Pages

Friday, March 15, 2013

புதிய புதிய சமூக வலைத்தளங்களின் வருகையால் வலைப்பதிவர்களின் மனது பாதிக்கப் படுகிறதா?


கேள்வி: பதிவர்கள் பதிவுகள் எழுதுவதை குறைத்துக்கொண்டு ஏன் பேஸ்புக் பக்கம் நழுவுகிரார்கள்?

அவர்கள் உண்மைகள் அவர்கள் தனது இன்றைய பதிவில் ரொம்ப அழகான கேள்வியும் அதற்கான விளக்கமும் கொடுத்திருக்கிறார் படித்ததும் மனம் கனத்துபோனது.
_________________________________________________________________________

கூகிள் ஆரம்பித்த பிறகுதான் வலைத்தளமும் உருவானது. கூகுள் எப்பொழுது ஆரம்பமானது என்று பார்த்தால் 1998 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ம் தேதி லாரி பேஜ் மற்றும் சேர்ஜ் பிரின் ஆகியோரால் துவக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டிற்கு பிறகுதான் கூகுள் தேடுபொறியானது உலகின் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது. அதன்பிறகு கூகுள் தேடுபொறி அதி வேக வளர்ச்சியடைந்ததை கண்டு கூகுள் நிறுவனம் பல புதுய சேவைகளையும் கொண்டுவந்தது. 

ஜிமெயில் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பகாலத்தில் பலருக்கும் பல பிரச்சனைகள் இருந்தது, நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக ஒவ்வொன்றாக சரி செய்து 2005 முதல் அனைவராலும் மிக எளிதாகப் பயன்படுத்தும் வகையில் வெளியானது.

வலைப்பதிவு 1997 ஆம் ஆண்டு Weblog என்ற பெயரில் Jorn Barger என்பவரால் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. இந்த காலண்டுகளிலேயே வலைதள வல்லுனர்களால் Blogger என்ற வலைத்தளமும் துவங்கி எழுதி வந்தனர். 2003 ஆம் ஆண்டுதான் கூகுள் நிறுவனத்தில் இணைக்கப்பட்டது. முதன் முதலில் தமிழ் வலைப்பதிவராக கார்த்திகேயன் இராமசுவாமி அவர்களால் 2003 ம் ஆண்டுதான் தனது முதல் பதிவை எழுதினர். அவர் பதிவைக்கான இங்கே சொடுக்கவும். தமிழில் தட்டச்சவும் அப்போதுதான் கற்றுக்கொண்டார்கள் . இதையெல்லாம் சொல்லிக்கொண்டு வருவதற்கு காரணம் மிகச் சுருங்கிய காலகட்டத்தில்தான் விஞ்ஞானம் வளர்ந்துள்ளது.

கடந்த  பத்து வருடங்களாகத்தான் தமிழில் வலைப்பதிவு எழுதி வருகிறார்கள். நாளுக்குநாள் பொழுதுபோக்கிற்காக பல சமூகதளங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. யாகூவில் குரூப், சாட் , மெசெஞ்சர் என பல வகைகள், ஓர்குட் , ஹை5, போன்றவைகள் இன்று சிலரால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும் அங்கும் எழுதுபவர்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொள்பவர்கள்என இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதற்கு முன்பு நமது முன்னோர்களும் வலைப்பதிவு எழுதவில்லை, நமக்கு பின்பு வரும் இளைய சமுதாயத்தினரும் பதிவு எழுதுவார்களா? என்பதில் சந்தேகம்தான். இப்போதெல்லாம் எழுதாமலே வாயால் சொன்னால் போதும் அப்படியே தட்டச்சு செய்யும் மென்பொருளும் வந்துவிட்டது. காலம் வெகு விரைவாக வளர்ந்துகொண்டே செல்கிறது. இன்னும் என்ன என்ன வரப்போகிறதோ?

