Pages

Sunday, March 31, 2013

சவூதி அரேபியாவில் வேலைப்பார்க்கும் இந்தியர்களுக்கு வேலை போகும் அபாயம்!

 கடந்த வருடமே சவுதியிலுள்ள கம்பேனிகளை 3 கேட்டகிரியாக பிரித்திருந்தார்கள்.

1. சிவப்பு
2. மஞ்சள்
3. பச்சை

சவுதி மண்ணின் மைந்தர்களுக்கு சரியான அளவு இட ஒதுக்கீடு வழங்கிய கம்பேனிகள் பச்சையிலும், இழுபறியில் இருக்கும் கம்பேனிகள் மஞ்சள் நிறத்திலும், சிவப்பில் இருக்கும் கம்பேனிகள் அதை கடைபிடிக்கவில்லை என்றும் போன வருசமே வரிசைபடுத்திவிட்டனர். மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை பெற்ற கம்பேனிகள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவரும் தங்களை சரி செய்துக்கொள்ள காலக்கெடு கொடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


நான் மலையாள FM சேனலில் கேட்டதும், அதில் நேரலையாகவே சவுதியில் வேலைப்பர்க்கும் நண்பர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள். சிலர் கண்ணீரோடு எதிர்காலம் எப்படி இருக்கபோகிறதோ? இதுவரை எதுவும் சேர்த்து வைக்கவில்லை, சம்பாதித்தோம் சாப்பிட்டோம் அவ்ளோதான் எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்கவே இல்லை. இப்பொழுது வேலை போகும் அபாயம் வந்ததும்தான் இந்த சிந்தனையே வருகிறது என்றும் மிகவும் கவலையோடு பலர் பேசினார்கள்.

 சரி உண்மையான நிலை என்ன? என்று சவூதியில் வேலைப்பர்க்கும் பலரிடம் FM சேனல்காரர்கள் கேட்டார்கள், அதில் அங்குள்ள லாயர் ஒருவர் சொன்ன தகவல் பின்வருமாறு...

கிரீன் கார்டு:-
இந்த கார்டு கிடைத்த கம்பெனியில் வேலை பார்ப்பவர்களின் வேலைக்கு எந்த ஆபத்தும் கிடையாது, காரணம் இவர்கள் சவூதி அரசாங்கம் சொன்னதுபோல் எல்லா வருடமும் தங்களுடைய லைசென்ஸ்கள், மற்றும் எல்லவிதாமான அப்ரூவல்களையும் பெற்றுள்ளது, அதுமட்டுமில்லாமல் சவுதியின் குடியிருப்பு உரிமையை பெற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதமானம் அல்லது 30% வேலை வாய்ப்பையும் கொடுத்திருக்கவேண்டும். சில முக்கிய பொறுப்புகளை அவர்கள்தான் பார்க்கவேண்டும், உதாரணமாக விசா மற்றும் லைசன்ஸ் சம்மந்தமான வேலைகளை அவர்களுக்குதான் கொடுக்கவேண்டும். மீதமுள்ள 60% to 70% சதமானம் உள்ள வேலைகளை ஒரு குறிப்பிட்ட நாட்டுக்காரர்களுக்கு மட்டும் கொடுக்க கூடாதாம். பல நாட்டுக்காரர்களுக்கு சம பங்காக பிரித்து கொடுத்திருக்க வேண்டுமாம். இப்படி இல்லாமல் ஓரளவுக்கு சரியாக இருக்கும் கம்பேனிகளுக்கு கிரீன் கார்டு கிடைக்குமாம்.


மஞ்சள்  கார்டு:-


பல நாட்டுக்காரர்களும் இருபார்கள், ஆனால் ஒரு சிலரே சவூதியை சேர்ந்தவர்கள், இன்னும் பல பிரச்சினைகள் எல்லாவற்றையும் சரி செய்ய காலக்கெடுவு கொடுத்த கம்பேனிகள்.

சிவப்பு கார்டு:-

அவர்கள் சொன்ன எதையும் சரியாக கடைபிடிக்காதவர்கள். இப்படி பல வகுப்புகள். இந்த கம்பேனியில் வேலைப் பார்ப்பவர்களின் விசா ரினவல் கிடையாது. லைசென்ஸ் புதுபிக்க முடியாது.

இதனைத்தொடர்ந்து  நேற்று முதல் இந்த சட்டத்தை மிகவும் கடுமையாக   கொண்டுவந்திருக்கிறார்கள்.

சரி இப்படிப்பட்ட பிரச்சினைகளால் எல்லா நாட்டுக்காரர்களுக்கும்தானே வேலைப் போகும் எப்படி குறிப்பிட்டு இந்தியர்களுக்கு மட்டும் என்று சொல்கிறார்கள் என்று கேட்டதற்கு:

இங்கு சிறிய சிறிய வியாபாரிகள் என்று பார்த்தால் எல்லாம் இந்தியர்களின் நிறுவனம்தான். அதாவது சிறிய கிரோசரி முதல் ஹோட்டல், டைப்பிங் சென்டர், ஓப்டிகள் சென்டர், கார்கோ, துணிக்கடைகள், எலக்ரோனிக் கடைகள் இப்படி எல்லா விதமான சிறு வியாபாரிகளும் இந்தியர்களே இவர்களின் சதவிகிதம் 60% இருக்கும் அதனால்தான் அதிக அளவில் பாதிக்கப் படப்போவது இந்தியர்களே என்று சொன்னார்.

