வணக்கம் நண்பர்களே! கொஞ்சநாள் வேலைப்பளுவின் காரணமாக எந்த பதிவும் எழுதவில்லை. மேலும் நண்பர்களின் வலைப்பதிவு பக்கமும் வரமுடியவில்லை. இந்த மாதம் வருட முடிவு என்பதால் வேலைப்பளு அதிகம். சரி பதிவுக்கு போவோம்.
இதற்கு முன் மொய் இல்லாமல் திருமணம் செய்வோம் என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தேன் அதைப்படிக்க இங்கு செல்லவும்.
வரதட்சினை வாங்குவதற்கு மிகவும் முக்கியமானவர்கள் யார் என்று கேட்டால் மணமகன் அல்லது மணமகன் வீட்டார்கள் என்றுதான் பதில் சொல்கிறார்கள். காரணம் ஒரு சில இடங்களில் மணமகனோ அல்லது மணமகனின் தாய்-தந்தையோ, அல்லது உறவினர்களோ என்று யாராவது ஒருவர் வரதட்சினையை கேட்டு வாங்குவார்கள்.
மணமகன் வீட்டார்கள் வரதட்சினையை கேட்டு வாங்குவதற்கு என்ன காரணம்? என்று பார்ப்போம். சுருக்கமாகவே சொல்ல நினைக்கிறேன்.
- தங்கள் வீட்டில் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டும் என்றால் அவர்களையும் அறியாமல் வரதட்சினை கேட்க்கிறார்கள்.
- மணமகன் படித்து வேலையில் இருந்தால் அதற்கு தகுந்தாற்போல் வரதட்சினை கேட்க்கிறார்கள்.
- வரதட்சினை கேட்கவில்லை என்றால் மணமகள் வீட்டார்கள் மணமகனுக்கு ஏதோ குறை இருக்கிறது என்று எண்ணுகிறார்கள்.
- அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒண்ணுமே இல்லாமல் கல்யாணம் செய்துகொண்டு வந்திருக்கிறார்கள் என்று ஏளனம் பேசுவார்கள்.
- சொந்தப் பந்தத்தில் இருக்கும் பெண் வீட்டார்கள், ஆமாம் இவ என்னத்த அள்ளிகிட்டு வந்துட்டா? என் பொண்ணை கட்டியிருந்தால் எல்லாமே அவனுக்குதான் என்று சொல்வார்கள்.
- பொண்ணு நிறத்திலோ? அல்லது உயரத்திலோ? அல்லது உருவத்திலோ? குறை இருந்தால் வரதட்சினையை கூடுதலாக கேட்பார்கள்.
- பணக்காரர்கள் வீட்டுப் பொண்ணாக இருந்தால் வேண்டும் என்றே கேட்டு வாங்குவார்கள்.
- மணமகன் வீட்டில் அதிகசொத்துக்கள் இருந்தால் வருகிற பொண்ணும் அந்தளவுக்கு இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
இவைகள் எல்லாம் எனது அனுபவத்தில் தெரிந்தவைகள் இன்னும் நிறைய காரணங்கள் இருக்கிறது.
ஆனால் வரதட்சினை வாங்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் மணமகளின் வீட்டார்கள் என்பதையும் ஒத்துகொள்ளவேண்டும். மணமகன் வீட்டார்கள் வரதட்சினை கேட்டாலும் சில மணமகன்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள். அப்படி சொன்னதும் மணமகள் வீட்டார்கள் சந்தேக கண்ணோடு பார்க்கிறார்கள். அச்சோ! மாப்பிள்ளைக்கு ஏதாவது குறை இருக்குமோ? அல்லது கெட்டப் பழக்கங்கள் அதிகமாக இருக்குமோ? என்றெல்லாம் கற்பனை செய்து விசாரிக்கிறார்கள். பல இடங்களில் இந்துபோல் வரும் பிரட்சினைகளால்தான் மணமகன் அமைதியாகவே இருந்துவிடுகிறார்கள்.
