Pages

Sunday, March 31, 2013

சவூதி அரேபியாவில் வேலைப்பார்க்கும் இந்தியர்களுக்கு வேலை போகும் அபாயம்!

 கடந்த வருடமே சவுதியிலுள்ள கம்பேனிகளை 3 கேட்டகிரியாக பிரித்திருந்தார்கள்.

1. சிவப்பு
2. மஞ்சள்
3. பச்சை

சவுதி மண்ணின் மைந்தர்களுக்கு சரியான அளவு இட ஒதுக்கீடு வழங்கிய கம்பேனிகள் பச்சையிலும், இழுபறியில் இருக்கும் கம்பேனிகள் மஞ்சள் நிறத்திலும், சிவப்பில் இருக்கும் கம்பேனிகள் அதை கடைபிடிக்கவில்லை என்றும் போன வருசமே வரிசைபடுத்திவிட்டனர். மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை பெற்ற கம்பேனிகள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவரும் தங்களை சரி செய்துக்கொள்ள காலக்கெடு கொடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


நான் மலையாள FM சேனலில் கேட்டதும், அதில் நேரலையாகவே சவுதியில் வேலைப்பர்க்கும் நண்பர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள். சிலர் கண்ணீரோடு எதிர்காலம் எப்படி இருக்கபோகிறதோ? இதுவரை எதுவும் சேர்த்து வைக்கவில்லை, சம்பாதித்தோம் சாப்பிட்டோம் அவ்ளோதான் எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்கவே இல்லை. இப்பொழுது வேலை போகும் அபாயம் வந்ததும்தான் இந்த சிந்தனையே வருகிறது என்றும் மிகவும் கவலையோடு பலர் பேசினார்கள்.

 சரி உண்மையான நிலை என்ன? என்று சவூதியில் வேலைப்பர்க்கும் பலரிடம் FM சேனல்காரர்கள் கேட்டார்கள், அதில் அங்குள்ள லாயர் ஒருவர் சொன்ன தகவல் பின்வருமாறு...

கிரீன் கார்டு:-
இந்த கார்டு கிடைத்த கம்பெனியில் வேலை பார்ப்பவர்களின் வேலைக்கு எந்த ஆபத்தும் கிடையாது, காரணம் இவர்கள் சவூதி அரசாங்கம் சொன்னதுபோல் எல்லா வருடமும் தங்களுடைய லைசென்ஸ்கள், மற்றும் எல்லவிதாமான அப்ரூவல்களையும் பெற்றுள்ளது, அதுமட்டுமில்லாமல் சவுதியின் குடியிருப்பு உரிமையை பெற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதமானம் அல்லது 30% வேலை வாய்ப்பையும் கொடுத்திருக்கவேண்டும். சில முக்கிய பொறுப்புகளை அவர்கள்தான் பார்க்கவேண்டும், உதாரணமாக விசா மற்றும் லைசன்ஸ் சம்மந்தமான வேலைகளை அவர்களுக்குதான் கொடுக்கவேண்டும். மீதமுள்ள 60% to 70% சதமானம் உள்ள வேலைகளை ஒரு குறிப்பிட்ட நாட்டுக்காரர்களுக்கு மட்டும் கொடுக்க கூடாதாம். பல நாட்டுக்காரர்களுக்கு சம பங்காக பிரித்து கொடுத்திருக்க வேண்டுமாம். இப்படி இல்லாமல் ஓரளவுக்கு சரியாக இருக்கும் கம்பேனிகளுக்கு கிரீன் கார்டு கிடைக்குமாம்.


மஞ்சள்  கார்டு:-


பல நாட்டுக்காரர்களும் இருபார்கள், ஆனால் ஒரு சிலரே சவூதியை சேர்ந்தவர்கள், இன்னும் பல பிரச்சினைகள் எல்லாவற்றையும் சரி செய்ய காலக்கெடுவு கொடுத்த கம்பேனிகள்.

சிவப்பு கார்டு:-

அவர்கள் சொன்ன எதையும் சரியாக கடைபிடிக்காதவர்கள். இப்படி பல வகுப்புகள். இந்த கம்பேனியில் வேலைப் பார்ப்பவர்களின் விசா ரினவல் கிடையாது. லைசென்ஸ் புதுபிக்க முடியாது.

இதனைத்தொடர்ந்து  நேற்று முதல் இந்த சட்டத்தை மிகவும் கடுமையாக   கொண்டுவந்திருக்கிறார்கள்.

சரி இப்படிப்பட்ட பிரச்சினைகளால் எல்லா நாட்டுக்காரர்களுக்கும்தானே வேலைப் போகும் எப்படி குறிப்பிட்டு இந்தியர்களுக்கு மட்டும் என்று சொல்கிறார்கள் என்று கேட்டதற்கு:

இங்கு சிறிய சிறிய வியாபாரிகள் என்று பார்த்தால் எல்லாம் இந்தியர்களின் நிறுவனம்தான். அதாவது சிறிய கிரோசரி முதல் ஹோட்டல், டைப்பிங் சென்டர், ஓப்டிகள் சென்டர், கார்கோ, துணிக்கடைகள், எலக்ரோனிக் கடைகள் இப்படி எல்லா விதமான சிறு வியாபாரிகளும் இந்தியர்களே இவர்களின் சதவிகிதம் 60% இருக்கும் அதனால்தான் அதிக அளவில் பாதிக்கப் படப்போவது இந்தியர்களே என்று சொன்னார்.

இதற்கான  காரணம் என்னவென்றால். ஒரு சாதாரண சிறு வியாபாரி இப்போதுள்ள சவூதி சட்டத்தை பின் பற்றவேண்டுமானால் அவர்களின் வருமானத்தில் 70% முதல் 90%சதமானம் வரை செலவாகும் நிலைமை, அதனால் இவர்களால் லைசென்ஸ் புதுபிக்க முடியாத சூழ்நிலை.

