Pages

Saturday, September 1, 2012

" என்ன வாழ்க்கைடா இது! " பாகம் 3

 

  இப்படி நாங்கள் வழிதெரியாமல் முழித்துகொண்டிருந்தோம்,
வாழ்க்கை போரட்டத்தில எதையும் யோசித்து முடிவு எடுக்ககூட நேரம் இல்லை, ஒற்றுபோனால் இன்னொன்று என ஆயிரம் பிரச்சினைகள் அடுத்த படியில் நிக்கிறது, 
 
           "உறங்க நினைத்தோம், இமைகள் மூடிய விழிகள் ஏனோ ஆட்டம் போட்டது! உறுத்தலாக...அழ நினைத்தோம், அனைவர்கள் முன்பிலும் அழ, அழுகைகூட வெட்கம் கொண்டது! சிரிக்க நினைத்தோம், உதடுகள் இப்போதுதான் காதல் கொண்டதுபோல் பிரிய மறுத்தது!
கீதா, தினேஷ் இருவரையும் வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு, மீண்டும் தனியாக இருக்கும் ராஜிவ் இடம் புறப்பட்டேன்...
 
 பிறக்கும்போதே ஏன் பணக்காரர்களாக பிறக்காமல் போனோம், இந்த பணத்துக்காகதானே இத்தினை இத்தினை போராட்டம்,பணம் இருந்தால் எல்லாவற்றையும் சாதித்துவிடலாம் போலிருக்கே?, என்னோட லட்சியம் இது, அது என்று சொல்வதெல்லாம் ஏனோ பொய்யகிபோனது, ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளுமே பணமாக மட்டுமே இருக்க முடியும், பணம் இல்லை என்றால்? கட்டிய மனைவிய விடுங்க அவக்கூட அடுத்த வயிற்றில் பிறந்தவள்,பெற்ற தாய் தகப்பனே மதிப்பதில்லை, கூடபிறந்த பிறப்புகளுக்கு நாம ஒரு உதவாக்கரை, இப்படி வீடே வெறுக்கும் போது, சொந்தபந்தங்களுக்கு சொல்லவா வேணும். பணம் என்றால் பிணம்கூடவாய் திறக்கும் என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்.
     ஆமாம், பணக்காரர்கள் மட்டும் மேலும் மேலும் பணக்காரர்களாக ஆகிறார்கள், நமக்கு மட்டும் இருந்த இடத்தை விட்டு நகரமுடியவில்லையே ஏன்? "வரவுக்குமேல செலவு, அளவுக்குமேல ஆசை" எப்படி நகர்வது, இந்தமாதம் வரும் செலவுக்கு, அடுத்த ஆறுமாதச்சம்பளத்தை அட்வான்சா வாங்கிட்டோம். அடுத்தமாத செலவுக்கு கந்துவட்டிக்கு வாங்கணும், இப்படியாக நம் வாழ்க்கை எப்படி உயர்வது. அறிவு இருக்கு அதை நமக்காக பயன்படுத்திக்க தெரியலை,யாரோ நம்மளை பயன்படுத்திகொள்கிரார்கள், கடின உழைப்பு இருக்கு, அதை கட்டிய மனைவிக்கு ஒரு காபி போடக்கூட பயன்படுத்தமாட்டோம், கட்டளை இடுபவர்களின் காலணிகளைகூட மாட்டிவிடுவோம். ஆனால் ஒரு சிலர்மட்டும் உயர்ந்துவிடுகிறார்களே எப்படி?                  
 "சாதிப்பவர்கள் மட்டுமே சாதிக்கிறார்கள்
                   மற்றவர்கள் எல்லாம் சாதிப்பதில்லை ஏன் தெரியுமா?
                   சில சபலங்களுக்கு ஆளாகிவிடுவதனால்!!!"...........
.இப்படி என்றோ நான் எழுதிய கவிதை ஞாபகம் வர நானும் ஆஸ்பத்திரி வந்தடைந்தேன்.
 