போன்ற  சமூகவலைதளங்களில்தான்  இப்போது அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். போததக்குறைக்கு இப்போது பேஸ்புக்கில் கூட குரூப் அமைக்கலாம். குரூப் குரூப்பா பேசலாம். படங்களைப் பகிரலாம். பின்னூட்டமாக ஒரு சிம்பிள் :-) போட்டாலே போதும். படிக்க நேரம் இல்லை என்றால் ஒரு லைக் மட்டும் போதும். இப்படித்தான் நடக்கிறது படித்தாலும் படிக்கவில்லை என்றாலும் ஒரு லைக் மட்டும் போட்டுவிட்டு படித்ததைப் போல் காட்டிக்கொள்கிறார்கள். புதிய புதிய யுத்திகளோடு வந்தவண்ணம் இருக்கிறது. மக்கள் எப்பொழுதும் புதியதையே விரும்புகிறார்கள் என்பதே உண்மை!

இதில் ஒரு உண்மை என்னவென்றால் புதிது புதிதாக வருபவர்கள் பேஸ்புக்கில்தான் வந்து இணைகிறார்கள். எல்லோராலும் மிக எளிதில் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளதுதான் அதன் சிறப்பம்சம். வலைப்பதிவில் எழுதுபவர்கள்தான் கூகுள்+ மற்றும் கூகுள் குழுமங்கள் கூகுள்BUZZ லும் எழுதுதிருக்கிரார்கள். இப்பொழுதும் எழுதுகிறார்கள். படிப்பது எழுதுவது என்பதெல்லாம் ஒரு விதமான கலை, இது எல்லோராலும் முடியாது. முடிந்தவன் எழுதுகிறான் முடியாதவன் அதனைப் பயன்படுத்திக்கொள்கிறான். அதாவது நாம் எழுதியதை காப்பியடித்து போட்டு லைக் மற்றும் பாராட்டுக்களை வாங்கிக்கொள்கிறார்கள். மகாத்மா காந்தியடிகள் அவர்கள் அவரவர்களின் ஆடையை அவரவர்களே சலவை செய்து உடுத்திக்கொள்ளவேண்டும் என்று சொன்னார். இதை இப்பொழுது யார் கேட்க்கிறார்கள் வீதிக்கு நான்கு லாண்டரி கடைகள் இருக்கிறது. 

பதிவின் நிறைவு பகுதிக்கு வருகிறேன்.

        நாம் ஒரு கதையையோ கட்டுரையையோ வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டால் அது பொது சொத்தாகிவிடுகிறது.அதை யார் வேண்டுமானாலும் ரசிக்கலாம், யாருக்கு வேண்டுமானாலும் பகிரலாம். நாம் ஒன்றும் சொல்லமுடியாது. ஒரு திரைபடத்தின் பாடல்  ஹிட் பாடல் என்றால் உலகில் உள்ள எல்லோரும் ரசிக்கிறார்கள், எப்பொழுதும் முனுமுனுக்கிறார்கள் சிலநேரம் அதையே ஸ்டேடஸ்சாக போடுகிறார்கள் இதற்காக எந்த பாடல் ஆசிரியர்களும் வருத்தம் தெரிவிப்பதில்லை. படைப்பவன் படைப்பாளி ஒரு படைப்பை படைத்துவிட்டால் அதனை மக்களுக்காக அற்பணித்துவிட்டால் அத்தோடு முடிந்துவிடுகிறது. படைப்பாளனின் அடுத்த படைப்பை நோக்கி போய் கொண்டே இருக்கவேண்டும். ஒவ்வொரு படைப்பிற்கும் நல்ல கருத்துகளும் கேட்ட கருத்துகளும் வரும் அதற்கு மட்டும் முடிந்தவரை பதில் சொன்னால் போதும். அது இல்லாமல் அதனையே சுற்றி சுற்றி வந்தால் குறைகள் மட்டுமே மிஞ்சும் நிறைகள் இருக்காது. கடவுள் இருக்கும் உலகத்தில் அரக்கனும் இருந்தானாம் அதேபோல் நல்லவர்கள் இருக்கும் உலகத்தில்தான் அயோக்கியர்களும் இருக்கிறார்கள். படைப்பதற்கு ஒருத்தன் இருந்தால் அதனை அழிப்பதற்கு ஒருவன் அன்றே பிறந்திருப்பான் என்று நினைத்துக்கொள்ளவேண்டும்.