70% to 90% சதவிகிதம் எப்படி வருகிறது என்ற கேள்விக்கு:
அ) வருடாவருடம் லைசென்ஸ் புதுப்பித்தல்.
ஆ)வாட்டர் எலெக்ட்ரிசிட்டி .
இ) வாடகை.
ஈ) ஊதியம்.
உ) பெட்ரோல்
இது மட்டுமில்லாமல் இனி சிறு வியாபாரிகள் தங்களுடைய லைசென்ஸ் புதுப்பிக்க ஸ்பான்சர் வேண்டும், அவர் சவூதியில் குடியுரிமை பெற்றவராக இருக்கவேண்டும். (இவர்களுக்கும் கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதமானம் கொடுக்கவேண்டுமோ? என்னவோ? தெரியவில்லை.)

மேலும் அதிக அளவில் அங்கு சிறு வியாபாரம் செய்து வருபவர்கள் மற்றும் வேலைப்பார்ப்பவர்கள் ப்ரீ விசா எனப்படும் கேட்டகிரியை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இப்பொழுதுள்ள இடுக்கட்டான சூழ்நிலையில் தங்களுடைய விசாவை புதுப்பிக்க முடியாது. அதனால் இவர்களுக்கும் வேலைபோகும் என்பது உறுதி.



இந்த வெப்சைட்டுக்கு போயிட்டு, அதிலுள்ள 2வது கட்டத்தில் உங்களோட இக்காமா நம்பரை தட்டிட்டு எண்டர் கொடுத்தா, உங்க கம்பேனியோட ஸ்டேட்டஸ் என்னான்னு தெரிஞ்சிடும்.
அரபிக்ல என்ன எழுதிருக்குன்னு தெரிஞ்சிக்க, அதை அப்படியே காப்பி பண்ணி, கூகிள் ட்ரான்ஸ்லேட்ல பேஸ்ட் பண்ணவும்.இங்கு


சவூதியை தொடர்ந்து குவைத்திலும் இந்த சட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள்.

ஒரு விஷயம் மட்டும் உண்மை நாமெல்லாம் இங்கு பிழைக்க வந்தவர்கள் என்றாவது ஒருநாள் ஊருக்கு போயிதான் ஆகவேண்டும், இங்கு நிறந்தரமாக இருக்கமுடியாது அதனால் நல்லா சம்பாதிக்கும் காலத்தில் சேமித்து வைத்துக்கொண்டு அவர்களே அனுப்புவதற்கு முன்பு நாமலே இந்தியாவில் சென்று பிழைக்க வழி தேடிக்கொள்ளவேண்டும்.

இரண்டு  வருடம் துபாய், சிங்கபூர் மற்றும் சவூதியில் சென்று தங்களுடைய பிரச்சினைகளை குறைத்துக்கொண்டு திரும்ப சொந்த ஊருக்கு வந்துவிடலாம் என்று வந்தவர்கள்தான் அதிகம். மேலும் மேலும் வரும் குடும்ப சுமைகளால் இங்கேயே வேலைப்பர்க்கிரார்கள். வேலை இருக்கிறது சம்பளம் கிடைக்கிறது என்று செலவு செய்தால் இப்படி ஒரு நிலை வரும்போது மீண்டும் பழைய இடத்திலேதான் இருப்போம் ஒரு முன்னேற்றமும் இருக்காது.

சிக்கனமாக செலவு செய்து, சேமித்து குடும்பத்தை காப்போம்.

*************************நன்றி, மீண்டும் சந்திப்போம்***************************

Friday, March 15, 2013

புதிய புதிய சமூக வலைத்தளங்களின் வருகையால் வலைப்பதிவர்களின் மனது பாதிக்கப் படுகிறதா?


கேள்வி: பதிவர்கள் பதிவுகள் எழுதுவதை குறைத்துக்கொண்டு ஏன் பேஸ்புக் பக்கம் நழுவுகிரார்கள்?

அவர்கள் உண்மைகள் அவர்கள் தனது இன்றைய பதிவில் ரொம்ப அழகான கேள்வியும் அதற்கான விளக்கமும் கொடுத்திருக்கிறார் படித்ததும் மனம் கனத்துபோனது.
_________________________________________________________________________

கூகிள் ஆரம்பித்த பிறகுதான் வலைத்தளமும் உருவானது. கூகுள் எப்பொழுது ஆரம்பமானது என்று பார்த்தால் 1998 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ம் தேதி லாரி பேஜ் மற்றும் சேர்ஜ் பிரின் ஆகியோரால் துவக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டிற்கு பிறகுதான் கூகுள் தேடுபொறியானது உலகின் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது. அதன்பிறகு கூகுள் தேடுபொறி அதி வேக வளர்ச்சியடைந்ததை கண்டு கூகுள் நிறுவனம் பல புதுய சேவைகளையும் கொண்டுவந்தது. 

ஜிமெயில் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பகாலத்தில் பலருக்கும் பல பிரச்சனைகள் இருந்தது, நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக ஒவ்வொன்றாக சரி செய்து 2005 முதல் அனைவராலும் மிக எளிதாகப் பயன்படுத்தும் வகையில் வெளியானது.

வலைப்பதிவு 1997 ஆம் ஆண்டு Weblog என்ற பெயரில் Jorn Barger என்பவரால் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. இந்த காலண்டுகளிலேயே வலைதள வல்லுனர்களால் Blogger என்ற வலைத்தளமும் துவங்கி எழுதி வந்தனர். 2003 ஆம் ஆண்டுதான் கூகுள் நிறுவனத்தில் இணைக்கப்பட்டது. முதன் முதலில் தமிழ் வலைப்பதிவராக கார்த்திகேயன் இராமசுவாமி அவர்களால் 2003 ம் ஆண்டுதான் தனது முதல் பதிவை எழுதினர். அவர் பதிவைக்கான இங்கே சொடுக்கவும். தமிழில் தட்டச்சவும் அப்போதுதான் கற்றுக்கொண்டார்கள் . இதையெல்லாம் சொல்லிக்கொண்டு வருவதற்கு காரணம் மிகச் சுருங்கிய காலகட்டத்தில்தான் விஞ்ஞானம் வளர்ந்துள்ளது.

