Pages

Wednesday, September 26, 2012

"என்ன வாழ்க்கைடா இது" பாகம் 4

              வணக்கம் நண்பர்களே! நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இதன் அடுத்த பாகத்தை தொடர்கிறேன், இவ்ளோ நாட்கள் பொறுமையாகக் காத்திருந்ததற்க்கு நன்றிகள் பல... இதன் முந்தைய பதிவை படிக்க இங்கே

ஏதோ ஒன்று கண்களால் காண... 
பொய் சொன்னேன் அவர் தூங்கிகிட்டு இருக்கார் எழுந்ததும் கூப்பிடுகிறேன் என்று ..
"ம்ம்ம்" என்று சொல்வதற்குள் போனை கட் செய்துவிட்டு வெளியே ஓடினேன் டாக்டர்ர்ர்ர்...

                                                                     பாகம் 4

அதிகாலை என்பதால் வெளியில் யாருமே இல்லை, ரிசப்ஷன்ல போய் கேட்டேன் அவர்கள் போன் செய்து டாக்டரை வரவைத்தார், அவர் வந்து பார்த்துவிட்டு இவருக்கு சீக்கிரம் ஆப்ரேஷன் செய்தாகவேண்டும் பணம் ஏற்பாடு செய்யுங்க என்று சொன்னார், நான் இதற்கு முன்பு உள்ள டாக்டரிடம் இதைப்பற்றி பேசியதையும் இவரை இன்று ஊருக்கு கொண்டு செல்வதாகவும் சொன்னேன் அவர் மறுத்துவிட்டார். உடனே செய்யவேண்டும் நீங்க இவருக்கு தம்பியா? அல்லது யார் என்று கேட்டார், நான் இவருடைய நண்பன் கொஞ்சம் நேரம் கொடுங்க நான் யோசித்து சொல்கிறேன் என்று அனுமதி பெற்றேன். 

எனக்கு  என்னசெய்வதென்றே புரியவில்லை, அங்குள்ள நர்ஸ் பெண்ணிடம் இதற்கு முன் சிகிச்சை அளித்த டாக்டரின் போன் நம்பரை வாங்கி அவரிடம் நடந்த விபரங்களை சொன்னேன்.
அவர்  அவசர அவசரமாக புறப்பட்டு வந்தார், அவரும் செக் பண்ணி பார்த்துவிட்டு ஊருக்கு அழைத்துப்போகும் அளவுக்கு நேரமில்லை நிலைமை ரொம்ப மோசமா இருக்கிறது நீங்க எப்படியாவது ரிசப்ஷனில் கொஞ்சம் பணம் கட்டுங்க இன்று மதியம் ஆப்ரேஷனுக்கு தயார் செய்கிறேன் என்று தனது இறுதி முடிவை தெரிவித்தார்.

சோதனைமேல்  சோதனை இப்படி ஒரு நிலைமை என் எதிரிக்குக்கூட வரக்கூடாது. யாரிடம் போய் பணம் கேட்பது? அதிகாலை நேரம் எல்லோரும் அவசர அவசரமாக வேலைக்கு புறப்படும் நேரம் யாருக்கும் நின்றுகூட பதில் சொல்ல நேரம் இருக்காது. இந்த செய்தியை கீதாவிடம் சொல்லலாமா? வேண்டாமா? சரி அவங்க தினேஷை பள்ளிக்கு அனுப்பட்டும் அதன்பிறகு சொல்லலாம், அதுவரை அவங்க பொறுமையா இருக்கமாட்டாங்க என்பதால் நானே போன் செய்து நீங்க தினேஷை பள்ளிக்கு அனுப்பிவிட்டதும் எனக்கு போன் செய்யுங்க என்று சொல்லி தற்காலிகமாக தள்ளி வைத்தேன். ராஜீவ் இப்படி இருக்கும் நிலைமையில் அவரை தனியாக விட்டுவிட்டுச் செல்லமுடியாது என்பதாலும், அதிகாலை நேரம் என்பதாலும் நானும் அங்கேயே பொறுமையாக இருந்தேன். டாக்டரிடம் எப்படியாவது பணம் இன்று 11 மணிக்குள் கட்டிவிடுகிறேன் என்று சொன்னேன்.