இதற்கான  காரணம் என்னவென்றால். ஒரு சாதாரண சிறு வியாபாரி இப்போதுள்ள சவூதி சட்டத்தை பின் பற்றவேண்டுமானால் அவர்களின் வருமானத்தில் 70% முதல் 90%சதமானம் வரை செலவாகும் நிலைமை, அதனால் இவர்களால் லைசென்ஸ் புதுபிக்க முடியாத சூழ்நிலை.

70% to 90% சதவிகிதம் எப்படி வருகிறது என்ற கேள்விக்கு:
அ) வருடாவருடம் லைசென்ஸ் புதுப்பித்தல்.
ஆ)வாட்டர் எலெக்ட்ரிசிட்டி .
இ) வாடகை.
ஈ) ஊதியம்.
உ) பெட்ரோல்
இது மட்டுமில்லாமல் இனி சிறு வியாபாரிகள் தங்களுடைய லைசென்ஸ் புதுப்பிக்க ஸ்பான்சர் வேண்டும், அவர் சவூதியில் குடியுரிமை பெற்றவராக இருக்கவேண்டும். (இவர்களுக்கும் கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதமானம் கொடுக்கவேண்டுமோ? என்னவோ? தெரியவில்லை.)

மேலும் அதிக அளவில் அங்கு சிறு வியாபாரம் செய்து வருபவர்கள் மற்றும் வேலைப்பார்ப்பவர்கள் ப்ரீ விசா எனப்படும் கேட்டகிரியை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இப்பொழுதுள்ள இடுக்கட்டான சூழ்நிலையில் தங்களுடைய விசாவை புதுப்பிக்க முடியாது. அதனால் இவர்களுக்கும் வேலைபோகும் என்பது உறுதி.



இந்த வெப்சைட்டுக்கு போயிட்டு, அதிலுள்ள 2வது கட்டத்தில் உங்களோட இக்காமா நம்பரை தட்டிட்டு எண்டர் கொடுத்தா, உங்க கம்பேனியோட ஸ்டேட்டஸ் என்னான்னு தெரிஞ்சிடும்.
அரபிக்ல என்ன எழுதிருக்குன்னு தெரிஞ்சிக்க, அதை அப்படியே காப்பி பண்ணி, கூகிள் ட்ரான்ஸ்லேட்ல பேஸ்ட் பண்ணவும்.இங்கு


சவூதியை தொடர்ந்து குவைத்திலும் இந்த சட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள்.

ஒரு விஷயம் மட்டும் உண்மை நாமெல்லாம் இங்கு பிழைக்க வந்தவர்கள் என்றாவது ஒருநாள் ஊருக்கு போயிதான் ஆகவேண்டும், இங்கு நிறந்தரமாக இருக்கமுடியாது அதனால் நல்லா சம்பாதிக்கும் காலத்தில் சேமித்து வைத்துக்கொண்டு அவர்களே அனுப்புவதற்கு முன்பு நாமலே இந்தியாவில் சென்று பிழைக்க வழி தேடிக்கொள்ளவேண்டும்.

இரண்டு  வருடம் துபாய், சிங்கபூர் மற்றும் சவூதியில் சென்று தங்களுடைய பிரச்சினைகளை குறைத்துக்கொண்டு திரும்ப சொந்த ஊருக்கு வந்துவிடலாம் என்று வந்தவர்கள்தான் அதிகம். மேலும் மேலும் வரும் குடும்ப சுமைகளால் இங்கேயே வேலைப்பர்க்கிரார்கள். வேலை இருக்கிறது சம்பளம் கிடைக்கிறது என்று செலவு செய்தால் இப்படி ஒரு நிலை வரும்போது மீண்டும் பழைய இடத்திலேதான் இருப்போம் ஒரு முன்னேற்றமும் இருக்காது.

சிக்கனமாக செலவு செய்து, சேமித்து குடும்பத்தை காப்போம்.

*************************நன்றி, மீண்டும் சந்திப்போம்***************************

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

இவ்வளவு இருக்கா...?

கொடுத்துள்ள இணைப்புகளைப் பார்க்கிறேன்...

விளக்கங்களுக்கு நன்றி...

உங்கள் தளத்திற்கு Google chrome மூலம் வர முடியவில்லை... காரணம் : udanz

கருத்திட்ட வரும் நண்பர்களுக்கு :

நண்பர்களின் பல தளங்களுக்கு செல்ல முடியவில்லையா...? udanz இணைத்துள்ள எந்த தளத்திலும் உங்களால் செல்ல முடியாது... Google Chrome browser-ல் உங்களின் பதிவுகளை அவர்களால் வாசிக்க முடியாது... Malware என்று வரும்... சரியானவுடன் (??????) இவைகளை இணைத்துக் கொள்ளலாமா...? வேண்டாமா...? உங்கள் விருப்பம்...

தங்களின் தளத்தில் udanz ஓட்டுப்பட்டை அல்லது Logo வைத்திருந்தால் எடுத்து விடுங்கள்... எப்படி...? :-

மேலும் விவரங்களுக்கு : http://facebook.com/dindiguldhanabalan

அன்புடன் DD
http://dindiguldhanabalan.blogspot.com

Anonymous said...

Unmaiyana unmai..

உஷா அன்பரசு said...


சிக்கனமாக செலவு செய்து, சேமித்து குடும்பத்தை காப்போம்.- பொறுப்பா சொல்லி இருக்கிங்க..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டோம். நட்ன்ரி ஆகாஷ்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...

ஜீவா said...

நல்ல தகவல்

Post a Comment