கடந்த  பத்து வருடங்களாகத்தான் தமிழில் வலைப்பதிவு எழுதி வருகிறார்கள். நாளுக்குநாள் பொழுதுபோக்கிற்காக பல சமூகதளங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. யாகூவில் குரூப், சாட் , மெசெஞ்சர் என பல வகைகள், ஓர்குட் , ஹை5, போன்றவைகள் இன்று சிலரால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும் அங்கும் எழுதுபவர்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொள்பவர்கள்என இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதற்கு முன்பு நமது முன்னோர்களும் வலைப்பதிவு எழுதவில்லை, நமக்கு பின்பு வரும் இளைய சமுதாயத்தினரும் பதிவு எழுதுவார்களா? என்பதில் சந்தேகம்தான். இப்போதெல்லாம் எழுதாமலே வாயால் சொன்னால் போதும் அப்படியே தட்டச்சு செய்யும் மென்பொருளும் வந்துவிட்டது. காலம் வெகு விரைவாக வளர்ந்துகொண்டே செல்கிறது. இன்னும் என்ன என்ன வரப்போகிறதோ?

போன்ற  சமூகவலைதளங்களில்தான்  இப்போது அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். போததக்குறைக்கு இப்போது பேஸ்புக்கில் கூட குரூப் அமைக்கலாம். குரூப் குரூப்பா பேசலாம். படங்களைப் பகிரலாம். பின்னூட்டமாக ஒரு சிம்பிள் :-) போட்டாலே போதும். படிக்க நேரம் இல்லை என்றால் ஒரு லைக் மட்டும் போதும். இப்படித்தான் நடக்கிறது படித்தாலும் படிக்கவில்லை என்றாலும் ஒரு லைக் மட்டும் போட்டுவிட்டு படித்ததைப் போல் காட்டிக்கொள்கிறார்கள். புதிய புதிய யுத்திகளோடு வந்தவண்ணம் இருக்கிறது. மக்கள் எப்பொழுதும் புதியதையே விரும்புகிறார்கள் என்பதே உண்மை!

இதில் ஒரு உண்மை என்னவென்றால் புதிது புதிதாக வருபவர்கள் பேஸ்புக்கில்தான் வந்து இணைகிறார்கள். எல்லோராலும் மிக எளிதில் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளதுதான் அதன் சிறப்பம்சம். வலைப்பதிவில் எழுதுபவர்கள்தான் கூகுள்+ மற்றும் கூகுள் குழுமங்கள் கூகுள்BUZZ லும் எழுதுதிருக்கிரார்கள். இப்பொழுதும் எழுதுகிறார்கள். படிப்பது எழுதுவது என்பதெல்லாம் ஒரு விதமான கலை, இது எல்லோராலும் முடியாது. முடிந்தவன் எழுதுகிறான் முடியாதவன் அதனைப் பயன்படுத்திக்கொள்கிறான். அதாவது நாம் எழுதியதை காப்பியடித்து போட்டு லைக் மற்றும் பாராட்டுக்களை வாங்கிக்கொள்கிறார்கள். மகாத்மா காந்தியடிகள் அவர்கள் அவரவர்களின் ஆடையை அவரவர்களே சலவை செய்து உடுத்திக்கொள்ளவேண்டும் என்று சொன்னார். இதை இப்பொழுது யார் கேட்க்கிறார்கள் வீதிக்கு நான்கு லாண்டரி கடைகள் இருக்கிறது. 

பதிவின் நிறைவு பகுதிக்கு வருகிறேன்.

        நாம் ஒரு கதையையோ கட்டுரையையோ வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டால் அது பொது சொத்தாகிவிடுகிறது.அதை யார் வேண்டுமானாலும் ரசிக்கலாம், யாருக்கு வேண்டுமானாலும் பகிரலாம். நாம் ஒன்றும் சொல்லமுடியாது. ஒரு திரைபடத்தின் பாடல்  ஹிட் பாடல் என்றால் உலகில் உள்ள எல்லோரும் ரசிக்கிறார்கள், எப்பொழுதும் முனுமுனுக்கிறார்கள் சிலநேரம் அதையே ஸ்டேடஸ்சாக போடுகிறார்கள் இதற்காக எந்த பாடல் ஆசிரியர்களும் வருத்தம் தெரிவிப்பதில்லை. படைப்பவன் படைப்பாளி ஒரு படைப்பை படைத்துவிட்டால் அதனை மக்களுக்காக அற்பணித்துவிட்டால் அத்தோடு முடிந்துவிடுகிறது. படைப்பாளனின் அடுத்த படைப்பை நோக்கி போய் கொண்டே இருக்கவேண்டும். ஒவ்வொரு படைப்பிற்கும் நல்ல கருத்துகளும் கேட்ட கருத்துகளும் வரும் அதற்கு மட்டும் முடிந்தவரை பதில் சொன்னால் போதும். அது இல்லாமல் அதனையே சுற்றி சுற்றி வந்தால் குறைகள் மட்டுமே மிஞ்சும் நிறைகள் இருக்காது. கடவுள் இருக்கும் உலகத்தில் அரக்கனும் இருந்தானாம் அதேபோல் நல்லவர்கள் இருக்கும் உலகத்தில்தான் அயோக்கியர்களும் இருக்கிறார்கள். படைப்பதற்கு ஒருத்தன் இருந்தால் அதனை அழிப்பதற்கு ஒருவன் அன்றே பிறந்திருப்பான் என்று நினைத்துக்கொள்ளவேண்டும்.