வந்தவர்களே வருகிறார்கள் கருத்து சொல்கிறார்கள், புதியதாக யாரும் வருவதில்லை என்பதெல்லாம் அவர்கள் உண்மைகள் அவர்களின் குற்றச்சாட்டு/ஆதங்கம் மனம் உடைந்து எழுதியிருக்கிறார். ஒருவிசயம் உண்மை சார் வலைப்பதிவு எழுதுபவர்களிலும் எழுதுபவர்கள் எல்லோரும் மற்றவர்களின் பதிவுகளைப் படிப்பதில்லை!, படிப்பவர்கள் எல்லோரும் கருத்து சொல்வதுவுமில்லை! கருத்துக்களுக்காகவும் ஓட்டுக்காகவும் பதிவு எழுதவேண்டாம். என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதை சொல்லுங்கள். படிப்பவர்கள் பயனடையட்டும், அல்லாதவர்கள் நஷ்டமடையட்டும் இதனால் நமக்கு என்ன நஷ்டம். 

அவர்கள் உண்மைகள் அவர்களின் பதிவிற்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

விடுங்க சார்! 

       நாமெல்லாம் படைப்பாளி கடல் நீர் போல், அதில் ஒரு துளி நீரை அள்ளிக்கொண்டு சென்றுவிட்டால் நாம் அழிந்துவிடமாட்டோம். மேலும் நமது மூலையில் நீர் ஊற்று சுரந்துகொண்டே இருக்கும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!. எத்தினை எத்தினை சமூக தளங்கள் வந்தாலும் நமது படைப்புகளை எழுதி சேமித்துவைக்க புதியதாக ஒரு இடம் வரும்வரை வலைப்பதிவுகளை எழுதுபவர்களும் படிப்பவர்களும் எப்பொழுதும் இங்கு சுத்திக்கொண்டேதான் இருப்பார்கள். நம்பிக்கையோடு எழுதுங்கள். நமது இன்றைய அனுபவங்கள்தான் எதிர்கால இளைஞர்களின் வழிதடங்கள்களை நீக்கும். என்ற நம்பிக்கையோடு எழுதுங்கள்.

*************************நன்றி, மீண்டும் சந்திப்போம்**************************

15 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் குறிப்பிட்ட தளத்தையும் படித்தேன்...

உங்களின் உற்சாக வரிகள் அருமை...

தொடர வாழ்த்துக்கள்...

Avargal Unmaigal said...

///வந்தவர்களே வருகிறார்கள் கருத்து சொல்கிறார்கள், புதியதாக யாரும் வருவதில்லை என்பதெல்லாம் அவர்கள் உண்மைகள் அவர்களின் குற்றச்சாட்டு/ஆதங்கம் மனம் உடைந்து எழுதியிருக்கிறார். ஒருவிசயம் உண்மை சார் வலைப்பதிவு எழுதுபவர்களிலும் எழுதுபவர்கள் எல்லோரும் மற்றவர்களின் பதிவுகளைப் படிப்பதில்லை!, படிப்பவர்கள் எல்லோரும் கருத்து சொல்வதுவுமில்லை! கருத்துக்களுக்காகவும் ஓட்டுக்காகவும் பதிவு எழுதவேண்டாம். என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதை சொல்லுங்கள். படிப்பவர்கள் பயனடையட்டும், அல்லாதவர்கள் நஷ்டமடையட்டும் இதனால் நமக்கு என்ன நஷ்டம். ///

