Pages

Tuesday, November 20, 2012

சும்மா! உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.


            ஒரு வருடத்திற்கு முன்பு ஒருநாள் அதிகாலையில் எழுந்து வேலைக்கு போவதற்காக குளிக்கச் சென்றேன், தலை மயக்கம் இருந்தது எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை, ஏன் இப்படி இருக்கிறது என்று புரியாமல் தவித்தேன் கொஞ்ச நேரத்திற்குள் மயங்கி விழுந்துவிட்டேன். ஒரு பத்து நிமிடம் கழித்து மெல்ல எழுந்து  வந்து படுக்கையில் படுத்துக்கொண்டேன்.

         மறுநாள்  வரை அப்படியேதான் இருந்தது, சரி மருத்துவரிடம் செல்வோம்! ஆலோசனை பெறுவோம்! என்று புறப்பட்டுச் சென்றேன். மருத்துவர் இரத்தம் எடுத்து பரிசோதித்து பார்த்துவிட்டுச் சொன்னார் பயப்படும் அளவிற்கு ஒற்றும் இல்லை 'Blood Pressure' இரத்த அழுத்தம்தான் என்று சொன்னார்.

        "சரி டாக்டர் 'பிரஷர்' எதனால் வருகிறது? எனக்கு எப்படி வந்தது? இதனை முற்றிலும் சரிசெய்ய என்ன செய்யவேண்டும் "என்றுக் கேட்டேன்.

   "இதற்கான சில அடிப்படை காரணங்கள்: அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், புகை பிடித்தல், உணவில் உப்பு சேர்த்துக்கொள்ளுதல், தூக்கம், தொடர்ந்து வேலைகள் இப்படி அடுக்கிக்கொண்டே போனார்."

     "டாக்டர், எனக்கு மது மற்றும்  புகைப் பழக்கங்கள்  கிடையாது, உப்பும் குறைவாகத்தான் சாப்பிடுவேன்." 

        "பயப்படாதிங்க, காரணங்களைத்தான் சொன்னேன்.ஆனால் உங்களுக்கு அந்தளவுக்கு இல்லை, தூக்கம் குறைவு, குழப்பங்கள், நீங்க சாப்பிடும் உணவு,  கோபம், டென்ஷன், சமாதனமில்லாமை இவற்றை சரி செய்தால் போதும்."

        " சரி டாக்டர் நான் இப்ப என்ன செய்யவேண்டும்?"

        "ஒரு நாளைக்கு சராசரியாக 6 முதல் 8 எட்டு மணிநேரம் தூங்குங்க, கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள், எந்தெந்த செய்கையால் அதிக 'டென்ஷன்' வருவதாக உணர்கிறிர்களோ? அதனை பொறுமையாக கையாளும் முறையைக் கற்றுக்கொள்ளுங்கள், டிவி பார்க்கும் பழக்கம் இருந்தால் நகைச்சுவைகளைக் கண்டு சிரித்து மகிழுங்கள், மன அழுத்தம் தானே குறையும். தனிமையில் இருந்து எதையும் யோசிக்கவேண்டாம், மனிதில் உள்ளதை உங்களுக்கு பிடித்த அல்லது நெருக்கமான ஒருவரிடம் எப்பொழும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்." இப்படி  செய்வதனால் மன அழுத்தம் குறையும், எந்த நோயும் இல்லாமல் வாழலாம் என்று அறிவுரைகளை கூறினார்.

         "அப்படியே செய்கிறேன் டாக்டர், சரியான தூக்கம் இல்லை, தொடர்ந்து ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க நேரம் கிடைப்பதில்லை, இரவு நான்கு மணி நேரமும், பகலில் இரண்டு மணி நேரமும் தூக்குகிறேன், நீங்க சொல்வதைப்போல் கோபம்,"டென்ஷன்" எல்லாம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. இதனை குறைக்க முயற்சி செய்கிறேன்."

             "சரிங்க டாக்டர், மன அழுத்தம் கூடிவிட்டது என்பதை  எப்படி தெரிந்துக்கொள்வது? எப்பொழுதும் உங்களிடம் வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டுமா? டாக்டர்."

          "இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது, சில கருவிகளின் உதவியோடு எல்லோரும் வீட்டிலேயே தெரிந்துக்கொள்ள முடியும், அப்படி இல்லை என்றால் தலைவலி, வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் இப்படி சில அறிகுறிகள் இருந்தாலும் இரத்த அழுத்தம் வருவதற்கான அறிகுறிகளாகவே கருதப்படுகிறது." இதில் ஏதேனும் உங்களுக்கு இருப்பதாகத் தெரிந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது என்றார்."