வந்தவர்களே வருகிறார்கள் கருத்து சொல்கிறார்கள், புதியதாக யாரும் வருவதில்லை என்பதெல்லாம் அவர்கள் உண்மைகள் அவர்களின் குற்றச்சாட்டு/ஆதங்கம் மனம் உடைந்து எழுதியிருக்கிறார். ஒருவிசயம் உண்மை சார் வலைப்பதிவு எழுதுபவர்களிலும் எழுதுபவர்கள் எல்லோரும் மற்றவர்களின் பதிவுகளைப் படிப்பதில்லை!, படிப்பவர்கள் எல்லோரும் கருத்து சொல்வதுவுமில்லை! கருத்துக்களுக்காகவும் ஓட்டுக்காகவும் பதிவு எழுதவேண்டாம். என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதை சொல்லுங்கள். படிப்பவர்கள் பயனடையட்டும், அல்லாதவர்கள் நஷ்டமடையட்டும் இதனால் நமக்கு என்ன நஷ்டம். 

அவர்கள் உண்மைகள் அவர்களின் பதிவிற்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

விடுங்க சார்! 

       நாமெல்லாம் படைப்பாளி கடல் நீர் போல், அதில் ஒரு துளி நீரை அள்ளிக்கொண்டு சென்றுவிட்டால் நாம் அழிந்துவிடமாட்டோம். மேலும் நமது மூலையில் நீர் ஊற்று சுரந்துகொண்டே இருக்கும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!. எத்தினை எத்தினை சமூக தளங்கள் வந்தாலும் நமது படைப்புகளை எழுதி சேமித்துவைக்க புதியதாக ஒரு இடம் வரும்வரை வலைப்பதிவுகளை எழுதுபவர்களும் படிப்பவர்களும் எப்பொழுதும் இங்கு சுத்திக்கொண்டேதான் இருப்பார்கள். நம்பிக்கையோடு எழுதுங்கள். நமது இன்றைய அனுபவங்கள்தான் எதிர்கால இளைஞர்களின் வழிதடங்கள்களை நீக்கும். என்ற நம்பிக்கையோடு எழுதுங்கள்.

*************************நன்றி, மீண்டும் சந்திப்போம்**************************

Monday, March 11, 2013

எங்கே இருக்கிறாள் அவள்? அவளைத்தேடி ஒரு பயணம். பாகம் 3

       
    தொடர்ந்து எனது கதையை படித்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய வணக்கம். இதுவரை படிக்காதவர்கள் பாகம்1 பாகம்2 இங்கு சென்று படிக்கவும். தொடர்ந்து வருகைத்தந்து என்னை ஊக்குவிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. 

    இந்த தொடர்கதையைப் படிக்க தொடர்ந்து நிறையப்பேர் வருகைத் தந்திருக்கிறார்கள் என்பதை பார்த்தாபோது மனதில் சொல்லமுடியாத மகிழ்ச்சி! அதனால்தான் கடினமான வேலைப்பளுவிலும் இந்த தொடர்கதையை தொடர்ந்து எழுதுகிறேன்.

சுரேஷ்க்கு அப்படியே அவளை கட்டிபிடித்து அழனும்போல் தோன்றியது, எதுவோ தடுக்க கையேடு கையை பிசைந்துகொண்டு இருக்கையில் உட்கார்ந்திருந்தான், ஆனால் சந்தியா தனது குழந்தையை படுக்கையில் போட்டுவிட்டு அவனது தோலில் வந்து சாய்ந்துக்கொண்டாள்.

பாகம் 3
 "என்னை மன்னிச்சிடுங்க மாமா  நான் உங்களுக்காக காத்திருந்திருக்கணும், எனது சூழ்நிலை முடியாமல் போய்விட்டது என்று தலை நிமிர்ந்தாள் வாழ்க்கை என்றால் எப்படியெல்லாம் இருக்கும் என்று ஒரு பெரிய கனவோடு காத்திருந்தேன்.உங்களிடம் பல விஷயங்களை சொல்லிருக்கிறேன் இப்படிதான் வாழனும் என்று உங்ககூட சண்டை போட்டிருக்கேன் கடைசியில் எனக்கு கிடைத்தது வெறுமையே..., நான் சிரிச்சிப்பேசி எவ்வளவு நாட்கள் ஆகிறது தெரியுமா? நம் காதலோடு சேர்ந்து எனது சிரிப்பும் சந்தோசமும் செத்துப்போச்சி."

கண்ணீரோடு மீண்டும் தொடர்ந்தாள்....!

" நீங்க எனக்கு வைத்த பட்டப்பெயர் "வாயாடி" இப்பலாம் நான் பேசுவதே கிடையாது அப்படியே பேசினாலும் கேட்க யார் இருக்கா? அம்மா வீட்டுக்கு வரும் இரண்டு நாட்கள்தான் கோவிலுக்கு போவதைப்போல் தோன்றும். எனது உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள யாருமே இல்லை, அம்மாவிடம் சொன்னால் நீ என்ன மகாராணியா? நாங்களும் இப்படிதான் வாழ்ந்தோம் என்று ஒரு வார்த்தையில் என் வாயை அடைத்துவிடுவார்கள். அவங்க அண்ணன் மகனாச்சே அவங்க யாருக்குத்தான் சப்போர்ட் செய்வாங்க?. அவர் சொல்வதைத்தான் செய்யனும், அவர் சொல்வதைத்தான் கேட்கனும்  உண்மையைச் சொல்லப்போனால் நான் உயிருள்ள ஒரு பொம்மை அவ்ளோதான்."