 ராஜீவ் இருக்கும் நிலமைய கண்டு ஏனோ எனக்கு அழகூட தெரியவில்லை,ஆனால் அவர் அழுதுவிட்டார், மனைவி முன்பு வறட்டுகவருவத்துக்காக வீரமாக பேசலாம், ஆனால் நண்பனிடம்தானே எல்லாத்தையும் பேசமுடியும்.
அஜய் உண்மைய சொல்லபோனா என் கையில் காசு இல்லை, சம்பாதிக்கும் சம்பளம் எல்லாம் லோன், குடும்ப செலவு, தங்கை கல்யாணம் என்று செலவுக்குமேல் செலவு வந்ததால் சேர்த்துவைக்க முடியாமல் போய்விட்டது. நமக்குதான் ஆரோக்கியம் இருக்கே இந்த மாதச்சம்பளம் போனால் என்ன, அடுத்தமாதத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து நினைத்தே திருமணமாகி பத்துவருடம் கடந்துவிட்டது. இதுவரை எனக்காக ஒன்றுகூட வாங்கிக்கொள்ளவில்லை, அப்பா அம்மா அண்ணன் தங்கை குடும்பம் என அனைவருக்கும் ஓடிஓடி செய்தேன், கைசெலவுக்கு கூட மிஞ்சவில்லையே என அண்ணன் தனியாக போனபோதும்கூட, நான் தயங்காமல் தாங்கி நின்றேன், தங்கைய கட்டிகொடுத்து தாய்தந்தை பாரத்தை குறைத்தேன், எல்லாபிள்ளையும் நான்பெற்றதே என்று நான்செய்த நன்றி மறந்து அப்பா அம்மா அண்ணனிடம் சென்றபோதுதான் உணர்ந்தேன் அண்ணனின் தந்திரங்களையும், அப்பா அம்மாவின் நடிப்பையும், அன்றுதான் எதுவும் மிஞ்சவில்லை அவள்கூடவாவது சேர்ந்துவாழலாம் என்று அவளை வரவைத்தேன், அப்பா அம்மாவை அண்ணன் கைவிட்ட பிறகும், ஏனோ என்னால் போகமுடியவில்லை, போகமுடியாமல் இல்லை அப்படி ஊருக்கு போனால் வாழ வழியில்லாததால் பணத்துக்காக அப்பா அம்மாவிற்கு என்மேல் பாசம் இல்லாததுபோல் நடிக்கிறேன். எனக்கும் குடும்பம் குழந்தை என்று வந்தபிறகு இதுக்கே போராட்டமா இருக்கு, எங்கே அவர்களை அருகில் இருந்து பார்ப்பது என்று மனதில் புலம்பி புலம்பி மடுத்தேன்.


இப்போது எனக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை. இப்படி முடியாத நிலைமையில் யாரிடம் கேட்பது ராத்திரிநேரம் யாருக்கு போன் செய்வது ஒன்றுமே புரியவில்லை நண்பா?


எனது போன் ஒலித்தது,
"உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..
  உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்,"

"ஹலோ!

அஜய், அவர் இப்ப எப்படி இருக்கார்? தூகிட்டாரா?

 (கீதாதான்,அவங்களுக்கு எப்படி தூக்கம்வரும், உலகமே தன் கணவர்தான் என்று வாழும் பெண்களுக்கு, அவங்க குரல் ரொம்ப பதட்டமாகவே இருந்தது )

நல்லயிருக்கார், நாங்க பேசிக்கிட்டு இருக்கோம், இருங்க நான் அவரிடம் கொடுக்கிறேன்.


"ம்ம்ம்ம் "


