Pages

Sunday, December 2, 2012

மாற்றான் + பீட்சா = சாருலதா - விமர்சனம்.

           என் பார்வையில் மாற்றான் + பீட்சா = சாருலதா -இப்படிதான் தெரிகிறது. நான் கொஞ்ச நாட்களுக்கு முன்பு மாற்றான் படம் பார்த்தேன்.  பிறகு சாருலதா மற்றும் பீட்சா படங்களையும் பார்த்து குழம்பிவிட்டேன். என்னடா இது! இந்த மூன்று கதாசிரியர்கள் மனதிலும் ஒரேமாதிரியான சிந்தனை எப்படி தோன்றியது என்று வியப்படைந்தேன். அதன் தாக்கம்தான் இந்த பதிவு.

மாற்றான்.

         மாற்றான் படம் பார்த்தேன் எப்போதும்போல சூர்யா நடிப்பில் அசத்தியிருந்தார், குறிப்பாக அந்த சண்டைக்காட்சியில் மிகவும் சிரமப்பட்டு நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றார். சில பாடல் காட்சிகளும் ரசிக்கக் கூடியவையாகவே அமைந்தது. மிகவும் ரசித்துப்பார்த்தேன். எப்போதும் போல கதைக்கு தகுந்தவாறு நடிப்பதில் சூர்யாவிடம் குறையைக் கண்டுப்பிடிக்கமுடியவில்லை. இருந்தாலும் படத்தில் எதையையோ எதிர்பார்த்து ஏமார்ந்தேன் என்பது உண்மை. சொல்லவந்ததை முழுமையாக சொல்ல முடியாமல் போனதும், பிறகு வெளிநாட்டில் அதுவும் ரசியா போன்ற நாட்டின் ராணுவ ரகசியங்களை சாதரணமாக சுற்றுலா விசாவில் வந்த ஒருவருக்கு முழுவதையும் வெளிப்படையாக காட்டுவது நம்பமுடியாத கற்பனையாகவே இருந்தது.
 இந்த இரட்டை வேடக்காட்சி மெய்சிலிக்க வைத்தது என்று சொன்னால் மிகையாகாது.மிகவும் ரசித்துப் பார்த்தேன். சில குறைகளைத்தவிர படம் நல்லாவே அமைந்திருந்தது. காஜல் அகர்வால் பல மொழிகளைத் தெரிந்து வைத்திருப்பதாக பல காட்சிகளில் உணர முடிந்தது, ஒரு காதாநாயகியை சரியாக இரண்டு காரணத்திற்காக பயன்படுத்திருக்கிறார் வாழ்த்துகள்.

பீட்சா.
   
            இந்த படத்தைக்குறித்து பலரும் பல விதமாக விமர்சனம் எழுதுயிருந்தார்கள்,  அவர்கள் விமர்சனங்களை படித்ததும் இந்த படத்தை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமானது. நான் அமீரகத்தில் இருப்பதால் உடனே பார்க்கமுடியவில்லை, இருந்தாலும் கொஞ்ச நாளில் இந்த படத்தையும் பார்த்தேன். குறிப்பாக விமர்சனம் எழுதியவர்களில் சிலர், ரம்யா நம்பீசன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் என்ற வார்த்தைகள் முழுவதும் பொய்யாகிப்போனது. விமர்சனம் படித்து எதிர்பார்த்த அளவுக்கு அவர் நடிப்பு இல்லவே இல்லை. நாயகன் விஜய் சேதுபதி மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். அவருக்கு எனது கைதட்டல்கள். படத்தைப்பார்த்து பயப்படும் அளவுக்கு சில காட்சிகள் அமைந்திருந்து என்பது உண்மைதான் மறுக்கமுடியாது அருமையான சிந்தனை என்றே சொல்லவேண்டும்.
விமர்சனங்களைப்  படித்ததனால் கொஞ்சம் பயத்துடன்தான் இந்த படத்தைப் பார்த்தேன். பார்த்தப்பிறகு அந்த அளவுக்கு பயப்படவில்லை என்பதையும் உணர்ந்தேன். எப்படியோ ஒரு வித்தியாசமானப் படம்தான்.

சாருலதா.

         தொடர்ச்சியாக இந்தப்படத்தையும் பார்த்தேன், பாடம் ஆரம்பித்தமுதலே எனது எண்ணம் முழுவதும் 'மாற்றான்' படம் பக்கம் சென்றது. கொஞ்ச இடைவெளிக்குப் பிறகு 'பீட்சா' பக்கமும் சென்றது. காரணம் இந்த படத்தில் பிரியாமணி இரட்டைக் குழந்தையாகப் பிறந்து கிட்டத்தட்ட சூர்யா போலவே நடித்திருக்கிறார். ஒவ்வொரு அசைவிலும் சூர்யாவே தெரிந்தார், முதலில் 'மாற்றான்' படம் பார்த்ததினால் இருக்குமோ? என்றும் நினைத்தேன். முதலில் 'சாருலதா' வை பார்த்துவிட்டு பிறகு 'மாற்றான்' படம் பார்த்திருந்தாலும் எனது எண்ணம் இதுபோல்தான் இருந்திருக்குமோ? என்றும் நினைத்ததுண்டு...
இருந்தாலும் அந்த "மியூசிக்" வாசிக்கும் காட்சி கைதட்டலை பெற்றது.
சில 'பேய்' காட்சிகள் வந்ததும் எனது எண்ணம் ஏனோ 'பீட்சா' பக்கம் சென்றது. இதுவும் அதுபோல் இருக்குமோ? என்ற குழப்பமும். இங்கு ஒரு உண்மையைச் சொல்லப்போனால் 'சாருலதா' விமர்சனம் யாரும் எழுதவில்லை, அப்படியே எழுதி இருந்தாலும் அதை நான் படித்திருக்கவில்லை. அப்படி படித்திருந்தால் இன்னும் நிறைய எதிர்ப்பார்த்து ஏமாற்றம் அடைந்திருப்பேன்.பிரியாமணி நன்றாகவே நடித்துள்ளார். சில காட்சிகள் மிகவும் பிடித்திருந்தது.