"இதை கேட்ட சுரேஷ் ஒன்றும் பேசமுடியாமல் மௌனமாகவே மனதில் மட்டுமே அழுதுகொண்டு மீண்டும் அவள் சொல்வதைக் கேட்க தயாரானான் ."

"இன்னும் கொடுமையான விஷயம் என்னன்னா, காலையில் எழுந்து தலை சீவி பொட்டுவைக்ககூடாது, சீவி மினுக்கிகிட்டு யாரடி பார்க்கப் போற? என்று கேட்பார், எங்கயாவது ஊருக்கு போனால்கூட நல்ல புடவையை உடுத்தமுடியாது, அதற்கும் பல கேள்விகள் வரும். எப்படித்தான் பார்த்து பார்த்து சமைத்து கொடுத்தாலும் ஏதாவது ஒரு குறை கண்டுபிடிப்பார். கொஞ்ச நாட்களுக்கு பிறகுதான் எல்லாம் புரிந்தது சமையலில் ஒரு குறையும் இல்லை என்னை அடிப்பதற்காகவே குறையை தேடுகிறார். தினமும் குடிதான் அந்த சாராய நாற்றமே என்னை வாந்தி எடுக்க வைத்துவிடும். இதுதான் என் வாழ்க்கை ..........
 நான்  ரொம்ப நல்லா வாழ்கிறேன் மாமா.....(என்று வாய்விட்டு அழ...) சுரேஷ்க்கு அங்கு உட்கார்ந்திருக்கவே முடியவில்லை, எழுந்து கதவின் அருகில் நின்று அழுதான்.

"சந்தியா....!"
(அடுப்பங்கறையில் இருந்து அம்மா அழைக்க....)

"இதோ வரேம்மா, என்று சந்தியா எழுந்து போனாள்."

"சுரேஷ்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, எப்படி அவளுக்கு  சமாதானம் சொல்வதென்றும் புரிவவில்லை, அருகில் அவளுடைய பெரிய மகன் வர, அவனை அழைத்துச் சென்று கொண்டுவந்த பொருட்களை அவன் கையில் கொடுத்துவிட்டு யாரிடமும் சொல்லாமலேயே புறப்பட்டான். போகும் முன் தனது மொபைல் போனையும் ஆப் செய்திருந்தான்."

வண்டியின்  சப்தம் கேட்க, சந்தியா ஓடி வந்தாள் அதற்குள் மறைந்துவிட்டான் போனில் முயன்றும் "ஸ்வீட் ஆப்" என்று வந்தது. அப்படியே மனம் கனத்தபடி ஒன்றும் புரியாமல் நின்ற இடத்திலேயே உட்க்கார்ந்தாள்.  அப்போதுதான் தனது மகன் கையில் இருக்கும் பொருட்களைப் பார்த்தால், துபையில் இருந்து பிள்ளைகளுக்காக சில விளையாட்டு பொருட்களும், அவளுக்காக ஒரு மோதிரமும், மல்லிகைப்பூ மற்றும் பழங்களும் இருந்தது.  அதை கையில் எடுத்துக்கொண்டு அழுதுகொண்டே அந்த இடத்திலேயே படுத்துவிட்டாள்.

"மனவேதனையோடு புறப்பட்ட சுரேஷ், காதலித்தபோது அதிகநேரம் செலவழித்த ஒரு பூங்காவின் அருகில் சென்று நிறுத்தினான். பழைய நினைவுகளோடு அதே மரத்தடியில் அமர்ந்தான், அந்த மரத்தின் சில்லென்ற காற்று இவர்களின் பழைய கதையை பக்கம் பக்கமாக சொன்னது.மூன்று மணி நேரத்திற்கு பிறகு மலைக் கதிரவன் மயங்கும் நேரமானதும் பூங்காவின் துப்பரவாளர் வந்து, சார்! நேரம்மாச்சி சார் புறப்படுங்க என்று சொல்ல... தனது பழைய நினைவுகளில் இருந்து மீண்டான்.

கொஞ்சம் மனப்பாரம் குறைந்திருந்தது. "இதுவும் கடந்து போகும்" என்று தைரியத்தை வரவைத்துக்கொண்டு தனது போன்க்கு உயிர் கொடுத்தான். உடனே அழைப்பு வந்தது, சந்தியாதான் ...

"ஹலோ!"

"மாமா, உங்களை வீட்டுக்கு வரவைத்து  ஒருவேளை சாப்பாடுகூட போடாமல் எனது கதைகளைச் சொல்லி கஷ்டப்படுத்திவிட்டேன். மன்னிச்சிடுங்க.. மனசுல கிடப்பதை உங்ககிட்ட அப்படியே சொல்லணும் என்று தோன்றியது, உங்களை இழந்ததினால் எனக்கு கிடைத்த தண்டனை இதுதான் என்றெல்லாம் சொல்லி உங்ககிட்ட மன்னிப்பு கேட்கனும் என்றுதான் சொன்னேன். "

" மன்னிக்கனும் சந்தியா, நீ சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு சும்மா இருக்கமுடியவில்லை, இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தால் உங்க அம்மாகிட்ட சண்டைக்கு போயிருப்பேன். இப்ப என்னால் உனக்கு எந்த ஆருதலும் சொல்லமுடியாது, அப்படியே சொன்னாலும் அது உன் காயத்துக்கு மருந்தாக இருக்காது. எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும் அவர் மாறுவார். அவரை மாற்றவேண்டியது உன் கையில்தான் இருக்கிறது. முதலில் என்னோடு அவரை ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்திவிடு! அதனால்தான் இன்னும் நீ மனதளவில் பாதிக்கபடுகிறாய். நீ என்னை காதலிக்கவில்லை என்றால் இப்படிப்பட்ட  ஆண்களும் இருக்கிறார்கள் என்ற எண்ணமே வந்திருக்காது, அதுமட்டுமில்லை 'ஒவ்வொன்றையும் மற்றொன்றோடு ஒப்பிட்டு பார்க்கும்பொழுதுதான் "இக்கரைக்கு அக்கரை பச்சை!" என்ற எண்ணம்  தோன்றும்.' இல்லை என்றால் இதுதான் நமக்கு கிடைத்த வாழ்க்கை என்று வாழ கற்றுக்கொள்வோம்."