" என்ன வாழ்க்கைடா இது" 
இப்படி ஒரு நிலைமை வாழ்க்கையில் வருமேயானால் நாம் வாழ்வதைவிட இறப்பதே மேல்! பல சினிமாக்களிலும், நாவல்களிலும் படித்திருக்கிறேன் "பணத்தால் எதையும் சாதிக்கமுடியாது" குணத்தால்தான் சாதிக்கமுடியும், ஐயோ! இப்படி சொன்னவர்கள் மேல அவ்ளோ கோபம் வருதுங்க... இங்கு குணம் என்ன செய்யும். அப்படின்னா என்னவென்று கேட்பார்கள் ஏன் எந்த கடையில் விற்கும் என்றும் கேட்பார்கள். எல்லாத்துக்கும் பணம் தேவை பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை, ஒரு மனிதனுக்கு அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அக்கா, மாமா, மனைவி, பிள்ளைகள் இப்படி எத்தினை உறவுகள் இருந்தாலும் பணம் இல்லை என்றால் எந்த உறவுகளும் இல்லை என்றே நினைத்துகொள்ளவேண்டும். இப்படி என் எண்ணத்தில் என்னென்னவோ ஓடியது.

போன் ஒலித்தது 

"ஹலோ" 

"ம்ம்ம் சொல்லுங்க கீதா"

நான்தாங்க, தினேஷ் ஸ்கூல் போய்ட்டான் நானும் குளிச்சி ரெடியாயிட்டேன் நீங்க வந்து அழைச்சிகிட்டு போறீங்களா? அல்லது நானே டேக்ஸி பிடித்து வரட்டுமா?

நீங்களே வந்துடுங்க அதுதான் நல்லது, ராஜிவை தனியா விட்டுட்டு என்னால் வரமுடியாது.

சரிங்க  அஜய் நானே வந்துடுறேன்.

அரைமணிநேரத்தில் கீதா வந்து சேர்ந்தாங்க, அவங்களை ஆஸ்பத்ரிக்கு வெளியில் அழைத்து சென்று விபரங்களை சொன்னேன். பதில் ஒன்றும் இல்லை கண்ணீரை தவிற...நீங்க இங்க இவரை பார்த்துக்கோங்க நான் பணத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு வருகிறேன் என்று புறப்பட்டேன். இப்பவே நேரம் 9 ஆகிவிட்டது எனக்கு இதுவரை பணத்துக்கான ஒரு வழியும் தெரியவில்லை திகைத்து நின்றேன் எங்கு செல்வது? யாரிடம் கேட்பது? யாரிடம் இப்போது பணம் இருக்கும்? எல்லோரும் கையில் வைத்துக்கொண்டா இருப்பார்கள் இப்படி எனக்குள்ளேயே பல குழப்பம், சரி முதலில் எனக்கு இன்று  விடுமுறை கேட்க எனது முதலாளி இருக்கும் இடத்திற்கு செல்ல முடிவு செய்தேன். அவர் எப்போதும் காலை 10 மணிக்குதான் ஆபிஸ் வருவது வழக்கம் இப்ப மணி  9 தான் ஆகிறது. அதனால் போன் செய்யலாம் என்று போன் எடுத்தபோதுதான் அவரிடம் இந்த நிலைமையை சொல்லி உதவிகேட்டால் என்ன என்று தோன்றியது. அவர் வீட்டிற்குச் சென்றேன்.

அவரிடம் நடந்த எல்லாவற்றையும் சொன்னேன், அவர் அதையெல்லாம் ரொம்ப பொறுமையா கேட்டார் எப்படியும் உதவி செய்வார் என்ற நம்பிக்கை வந்தது ஆனால் அவர் பேசத்தொடங்கினார் உனக்கென்றால் கம்பேனி முடிந்தவரை உதவி செய்யும், ஆனால் இது உனது நண்பன் என்று சொல்கிறீர்கள். அவருக்காக கம்பேனி எதற்கு உதவி செய்யனும், அப்படியே உதவி செய்தாலும் அதற்கான தொகையை நீங்கதான் அடைக்கனும், அப்படி பார்க்கப்போனால் உங்களுக்கு இதற்கு முன்பும் பல காரணங்களுக்காக பலமுறை உதவி செய்துள்ளது "சோ" இப்ப நீங்க  இவ்ளோ கேட்பதற்காக 2000 அல்லது  3000  கொடுக்கிறேன். அதற்குமேல் ஒன்றும் செய்யமுடியாது என்று சொன்னதும் மனமுடைந்து போனேன். 

