அய்யய்யய்யோ........ ஆனந்தமே......!, நெஞ்சிக்குள்ளே......ஆரம்பமே.....!
புதுமுக நாயகன் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம்தான் கும்கி. திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்க, எம் சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது. அப்பப்போ "மைனா" படத்தை ஞாபக படுத்தினாலும், ச்சே! அப்படி இல்லை என்றே சொல்லவைக்கிறது. அருமையான காதல் கதை, அற்புதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேரனும், இளைய திலகம் பிரபு அவர்களின் மகனுமான விக்ரம் பிரபு, நடிப்பில் அசத்திவிட்டார்.
நடிப்பில் சிவாஜியையோ! பிரபுவையோ! பின்பற்றாதது ஆனந்தமே........!
*****
சொய்...சொய் ...!, கையளவு நெஞ்சத்தில.....கடலளவு ஆச மச்சான்...
டி இமான்அவர்களின் இசையில் பாடல்கள் அனைத்தும் மிக மிக அருமை, திரும்ப திரும்ப கேட்கவேண்டும் என்று ரசிகர்கள் மனதை ஏங்க வைத்துவிட்டது என்றே சொல்லலாம். டி இமான் அவர்கள் மிக அருமையாக இசையமைத்து வருகிறார். அவரது இசையமைப்பில் வெளிவந்த பெரும்பாலான பாடல்கள் இசை பிரியர்களை கவர்ந்திழுத்திருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கு எனது பாராட்டுகள். அருமையான இசையில் அனைத்து
இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கு எனது பாராட்டுகள். அருமையான இசையில் அனைத்து
பாடல்களும் என் கையளவு நெஞ்சத்தில..... கடலளவு ஆசையானது!
*****
ஒன்னும் புரியல, சொல்லத்தெரியல, கண்ணுமுழியில, கண்ட அழகுல...!
திரைக்கதை என்று பார்த்தால் காட்டு யானையை விரட்ட கொண்டுபோகும் யானையின் பெயர்தான் "கும்கி" இதைதான் படத்தின் பெயராகவும் வைத்திருக்கிறார்கள். தம்பி ராமையாவின் நடிப்பு கதையை நகர்த்தி செல்கிறது என்று சொல்லலாம், நாயகன் எப்பவும் நாயகியை நினைத்துகொண்டிருக்க, தம்பி ராமையாதான் கதையை ஞாபக படுத்துகிறார் நாயகனுக்கு மட்டுமில்லை நமக்கும்தான். ஒளிப்பதிவாளர் சுகுமார் அடிக்கடி லட்சுமி மேனனின் கண்முழியை காட்டியதால், என்ன கண்ணுடா சாமி!
கதையில் ஒன்னும் புரியல, சொல்லத்தெரியல..
கதையில் ஒன்னும் புரியல, சொல்லத்தெரியல..
அவ கண்ணுமுழியில கண்ட அழகுல..........!
******
இந்த பாடல் வரிகளை எழுதியவர் யுகபாரதி எழுத, ரஞ்சித் மற்றும் ஸ்ரேயாகோஷல் பாடியிருக்கிறார்கள். சொல்லிட்டாளே அவ காதல....! என்று ரஞ்சித் பாடிய இந்த வரி அப்படியே என் அடிவயிற்றில் இருந்து சர்ர்ர்ர்ர்'ன்னு காதல் உணர்வை வெளிப்படுத்தியது. இரண்டு மூன்று முறை மீண்டும் மீண்டும் கேட்டேன் இந்த வரியை, அற்புதமான உணர்வோடு பாடிய ரஞ்சித்க்கு எனது பாராட்டுகள்.அனைத்து பாடல்வரிகளையும் யுவபாரதி அவர்கள் எழுதிருக்கிறார். மிக மிக அருமையான பாடல் வரிகளை கொடுத்த அவருக்கும் எனது பாராட்டுகள்.
இந்த படத்தை பார்த்தேன், பாடல்களை ரசித்தேன் என்றே சொல்லலாம், சரியான நேரத்தில் சரியான இடத்தில் பாடலை அமைத்திருக்கிறார்கள். ரொம்ப நாளைக்கு பிறகு பாடல்களோடு படத்தையும் ரசித்து பார்க்க வைத்தது. இயக்குனர் பிரபு சாலமன் அவர்களுக்கு மீண்டும் பாராட்டுகள்.
சினிமா விமர்சனம் என்பது அவரவர்களின் ரசனைதானே! நாம் யார் இதுக்கு மார்க் போட? நான் ரசித்த காட்சிகளையும், வசனங்களையும் மற்றும் பாடல்களையும் ரசனையோடு சொல்லிட்டேன்.
சொல்லிட்டேனே இவ காதல...!, சொல்லும்போதே சுகம் தாளல...!

பாடல் வரிகளைக் கேட்டு மகிழுங்கள்:
தரவிறக்கம் செய்யவும், கேட்டு ரசிக்கவும்.
18 கருத்துகள்:
பாட்டோட லிங்கெல்லாம்.......... எப்பூடி!!
உடனே! ஓடி வந்து பார்வையிட்டதற்கு நன்றி நண்பா. உங்க மெயில் ஐடி கொடுங்க...
akashs777@gmail.com
இதுக்கு தனிமடல் அனுப்புங்க நண்பா.
வணக்கம் ஐயா.
உங்களுடைய வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
விமர்சனத்தோட பாடல்களின் லிங்கை தந்தது மிகவும் அருமை எதையும் வித்தியாசமாக தரும் உங்கள் பாணி மிக அருமை பாராட்டுக்கள்
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா!
தங்கள் விமர்சனமே படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது! நன்று!
மொத்ததில் நல்லாருக்குன்னு சொல்றீங்க!
த.ம.4
ரசித்த காட்சிகளையும், வசனங்களையும் மற்றும் பாடல்களையும் ரசனையோடு பகிர்ந்த அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
வித்தியாசமான விமர்சனம்! அருமையான பதிவு! வாழ்த்துக்கள்! என் வலைப்பூவிற்கு வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே!
நல்லபகிர்வு...
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் நன்றி ஐயா!
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா!
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் நன்றிங்க!
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா!
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா!
நடிப்பில் சிவாஜியையோ! பிரபுவையோ! பின்பற்றாதது ஆனந்தமே........!
>>
அப்படியா! ரொம்ப நல்லது
உங்களை ரசனை வித்தியாசமானது அருமை
ur blog design is very nice. all the best sir.
Post a Comment