{சற்றே பெரிய சிறுகதை!}
"ஹலோ! சந்தியா"
"ம்ம்ம்ம் சொல்லுங்க சரத்"
"நான் சொல்வதைக் கவனமாக கேட்டுக்கோ, நாளை ஒருநாள்தான் இருக்கிறது, நாளைமறுநாள் காலை 6 மணிக்கு நீ ஸ்ரீரங்கம் வந்துடு, உன்னுடைய தோழி ஒருத்தியையும் கூப்பிட்டுக்கோ?"
"யாரை கூப்பிடுவது என்று தெரியவில்லை சரத், அதுதான் குழப்பமா இருக்கு"
"உன்கூடவே எப்பவும் வருவாளே ஒரு மொக்க பிகரு (ஹா ஹா ) அவளை கூப்பிடு, அவள் வந்தா நிறைய விஷயங்களை சொல்ல தேவையில்லை, அவளுக்கே தெரியும்."
"ஆமாம் சரத் 'கரெக்ட்' நானும் அவளைத்தான் கூப்பிடலாம் என்று நினைத்தேன், எல்லாத்தையும் சொல்லி புரிய வைக்கிற நேரம் மிச்சமாகும்."
"ம்ம்ம் சரி, அப்படியே உனக்கு தேவையானதை எல்லாவற்றையும் நாளைக்கே எடுத்து வைத்துவிடு, மறுநாள் அதிகாலையிலையே கிளம்ப வேண்டி இருக்கும்."
"சரி சரத், செலவுக்கு பணமெல்லாம் இருக்கா?"
"ம்ம்ம் ஓரளவுக்கு இருக்கு, பத்தாதத்துக்கு நண்பர்களிடம் கேட்டிருக்கேன், அவன் ரமேஷ் எடுத்து வருவதாகச் சொன்னான். அதெல்லாம் பார்த்துக்கலாம் வா!"
"என்ன சரத் இப்படி அசால்ட்டா இருக்க? தாலி வாங்கணும் மாலை வாங்கணும், தங்குவதற்கு ரூம் எல்லாம் வேண்டாமா? அதுமட்டுமில்லாமல் கொஞ்ச நாளைக்கு நீங்க வேலைக்கு போகமுடியாது, அதுவரைக்கும் என்ன செய்வது?"
"என்ன செய்ய அப்பாகிட்ட கேட்கவும் முடியலை, அம்மாகிட்ட கொஞ்சம் இருந்தது , இருத்ததை ஆட்டைய போட்டுட்டேன்."
"அச்சச்சோ! அவங்களுக்கு தெரிஞ்சிட்டா நாம மாட்டிக்குவோம்"
"அதெல்லாம் அப்ப பார்த்துக்கலாம், ஏதாவது சொல்லி சமாளிக்கலாம்."
"என்னமோ செய்ங்க, எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு சரத், இன்னும் கொஞ்சநாள் போகட்டுமே!"
"திரும்ப திரும்ப இதே புராணத்தை பேசாதே, எனக்கு எரிச்சலா இருக்கு, உனக்கு வர விருப்பம் இல்லை என்றால் எப்படியோ போ, நாங்க நேற்று அவ்வளவு சொல்லியும், திரும்ப திரும்ப இப்படி பேசறது நல்லாருக்கா உனக்கு? இதுக்குதான் பொண்ணுங்களையே நம்பக்கூடாது என்கிறது. இப்ப முடிவா என்னத்தாண்டி சொல்ல வர?"
"ஒரு முறை வீட்டில் பேசி பார்க்கலாம் என்றுதான் நான் அப்போதில் இருந்தே சொல்கிறேன்."
" ஏய்! சத்தியமா சொல்கிறேன், எங்க வீட்டில் ஒத்துக்க மாட்டாங்க! எங்க அப்பாவைப்பற்றி எனக்கு நல்லாவே தெரியும், அம்மா எவ்வளவு நல்லவங்களாக இருந்தாலும் 'காதல்" என்று சொன்னாலே எரிந்து விழுவாங்க!"
"நான் எங்க வீட்டில் பேசிப்பார்க்கட்டுமா? இல்லை என்றால் நீ வந்து பேசு சரத், வந்து பொண்ணு கேளுங்க!"
"ஐயோ! என்னால் முடியாது, உனக்கு ஒரு பையன் லெட்டர் கொடுத்தான் என்பதற்காக அவனை கட்டிவைத்து அடித்து போலிஸ் வரை போனவர் உங்க அப்பா. இப்ப நான் வந்து ஏதாவது கேட்க, அவர் எடக்குமடக்கா ஏதாவது செய்தால் என் மானம் மரியாதை எல்லாம் போய்விடும். பிறகு நான் உயிரோடவே இருக்கமாட்டேன்."
"நான் பேசுறேன் சரத்!"