                                     http://1.bp.blogspot.com/_RQ0AEm88sd8/TCTc1UgRBrI/AAAAAAAABQs/HVVln0d-60Q/s1600/bba7f0e8-dff7-4523-b9e2-c1cc60c771bc_S_secvpf.gif.jpg

உங்களுக்கே உங்க நண்பரை இங்கு வந்தபிறகுதான் பழக்கம், அவர் என்ன ஊர் எப்படி பட்டவர் என்றுகூட தெரியாது, உங்களைப்போல நாங்க யாரையும் நம்ப முடியாது. உனக்கு அளவுக்கு அதிகமா பணம் கொடுத்து அவருக்கு உதவி செய்தும், அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் இந்த பணத்துக்கு யார் பொறுப்பு நீங்கதானே???? இந்த பணத்துக்காக நீங்க இன்னும் ஒன்று இரண்டு வருடம் வேலை செய்யவேண்டி வரும், இந்த நேரத்தில் உங்க குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை என்றால்???? அப்பவும் இங்கதான் வருவீங்க... யாருக்குத்தான் பிரச்சினை இல்லை? அவரவர்கள் பிரச்சினையை  அவரவர்களேதான்  பார்த்துக்கணும் சரி நீங்க இப்ப புறப்படுங்க எனக்கு நேரமில்லை ஆபிஸ்ல வந்து பணம் வாங்கிக்கோங்க நான் சொன்ன தொகையே அதிகம்தான், என்று சொல்லி புறப்பட்டார்.

"என்ன வாழ்க்கைடா இது"

மனிதாபிமானம்  மனிதாபிமானம் என்று சொல்வாங்களே அது எங்கே போச்சி? ச்சே! மனிதர்கள் இப்படிதான் இருப்பார்களா? அல்லது பணம் உள்ளவர்கள் மட்டும்தான் இப்படி இருப்பார்களா? ஒருவர் நண்பன் என்று சொல்லிக்கொள்ள என்ன என்ன வேண்டும். அவர்களை பற்றி தெரிந்துக்கொள்ள CBI வைத்தா தெரிந்துகொள்ள முடியும், 

நம்பிக்கை; " நம்பிக்கைதான் சார் வாழ்க்கையே! "மனிதன்தான் மனிதனை மதிக்கனும், கடவுள் இருக்கிறாரோ? இல்லையோ? அவர்கள் நேரடியாக வருவதில்லை யார்மூலமாகவோதான் உதவுவார்கள், ஒருவருக்கு ஆபத்து நேரத்தில் உதவி செய்யனும் அப்பதான் இந்த நாட்டில் கொஞ்சமாவது மனிதகுலம் வாழும், நீங்க மனிதனா மாறுங்க சார். என்றெல்லாம் கேட்டிட தோன்றியது, ரத்தம் கொதித்தது அவர் முதலாளி என்பது என்னை தடுத்து. அப்படியே அமைதியாக வெளியேறினேன்.

