மனைவிக்கு உடம்பு சரியில்லை!
மருத்துவமனையில் தஞ்சம்.
மகன் கேட்டான்!
அப்பா, நான் இன்னிக்கு
பள்ளிக்குப் போகவேண்டாமா?
மகள் அழுதுக்கொண்டே சொன்னாள்
அப்பா... பசிக்குதுப்பா!
பசிக்கு உணவையும்,
நோய்க்கு மருந்தையும்,
இனம் தெரிந்து எடுத்துக்கொடுத்திட!
மருத்துவ மனையிலிருந்து,
மருமகள் எப்ப வருவாள்?
படுகையறைலிருந்து அப்பாவின்
புலம்பல்!
கை இருந்தும் அசையாமல்!
கால் இருந்தும் நடக்காமல்!
கண் இருந்து காணாமல்!
வாய் இருந்தும்பேசாமல்!
உணர்வுகள் அற்ற
சிலையாய்,
ஏதோ! சிந்தனையில் கணவன்.
13 கருத்துகள்:
மனைவியாக இருக்கிற ஒரு பெண் குடும்பத்திற்கு எப்படி ஆணி வேராக இருக்கிறாள் என்பதை அருமையாக கவிதையில் வடித்து விட்டீங்க. பெண்கள் சார்பாக உங்களுக்கு மரியாதை கலந்த வணக்கமுங்க..!
உண்மையில் இது, ஒர் அவலக்காட்சியே! கவிதை சோகத்தின் வெளிப்பாடு!நன்று.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உங்களுக்கு பாட வாய்ப்பாமே? தகவலை அறிய மீண்டும் பொன்னு விளையற பூமி பதிவை பாருங்கள்.
ஒரு குடும்பத்திற்கு மனைவி என்பவள் எல்லாமுமாகி இருப்பதை அழகான கவிதையில் சொல்லிட்டீங்க. நல்லா இருக்கு. வாழ்த்துகள்
நல்ல கவிதை .வாழ்த்துக்கள்.
எல்லா கணவர்மார்களின்
உண்மை நிலையை மிகச் சரியாக
கவிதையில் வெளிப்படுத்தியமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
உணர்வுகளை அழகாகச் சொன்னீர்கள் நண்பா.
ம்ம்ம்ம்... சொந்த அனுபவமா?
மனைவியின் , தாயின் , அருமையை,அருகாமையை மிக அழகாக கவிதையாக வடித்துள்ளீர்கள்.
மிக்க நன்றி நண்பரே .
ராஜி
ஆணிவேராய் மனைவின் அருமை உணர்வில் வடித்த பகிர்வு ....
குடும்பத்தில் ஒரு பெண்ணின் அத்தனை பொறுப்பையும் அழுத்தமாக சொல்லி விட்டீர்கள் தம்பி உங்கள் கவிதை மூலம்...
அருமை...
பெண்ணின் பெருமையைப் பேசாமல் பேசும் அழகிய கவிதை.
வாழ்த்துக்கள் நண்பரே.
அருமை !
Post a Comment