"நீ எல்லா ப்ளானையும் சொதப்ப போற, என்னை அவமானபடுத்தி பார்க்கணும் என்று அப்படி ஒரு ஆசையாடி உனக்கு?"
"ஐயோ! சரத் கொஞ்சம் நான் சொல்வதையும் புரிந்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்!"
"இதெல்லாம் சரிபட்டு வராது சந்தியா!, நாளைமறுநாள் நான் சொன்னப்படி வீட்டைவிட்டு வருவதென்றால் வா!, இல்லை என்றால் என்னை மறந்திடு!"
"சரத்த்த்த்த்த்த்த்த்"
"உன்னோட முடிவை இப்பவே சொல்லிடு!"
"சரத், நான்தான் சொல்லிட்டேனே உங்க விருப்பம் ஆனால் வீட்டில் சொல்ல ஒரு அவசரம் கேக்கிறேன் அவ்ளோதான்."
"வீணா குழப்பிக்காதே! சந்தியா நாம் ஒருவரின்மேல் ஒருவர் அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருக்கிறோம், பிரிய முடியாது அதனால்தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். மனச போட்டு குழப்பிக்காம வந்துசேரு! எல்லாத்தையும் அப்பறம் பார்த்துக்கலாம்."
"சரி சரத் நாளை பேசுகிறேன்."
"ம்ம்ம் சரி, நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்."
இது என்னவோ ஒரு அவசர முடிவாகவே இருக்கிறது என்று சந்தியாவுக்கு தெரிந்திருந்தாலும், இதற்கெல்லாம் ஒரே காரணம் இவர்களின் ஜாதிதான். என்பதும் புரிந்தது, சமூகத்தில் இவர்களின் சாதிகளின் பெரிய வித்தியாசம் இல்லை என்ற போதிலும், "சரத்" அப்பா ஜாதி வெறியர். இதையறிந்துதான் "சரத்" இப்படி அவசர முடிவு எடுக்கிறார் என்பதும், "சரத்"தின் மீதுள்ள காதலும், நண்பர்களின் அட்வைசும் அவளை பேசவிடவில்லை. எல்லாத்துக்கும் ம்ம்ம் என்று தலையசைத்தவாறு ஏதோ தப்பு செய்கிறோம் என்ற குழப்பத்தோடு வீடு வந்து சேர்ந்தாள்.
**********************************************************************************
சந்தியா தனது கல்லூரி படிப்பை தற்போதுதான் முடித்துவிட்டு ஒரு கம்பேனியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறாள், "சரத்"தை இவள் முதலாம் ஆண்டு கல்லூரி படிக்கும்போதுதான் தெரியும். அதே கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தான், இருவரும் ஒரே பேருந்தில் சென்று வரும்போது பழக்கம், சாதரணமாக பேசிப்பழக ஆரம்பித்தவர்கள் "காதல்" வலையில் விழுந்தனர். முதலில் காதலை தெரிவித்ததும் "சரத்"தான். "சரத்" மிகவும் திறமையானவன் தனது படிப்பை முடித்த அடுத்தமாதம் முதல் வேலைக்கு போக தொடங்கிவிட்டான். இரண்டு வருடத்தில் பதவி உயர்வு பெற்று இப்போது நல்லநிலையில் உள்ளான். இவனது அழகான பேச்சும் அடுத்தவர்கள் மீது காட்டும் அக்கரையுமே சந்தியாவை கவர்ந்ததாக இருந்தது. அவன் தனது காதலை சொன்னவிதமும் மிகவும் பிடித்திருந்தது.
"சந்தியா உங்ககிட்ட ஒரு நிமிடம் பேசணும் கொஞ்சம் நில்லுங்க ப்ளீஸ்."
"என்ன பேசணும் சரத், சீக்கிரம் சொல்லுங்க நான் வீட்டுக்கு போகணும்.
"சந்தியா எனக்கு சுத்தி வலைச்சி பேசத்தெரியாது, நேரா மேட்டருக்கு வருகிறேன். இரண்டு வருடமாகவே உங்களை எனக்கு பிடித்திருந்தது, உங்களது கல்லூரி படிப்பு முடித்த பிறகு சொல்லலாம் என்று காத்திருந்தேன். ஒரு ஆணுக்கு சம்பாத்தியம் என்பது மிக மிக முக்கியம். நானும் நல்லவேலையில் சேர்ந்தபிறகு சொல்லலாம் என்று இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன். இப்போது அந்த நேரம் வந்துவிட்டது. நான் உங்களை காதலிக்கிறேன் கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் நாளை காலை நேரம் சரியாக 11 மணிக்கு திருச்சி மலைகோட்டை அருகில் உனது பதிலுக்காக காத்திருப்பேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் அங்கு வரவும், இல்லை என்றால் வரவே வேண்டாம். நான் புரிந்துக்கொள்வேன் என்று சொல்லிவிட்டு அவளது பதிலுக்கு எதிர்பாராமல் ஒரு பதட்டத்தோடும், எதையோ சாதித்துவிட்ட உணர்வோடும் அங்கிருந்து வேகமாக புறப்பட்டான்."