மனிதன்  எங்கே வாழ்கிறான்??? மனிதனுக்குதான் எத்தினை நிறங்கள், "ச்சி! என்ன வாழ்க்கைடா இது" இப்படிப்பட்ட மனிதர்களுக்கு இடையில் வாழ்வே பிடிக்கவில்லை போகும் வழியில் வேகமாக வண்டியை ஓட்டி ஒரு பாலத்தில் இருந்து கிழே விழுந்து தற்கொலை செய்துக்கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.  வாழ்க்கை இப்படியெல்லாம் இருக்கும் என்று தெரிந்திருந்தால் நான் பிறந்திருக்கவே மாட்டேன், பிறந்தபிறகு தெரிந்திருந்தால் அப்பவாவது செத்திருப்பேன்,  திருமணத்துக்கு முன் தெரிந்திருந்தால் திருமணமே செய்திருக்கமாட்டேன், இப்பதானே தெரிகிறது நான் இப்போது தற்கொலை செய்துகொண்டால் ஒரு பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகிடுமே??? என் மகன் ஐயோ! நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை 
இதுவும் கடந்துபோகும் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டு அங்கிருந்து போகும் வழிதெரியாமல் புறப்பட்டேன்.

கடைசியாக கந்துவட்டி வரை வந்துவிட்டேன் 1000 க்கு மாதம்  100 வட்டி, அவர்களிடம் என்னையே அடமானம் வைத்தேன் மாதம் மாதம் பணம் சரியாக கொடுப்பதாக சொல்லி பத்திரத்தில் கையெழுத்து போட்டேன் எனது அனைத்து அடையாள அட்டைகளின் நகல்களையும் கேட்டார்கள், அவர்கள் சொன்ன அனைத்து இடத்திலும் கைய்யொப்பமிட்டேன், இது போதாதற்கு எனது நண்பனின் அடையாள அட்டைகளின் நகல்களையும் கொடுத்தேன். வாழ்வோ! சாவோ! இந்தமுறை என் நண்பனை காப்பாற்றியே ஆகனும்னு முடிவு செய்துவிட்டேன். வருவதை வரும் இடத்தில் வைத்து எதிர்க்கொள்வோம் என்ற தன்னம்பிக்கை எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை, இன்னும் பணம் தேவைப்பட்டால் மீண்டும் வருவேன் என்று சொல்லியே அங்கிருந்து விடைப்பெற்றேன்.

"போன் ஒலித்தது"

எனது முதலாளி  (எதையோ சாதித்ததுபோல் ஒரு உணர்வோடு)

"ஹலோ சொல்லுங்க சார்?"

பணம்  ரெடியா இருக்கு வந்து கையெழுத்துப் போட்டு வாங்கிட்டு போ என்றார்.

இல்லை சார் வேண்டாம், எனக்கு தேவைக்கு அதிகமாகவே பணம் கிடைத்துவிட்டது, தேவைப்பட்டால் வாங்கிக்கிறேன் சார் இப்ப வேண்டாம்.

சரிப்பா ஓகே என்று போனை வைத்தார்.

ஆஹா! பணம் கிடைத்துவிட்டது எப்படியும் நண்பனை காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையோடு ஆஸ்பத்ரிக்கு புறப்பட்டேன். பார்த்தீங்களா? நண்பர்களே பணம் கிடைத்ததும் நநம்பிக்கை எங்கிருந்து வந்ததென்றே தெரியவில்லை. ம்ம்ம்ம் ஒருநாள் வாழ்ந்தாலும் இப்படி வாழனும் எதுக்குமே உதவாமல் வாழ்வதைவிட இப்படி யாருக்காவது உதவிவிட்டு அன்றே இறந்துபோனால்கூட சந்தோஷமா இருக்கும் என்று தோணியது. இறந்த பிறகு யாருக்கு சார் தெரியும் நாம் எப்படி இறந்தோம் என்று?? எனக்குள்ளே இந்த கேள்வி எழுந்தது,  ஆஹா!! இனி தற்க்கொலை முயற்ச்சிகள் வேண்டாம், " வாழும் வரை வாழ்வோம்! வாழ்வு முடிந்தால் சாவோம்! "  இப்படி என்னென்னவோ யோசித்தவாறு ஆஸ்பத்ரிக்கு வந்து சேர்ந்தேன்.

அங்கு சென்றதும் கீதா என்னையே எதிர்பார்த்து காத்திருந்தாங்க... என்ன ஆச்சிங்க? பணம் கிடைத்ததா? 

ம்ம்ம், கொஞ்சம் இருங்க பணம் கட்டிவிட்டு டாக்டரிடம் இந்த செய்தியை சொல்லிவிட்டபிறகு, நாம் இதைப்பற்றி பேசுவோம்.

