Pages

Friday, November 9, 2012

எனக்கே என்னைப் பிடிக்கவில்லை!

எனக்கே  என்னைப் பிடிக்கவில்லை!


            என்ன வாழ்க்கை இது? நான் நேற்று பேசிய வார்த்தைகள் இன்று எனக்கே பிடிக்கவில்லை, ஏன்? என்னக்காரணம் என்று கேட்டால் சொல்லவும் தெரியவில்லை, சில நேரம் நாமத்தான் அப்படி பேசினோமா? என்று வெக்கப்பட்டு தலைகுனிகிறேன் , சில வார்த்தைகளை நினைத்து நினைத்து நாக்கை கடித்துக்கொள்கிறேன்.

                   சொந்தம் பந்தம் என்று பார்த்து பழகிவிட்டப் பிறகு அவர்களின்மீது அதிக அக்கறை எடுத்துக்கொண்டு அவர்களின் எல்லா கஷ்ட நஷ்டங்களிலும் பங்கெடுத்துக்கொள்ள துடிக்கிறேன், ஆனால் அவர்கள் சில காரியங்களை நம்மளிடம் சொல்லாமலே செய்யும்போது மன இறுக்கமடைந்து அவர்கள் நம்மைவிட்டு விலகிப் போவதாய் உணர்கிறேன். நமக்கு ரொம்ப பிடித்தவர்கள் அவர்களின் எல்லா நல்லது கெட்டதையும் நம்மிடம்தான் முதலில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் அவர்கள் வேறு யாரிடமோ பகிர்ந்துகொள்வதைக் கண்டதும் மிகவும் உடைந்துப்போய் விடுகிறேன். அவர்களுக்கு நம்மளையும்விட பிடித்தவர்கள்  இங்கு இருக்கிறார்கள் என்ற பொறாமையோடு!, புதியதாக கிடைக்கும் நண்பர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாகப் பேசுகிறேன், தவறான வார்த்தைகளால் அவர்கள் மனதை காயப்படுத்திவிடக்கூடாது என்பதற்காகவே! ஆனால் அவர்களோ!  எனது நட்பை சில காரியங்கள் நடத்திக் கொள்வதற்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
           
             நான் உதவி செய்ய எப்போதுமே தயங்கியதில்லை எப்ப கூப்பிட்டாலும் ஓடி வருவேன், அதையே அவர்கள் அவனுக்கு வேலைவெட்டி இல்லைப்பா, எப்ப கூப்பிட்டாலும் வந்து நிற்பான் என்றுச் சொல்வதைக் கேட்கிறபோது அந்த வார்த்தையால் அவசரத்துக்கு யாராவது அழைத்தாலும் ஏதாவது காரணம் சொல்லி என் உணர்வுகளை நானே கட்டுப்படுத்திக்கொள்கிறேன்.  ஒரு நண்பர் சொன்னார் இங்கு நட்பெல்லாம் வெறும் வியாபாரத்துக்கு மட்டுமே! உண்மையான நட்பு என்று நம்பிவிடாதே! என்றார் அது எந்த அளவிற்கு உண்மை என்பதை சில நண்பர்கள்மூலம் நல்லப் பாடம்  கற்றுக்கொண்டேன்.

" சிலர் நட்பைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள்!
சிலர் காதலைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள்! "
இவர்கள் எடுத்துக்கொண்ட இந்த ஆயுதத்திற்கு என்றுமே வெற்றிமேல் வெற்றிதான். 
 
          நாம் உரிமையோடு சில விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டிருக்கும்போது  அவர்கள் அலட்சியமாக வேறு எங்கோ கவனமாக இருப்பார்கள், அப்படி அவர்கள் செய்யும்போது நான் சொல்வதை நிறுத்திக் கொள்கிறேன். அவர்கள் ஏன் இப்படி என்று மனதில் வருத்தம் அடைகிறேன். இப்படி கேட்ப்பதைப்போல் பாவனை செய்வதை விட நேரம் இல்லை நண்பா என்று சொல்லிவிட்டு செல்வது எவ்வளவோ மேல். சிலர் சொல்வார்கள் காத்திரு கண்டிப்பா வருகிறேன் என்று ஆனால் நேரம் காலம் எதுவும் சொல்லாமலே! இருந்தாலும் காத்திருப்பேன் கடைசிவரை காத்திருப்புதான் மிச்சமாகும், காத்திருக்கச் சொன்னவர்கள் கடைசிவரை கண்முன்னால் வரவே மாட்டார்கள். இப்படி அவர்கள் சொல்லுக்குக்காக காத்திருக்கும் நான் முட்டாளாக்கிப் போகிறேன்.

              நம்பிக்கைதான் வாழ்க்கை என்று அனைவரும் சொல்கிறார்கள், அப்படி நம்பித்தான் எல்லாப் பொருட்களையும் வாங்குகிறோம் அப்படி வாங்கும் பொருட்களில் குறையை காணும்போது நம்பிக்கையே இல்லாமல் எல்லா பொருட்க்களின்மீதும் சந்தேகப்பட்டு சோதனை செய்கிறேன். எல்லோரையும் நம்பித்தானே வாழ்கிறோம் யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்று எப்படி தரம் பிரிப்பது என்று கேட்டால் எல்லாம் அனுபவம்தான் என்று பதில் சொல்கிறார்கள். அந்த அனுபவம்கூட ஒரு சோதனையின் வெற்றிதானே என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. இதில் சில விதிமுறைகளைத் தவிற...