"சந்தியாவுக்கு சற்று குழப்பமாக இருந்தாலும், அவனது நடவடிக்கைகள் ஏற்கனவே பிடித்திருந்ததால் யோசித்தவாறு வீட்டிற்கு சென்றாள். பல முறை யோசித்தும் அவளாள் இவன் காதலுக்கு மறுப்பு சொல்ல ஒரு காரணம்கூட கிடைக்கவில்லை, இரவு தூக்கமும் வரவில்லை. எப்படி வரும் ஒரு தகுதியுள்ள இளைஞன் தானே முன்வந்து தனது காதலை வெளிப்படுத்தியப்பிறகு எப்படி தூக்கம் வரும். இதை நண்பர்களிடம் சொல்லலாமா? இல்லை இல்லை அப்பா அம்மாவிடம் சொல்லலாம். ஐயோ! வேண்டாம் அவர்கள் இவ்ளோ நாளா நீ கல்லூரிக்கு போனது இதுக்குதானா என்று பல புராணங்களை இழுப்பார்கள். யாரிடமாவது சொல்லவேண்டும் என்று இருந்தது. தனது தம்பி மிக சிறியவன் அவனுக்கு அந்த அளவுக்கு பக்குவம் போதாது. என்பதால் அவளுடைய பாலிய சிநேகிதி அம்ரிதாவுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னாள்.
"அம்ரிதா ஒரு ஓட்ட வாயி, எப்பவும் ஏதாவது மொக்கை போட்டுகிட்டே இருப்பாள், அழகானவள் இருந்தாலும் சக தோழிகள் இவளை மொக்கை மொக்கை என்றே அழைப்பார்கள். இருந்தாலும் சற்றும் மனம் தளராமல் எல்லோரையும் சிரிக்கவைப்பாள்."
"யே! சந்தியா என்னடி சொல்ற? எப்பவும் பஸ்ல வருவாரே "சரத்" அவரா?"
"ஆமாண்டி! அவரேதான். இப்ப நான் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவிக்கிறேன். ஒரே குழப்பமா இருக்குடி! அப்பா அம்மாகிட்ட சொல்லலாம் என்று பார்த்தேன். அவர்கள் திட்டி தீர்த்துவிடுவார்கள் என்பதால் சொல்லவில்லை. யார்கிட்டயாவது சொல்லனும்போல் இருந்தது அதனால்தான் உனக்கு போன் செய்தேன்."
"நல்லவேளை நீ அப்பா அம்மாகிட்ட சொல்லவில்லை, நான் நச்சுன்னு சொல்லட்டா?"
"ம்ம்ம் சொல்லுடி! அதுக்குத்தானே உனக்கு போன் செய்தேன்."
" ஐ லவ் யூ டூ'ன்னு " சொல்லிடு!"
"கொஞ்சம்கூட யோசிக்காமலா?"
"அதான் நீ நிறைய யோசிச்சி இருக்கியே இது போதாதா? இல்லை என்றால் இந்த ராத்திரிக்கு எனக்கு போன் பண்ணுவியா? இதுவரை என்னைக்காவது பண்ணிருக்கியா? அவர் எல்லாத்தகுதியோடும், குறை ஏதும் சொல்லாத அளவுக்கு தனது காதலை சொல்லிருக்கார். இதை மிஸ் பண்ணின அப்பறம் வாழ்க்கை பூராவும் இதை நினைத்து அழவேண்டியிருக்கும் சொல்லிட்டேன்."
"சரிடி! நீயும் வரியா? நாளைக்கு மலைகோட்டைக்கு போய்ட்டு வரலாம்."
"ஐயோ! நானா? வேண்டாம் தாயே நீ மட்டும் போ அதுதான் நல்லது."
"எனக்கு பயமா இருக்குடி! ப்ளீஸ் நீயும் வாயேன். நீ கிட்ட வரவேண்டாம் அங்க வந்து பக்கத்தில் எங்கேயாவது ஒளிந்துருந்தால் போதும். நான் சொல்லிட்டு ஓடி வந்துடுறேன்."
"அப்போ! சரி வரேன். வாழ்த்துகள்டி!"
"நன்றி! சரி நாளை மறந்துவிடாதே! ஓகே பை குட் நைட்!"
அன்று இரவு முழுக்க சந்தியாவுக்கு உறக்கமே வரவில்லை!இன்னுமா விடியவில்லை என்பதுபோல் இருந்தது. விடியற்காலையில் சந்தியா உறங்கிவிட்டாள். அம்ரிதா போன் செய்யவே எழுந்து சீக்கிரம் சீக்கிரம் கிளம்பினாள். தன்னிடம் உள்ளதிலேயே நல்ல உடையையும், நல்ல போட்டும் வைத்துக்கொண்டு தன்னால் முடிந்தவரை தன்னை அழகுபடுத்திக்கொண்டு புறப்பட்டாள்.