மாற்றான் + பீட்சா = சாருலதா.

           இப்படி மூன்று படத்தையும் தொடர்ந்து பார்த்ததால் என் மனதில் தோன்றிய எண்ணத்தை இங்கு வெளிப்படுத்திவிட்டேன். நான் இதுவரை சினிமா விமர்சனம் எழுதியது கிடையாது இதுவே எனது முதல் படைப்பு.

+
=






இப்படித்தாங்க எனது பார்வையில் இந்த மூன்று படங்களும். 
மாற்றான் + பீட்சா = சாருலதா - என்று ஆனது. 

         நான் இதுவரையில் சினிமா விமர்சனம் எழுதியதே கிடையாது, இதுதான் எனது முதல் பதிவு, ஏதாவது நிறை-குறைகள் இருந்தால் நண்பர்கள் பொறுத்துக்கொண்டு அதைச் சுட்டிக் காட்டவும். உங்களுடைய கருத்துகளையும் பகிரவும்.

***********************நன்றி! மீண்டும் சந்திப்போம் ***********************

13 கருத்துகள்:

ஆத்மா said...

அழகாக எழுதியிருகிறீர்கள் நண்பரே....
மூன்று பட விமர்சனங்களையும் ஒரே பதிவில் தந்தது கலக்கல்.....

ஒரு ரகசியம் யாரிட்டையும் சொல்லிடாதீங்கோ
நான் இன்னும் மூன்று படங்களும் பார்க்கவே இல்லை

திண்டுக்கல் தனபாலன் said...

3 in 1 கலக்கல்...

பாராட்டுக்கள் நண்பரே...

JR Benedict II said...

சாரு = மாற்றான் ஓகே
பீட்சா எனக்கு தனித்தே தெரிந்தது..

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்

semmalai akash said...

மிக்க நன்றிங்க நண்பரே!

சரி சரி நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன், நீங்க சொல்லாமல் இருந்தால் சரி.....

semmalai akash said...

ஆஹா! மிக்க நன்றி நண்பரே ரொம்ப சந்தோஷமா இருக்கிறது.

semmalai akash said...

ஓ! அப்படியா நண்பா, எனக்கு என்னவோ இப்படிதான் தோன்றியது, அதைதான் இங்கே பகிர்ந்துள்ளேன். ம்ம்ம்ம் சரிதாம் ஒவ்வொருவருக்கும் ஒருபோல...

உஷா அன்பரசு said...

இந்த மூணு படத்தையுமே நான் பார்க்கலை ஆனா எப்படி காபி ஆத்தியிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கவாவது பார்க்கிறேன்.

semmalai akash said...

ம்ம்ம்ம் பாருங்க பாருங்க என்னை மாதிரி குழம்பாமல் இருந்தால் சரி..

வாங்க வாங்க என்ன ரொம்ப நாளா ஆளையே காணும் எங்க போனீங்க?

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

ராஜி said...

இதை மூணு பதிவா போட்டிருந்தா ஹிட்ஸ் கூடியிருக்கும்ல?!

Thozhirkalam Channel said...

பாராட்டுக்கள் நண்பரே.மூன்று படங்களையும் நானும் பார்க்கவே இல்லை ஆனால் விமர்சனங்கள் அருமை கலக்குங்க

semmalai akash said...

ஹா ஹா ஹா !!! நான் எனது குழப்பத்தை தெரிவிக்கவே இந்த பதிவை எழுதினேங்க...

ரொம்ப நன்றிங்க..

semmalai akash said...

மிக்க நன்றி நண்பரே! இரண்டு படங்களைப் பார்த்தால் மூன்றாவது படத்தை பார்க்கவேண்டியதில்லை இதுதான் எனது கருத்து..

இப்பலாம் ஓட்டியில் எனது பதிவு வருகிறது நண்பரே.

வே.நடனசபாபதி said...

"இந்த மூன்று கதாசிரியர்கள் மனதிலும் ஒரேமாதிரியான சிந்தனை எப்படி தோன்றியது என்று வியப்படைந்தேன்."
சரியாக சிந்தித்திருக்கிறீர்கள். விமரிசனத்திற்கு பாராட்டுக்கள்!

Post a Comment