நான் போன் கொடுத்துவிட்டு நகர்ந்தேன், அவர்கள் கொஞ்சநேரம் தனியாக பேசட்டும் என்று வெளியே சென்றேன்.
         "என்ன வாழ்க்கைடா இது!" மனித வாழ்க்கையில் இப்படி ஒரு நேரமும் வருமா? எவ்ளோ செலவு ஆகும் என்றே தெரியாதே? யாரிடம் கேட்பது எவ்ளோ என்று கேட்பது? ராஜிவ் புலம்பியதை கேட்டதும் என் வாழ்க்கையும் ஒரு கேள்வி குறியாக தோன்றியது என்னிடமும் ஒன்றும் இல்லையே, நாளை இதே நிலைமை நமக்கு வந்தால் எப்படி சமாளிக்கபோறோம். நான் பொழைக்கும் பொழப்பை நினைத்து என்னை நானே திட்டிகொண்டேன். கொஞ்சம் மனதை தேற்றிக்கொண்டு எப்படியோ ராஜீவின் இந்த நிலைமையில் இருந்து காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம்மட்டும் வந்தது..எனது நண்பர்கள் யார் யார் உதவிசெய்வார்கள் ஒவ்வொருவர் பெயரையும் சொல்லிப்பார்த்தேன், சரிவராது என்றறிந்ததும் வட்டிக்கு யார்யாரெல்லாம் பணம் கொடுப்பார்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டு வைத்தேன், எனது கம்பேனியில் கேட்டால் எவ்ளோ தருவார்கள் என்று தெரியவில்லை, ராஜீவின் ஊர்காரர்கள் இருக்கிறார்கள் ஏனோ ராஜிவ்க்கு அவர்களிடம் உதவி கேட்க்கபிடிக்கவில்லை,சொந்தம் பந்தம் ஊர்காரர்கள் எல்லாம் இருந்தும் ஏன் இப்படி அனாதையாக நிக்கிறோம்? சரியான கேள்விதான் ஆனால் அதற்க்கு இப்போது விடை கிடைக்காது. இப்படியாக மனதை அலைபாயவிட்டுவிட்டு ராஜிவ் இடம் வந்தேன்.

என்ன அஜய் எங்க போனீங்க, வாங்க இந்த பெட்டில் படுத்துக்கோ காலையில் வேலைக்கு லீவு சொல்லுப்பா எல்லா ஏற்பாடும் நீதான் செய்யனும், எங்களுக்கு எல்லாமே நீதான், நான் மட்டும் தனியா போறேன் பையனுக்கு எக்ஸாம் இருக்கு அதனால் கீதா தினேஷ் இங்கேயே இருக்கட்டும். ஊரில் இருந்து ஏர்போர்ட்டுக்கு வண்டிவர வைத்துவிடலாம், இங்கு இருந்து போகும் யாராவது ஒருவரின் உதவியோடு நான் ஊர் வரை போய்விடுவேன் என்று ஒரு முடிவு சொன்னார், எனது கம்பேனியில் நான் லோன் முன்னவே அளவுக்கு அதிகமா லோன் வாங்கி இருக்கேன் அதனால் டிக்கெட்க்கு என்று எவ்ளோ கொடுப்பார்களோ தெரியலை.பணம் மட்டும் கொஞ்சம் ஏற்பாடு பண்ணு நான் அங்கு சென்று கீதா நகை லாக்கர்ல இருப்பதை எடுத்து அடகுவைத்து கொடுக்கிறேன், பத்துநாள் கைமாத்தா கிடைத்தால்கூட போதும், அதற்குள் நான் சரி செய்கிறேன் ,இப்போதைக்கு நான் வீட்டுக்கு யாரிடமும் சொல்லவில்லை. சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க காலையில பேசிக்கலாம் என்று சொல்லிமுடித்தார், இந்த நிலைமையிலும் ஒரு தெளிவான முடிவு செய்துள்ளார் என்ற பெருமிதத்தோடு நானும் கொஞ்சம் கண் அசர...


மீண்டும் என் போன் ஒலித்தது....


நான் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்து போன் எடுத்தேன், அதிகாலை ஐந்துமணி,

"ஹலோ!

அஜய், நான்தான் சாரிங்க, எனக்கு தூக்கமே வரலை உங்க தூக்கத்தை கெடுக்கக்கூடாது என்பதற்காக இதுவரை பொறுமையா இருந்தேன், இனி முடியாது இப்ப எப்படி இருக்கு? அவர் என்ன செய்கிறார்? தூங்குறாரா?

(இப்படி பல கேள்விகள்)
ம்ம்ம்ம் தூங்கிட்டு இருக்கார்போலிருக்கு, இருங்க பார்த்து சொல்கிறேன்.

"ம்ம்ம்ம்"

ராஜீவ்..... ராஜீவ்....

ஏதோ ஒன்று என் கண்களால் காண.....
பொய் சொன்னேன் தூங்கிட்டு இருக்கார் அவர் எழுந்ததும் கூப்பிடுகிறேன் என்று.....

"ம்ம்ம் என்று சொல்வதற்குள் போன் கட் செய்துவிட்டு

வெளியே ஓடினேன் டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............................


தொடரும்........................

0 கருத்துகள்:

Post a Comment