"அம்ரிதாவும் வந்து சேர்ந்தாள், இருவரும் வேக வேகமாக ஓடினார்கள், என்றும் இல்லாமல் இன்று எல்லாமே புதுமையாக தெரிந்தது சந்தியாவுக்கு, பஸ்கூட லேட்டா வருவதாக திட்டிக்கொண்டிருந்தாள்.
" காதல் வந்துவிட்டால் நினைவுகள் எல்லாம் கனவுகளாகவே இருக்கும் என்பது உண்மைதான்."
எப்படியோ! திருச்சி மலைகோட்டையை வந்தடைந்தார்கள் இருவரும். சந்தியாவுக்கு பதற்றம் மேலும் அதிகமானது, தன்னை அறியாமல் உடல் நடுங்க ஆரம்பித்தது. கண்கள் அலைமோதியது, காண்பவர்கள் எல்லோரும் "சரத்" ஆகா இருக்குமோ! என்று தோன்றியது. நேரம் நெருங்க நெருங்க தோழியின் கையை பிடித்துக்கொண்டாள். ப்ளீஸ்பா நீ எங்கேயும் போயிடாதா! எனக்கு பயமா இருக்கு, நீயும் கூடவே இரு ப்ளீஸ்.... ப்ளீஸ்...., அவளும் தனது தோழியின் பதற்றத்தை புரிந்துக்கொண்டு கூடவே நின்றாள்.
"சரத்" சொன்ன நேரம் கடந்தது ஆனால் "சரத்" இன்னும் வரவில்லை, மனதில் என்ன என்னவோ எண்ணங்கள் தோன்றி மறைந்தன...கண்கள் எல்லா பக்கமும் பார்வையிட்டது, வருவாரா? மாட்டாரா? மனம் பதறியது. அப்போதுதான் "சரத்" வருவது கண்ணில் பட்டது.
"மன்னிக்கவும்...மன்னிக்கவும், வந்து ரொம்ப நரமாகிவிட்டதா? சந்தியா."
"............."
"உங்களைத்தான் கேக்கிறேன்."
"அம்ரிதாதான் பதில் சொன்னாள், மேடம் காலை 8 மணிக்கே வந்துட்டாங்க!"
"ஐயோ! இவ்வளவு சீக்கிரமாவா?"
"இல்ல.....இல்ல....இப்பதான்...வ......"
இந்த காதல் வந்தால் கூடவே ஒரு வெக்கமும் வரும் பாருங்க! ஐயய்யோ! அது எதையும் பேசவிடாதுங்க..!
"அம்ரிதாதான் தொடங்கினால், நான் எதுக்கு நந்திமாதிரி! நான் அந்த பக்கமா எவனாவது சிக்குரானான்னு பாக்கிறேன். நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க, போகும்போது மறக்காம கூப்பிடுங்க மேடம்."
சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
"என்ன சந்தியா நல்லா யோசிச்சிங்கிகளா? உங்களை இங்க பார்த்ததும்தான் எனக்கு மூச்சே! வந்தது ஒவ்வொரு நொடியும் செத்து செத்து பிழைத்துக்கொண்டிருந்தேன்.நல்லவேளை ஆண்டவன் என்னை கைவிடவில்லை!"
"ம்.... யோசிச்சேன், நீங்க காதல் சொன்னவிதம் அருமை, அப்பவே நீங்க பதில் கேட்டிருந்தாலும் நான் ஓகே சொல்லிருப்பேன். ஒரு நாள் சமயம் கொடுத்து காதலை எடைபோட்டுப்பார்க்க வச்சிட்டிங்க.."
"சரத்'க்கு வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை, மெதுவாக கையை பற்றிக்கொண்டான். இருவரும் அப்படியே அமைதியாக ஓரிரு நிமிடங்கள் நின்றனர்கள்."
மௌனத்திற்கு பிறகு இருவரும் மனம்விட்டு பேசினார்கள், அம்ரிதாவையும் அழைத்துக்கொண்டு தங்களின் காதலுக்கு சாட்ச்சியாக மலைக்கோட்டை ஏறினார்கள். இப்படி தனது காதலை பொறுமையாக அற்புதமான தருணத்தில் வெளிப்படுத்திய "சரத்" கல்யாணத்தில் ஏன் இப்படி அவசர அவசரமாக முடிவு எடுக்கிறார் என்று சந்தியாவுக்கு குழப்பமாகவே இருந்தது.