"ம்ம்ம்ம்..."


"இப்போது உனக்கு திருமணம் முடிந்துவிட்டது, உன்னிடம் எனக்கு எந்த உரிமையும் இல்லை, உனக்காக நான் யாரிடமும் எதுவும் பேசமுடியாது, அப்படி பேசினால் அதற்கு பெயர் வேறு! என்று சமுதாயம் முத்திரை குத்திவிடும். நம்மளைவிட மோசமாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள் என்று எண்ணிப்பார் இந்த வாழ்க்கையே பெருமையாகத் தெரியும். அவர் முரட்டு குணமுடையவர் என்றாலும் இதுவரை உனக்கும் குழந்தைக்கும் தேவையானதை வாங்கி கொடுத்திருக்கார். உங்களை பட்டினி போட்டதில்லை, எப்படியாவது எந்த வேலைக்காவது போகிறார். இல்லையா?"

"ஆமாம் மாமா, அதெல்லாம் எந்த வேலையாக இருந்தாலும் போய்டுவார்."

"இப்போதுகூட உங்க நலன் கருதிதான் வெளிநாடுவரை சம்பாதிக்க சென்றிருக்கிறார். அவருக்குள்ளும் நல்ல குணங்கள் இருக்கிறது. உன்னை சீவி மினுக்கவேண்டாம் என்று சொல்வதும், நல்ல துணிமணி கட்டவேண்டாம் என்று சொல்வதும் உன்மேல் உள்ள சந்தேகத்தால் இல்லை, அது ஒருவிதமான பாசம், உன்னை யாருக்கும் விட்டுகொடுக்க அவருக்கு விருப்பம் இல்லை, யாரும் உன்னைப்பார்த்து எதுவும் சொல்லிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். அவரின் பாசத்தை மென்மையாக வெளிப்படுத்தத் தெரியவில்லை, ஒரு விதமான பிடிவாதக்குணம் கூட சேர்வதால் அதட்டலாகவே உனக்கு தெரிகிறது. அப்படி உன்மேல் அவருக்கு சந்தேகம் இருந்திருந்தால் உன்னை தனியாக விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு பொழப்பை தேடி போயிருக்கமாட்டார். இங்கு கிடைக்கும் வேலைகளை மட்டும் பார்த்துக்கொண்டு உன்னுடனே இருந்திருப்பார். இதைவிட இன்னும் நல்லபடியாக வாழனும் அதற்கு இன்னும் பணம் தேவைப்படுகிறது என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார். "

"ம்ம்ம்..."

" நீ அவரிடம் சிரித்து பேசாததும் உன்னுடைய தவறுதான். அவர் கோபபட்டால் உனக்கென்ன நீ எப்போதும்போல் சிரித்து பேசு, அவர் அடிக்க வந்தால் நீ சிரித்துக்கொண்டே அவரை கட்டிபிடித்துக்கொள். இப்போது வெளிநாட்டில் இருப்பதால் அதிக பாசத்துடன் அவரிடம் பேசு, அவரின் உடல்நலனில் அக்கரை எடுத்துக்கொள் அவர் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவார்."

"சரிங்க மாமா, இப்போதுதான் சில விஷயங்கள் புரிகிறது, நானும் வாழ்க்கை நாம் நினைத்த மாதிரி அமையவில்லையே என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாளும் வெறுப்பாகத்தான் பெசிருக்கிறேன். எப்பவும் எதையோ இழந்ததைபோல், இருப்பதை விட்டுவிட்டு இல்லாததை தேடியிருக்கிறேன். முழு கவனத்தையும் அவர்மீது காட்டவில்லை என்பதுவும் உண்மைதான்."

"ம்ம்ம், அவர் மட்டும் உன்னிடம் நிறைகளை விட்டுவிட்டு குறைகளை கண்டு பிடிக்கவில்லை, நீயும்தான் அவரின் நிறைகளை விட்டுவிட்டு குறைகளை மட்டும் கண்டிருக்கிறாய். இனிவரும் காலம் அவரின்மீது கொஞ்சம் கவனமாக இருக்கவும். நான் உன்னைப் பார்த்துவிட்டேன் இனி பார்க்க வரமாட்டேன். நான் உன் கண் முன்னால் வந்தால் உன் நினைப்பு என்னைவிட்டுப் போகாது. என்னையும் மாற்றிவிடுவாய். நாம் இருவரும் காதலர்கள் இல்லை, நண்பர்கள், உறவினர் என்பது மட்டும்தான் உனது எண்ணத்தில் இருக்கவேண்டும். அப்படி நீ மாறும்போது கண்டிப்பாக நான் எப்போதும்போல் உன்னைப் பார்க்க வருவேன். ஒரு நண்பனாக வாழ்க்கையில் முன்னேற உதவி செய்வேன். அதுவும் நேரிடையாக இல்லை வேறு யார் மூலமாகத்தான் இருக்கும். இனிமேலும் அவருக்கு என்னால் ஒரு சந்தேகம் வரக்கூடாது."

"ம்."

