Pages

Saturday, March 2, 2013

பதிவர்கள் கவனிக்கவும். ப்ளீஸ்.


வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கம்.

     நான்  ஒரு மாதக்காலமாக வலைப்பதிவு பக்கம் வரவில்லை. பதிவும் எழுதவில்லை இப்போதுதான் ஒருவாரமாக வருகிறேன். எனக்கு சில நண்பர்களின் வலைப்பதிவை படிக்க முடியவில்லை. காரணம் என்னவென்றும் தெரியவில்லை. இது என்னுடைய பிரச்சினையா? அல்லது நண்பர்களின் வலைப்பதிவின் பிரச்சினையா என்றே தெரியவில்லை. 

    அதாவது மூன்று வினாடிக்கு ஒருமுறை தானாகவே "Reload" ஆகிறது. நான் பதிவின் கடைசிக்கு இழுத்துச் சென்றாலும் "Reload"  ஆகி மீட்டும் வலைப்பதிவின் பெயரை மட்டும் காட்டுகிறது.  முழுவதுமாக "Open" ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சில  வலைப்பதிவின் பெயரைக் குறிப்பிடுகிறேன்.
(சிலருடையது மட்டும்தான் என்பதுவும் குறிப்படத்தக்கது)

இவர்களின்  பதிவுக்கு என்னால் போகமுடியவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை.


    எனது  தவறாக இருந்தால் மன்னிக்கவும், அல்லது வலைப்பதிவர்களின் தவறாக இருந்தால் சரி செய்யவும். நான் "Firefox" மற்றும் " Google chrome" பயன்படுத்துகிறேன். எனக்கு மட்டும்தான் இப்படி தெரிகிறதா? அல்லது எல்லோருக்கும் இப்படி தெரிகிறதா? என்று தயவு செய்து தெரிவிக்கவும். திருத்திக்கொள்கிறேன். விபரம் தெரிந்தவர்கள் உதவி செய்யவும்.

******************************************************************

15 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

எதற்கும் ஒரு முறை CCleaner பயன்படுத்தி விட்டு பிறகு ஆரம்பித்து பார்க்கவும்...

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் குறிப்பிட்ட தளங்கள் எனக்கு அவ்வாறு இல்லை...

கார்த்திக் சரவணன் said...

நீங்கள் பயன்படுத்தும் ப்ரவுசரை ரீஇன்ஸ்டால் செய்யவும்...

பால கணேஷ் said...

எனக்கு இந்தத் தளங்களைப் பார்வையிடுவதிலும் கருத்திடுவதிலும் எந்தக் கஷ்டமும் வரவில்லை நண்பரே. உங்கள் கணினியில்தான் ஏதோ பிரச்னைபோலும்.

RajalakshmiParamasivam said...

நிங்கள் குறிப்பிட்ட தளங்கள் நன்றாகவே தெரிகின்றன.
I don't face any problem.
this is for your information.

vimal said...

நீங்கள் கூறியது போலவே எனக்கும் "Reload" ஆகின்றது பிரச்சனை எங்கு என்பது புரியாத புதிர் .

Jayadev Das said...

ஆகாஷ்,

நீங்கள் Firefox உலவியில், Help க்குச் சென்று Troubleshooting information செல்லவும் அதில் , Reset Firefox ஐச் சொடுக்கவும். மீண்டும் Firefox ஐச் Start செய்யவும். பிரச்சினைகள் தொடர்ந்தாள் தெரிவிக்கவும்.

Internet Explorer நல்ல உலவி இல்லை என்றாலும் எல்லா வலைத் தளங்களும் அதைக் குறிவைத்தே மென்பொருட்கள் உருவாக்கப் படுகின்றன. அதைப் பயன்படுத்திப் பாருங்கள், அதிலாவது இந்தப் பிரச்சினைகள் இல்லாமல் இருக்கிறதா என்று பாருங்கள்.

நான் என்னுடைய வலைப்பூவை லினக்ஸ், விண்டோஸ் இரண்டிலும் வெவ்வேறு இடங்களில் பரிசோதிக்கிறேன், நீங்கள் சொன்ன பிரச்சினைகள் வந்ததில்லை பக்கங்ககள் திறக்கின்றன. இதற்க்கு முன்னர் அருணா செல்வம் ஏன் வலைப்பூ குதிக்கிறது என்றால், ஆனால் நான் மேலும் பலரிடம் பரிசோதிக்கும்படி கேட்டுக் கொண்டேன், பார்த்த பின்னர் அப்படி எதுவும் பிரச்சினை இல்லை என்றே சொல்கிறார்கள்.

எதற்கும் உங்கள் கணினியையும் உலாவியையும் சோதனை செய்யுங்கள்!!

கவியாழி said...

எல்லாம் நம்ம வைரஸ்அண்ணனோட வேலையா இருக்கும் பாருங்க,நீக்குங்க சரியாய்டும்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தனபாலன் அவர்கள் சொல்வது போல சி.கிளீனர் அல்லது வேறு ஏதேனும் மென்பொருட்கள் பயன் படுத்தி temporary internet பைல்ஸ் சை டெலிட் செய்யவும்

semmalai akash said...

மன்னிக்கவும் நண்பர்களே நான் எல்லா முயற்சியும் செய்து பார்த்துவிட்டேன். எனது நண்பன் லேப்டாப்பில் கூட செக் செய்து பார்த்துவிட்டேன். இவர்களுடைய பக்கம் அப்படிதான் குதிக்கிறது. ரீலோடு ஆகிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.

Admin said...

சில தளங்களில் மட்டும் பிரச்சனை உள்ளது. நீங்கள் அமீரகத்தில் இருப்பதால் முகவரி .ae என்று முடியும். அப்படி முடியும் சில தளங்கள் நீங்கள் செய்வது போல redirect ஆகிக் கொண்டிருக்கிறது. தற்காலிகமாக, அந்த தள முகவரியை .com/ncr என்பதுடன் சேர்த்து கொடுக்கவும்.

உதாரணத்திற்கு http://chennaipithan.blogspot.com/ncr

இறைவன் நாடினால் காரணம் என்னவென்பது பற்றி ஆராய்கிறேன்.

blogspot முகவரி வைத்திருப்பவர்கள் http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html இந்த பதிவில் உள்ளபடி செய்தால் இந்த பிரச்சனை வராது.

Admin said...

//நீங்கள் செய்வது போல//

நீங்கள் சொல்வது போல...

:)

Admin said...

இந்த பிரச்சனைக்கான தீர்வு பற்றி பதிவு எழுதியுள்ளேன். நேரமிருந்தால் படிக்கவும்.

http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html

RajalakshmiParamasivam said...

இன்னும் இந்த பிரச்சினை இருந்தால் இந்த சுட்டிக்கு http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html
சென்று பார்க்கவும்.
அந்த நண்பர் தீர்வு சொல்லியிருக்கிறார்.

Unknown said...

எனக்கு அப்படி ஆகலையே

Post a Comment