சார் நான் ஒன்றும் மனம் உடைந்து எழுதவில்லை.. என்ன நடக்கிறது என்பதைதான் எழுதி இருக்கிறேன். நான் "எனது பொழுது போக்குகாவே" எழுதுகிறேன் நான் ஒட்ட்டுக்காகவும் கருத்துக்காவும் எழுதவில்லை நண்பரே. அது போல சமுகத்தை திருத்தவும் எழுதவில்லை. இதை நான் பல இடங்களில் மிக அழுத்தமாக சொல்லி இருக்கிறேன் இதை எனது பதிவை தொடர்ந்து படித்துபர்வர்களுக்கு நன்கு தெரியும்நான் எனது பதிவுகளை காப்பி அடித்து தங்களது சமுகதளத்தில் போடுகிறார்கள் என்று எங்கும் சொல்லவில்லை நண்பரே . நான் பொதுவாக அடுத்தவர்களின் கருத்தை எடுத்து தம் கருத்தாக போடுகிறார்கள் என்றுதான் சொல்லி இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை நன்கு படித்து பார்க்கவும்

பசி பரமசிவம் said...

மனதைத் தொட்ட பதிவு.

அருணா செல்வம் said...

சிந்திக்க வைக்கும் பதிவு.
வாழ்த்துக்கள்.

rajalakshmi paramasivam said...

உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே...

ezhil said...

படைப்பாளிகள் உடனடி அங்கீகாரத்திற்கு ஆசைப்பட்டு முக நூலுக்கு செல்கிறார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும்.. அங்கே விவாதத்திற்கு உடனடி வாய்ப்புமுண்டு.பதிவு என்பது போக வேறு வகைகளிலும் பயன் இருக்கிறது...மேலும் இந்த காப்பி பேஸ்ட் செய்து புகழ் பெறும் வகையறாக்கள் கொஞ்ச நாள் தான் அந்த இன்பத்தில் இருக்கமுடியும்...அவர்களெல்லாம் பதிவர்களே கிடையாதே....

s suresh said...

அருமையான அலசல் பதிவு! உற்சாகமூட்டும் வரிகள்! படைப்பவன் படைத்தபின் அது பொது சொத்தாகிவிடுகிறது! உண்மைதான்! நன்றி!

Sasi Kala said...

நாமெல்லாம் படைப்பாளி கடல் நீர் போல், அதில் ஒரு துளி நீரை அள்ளிக்கொண்டு சென்றுவிட்டால் நாம் அழிந்துவிடமாட்டோம்
வெகு அழகாக உற்சாகம் தரும் விதம் சொன்னீர்கள். உண்மை தான் .

Raya durai said...

அருமையான பதிவு...
நாமெல்லாம் படைப்பாளி கடல் நீர் போல், அதில் ஒரு துளி நீரை அள்ளிக்கொண்டு சென்றுவிட்டால் நாம் ...... தொடர்ந்து எழுத நம்பிக்கை தரக்கூடிய வரிகள்

Jayadev Das said...

நாம் சமூக வலைத் தளங்களுக்கும் நமக்கும் ரொம்ப தூரம். ஹி .......... ஹி .......... ஹி ..........

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.....

உஷா அன்பரசு said...

hmmm.. dont feel..!

ஆர்.வி. ராஜி said...

பயனுள்ள பகிர்வு. மேலும் தொடர வாழ்த்துக்கள்.

malar balan said...

புரிகிறது சரியா சொல்லிருக்கீங்க ஊக்கம் கொடுக்கும் பதிவு நன்றி
வலைச்சரம் மூலம் அறிந்து கொண்டேன் உங்களை நானும் அறிமுகம் தான்
நண்பர் வட்டத்தில் கலந்துள்ளேன் என்poovizi.blogspot.in நேரம் இருப்பின் வாருங்கள் கருத்து கூற

சே. குமார் said...

அருமையான பகிர்வு...

Post a Comment