியது இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்துகொள்ளவேண்டும்  நமக்கு பிடித்த நகைச்சுவை  காட்சிகளை (Comedy scenes, Funny videos) YOUTUBE மூலமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சேமித்து வைத்திருக்கும் வீடியோவாக இருந்தாலும் போதும்.

சரி  வாங்க வீடியோ GIF உருவாக்கலாம். மென்பொருளை ஓபன் செய்து அதில் Browse Video அமுக்கி நாம் செய்யவேண்டிய வீடியோவை தேர்ந்தேடுத்துகொள்ளவும் படத்தில் உள்ளதைப்போல்...
 

அந்த விடியோவை  தனியாக ஓடவிட்டு பார்த்துக்கொள்ளவும் எந்த பகுதி நமக்கு GIF செய்யவேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டபிறகு (உதாரணம் 03:30 முதல் 03:34 வரை உள்ள வீடியோ காட்சி) என்று எடுத்துக்கொள்வோம் இதுபோல் உங்க வீடியோவில் உள்ள நிமிடங்கள் மற்றும் செகண்ட்களை  சேர்க்கவும் படத்தில் காண்க..


Height, Width அதில் உள்ளது போதும், தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளவும். Next என்பதை சொடுக்கவும் இப்போது படத்தில் உள்ளதுபோல் இருக்கும்.


Make Gif என்பதை சொடுக்கவும் அவ்ளோதாங்க GIF அனிமேஷன் ரெடி "Save"செய்து கொள்ளவும். 

இனிமே என்ன? சந்தர்ப்பம் சூழ்நிலையை கண்டுபிடித்து இந்த ஜிப் அனிமேஷனை பகிர்ந்து சிரித்து மகிழுங்கள்.

வந்தது வந்தீங்க, உங்களது அன்பான கருத்தக்களை பகிர்ந்துக்கலாமே!


உங்களுக்காக  சில GIF காட்சிகள்.

இந்த மாதிரி gif animation செய்ய முயற்சி செய்து முடியவில்லை என்றால் கணினிய போட்டு அடிக்காதிங்க அடிச்சா என்ன நடக்கும் தெரியுமா???






ஹா  ஹா ஹா!!! எல்லோரும் சந்தோஷமா சிரிச்சிகிட்டே பின் தொடருங்க ...நான் அடுத்த பதிவோடு வருகிறேன்.






21 கருத்துகள்:

Jaffer ALi said...

ஆகாசு ..அருமையான பதிவு..ரொம்ப நாளா தேடுனேன்..நன்றி

settaikkaran said...

ஆகாஷு! பின்னிப் பெடலெடுத்திட்டீங்க! இந்த மாதிரி என் மூஞ்சியை ஹாண்ட்ஸமாக் காட்ட ஏதாவது உத்தி இருந்தா சொல்லுங்க! உங்களுக்குப் புண்ணியமாப் போகும்! :-))

Unknown said...

பகிர்வுக்கு நன்றி ஆகாஷ்

semmalai akash said...

:-))
ரொம்ப சந்தோஷமா இருக்கு மாம்ஸ், உங்களுடைய இந்த வருகைக்கு மிக மிக நன்றி மாம்ஸ். எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்துக்கிறேன்.

semmalai akash said...

குரு வணக்கம் ஐயா,
உங்களுடைய இந்த வருகைதான் என்னுடைய இந்த பதிவுக்கு மிகப்பெரிய சிறப்பு.
நீங்க இப்பவே ஹீரோமாதிரிதான் இருக்கீங்க ஐயா!
உங்களுடைய இந்த உற்ச்சாகம் மேலும் என்னை இதுபோல் பல பதிவுகளை எழுத வைக்கும் என்பதில் சந்தேகமில்லை ஐயா.
நன்றி ஐயா.

semmalai akash said...

ஆஹா! ஆஹா! நண்பா வந்துட்டீங்களா? ரொம்ப சந்தோஷம் நண்பா . தாங்களுடைய இந்த வருகைக்கு மிக்க நன்றி நண்பா.

முனைவர் இரா.குணசீலன் said...

தேவையான பதிவு முயற்சிக்கிறேன் நண்பா.

semmalai akash said...

தாங்களுடைய வருகை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது நண்பரே! ஒரு இயல்பான வார்த்தையால் நண்பா என்றழைத்தது உங்களுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள் ரொம்ப ரொம்ப ஈஸி.

நன்றி நண்பா.

Anonymous said...

நண்பரே,
அருமை

மோரு said...

மேலும் நிறைய எழுதிகிட்டே இருங்க ஆகாஷ்...வாழ்த்துக்கள்

semmalai akash said...

ஆஹா! உங்க வருகை ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பா.
நன்றி நண்பா . கண்டிப்பா தொடர்ந்து எழுதுகிறேன்.

Avargal Unmaigal said...

இதைபற்றி தெரியாதவர்களுக்கு நன்கு புரியும்படி விளக்கி சொன்ன மிக எளிமையான பதிவு. வாழ்த்துக்கள்

semmalai akash said...

ஆஹா! ஆஹா! உங்க வருகை "வாவ்!" ரொம்ப சந்தோஷம், சந்தோஷம் ஐயா, இவனோட வலைப்பதிவில் என்ன எழுதிருக்க போறான் என்று இல்லாமல் தாங்கள் வந்தது மட்டுமில்லாமல் பின்னூட்டம் போட்டதும் ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஐயா. மிக்க நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எளிய விளக்கங்களுடன் பயன்மிகு பதிவு...

வாழ்த்துக்கள்..

Ahila said...

அருமையான பதிவுதான்....ரொம்ப நன்றி ஆகாஷ்....

semmalai akash said...

வாங்க வாங்க, உங்களுடைய வருகை ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. நான் இப்பதாங்க எழுத தொடங்கிருக்கேன், நீங்க அடிச்சி தூள் கிளப்புறீங்க.. அதான் நான் உங்களுடைய ப்ளாக் பாலோ பண்ண ஆரம்பிச்சிட்டேன்.

வருகைக்கு நன்றிங்க.

Muruganandan M.K. said...

அருமையான பதிவு.

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோதரரே மிகவும் அருமையான பகிர்வு .
மேலும் இதுபோன்ற தகவல்களை பகிர்ந்துகொள்ளுங்கள்
உங்கள் முயற்சிகள் வெற்றி பெற என் இனிய வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

semmalai akash said...

ரொம்ப நன்றி சகோதரரே..தாங்களுடைய வருகைக்கு நன்றி,

semmalai akash said...

ரொம்ப நன்றி சார்.

ஆர்.வி. ராஜி said...

பயனுள்ள தகவல். முயற்சி செய்து பார்க்கிறேன்.

Post a Comment