"என்ன.... ம்?, வாய் திறந்து பேசு, நீ இப்போது சின்னப்பிள்ளை இல்லை, உனக்கே இரண்டு குழந்தைகள் இருக்கிறது. சில நேரம் என்னைவிட நிதானமாக இருக்கிறாய். சிலநேரம் நானும் ஒரு சாதாரண பெண்தானே என்று நிருபித்துவிடுகிறாய். சரி அத்தைகிட்ட நான் இப்போது பேசியதை எல்லாம் சொல்லிடு, அவங்க நான் சாப்பிடாமல் வந்ததை கண்டு ஏதாவது நினைப்பாங்க, மேலும் அவங்கமேல் எந்தவிதமான கோபமும் இல்லை என்றும் சொல்லிவிடவும். நடப்பதெல்லாம் நமது விதி, யாரையும் குறைகூறி ஒன்னும் கிடைக்கப்போவதில்லை. "

"அம்மாவும் அருகில்தான் கேட்டுகிட்டு இருக்காங்க, இருந்தாலும் நீங்க சாப்பிடாமல் போனது கஷ்டமாக இருக்கிறது. அம்மா உங்ககிட்ட பேசணும் என்று சொல்றாங்க மாமா."

"ம்ம்ம் கொடு"

"தம்பி நான்தான் இது எல்லாத்துக்கும் காரணம், அண்ணன்மேல் உள்ள பாசத்தால் இப்படி செய்துவிட்டேன் என்னை மன்னிச்சிடுப்பா, இவ்ளோ நாள் கழித்து வந்தாலும் புள்ளைக்கு இவ்ளோ அறிவுரைகளை சொல்லி அவளுக்கு புரிய வச்சிருக்க. எனக்குதான் உன் மாமியாராக வரும் பாக்கியம் இல்லை, எனக்கு இன்னொரு பொண்ணும் இல்லை உனக்கு கட்டி கொடுக்க . சரிப்பா அப்பா அம்மாவை கேட்டதாக சொல்லு, உன் குணத்திற்கு நல்ல பொண்ணாக அமையும். கல்யாணத்துக்கு வந்து கூபிடுப்பா."

"ம்ம்ம் சரிங்க அத்தை. பெரிய வார்த்தைகள் எல்லாம் பேசவேண்டாம் எல்லோரையும் கேட்டதாக சொல்கிறேன் அத்தை."

"சரிப்பா இந்தா சந்தியாகிட்ட பேசு"

"ம்ம்ம் கொடுங்க."

"மாமா, இப்ப எங்க இருக்கீங்க?"

"நாம் நிறைய பேசி சிரித்த இடத்தில்...!"

"அந்த பூங்காவிலா? நினைச்சேன் போகும் வழியில்தான் இருக்கிறதே எப்படியும் அங்க போகாமல் போகமாட்டீங்கன்னு நினைச்சேன். இருந்தாலும் சாப்பிடாமல் போனது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. மோதிரம் ரொம்ப பிடிச்சிருக்கு மாமா எனக்காக வாங்கியதா?"

"ம்ம்ம் உனக்காக வாங்கியதுதான், எனது சம்பாத்தியத்தில் உனக்கு காதல் பரிசாக வாங்கி கொடுத்தனுப்ப நினைத்தேன் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது இது காதல் பரிசு இல்லை, உனது கல்யாணப்பரிசு."

"ம்ம்ம் எப்படி இருந்தாலும் இது உங்க நினைவு பரிசு எப்பவும் என் கையில் இருக்கும்."

"ம்ம்ம் எப்படியோ வைத்துக்கொள் பிறகு இதன் பெயரில் அவரிடம் அடிவாங்காமல் இருந்தால் சரிதான். நான் சொன்னதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள் எக்காரணம் கொண்டும் நமது காதல் அசிங்கப்பட்டு விடக்கூடாது, அழிந்துவிட்டதாக இருந்தாலும் பரவாயில்லை. சரி நேரமாச்சி நான் வீட்டுக்கு போறேன்."

"ம்ம்ம் சரிங்க மாமா, கண்டிப்பாக நாம் நல்ல உறவினர்களாகவும், நண்பர்களாகவும் இருப்போம். இத்தினை நாட்களாக யார் யாரோ! என்ன என்னவோ! அறிவுரைகள் சொன்னாங்க என் காதில் விழவேயில்லை, ஆனால் நீங்க இன்னைக்கு சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ஆணி அடித்ததைப்போல் என் மனதில் பதிந்துவிட்டது. இப்பவும் உங்களை நினைத்தால் உங்களை காதலித்ததை நினைத்தால் ரொம்ப பெருமையாக இருக்கிறது. "

"எனக்கும்தான், இருந்தாலும் அடிக்கடி வெளியில் சொல்லிக்கொள்வதும் சரியில்லை, ஓகே பை நான் புறப்படுகிறேன். பிறகு நேரம் கிடைக்கும்போது போன் செய்கிறேன்."

"ஓகே மாமா, இருட்டுல பார்த்து போங்க."

போன் இணைப்பை துண்டித்துக்கொண்டு சுரேஷ் வீட்டுக்கு புறப்பட்டான். போகும்போது கொஞ்சம் தற்பெருமையாக இருந்தது. எப்படி இப்படியெல்லாம் பேசினோம் என்று அவனுக்கே அவனை ஆச்சர்யாமாக இருந்தது. ஆனால் உள் மனது சொன்னது "ரொம்ப நல்லவன்டா நீ!"

"வீட்டுக்கு வந்ததும் அம்மா எங்கடா போன? போன் ஸ்வீட் ஆப் என்று சொன்னது?"

"நண்பர்களை பார்க்க போயிருந்தேன், சார்ஜ் இல்லைம்மா, என்று சொல்லி எப்படியோ சமாளித்தான்."