காதலிக்கத் தொடங்கி ஒரு வருடம் ஆகாப்போகிறது, இதுவரை அதிகம் ஊர் சுற்றியதும் கிடையாது, சமூகம் நமது காதலை கொச்சைப்படுத்தி விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாகவும் ஒரு பொறுப்புடன் இருந்தான். இப்படி பல நல்ல குணங்களைக் கொண்டுள்ள "சரத்"தை எக்காரணம் கொண்டும் இழக்க விரும்பவில்லை சந்தியா!. அதனால்தான் அவன்கூட வீட்டைவிட்டு ஓடிப்போகவும் தயாராக இருக்கிறாள்.
இப்ப என்ன செய்வதென்றே தெரியாமல் சந்தியா குழப்பத்தோடு அறையின் ஒரு மூலையில் அமர்ந்தாள். வெளியில் அப்பா சதாசிவம் மிக கோபத்துடனும் ஆவேசத்துடனும் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார். சற்று காது கொடுத்து கேக்க தொடங்கினாள் சந்தியா!
"டீஈஈ! சாரதா, உனக்கெதுக்கு அண்ட வீட்டு அடுத்தவீட்டுப் பேச்செல்லாம்."
"இது 'புரளி' இல்லைங்க, நல்ல மனிதன் எப்படி அவமானப்பட்டு நிக்கிறார் என்று பாருங்க!"
"நீ சொன்னா கேக்கவே மாட்ட, இருக்கிற டென்ஷன்ல, இது ஒரு தேவையில்லாத டென்ஷனும் தேவையா நமக்கு, "இதுதான் தெருவே போகிற ஓணான பிடிச்சி வேட்டிக்குள்ள விட்டுகிட்டு குத்துதே! குடையுதே!" என்று சொல்வது."
"ஏங்க இப்படி புரிஞ்சிக்காம பேசுறிங்க, நான் சொல்வதை கொஞ்சம் முழுசா கேளுங்க, அப்பறம் சொல்லுங்க இதைப்பற்றி நாம் பேசலாமா? வேண்டாமா? என்று."
"சரிஎன்னத்த சொல்லிடப்போற, சொல்லு சொல்லு கேட்க்கிறேன்."
"கொஞ்சம் நிதானமா கேளுங்க சொல்றேன். நம்ம தெருவுல இருக்கிற கிருஷ்ணன் அண்ணனை தெரியுமா? அவருக்கு இரண்டு பொண்ணும், கடைசியா ஒரு ஆண் பிள்ளையும் இருக்கு, அந்த அம்மா பேரு சீதா."
"ம்ம்ம்ம்,சொல்லு அவர் ரொம்ப மரியாதையான மனிதர், அவ்வளவு பக்குவமா பேசுவார். எந்த பிரச்சினையையும் எளிதில் தீர்த்துவிடுவார். ஊரே அவரை கண்டால் மரியாதையாக பேசுவார்கள். சிலர் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்வார்கள். நான் அடிக்கடி பார்த்ததில்லை, அவர் அதிகம் வெளியில் வரமாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். சில சமூக பிரச்சினையை தீர்த்து வைப்பார். நல்ல விபரம் தெரிந்தவர் என்று எல்லோராலும் மதிக்க படுபவர். அவருக்கு என்ன இப்ப?"
"அவரும் அவரது மனைவி மற்றும் இரண்டாவது மகளும் ஆஸ்பத்ரியில் கவலைக்கிடமாக இருப்பதாக சொல்கிறார்கள். பையனுக்கு மட்டும் இப்ப பரவாயில்லை."
"என்னடி சொல்ற..! என்ன ஆச்சி அவங்களுக்கு?????/"
"அவருடைய மூத்தப்பொண்ணு "மைதிலி" யார்கூடவோ நேற்றிரவு ஓடி போய்ட்டாலாம்."
"அச்சச்சோ! அப்பறம்?"
"அந்த அவமானம் தாங்க முடியாமல் இன்று காலையில் இவர்கள் குடும்பத்தோடு சோற்றில் விஷத்தை கலந்து சாப்பிட்டுவிட்டார்கலாம். பக்கத்து வீட்டுக்காரர்கள் எதுக்கோ அவங்க வீட்டுக்கு போனப்போது எல்லோரும் மயங்கி கிடப்பதைப் பார்த்துவிட்டு கொண்டுபோய் ஆஸ்பத்ரியில் சேர்த்திருக்காங்கலாம்."
"இதை கேட்ட சதாசிவம், அப்படியே ஆடிப்போய்ட்டார். ஒன்றும் பேசமுடியாமல் திகைத்தார்."
"என்னங்க, என்ன ஆச்சி?"
"ஒன்னும் இல்லடி!,
"எதையும் மனசுல வைக்காதிங்க, கொட்டி தீர்த்துடுங்க..."