"ம்ம்ம் சரிங்க..."

பணம்  கட்டிவிட்டு டாக்டரிடம் சொன்னேன், சபாஷ்!இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆப்ரேஷன் நீங்க வெளியில்வெயிட் பண்ணுங்க.. என்று சொல்லி என்னை வெளியே அனுப்பினார். சார் பயப்படுவதற்கு ஒண்ணுமில்லையே??? பயப்படாதிங்க அஜய் இந்த ஆப்ரேஷன் முடிந்ததும் அவர் எப்பவும்போல சாதாரண நிலைக்கு வந்திடுவார் என்று நம்பிக்கை வார்த்தையை சொன்னார். நானும் அதே நம்பிக்கையோடு வெளியில் வந்து கீதாவிடம் பணம் எப்படி வாங்கினேன், யார் யாரிடமெல்லாம் கேட்டேன் என்பதை சொன்னேன். 

"அஜய்" 

நீங்கதான் எங்க  கடவுள் என்று கையெடுத்து கும்பிட்டவாறு.

ஐயோ! என்ன இதெல்லாம் கொஞ்சம் சும்மா இருங்க. 

எங்களால் உங்களுக்கு எவ்ளோ சிரமம் பாருங்க.. நாங்க இதற்க்கெல்லாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லை? நீங்க இல்லை என்றால் எங்க நிலைமையை நினைத்துகூட பார்க்கமுடியவில்லை. என்று வாய்விட்டு அழும் கீதாவுக்கு சமாதானம் சொல்லிவிட்டு தினேஷ் ஸ்கூல் விட்டு வரும் நேரம் என்பதால் அவனை அழைக்க சென்றேன்.

போகும்  வழியில் பிராத்தனை செய்துகொண்டே போனேன், இதில் ஒரு சுயநலமும் இருந்தது காரணம் அவருக்கு ஏதாவது நேர்ந்தால் கந்துவட்டிக்கு வாங்கிய பணத்தை எப்படி அடைப்பது என்ற எண்ணம் மனதில் ஓடியது. இப்படி இவருக்கு உதவி செய்யும்போதெல்லாம் நமக்கும் இப்படி நமக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால் யாராவது இப்படி உதவி செய்வார்களா? என்றும் யோசித்தேன் மனித வாழ்க்கையில் எது எப்ப வருமுன்னு யாருக்கு தெரியும். ஒரு நிமிடத்தில் எல்லாம் மாயமாகும். 

நான்  போய் சேர்வதற்கும், தினேஷ் வருவதற்கும் சரியாக இருந்தது, ஆஹா! நல்லசகுனம் இப்படியே ராஜ்வ்க்கும் சரியாகிடும் என்ற ஒரு மூட நம்பிக்கையில் தினேஷ்க்கு சாப்பிட கொஞ்சம் வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அப்போதுதான் ஆப்ரேஷன் செய்ய உள்ளே சென்றார்கள். இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகலாம் என்று சொன்னார்கள். சீக்கிரமும் முடியலாம் என்றும், நான் டென்ஷனை மறைக்க தினேஷிடம் பல கதைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் கீதா கை கும்பிட்டப்படியே உதடுகள் மட்டும் அசைந்துக் கொண்டிருந்தது, வெகு நேரத்திற்கு பிறகு அந்த செய்தி வந்தது. ஆப்ரேஷன் சக்சஸ், இன்னும் ஒரு மணி நேரத்தில் நினைவு திரும்பிடும் என்றார்கள்.

ஆஹா ! தெய்வமே நாங்கள் பிராத்தனை செய்ததும், நான் இவ்ளோ கஷ்டப்பட்டதும் வீன் போகவில்லை கீதா ஓடி வந்து என் கையை பிடித்துக்கொண்டாங்க அஜய் ....அஜய்... ஆனந்த கண்ணீரில் ...