          நல்ல ஆலோசனைகளை கேட்டப் பின்னர்  டாக்டரிடம் இருந்து விடைப்பெற்றேன். முதலில் கோபத்தை குறைத்துக்கொள்வதாக முடிவு செய்தேன். கோபம் வரும் சிலவற்றைக் கண்டால் சிறிது நேரம் அமைதியாக இருப்பேன். சில நேரம்  அமைதியாகவே போயிடுவேன், சில நேரம் பிறகு வந்து பதில் சொல்வேன். சில இடத்தில் கோபமாகப் பேசிவிடுவதும் உண்டு. உடனே அதை மறந்துவிட்டு தவறு யாருடையதாக இருந்தாலும் மன்னிப்பு கேட்டுவிடுவேன். இல்லை என்றால் கை கொடுத்து புன்னைகையோடு விடைபெறுவேன்.

            இந்த பதிவிற்கு முக்கிய காரணத்திற்கு வந்துவிட்டேன் சாலைகளில் நான் 'டென்ஷன்' ஆகும், அல்லது என்னை 'டென்ஷன்' ஆக்குகிற விஷயத்தை சொல்கிறேன். வண்டி ஓட்டும்போது பின்னால் இருந்து "லைட்"அடிப்பது, தேவையில்லாமல் 'ஹாரன்' அடிப்பது, பக்கத்தில் வந்து "ஓவர்டேக்" செய்வது இவைகள் எல்லாம் ஆரம்பத்தில் எனக்கு அதிக டென்ஷனைக் கொடுக்கும். போகப் போக பழகிபோச்சி இருந்தாலும் தினமும் இதுபோல் சில விபத்துகள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

        என் முன்னால் வந்து 'ஓவர்டேக்' செய்தால், ஒரு வணக்கம் போட்டு போகச் சொல்லிடுவேன். 'லைட்' அடிப்பார்கள் என்பதற்காகவே முதல் வரிசையில் போகமாட்டேன். "ஹாரன்" சிரிப்பேன், சில நேரம் கண்டுக்காமல் போயிடுவேன். கம்பெனியில் உள்ள டென்ஷனையும் குறைக்க இப்படிதான் பல ஐடியாவை கையாளுகிறேன்.

இன்று நடந்த சம்பவம்:       
            
                        இன்று காலை நான் வண்டியில் வந்துகொண்டிருந்தேன், ஒரு சிக்னலில் நின்றுக்கொண்டிருந்தேன் எனக்கு முன்னால் மூன்று வண்டிகள்,  எனது பின்னால் ஒரு வண்டிதான், அடுத்தடுத்த வரிசைகளில் நிறைய வண்டிகள் நின்றது. சிக்னல் "ஆன்" ஆனதும் எனக்கு பின்னால் இருந்த வண்டிக்காரன் விடாமல் "ஹாரன்" அடித்துக்கொண்டே இருந்தான், மேலும் கையாளும் போ! போ! என்றும் சைகைகள் செய்தான், நானும் முன்னால் உள்ள வண்டி போனால்தானே நான் போவேன், பறந்தா போகமுடியும் என்று சைகையால் காண்பித்தேன். அவன் விடாமல் 'ஹாரன்' அடித்தான், நான் சிக்னலை கடந்ததும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கினேன், அவனும் பயங்கர கோபமாக இறங்கிவந்தான்.
 (படங்கள் இணையத்தில் இருந்து)

" என்ன சார்! என்ன வேணும்?"

" நீ எதுக்கு இறங்கி வந்த? அதனால்தான் நானும் இறங்கி வந்தேன்."

"நீங்க  எதுக்கு விடாமல் 'ஹாரன்' அடிச்சிங்க அதனால்தான் இறங்கி வந்தேன்."

"சிக்னல் ஓபன் ஆகிவிட்டது, வேகமாக போகச்சொல்லி 'ஹாரன்' அடித்தேன்."

"எனக்கு முன்னால் மூன்று வண்டிகள் நிக்கிறது, அவர்கள் போனால்தான் நான் போகமுடியும், நான் என்ன பறந்தா போகமுடியும்?"

"நான் உங்களுக்கு அடிக்கவில்லை, அவர்களுக்குதான் அடித்தேன்."

  (படங்கள் இணையத்தில் இருந்து)
"ஓ! அவங்களுக்கும் கண் இருக்கு சார்! அவங்களும் சிக்னல் ஓபன் ஆனதை பார்த்துக்கிட்டுதானே இருப்பாங்க."

"சரி அதைவிடு நீ எதுக்கு இப்ப வண்டிய ஓரம் கட்டின???"

"உங்களுக்கு ஏதும் உதவி தேவைப்படுகிறது அதனால்தான் விடாமல் 'ஹாரன்' அடிச்சிங்க 'ன்னு இறங்கி வந்தேன்."