"ம்ம்ம், சரி நீ முதன்முதலில் ஒரு பொண்ணை பார்த்துட்டு வந்தியே, நம்ம சொந்தத்தில் ஒரு பொண்ணு அவங்க வந்திருந்தாங்க, பொண்ணை கொடுக்க விருப்பமாம் உன்னுடைய ஜாதகத்தை வாங்கிகிட்டு போயிருக்காங்க, நாளைக்கு என்னையும் உங்க அப்பாவையும் கூப்பிட்டு இருக்காங்க, அப்படியே ஜாதகம் பார்த்து சரியாக இருந்தால் என்னைக்கு "நிச்சயதார்த்தம்" என்றும் முடிவு செய்துவிடலாம் என்று சொல்லிருக்காங்க, நாங்களும் நாளைக்கு போறோம். உனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்குத்தானே?"

 "அதுக்குள்ள எதுக்கும்மா அவசரம், பொண்ணு கொஞ்சம் ஒல்லியாதான் இருந்தது படிப்பதற்கு விருப்பம் தெரிவிக்கும் பொண்ணை கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்துவது தவறும்மா."

"அந்த பொண்ணு ஒத்துகிட்டபிறகுதான் அவங்க அப்பாவே இங்கு வந்திருந்தார், உனக்கும் லீவு குறைவு என்று சொன்னியே அதனால் இந்த பொண்ணு ஜாதகம் சரியாக வந்தால் முடித்துவிடலாம் என்று நினைக்கிறோம்."

"அம்மா, நீங்க ஜாதகம் பாருங்க, சரியாக வந்தால் சொல்லுங்க, அதன் பிறகு நான் அந்த பொண்ணிடம் கொஞ்சம் தனியாக பேசிய பிறகே முடிவு சொல்வேன்."

"ம்ம்ம் சரி ,சாப்பிட்டுவிட்டு போய் தூங்கு, நாளைக்கு காலையிலையே நாங்க போய்டுவோம்.

" ம்ம்ம் சரிம்மா குட் நைட்."

மறுநாள் ஜாதகம் சரியாக இருக்க, சுரேஷின் அப்பா அம்மாவுக்கும் விருப்பம் இருந்தது அதனால் நிச்சயதார்த்த தேதியையும் அங்கேயே முடிவு செய்தனர். சும்மா ஒரு கண் துடைப்பிற்காக சுரேஷ் நீ போயி அந்த பொண்ணுகிட்ட பேசணும் என்றால் பேசிவிட்டு வா  இன்று மதியம் அவ கம்ப்யூட்டர் கிளாஸ் வருவாள் அப்போது நீ அங்கு வருவதாக சொல்லிருக்கிறேன் என்று சொன்னார்கள். அவர்கள் வீட்டிலும் மாப்பிள்ளை எது கேட்டாலும் சரி என்று சொல்லிடு, பிடிச்சிருக்கா என்றால் பிடித்திருக்கிறது என்று சொல். இப்படியெல்லாம் சொல்லி அனுப்பிருந்தார்கள். தனியாக சந்தித்ததில் பெருசா எதுவும் பேசமுடியவில்லை. சுரேஷ் எது சொன்னாலும் சரிங்க,சரிங்க  என்று தலையாட்டும் பொம்மையாக இருந்தாள். இவனும் சரி அமைதியானவள் நம் தலையில் இவள்தான் என்று எழுதி வைத்திருந்தால் என்ன செய்வது என்று ஓகே சொல்லிவிட்டு புறப்பட்டான்.

அடுத்தநாள் உஷாவுக்கும், சுரேஷ்க்கும் திருமண நிச்சயதார்த்தாம் நடக்க இருப்பதாக உறவினர்கள் அனைவர்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டது.

***************************************************************************

சந்தியா என்ன சொன்னாள்? ப்ரியா என்ன ஆனாள்? சொந்தத்தில் உள்ள அக்கா பொண்ணு என்ன ஆனது? உஷா சுரேஷ் நிச்சயதார்த்தம் எப்படி நடைபெறுகிறது? அனைத்தும் கடைசி பாகத்தில் விரைவில்..............

************************நன்றி மீண்டும் சந்திப்போம்.**************************


Saturday, March 2, 2013

பதிவர்கள் கவனிக்கவும். ப்ளீஸ்.


வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கம்.

     நான்  ஒரு மாதக்காலமாக வலைப்பதிவு பக்கம் வரவில்லை. பதிவும் எழுதவில்லை இப்போதுதான் ஒருவாரமாக வருகிறேன். எனக்கு சில நண்பர்களின் வலைப்பதிவை படிக்க முடியவில்லை. காரணம் என்னவென்றும் தெரியவில்லை. இது என்னுடைய பிரச்சினையா? அல்லது நண்பர்களின் வலைப்பதிவின் பிரச்சினையா என்றே தெரியவில்லை. 

    அதாவது மூன்று வினாடிக்கு ஒருமுறை தானாகவே "Reload" ஆகிறது. நான் பதிவின் கடைசிக்கு இழுத்துச் சென்றாலும் "Reload"  ஆகி மீட்டும் வலைப்பதிவின் பெயரை மட்டும் காட்டுகிறது.  முழுவதுமாக "Open" ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சில  வலைப்பதிவின் பெயரைக் குறிப்பிடுகிறேன்.
(சிலருடையது மட்டும்தான் என்பதுவும் குறிப்படத்தக்கது)

இவர்களின்  பதிவுக்கு என்னால் போகமுடியவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை.


    எனது  தவறாக இருந்தால் மன்னிக்கவும், அல்லது வலைப்பதிவர்களின் தவறாக இருந்தால் சரி செய்யவும். நான் "Firefox" மற்றும் " Google chrome" பயன்படுத்துகிறேன். எனக்கு மட்டும்தான் இப்படி தெரிகிறதா? அல்லது எல்லோருக்கும் இப்படி தெரிகிறதா? என்று தயவு செய்து தெரிவிக்கவும். திருத்திக்கொள்கிறேன். விபரம் தெரிந்தவர்கள் உதவி செய்யவும்.

******************************************************************