"என்ன சொல்ல, எந்த ஒரு மனிதனுக்கும் அவமானம் என்று வந்தால் தாங்கிக்கொள்ள முடியாது. நமக்கு விபரம் தெரிந்தகாலம் முதலே நம்மை அவமானப்படுத்தும் யாரையும் நமக்கு பிடிக்காது. சில இடத்தில் பட்ட சிறு சிறு அவமானங்கள்கூட நமது வாழ்வில் மறக்கமுடியாத ஓவியமாக அப்பப்ப கண்ணில் வந்துபோகும். ஒவ்வொரு நிமிடமும் நம்மளை யாரும் தப்பாக பேசிவிடக்கூடாது என்று பார்த்துப் பார்த்து நடக்கிறோம். எதற்கும் யாரிடமும் கையேந்தக்கூடாது என்றும், எதற்காகவும் யாரிடமும் தலைக்குனியக்கூடாது என்றும் பார்த்துப் பார்த்து பயந்து நடக்கிறோம்."
"ஆமாங்க.."
"நாம் நம் பிள்ளைகள்தான் உலகம் என்றும், அவர்களுக்கு பார்த்துப் பார்த்து தேடித்தேடி வாங்கிக்கொடுக்கிறோம். நமது ஆசைகளைகூட கைவிட்டு விட்டு பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைக்கிறோம். பிள்ளைகளைவிட எதுவும் நமக்கு முக்கியமாக தெரியவில்லை. ஆனால் "காதல்" என்ற ஒன்று வந்துவிட்டால் பிள்ளைகளுக்கு அதைவிட முக்கியம் எதுவும் இல்லை என்று எப்படி'டீ...' தோன்றுகிறது?. எல்லாத்தையும் இது இவர்களுக்கு பொருத்தமா இருக்குமா என்று ஆயிரமாயிரம்முறை யோசித்து யோசித்து வாங்கும் நமக்கு . இவர்களின் வாழ்க்கை துணையை கண்டுபிடித்து தரமாட்டோமா என்ன?"
"அதுதாங்க எனக்கும் புரியவில்லை, பிள்ளைகள் காதலிக்கும் ஆண் நல்ல பையனாக இருந்தால் பெற்றோரிடம் வந்து சொல்லலாமே! பெற்றோர்கள் "காதலுக்கு" எதிரி இல்லை. விசாரித்து நல்ல காதல் என்றால் அவர்களின் வீட்டிலும் பேசி சேர்த்து வைத்துவிடப்போகிறோம். இதில் குடும்பமோ! ஜாதியோ! குறுக்கிட்டால் மட்டுமே கொஞ்சம் சொந்த பந்தங்களிடம் பேசி முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்துவிடுகிறோம்."
"ஆமாண்டி!. பிள்ளைகள் படித்து பெருசா வளர்ந்துவிட்டால் தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும், அப்பா அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியாது என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதுவும் முக்கியமாக "காதல்" வந்துவிட்டால் அப்பா அம்மா எதிரியாகிவிடுகிரார்கள். ஒருமுறையாவது சொல்லிப் பார்ப்போம். என்று ஏன் அவர்களுக்கு தோன்றவில்லை. பிள்ளைகள் தவறு செய்யும்போது அடிக்கும் அதே பெற்றோகள். அவர்களின் சரியான முடிவுகளை கண்டு ரசித்ததை மறந்து விடுகிறார்கள். எப்போது கண்டித்த பெற்றோர்களின் முகம்தான் அவர்களின் மனதில் இருக்கிறதே தவிர, தூக்கி கொஞ்சிய நிமிடங்களும், நமக்காகவே வாழும் பெற்றோர்களின் முகமும் அவர்களுக்கு மறந்து விடுகிறது."
"என்ன செய்வதுங்க எல்லாம் அவரவர்களின் தலைவிதி, இவ்ளோ நாள், மான-மரியாதையோடு வாழ்ந்த அவர்களுக்கு, திடீரென்று மூத்தவள் இப்படி செய்ததால் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. "
"எப்படி முடியும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் தனக்கோ தனது குடும்பத்திற்கோ எந்த ஒரு அவமானமும் வந்துவிடக்கூடாது என்று நினைத்து நினைத்து வாழ்ந்த அவர்களால் எப்படி முடியும். தனது சந்தோஷத்தை மட்டும் பார்க்கும் பிள்ளைகள், பெற்றோர்களின் சந்தோஷத்தை ஏன் மறந்துவிடுகிறது. எனக்கு அது வேணும், இது வேணும் என்று அழுதழுது கேட்டு வாங்கும் பிள்ளைகள். இந்த விஷயத்தில் ஏன் அப்படி இல்லை? எல்லாம் நம் தலைவிதி!"