"அவன்  மெளனமாக கொஞ்ச நேரம் கையை இப்படியும், அப்படியும் ஆட்டிவிட்டு, Don't Waste My time ன்னு சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

"இப்படி 'ஹாரன்' அடிச்சி எனக்கு தேவையில்லாமல் 'டென்ஷன்' கொடுத்துவிட்டு, இப்ப உங்க நேரத்தை வீனக்குவதாக சொல்வது என்ன சார் நியாயம். உதவி செய்ய வந்த என்னிடம் இப்படி கோபமாக பேசுறீங்களே! என்று சொல்லிச் சிரித்தேன்."

அவன் கோபமாக வண்டிய எடுத்துக்கிட்டுப் போனான், என்மேல் உள்ள கோபத்தை யாரிடம் காட்டப்போகிறானோ? தெரியவில்லை.

நானும்  இன்னைக்கு சீக்கிரம் வீடு போக காரணம் தேடிகிட்டு இருந்தேன். இப்படி ஒரு 'டென்ஷன்' கிடைத்ததும் சீக்கிரம் வீட்டிற்கு வந்து தூங்கிட்டேன். எழுந்தப்பொழுது கொஞ்சம் 'டென்ஷன்' குறைந்திருந்தது. இதோ! உங்களிடம் பகிர்ந்துக் கொண்டதும் முழுவதும் குறைந்துவிட்டது.

இப்படிதான், நாம் ஒதுங்கி ஒதுங்கிப் போனாலும்,சிலர் நம்மை விடுவதில்லை.
உங்க அனுபவத்தையும் பகிருங்க.....


 

24 கருத்துகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

படத்தைப் பார்த்தால் தங்கள் வயது சொற்பம் போல் உள்ளது. உயர் இரத்த அழுத்தத்திற்கு அமைதி முக்கியம்.
உப்பை நன்கு குறையுங்கள்! பிடித்த இசை கேளுங்கள். சாஸ்திரீய சங்கீதம் பிடித்தால் புல்லாங்குழல்,வயிலின் கேளுங்கள்.
ஏனெனில் எனக்கும் உண்டு. இப்படியே கட்டில் வைத்திருக்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

சொன்ன விஷயமும் சொல்லிச்
சென்றவிதமும் அருமை
நானும் முயன்று அதை ஜெயித்தவன் என்பதால்
பதிவு அதிகம் மனம் கவர்ந்தது
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல தகவல்கள் பொருத்தமான அனுபவம்.அதை எழுதிய விதம் அருமை

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கு மிக்க நன்றிங்க,

இளமைதான், நிறைய வேலை பளு, குடும்ப சுமை, உறக்கம் குறைவு, மன குழப்பம் இதனால் வந்தவைகள், உடல் பருமனும் இல்லை, முக்கியமாக உறக்கம் என்று சொல்லலாம். எப்போ எந்த நேரத்திற்கு வேலைக்கு போவேன் எப்போ திருப்பி வருவேன் என்றே தெரியாது.

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறேன். நிறைய பாடல் கேட்க்கிறேன்.உங்களுடைய இந்த ஆறுதலான பகிர்வுக்கு நன்றி.

semmalai akash said...

ரொம்ப நன்றி நண்பரே!

உங்க வழியிலேயே நானும் ஜெயிக்க முயற்சி செய்கிறேன். வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கு நன்றி நண்பரே,

உங்களுடைய இந்த பாராட்டு என் மனப்பாரத்தை மென்மேலும் குறைக்கும்.

Loganathan - Web developer said...

Nice tips, thanks

semmalai akash said...

ரொம்ப நன்றி நண்பரே!

Unknown said...

நொந்து போய் இருப்பான்



"இப்படி 'ஹாரன்' அடிச்சி எனக்கு தேவையில்லாமல் 'டென்ஷன்' கொடுத்துவிட்டு, இப்ப உங்க நேரத்தை வீனக்குவதாக சொல்வது என்ன சார் நியாயம். உதவி செய்ய வந்த என்னிடம் இப்படி கோபமாக பேசுறீங்களே! என்று சொல்லிச் சிரித்தேன்."

semmalai akash said...

ஹா ஹா ஹா !!!

ஆமாம் நண்பா! ரொம்ப நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வாழ்க்கையென்றால் ஆயிரமிருக்கும்!
வாசல் தோறும் வேதனையிருக்கும்!
வந்த துன்பம் எதுவென்றாலும்!
வாடி நின்றால் ஓடுவதில்லை!
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்!
இறுதிவரைக்கும் அமைதி இருக்கும்!

இல்லாத மனிதனுக்கு இல்லை எனும் தொல்லையடா!
உள்ளவர்க்கு வாழ்க்கையெல்லாம் உள்ளது எல்லாம் தொல்லையடா!

காலுக்குச் செருப்பில்லாத நாம் காலில்லாதவரைப் பார்த்து ஆறுதலைடைவோம்!