ராஜிவ்க்கு நினைவு வந்ததும் அருகில் சென்று கட்டிபிடித்துக்கொண்டேன். மறுபிறவி என்று சொல்லி அழுதேன். இவ்ளோ கஷ்டத்திலும் மனசு நிறைவாகவே இருந்தது. அப்போதுதான் எங்களுடைய முகத்தில் சின்ன சிரிப்பைக் கண்டோம். இரண்டு நாட்களில் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டோம், ஒரு வாரத்தில் ராஜீவ் மீண்டும்வேலைக்கு  போகத்தொடன்கினார். 

கந்துவட்டிக்கடனை நகையை விற்றும் வேரு சில வழியிலும் அடைத்தோம். 

இதுதாங்க வாழ்க்கை எது எப்ப நடக்குமென்றே தெரியாது, எப்பொழுதும் ஒருவருக்கொருவர் துணையாக வேண்டும்.

வாழ்க்கையில, தனிமையா இருக்கணும், தனிக்குடித்தனம் போய்டலாம் என்று நினைக்கவே கூடாதுங்க, அப்படி குடும்பத்தைவிட்டு தனியாக வேலைப்பார்த்துதான் பொழைக்கணும் என்ற ஒரு நிலைமை வந்தால், மனைவி பிள்ளைகளும் கூட இருந்தால் நண்பர்கள் என்ற உறவுகளோடு  இணைத்து வாழுங்கள்.

முற்றும்.

(இந்த கதையில் வந்த சம்பவம் அனைத்தும் கற்பனை இல்லை,கொஞ்ச நிஜ வாழ்க்கையும் அடகியதுதான் அதையே கருவாக கொண்டு என் கற்பனையால் பின்னி பினையப்பட்டது)

நான் இப்போதுதான் எழுத்ததொடங்கிருக்கேன் உங்களுடைய கருத்துகளைச் சொல்லி ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், தவறு இருதால் சுட்டிக்காட்டவும் தயங்கவேண்டாம்.
"நான் வளர்கிறேன் மம்மின்னு சொல்லிக்கொள்வேனே!"


6 கருத்துகள்:

tamil Naththam said...

தமிழ் மணம் திரட்டியின் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தி தமிழ்10, இன்ட்லி, தமிழ்வெளி, வலைபூக்கள், உழவன், தேன்கூடு, ஹாரம், போன்ற திரட்டிகளுக்கு மக்களை வரவேற்பதே

திண்டுக்கல் தனபாலன் said...

மற்ற பாகங்களையும் படித்தேன்... முடிவில் சுபம்...

அங்கங்கே சில உண்மை சம்பவங்களும் தெரிகிறது....

நன்றி...

Semmalai Akash! said...

ஆஹா! எனக்காக இவ்ளோ நேரம் ஒதுக்கி எல்லாப்பாகங்களையும் படித்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணே. ஆமாம் அண்ணே. நன்றி.

Semmalai Akash! said...

வருகைக்கு ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே!

முத்து குமரன் said...

சில நேரங்களில் சில நல்ல படைப்புகள் நம் கவனத்தை மீறி விலகி சென்றுவிடும். இந்த வலைத்தளமும் அப்படித்தான். இன்றுதான் இந்த தொடரை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக அருமை, உறவுகள் அற்ற உலகம் நிச்சயம் வெறுமையானது. அதிலும் நண்பர்கள் அற்ற வாழ்வு மிகவும் கொடுமையானது. பணத்தால் உறவுகளை எளிதாக பிரிக்கமுடியும், நிச்சயம் நண்பர்களை அல்ல. வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படைப்பை படித்த உணர்வு. நன்றி

முத்து குமரன் said...

சில நேரங்களில் சில நல்ல படைப்புகள் நம் கவனத்தை மீறி விலகி சென்றுவிடும். இந்த வலைத்தளமும் அப்படித்தான். இன்றுதான் இந்த தொடரை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக அருமை, உறவுகள் அற்ற உலகம் நிச்சயம் வெறுமையானது. அதிலும் நண்பர்கள் அற்ற வாழ்வு மிகவும் கொடுமையானது. பணத்தால் உறவுகளை எளிதாக பிரிக்கமுடியும், நிச்சயம் நண்பர்களை அல்ல. வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படைப்பை படித்த உணர்வு. நன்றி

Post a Comment