அவர்கள் குழந்தையாக இருக்கும்போது நாம் பெரியவர்களாக அவர்களுக்கு வழி கட்டுகிறோம், அவர்கள் வளர வளர நாம் முதிர்ந்த பருவத்தை (குழைந்தையாக) அடைகிறோம். அவர்களுக்கும் நம்மைப்போல எல்லாவிஷயங்களும் தெரிய வரும்போது சில கருத்து வேறுபாடுகள் வருகிறது. இதெல்லாம் அவரவர்களின் புரிதல்கள். இந்த சமையத்தில்தான் ஒருவரையொருவர் உனக்கென்ன தெரியும் என்று குற்றம் சாட்டிக்கொள்கிறோம்.
இப்படி அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட சந்தியா, வாய்விட்டே அழுதுவிட்டாள். நாம் செய்ய இருந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதும் புரிந்தது. நமது சந்தோஷத்தைமட்டும் பார்த்த நாம், அப்பா அம்மாவும் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசிக்காமல் விட்டுவிட்டோமே! என்பதும் புரிந்தது.
"ஹேலோ! சரத் "
"சொல்லு சந்தியா?"
"நாளைக்காலையில் உன்னை சந்திக்கணும், கொஞ்சம் பேசணும் ஸ்ரீரங்கம் காவேரி கரைக்கு வந்துடுங்க.."
"சந்தியா என்ன ஆச்சி! இப்பவே போன்ல சொல்லு"
"இல்லை சரத், சில விஷயங்களை போன்ல பேசமுடியாது. நேரில்தான் சொல்லமுடியும், முக்கியமான பேசணும் மறக்காம வந்துடுங்க" என்று சொல்லி போன் தொடர்பை துண்டித்தாள்.
மறுநாள் காலை எந்தவித குழப்பமும் இல்லாமல் எழுந்தாள், சொன்ன நேரத்திற்கு அங்கு சென்றாள். "சரத்" முன்கூட்டியே சென்று இவளின் வருகைக்காக காத்திருந்தான்.
கொஞ்ச நேர மௌனத்திற்கு பிறகு, சந்தியாதான் பேசத்தொடங்கினாள்.
"சரத், நான் உங்களை மனசார நேசிக்கிறேன், நீங்க இல்லாமல் எனக்கு வாழ்க்கையே கிடையாது. இந்த ஜென்மத்தில் உங்களைத்தவிர யாரையும் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன். வாழ்ந்தால் உங்களோடு இல்லை என்றால். இல்லையென்றால் எனக்கு வாழ்க்கையே இல்லை. உங்களுக்காக எத்தினை காலம் வேண்டும் என்றாலும் காத்திருக்கிறேன். எங்க வீட்டிலும், உங்க வீட்டிலும் அப்பா அம்மாக்களோட சம்மதத்தோடுதான் நமது கல்யாணம் நடக்கணும்."
"சந்தியா இதெல்லாம் நடக்கிற காரியமா?"
"ஏன் நடக்காது? நீங்க உங்க அப்பா அம்மாகிட்ட என்னைக்காவது ஒருநாளாவது நமது காதலை சொல்லிருக்கியா? "
"இல்லை, அவங்களைப்பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்ட்ரார்கள்."
"இதெல்லாம், உனது கற்பனை "சரத்", உங்களுக்கு பேச தைரியம் இல்லை, நீங்க எதுவும் பேசவேண்டாம். நமது காதலுக்காக நான் முதலில் எங்க வீட்டில் பேசுகிறேன். எனது அப்பா அம்மாவை அழைத்துவந்து உங்க வீட்டில் பேசுகிறேன்."
"இதெல்லாம் நடக்குமா?"
"கண்டிப்பாக நடக்கும். நமக்கு காதலிக்க எல்லா தகுதியும் இருக்கிறது. வீட்டில் சொல்லத்தான் மனசு இல்லை, இதுவரை தவறு செய்யாத நாம் இப்போதுதான் தவறு செய்கிறோம். நமது உண்மையான காதலை அவர்களிடம் சொல்வோம், புரிய வைப்போம். அவர்கள் ஏற்றுக்கொள்கிற வரைக்கும் போராடுவோம். முடியவே முடியாது என்று சொல்லிவிட்டால், அன்னைக்கே நான் உங்ககூட வந்துவிடுகிறேன். இப்ப சொல்லாமல் போவதைவிட அன்னைக்கு சொல்லிவிட்டே உங்ககூட வருகிறேன். நமக்கு சட்டத்தில் இடம் இருக்கு."
இப்போது "சரத்"க்கும், சந்தியா சொல்வது சரியாகப்பட்டது.
இருவரும் நாளை திருட்டுத்தனமாக போவதை மறந்துவிட்டு, எப்படி அப்பா அம்மாவிடம் சொல்வது என்பதைப்பற்றி தீவிரமாக கலந்து ஆலோசித்தனர். எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையும் வந்துவிட்டது. குழப்பங்கள் வெளியேறியது, முயற்சிகள் முன்னில் நின்றது.