உங்கள் சுமைகளைச் சொல்லிவிட்டுச் சுமக்கிறீர்கள்!
பலர் என்னைப்போல் சொல்வதில்லை- ஆனாலும் சுமக்கிறோம்.

நீங்கள் , தெளிந்து விட்டீர்கள், அது உங்கள் பக்குவமான எழுத்திலும், நகைச்சுவையான அணுகுமுறையிலும் தொனிக்கிறது.
வெற்றிக்கு இது போதும்...கலக்குவீர்கள்!கலக்குங்கள்!!








semmalai akash said...

அருமை! அருமை! எல்லாம் அருமையான வரிகள்.
இப்போதுதான் முழு மனப்பாரமும் குறைந்து தெளிவாக இருக்கிறேன். உங்கள் வார்த்தைகளில் எத்தினை எத்தினையோ மருந்துகள் இருக்கிறது. இதற்கு நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது.

Unknown said...

//உங்களுக்கு ஏதும் உதவி தேவைப்படுகிறது அதனால்தான் விடாமல் 'ஹாரன்' அடிச்சிங்க 'ன்னு இறங்கி வந்தேன்// ROFL

பதிவும் எழுத்து நடையும் மிக அருமை!.

உஷா அன்பரசு said...

உறக்கத்திற்கு குறைவான நேரம் கிடைத்தாலும் சமாளிக்கலாம். பணி நேரத்தை திட்டமிட்டு பயன் படுத்தினாலே டென்ஷன் குறையும். ஒரு இடத்திற்கு கிளம்பும் போதே சரியான நேரத்தை மனதில் வைத்து கொண்டு கிளம்புவதை விட ஒரு அரை மணி நேரம் முன்னரே கிளம்பினால் வழியில் நடக்கும் தடங்கள்களுக்கு டென்ஷன் ஆகாமல் இருக்கலாம். பிரச்சினைகள் மனதை அழுத்தும் போது இனிமையான பாடல்களை கேட்டுக் கொண்டே வீட்டை அழகு படுத்துங்க( க்ளீன் பண்றதுதான்!) உங்க மனசிலிருக்கிற அழுத்தம் மறந்து போகும். சைவ உணவுகளையே பயன் படுத்துங்க. எண்ணெய், உப்பு குறைச்சலா இருக்கட்டும். மன நிம்மதியோடு மகிழ்ச்சியாக வாழ இந்த அன்பு சகோதரியின் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

நகைச்சுவை உணர்வு மட்டும் எப்போதும் எங்கேயும் எதிலும் இருக்க வேண்டும் என்பதை மனதில் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்...

சத்தம் போட்டு பிடித்த பாட்டை படிங்க... எல்லாம் சரியாப் போயிடும்... இல்லையெனில் ஓவியம்... - இப்படி எழுதிக் கொண்டே போகலாம்....

Anonymous said...

உங்கள் பதிவுக்கு பல வாசகர்கள் வராமைக்கு முக்கிய காரணமே உங்கள் டெம்பளேட் தான் சகோ. வெண்மையான டெம்பளேட்டில், கருமையான எழுத்துக்களே வாசகரை ஈர்க்கும் .. அதனை முதலில் மாற்றுங்கள் ..

அப்புறம் நேரம் பார்த்து பதிவை வெளியிடுங்கள். இந்திய நேரம் மாலை 5 க்கு மேல் வெளியிடுங்கள் ... !

வெளியிட்ட உடனேயே தமிழ் மணத்தில், தமிழ் 10, இண்ட்லியில் சேர்த்து விடுங்கள் ..

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் ... !

semmalai akash said...

இணைத்துவிட்டேன் நண்பரே!

semmalai akash said...

நன்றி நண்பரே!

semmalai akash said...

ஆமாம், சகோ இப்போதெல்லாம் அப்படிதான் செய்கிறேன்.
வருகைக்கு நன்றி சகோ!

semmalai akash said...

அப்படிதான் செய்கிறேன். ரொம்ப நன்றி நண்பரே!

semmalai akash said...

மாற்றிவிட்டேன் நண்பரே!

இப்போது எப்படி இருக்கிறது. அறிவுரைக்கு ரொம்ப நன்றி.

முனைவர் இரா.குணசீலன் said...

வாழ்வியல் நுட்பங்களை அழகுபட சொன்னீர்கள் நன்று.

semmalai akash said...

நன்றி நண்பரே!

இராஜராஜேஸ்வரி said...

சரி டாக்டர் 'பிரஷர்' எதனால் வருகிறது? எனக்கு எப்படி வந்தது? இதனை முற்றிலும் சரிசெய்ய என்ன செய்யவேண்டும் "என்றுக் கேட்டேன்.

தெளிவான பகிர்வுகள்..

Post a Comment