           என்ன உலகம் இது! எப்படி நான் வாழ்வது என்று நினைத்து நினைத்து தினமும் திகைத்து நிக்கிறேன். எல்லோரும் சரியாகத்தான் இருக்கிறார்கள் இதுவெல்லாம் எனக்கு மட்டுமே உண்டான குழப்பமா இருக்குமோ? என்று புரியாமல் என்னை நானே தனிமைப் படுத்திக்கொள்கிறேன் தனிமையில் இருந்து யோசித்தபோதுதான் அவரவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள் அதில் நமக்கு இந்த பிரச்சினை அதனால்தான் எனக்கே என்னைப் பிடிக்கவில்லை.

{இன்னும் பல குழப்பங்கள் இருந்தும் இதற்கு மேல் எழுத முடியவில்லை இதுபோல் எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா? அல்லது எல்லோருக்குமா? என்ற புதிய குழப்பத்தினால்}

வாங்க சார்! வாங்க ..வந்தது வந்துட்டிங்க உங்களுக்கு என்ன தோணுதோ சொல்லிவிட்டுப் போங்க!

15 கருத்துகள்:

ஆத்மா said...

இது எல்லோருக்குமான பொதுவான பிரச்சனைதான் சகோ...
நாம் ஒருவரை நூறு சதவீதம் நேசிக்கிறோம் என்பது நமக்கு மட்டும் தெரிந்த உண்மை ஆனால் அவர் நம்மை எந்தளவு நேசிக்கிறார் என்பதை நம்மால் கணக்கிட முடியாது சிலவேளை எம்மைப் போன்றும் அவர் நேசிக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

எதுவும் அலவோடு இருந்தால் பிரச்ச்னையில்லை சகோ

JR Benedict II said...

//எல்லோருக்குமா? என்ற புதிய குழப்பத்தினால்//

கண்டிப்பா குழம்பவே வேணாம் எல்லாருக்கும் பிரச்சினை தான் பாஸ்.. உடலும் மனமும் சோர்வை உணரும் போது இப்படி தான் தோன்றும். அல்லது நினைத்த காரியம் நடக்காமலோ அல்லது நாள் நிமிடம் மாறாமல் ஒரே விடயங்கள் தொடர்ச்சியாக நடந்தால் சலிப்பு உண்டாகும்.. இவை எல்லாம் எனக்கு.. இன்னும் பல விடயங்கள் நிறைய இருந்தும் இதற்கு மேல் எழுத முடியவில்லை இதுபோல் எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா? அல்லது எல்லோருக்குமா? என்ற புதிய குழப்பத்தினால் ஹி ஹி

settaikkaran said...

இதிலிருந்தெல்லாம் வெளிவர நிறைய மனப்பக்குவத்தைத் தேடுதல் வேண்டும். உங்களுக்கு ஏதேனும் எளிய வழி தெரிந்தால் இடுகையாகப் போடுங்க, நாங்களும் படித்துப் பயனடைவோமில்லே? :-)

semmalai akash said...

ஆமாம் சகோ! உண்மை
நன்றி

semmalai akash said...

ஹா ஹா ஹா !!!

நீங்களும் நம்ம இனம் நண்பா! கவலைய விடுங்க மனப்பாரத்தை இங்க இறக்கி வைத்துவிட்டு சந்தோஷமா இருக்க கத்துக்கலாம்:-))

semmalai akash said...

ஹா ஹா ஹா !!
அதைத்தான் தேடிகிட்டு இருக்கிறேன் ஐயா, தெரிந்ததும் அதையும் ஒரு பதிவாக வெளியிடுகிறேன்.:-)

நன்றி ஐயா.

Balaji said...

அட அட அட....

அருமையா எழுதியிருக்கீங்க தம்பி....

நல்லாயிருக்கு....

மகிழ்ச்சியா இருக்கு....

தொடர்ந்து எழுதுங்க தம்பி.....

வாழ்த்துகள்.....

semmalai akash said...

நன்றி அண்ணா!

பிரசாத் வேணுகோபால் said...

ஆகாஷ்,

நீங்கள் சொன்ன அனைத்து நிகழ்வும் இங்கு பெரும்பாலும் அனைவர்க்கும் இருப்பது தான்... இது நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ள வரமாய் கிடைக்கும் அனுபவப் பாடம்...

ஸ்வாதி அக்காவின் விரிவான விளக்கத்தைப் படித்திருப்பீர்கள்.

எல்லாம் நன்மைக்கு...

நம்பிக்கையுடன் தொடருங்கள்...

semmalai akash said...

நன்றி நண்பா!

நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

vimalanperali said...

நீங்கள் கூறியுள்ள யாவும் இங்கு எல்லோருக்கும் உள்ள பிரச்சனையே/அதை எடுத்துக்கொள்கிற விததிலும்,புரிந்து கொள்கிற தன்மையிலும் சரியாகிவிடலாம்,தவிர உங்களுக்கான ஓட்டம் ,எண்ண பதிவுகளை பதிய இதோ உங்கள் கை வசம் ஒரு பிளாக் இருக்கிறது,,இது போக நிறைய படியுங்கள்,எழுதுங்கள்,இந்த எண்ணமெல்லாம் போய் விடக்கூடும்.நன்றி வணக்கம்.

இராஜராஜேஸ்வரி said...

எல்லோரையும் நம்பித்தானே வாழ்கிறோம் யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்று எப்படி தரம் பிரிப்பது என்று கேட்டால் எல்லாம் அனுபவம்தான் என்று பதில் சொல்கிறார்கள்.

அனுபவமே வாழ்க்கை !

semmalai akash said...

ஆம், அப்படியே செய்கிறேன் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

ஆமாம், நன்றி சகோ!

சசிகலா said...

எனக்கும் சில நேரங்களில் இது போன்று எண்ணத்தோன்றும் நீங்கள் அழகாக அப்படியே எழுத்தாக்கிய விதம் சிறப்பு.

Post a Comment