இந்த பதிவிற்கான காரணமே இதுதான். இவுலகில் வரதட்சினையே வேண்டாம் என்று சொல்லும் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். தயவு செய்து அவர்களின்மேல் இப்படி அபாண்டமான பழியை சுமத்தாதீர்கள். மணமகள் வீட்டார்கள் பொண்ணை படிக்க வைப்பதற்கும், நல்ல முறையில் வளர்ப்பதற்கும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று நன்றாகவே இந்த கால இளைஞர்களுக்கு தெரியும். படித்த விபரம் தெரிந்த பெண் வேண்டும் என்று நினைக்கும் எந்த மணமகனும் வரதட்சினையை எதிர்ப்பார்ப்பதில்லை. எனது நண்பர்கள் மருத்துவர், என்ஜினியர், ஆசிரியர்கள் என்று பல படிப்பை முடித்துவிட்டு நல்ல உத்தியோகத்தில் இருந்தும், வரதட்சினையே வாங்காமல் திருமணம் செய்திருக்கிறார்கள்.
மணமகள் வீட்டார்கள் அவர்கள் விருப்பத்திற்கு தனது மகளுக்கு கொடுக்கும் தங்க ஆபரணங்களுக்கும், பொருளுக்கும் பெயர் வரதட்சினை கிடையாது. கேட்டு வாங்குவதற்கு பெயர்தான் வரதட்சினை. அதேசமயம் வரதட்சினையை கேட்டு கேட்டு வாங்கும் மணமகனும், மணமகன் வீட்டார்களும் இருக்கிறார்கள் என்பதையும் மறுக்கவில்லை, அவர்கள் மனிதர்களே இல்லை. நல்ல மனிதர்களை "புண்" படுத்தவேண்டாம். நல்லவர்களை சோதனை செய்யவேண்டாம். மீண்டும் மீண்டும் நீங்கள் இந்த தவறை செய்தால் நாட்டில் நல்லவர்களே இருக்கமாட்டார்கள்.
இந்த பதிவிற்கான காரணமே இதுதான். இவுலகில் வரதட்சினையே வேண்டாம் என்று சொல்லும் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். தயவு செய்து அவர்களின்மேல் இப்படி அபாண்டமான பழியை சுமத்தாதீர்கள். மணமகள் வீட்டார்கள் பொண்ணை படிக்க வைப்பதற்கும், நல்ல முறையில் வளர்ப்பதற்கும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று நன்றாகவே இந்த கால இளைஞர்களுக்கு தெரியும். படித்த விபரம் தெரிந்த பெண் வேண்டும் என்று நினைக்கும் எந்த மணமகனும் வரதட்சினையை எதிர்ப்பார்ப்பதில்லை. எனது நண்பர்கள் மருத்துவர், என்ஜினியர், ஆசிரியர்கள் என்று பல படிப்பை முடித்துவிட்டு நல்ல உத்தியோகத்தில் இருந்தும், வரதட்சினையே வாங்காமல் திருமணம் செய்திருக்கிறார்கள்.
மணமகள் வீட்டார்கள் அவர்கள் விருப்பத்திற்கு தனது மகளுக்கு கொடுக்கும் தங்க ஆபரணங்களுக்கும், பொருளுக்கும் பெயர் வரதட்சினை கிடையாது. கேட்டு வாங்குவதற்கு பெயர்தான் வரதட்சினை. அதேசமயம் வரதட்சினையை கேட்டு கேட்டு வாங்கும் மணமகனும், மணமகன் வீட்டார்களும் இருக்கிறார்கள் என்பதையும் மறுக்கவில்லை, அவர்கள் மனிதர்களே இல்லை. நல்ல மனிதர்களை "புண்" படுத்தவேண்டாம். நல்லவர்களை சோதனை செய்யவேண்டாம். மீண்டும் மீண்டும் நீங்கள் இந்த தவறை செய்தால் நாட்டில் நல்லவர்களே இருக்கமாட்டார்கள்.
39 கருத்துகள்:
நீங்கள் சொன்ன காரணங்களில் மூன்றாவது காரணம் தான் முக்கிய காரணம். எதுவுமே செய்ய வேண்டாம் என்று மணமகன் தரப்பில் சொன்னால், பெண் வீட்டில் அவர்கள் இளிச்சவாயர்களாகத்தான் அறியப்படுகிறார்கள். மரியாதையும் குறைகிறது. அதனால் திருமணம் ஒரு வழியாக ஆன பின் 'ஏன் இப்படி ஒன்றுமே வேண்டாம் என்று சொன்னோம்?' என்று மணமகன் வீட்டார் நொந்து கொள்வதும் நடக்கிறது. நெருங்கிய சினேகிதியின் அனுபவம் இது!!