நம்பிக்கையோடு! கைகோர்த்து நடக்கையில் எங்கோ தூரத்தில் இந்த பாடல் ஒலித்தது.

***********************************************************************************

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு!
வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு!
முற்றும்.
*****************நன்றி, மீண்டும் சந்திப்போம்.*******************
26 கருத்துகள்:
தம்பி உங்க சிறு கதை ரொம்ப அருமை ,இறுதியில் தன் பெற்றோரின் வாள்தொடவே திருமனம்கிற சந்தியாவோட முடிவு அருமை வாழ்த்துக்கள் உங்களின் படைப்புகள் தரமானதாக இருக்கட்டும் இது போல
அப்படியே இதையும் படிச்சு பாருங்க http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_2144.html
கதை நல்ல இருக்கு நல்ல முடிவு. தலைப்பு மட்டும் வேற வச்சுருக்கலாம்னு தோணுது. நல்ல முயற்சி, பாராட்டுக்கள். சிறந்த எழுத்தாளராக வாழ்த்துக்கள்
நல்ல கதை நண்பா
"காதலுக்கு மரியாதை" போலவே இருக்கே!! அதுசரி, காதலை பெத்தவங்க ஏத்துகிட்டாங்களா இல்லையா? [கதையின் நீளத்தை சற்றே ட்ரிம் பண்ணலாம்னு தோணுது!! கதை மற்றபடி சூப்பர்!!]
சிறந்த நடை. வாழ்த்துக்கள்.
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
கண்டிப்பாக படிக்கிறேன் ஐயா.
கொஞ்சம் வேலைப்பளு காரணமாக நேரம் கிடைப்பதில்லை ஐயா. இதெல்லாம் முடிந்ததும் தொடர்ந்து அடிக்கடி வருவேன் ஐயா.
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
ஆமாம் ஐயா, நானும் யோசித்தேன், பிறகு அப்படியே விட்டுட்டேன்.
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பா.
ஹா ஹா ஹா !!!
கதையில் இருவரும் பெற்றோர்களிடம் பேச முடிவு செய்துவிட்டார்கள் நண்பா, கண்டிப்பாக வெற்றியே! சந்தியா எல்லா முயற்ச்சியும் எடுப்பதாக சொல்லிட்டேனே! கண்டிப்பாக ஒத்துகொள்வார்கள் என்றுதான் அர்த்தம்.
கதையின் கரு கொஞ்சம் வித்தியாசமானது என்பதால், கொஞ்சம் நீளமாக எழுதவேண்டியதாகிவிட்டது. சொல்ல வேண்டியதை முழுமையாக சொல்லிவிட்ட திருப்தி இப்போதுதான் கிடைத்துள்ளது நண்பா.
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பா.
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!
அருமை... அருமை...
அனைத்து தரப்பினரும் உணரட்டும் !
அழகிய விழிப்புணர்வு
தொடர வாழ்த்துகள்...
அருமை... அருமை...
அனைத்து தரப்பினரும் உணரட்டும்
அழகிய விழிப்புணர்வு !
தொடர வாழ்த்துகள்...
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க.
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க.
ஆகாஷ்,
படிக்கும் போது ஒரு திக் திக் குடன் தான் படித்தேன்.நானும் ஒரு தாய்.
மகன் மகள் இருவருக்கும் திருமனமாகி விட்டது. இருந்தாலும் சரத் தும் ,சந்தியாவும் வீட்டில் சொல்லாமல் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களே என்று பயந்தேன்.நல்ல வேளை அப்படி நடக்கவில்லை.
அது சரி, இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணமாகிவிட்டது இல்லையா? அந்த இளம் தம்பதிக்கு என் வாழ்த்துக்கள்.
சுவாரஸ்யம் குறையாமல் எழுதியிருக்கிறீர்கள்.
அருமையான நடை.
மேலும் மேலும் இந்த மாதிரி பதிவுகள் தர வாழ்த்துகிறேன்.
ராஜி
சும்மா பேருக்கு ஒரு பதிவுன்னு போடுவதை விட முழுக்க முழுக்க என் சொந்த படைப்பா இருக்கட்டும் என்றும், கதை பிரியர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக இருக்கவேண்டும் என்றுதான் எழுதினேன், உங்களுடைய பின்னூட்டம் கண்டபோது முழு சந்தோசத்தையும் அடைந்தேன்.
ரொம்ப நன்றிங்க..
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க...
பாசிட்டிவ் முடிவுடன் நல்ல கதை. வாழ்த்துகள்.
பயனுள்ள பதிவு.
ரொம்ப நல்லா இருக்கு கதை வாழ்த்துகள்.
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க அம்மா!
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க...
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க...
சிறப்பான சிறுகதைக்கு அருமையான முடிவு ...
பாராட்டுக்கள்..
மிகவும் அருமையான பதிவு சகோ நன்றி
Post a Comment