//அப்படி சொன்னதும் மணமகள் வீட்டார்கள் சந்தேக கண்ணோடு பார்க்கிறார்கள். அச்சோ! மாப்பிள்ளைக்கு ஏதாவது குறை இருக்குமோ?/
ஹி ஹி இப்படி வேற இருக்கா? நாங்களும் கேட்கணும் போல இருக்கே..
தல இருந்தாலும் இந்த ட்ரெண்ட் செட் பண்ண பட்ட படியால் தான் இவ்வளவு பிரைசினையும், வர தட்சணை மட்டம் படிப்படியாக குறைய இவையும் குறையும்
//Your comment will be visible after approval. //
சத்திய சோதனை
பிரபலம் ஆகிட்டிங்க போங்க.. இது தான் பிரபலமாக முதல் படி முக்கிய படி.. ஹி ஹி
எனக்கு சமீபத்தில் பொண்ணு பார்க்க ஆரம்பித்தார்கள்... நான் அயல் நாட்டில் நல்ல வேலையிலும் நல்ல சம்பாத்தியத்திலும் இருப்பதால் பொண்ணு நன்றாக படித்திருந்தால் மட்டும் போதுமானது என்றே கூறி உள்ளேன்.. ஆனால் இன்னும் பொண்ணு கிடைத்த பாடில்லை..
ஒரு பெண்ணிடம் வரதட்சணை கேட்பதற்கு எந்த நியாயமும் இல்லை. மாறாக அவள் செய்யும் தியாகத்துக்கு மாப்பிள்ளை வீட்டார்தான் வரதட்சணை கொடுக்க வேண்டும். நம் நாட்டில் உல்டா. எப்போது இந்நிலை மாறப் போகிறதோ!
வரதட்சினை கொடுமைகளால் பாதிக்கப்படும் ஆண்கள்- என்ற உங்கள் கட்டுரை தலைப்பை பார்த்துவிட்டு மஹ்ர் என்ற அரபு ஆண்கள் கொடுக்கும் வரதட்சினை கொடுமை பற்றி எழுதியுள்ளீர்களோ என்று நினைத்தேன். நல்ல கட்டுரை. வரதட்சினை, மஹ்ர் இரண்டுமே ஒழிக்கபட வேண்டிய கொடுமைகள்.
Nalla pakirvu.. Annbhu sikkarameu nalla ponnu kidaika valthukal.
சமூகத்தைப் பிரதிபலிக்கும் அருமையான பகிர்வு நண்பரே.
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
முகநூலில் கண்ட செய்தி ஒன்றைத் தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
“மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !
பெண்ணே உங்கள் வருங்கால கணவர் :
1. கார் வைத்து இருக்க வேண்டும்,
2. சொந்த வீடு இருக்க வேண்டும்,
கை நிறைய சம்பாதிக்க வேண்டும்(சாப்ட்வேர்/பாரீன் மாப்பிளை யாக இருக்கனும் உள்ளூர் பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ?),
3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க வேண்டும்,
4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும்,
5. அக்கா தங்கை இருக்க கூடாது,
6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச வேண்டும்
7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும் (அனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது!)
8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்,
9. பிட்டாக இருக்க வேண்டும்,
10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண்டும் (மாமியார் வீடு மட்டும் மிக தூரத்தில் இருக்க வேண்டும்),
11.கேட்ட பழக்க வழக்கம் இருக்க கூடாது அதை நிரூபிக்க ரத்த சோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும்,
இதை அனைத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள், இதுவும் ஒரு வித வரதட்சணை என்று புரியவில்லையா?
மொத்தத்தில் எ டி எம் போன்ற மசினுடன் வசதியான வாழ்க்கைக்கு நீங்கள் தரும் லட்சம் தான் இந்த வரதட்சணை.
காஸ்டிலியான மாப்பிள்ளை வேண்டும் என்பதற்காக எவளவு வேண்டுமானாலும் குடுக்க தயாராக இருக்கும் நீங்கலும் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் சேட்டும் ஒன்று தான்.
இனியும் வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும் தான் கரணம் என்று புலம்புவதை நிருந்துங்கள். தன்னால் விடியும்.
பதிவுக்கு நன்றி !
சமூகத்தில் ஆண் / பெண்கள் மத்தியில் தவறான புரிதல்கள் களையப்பட்டு சமூககொல்லியான வரதட்சனையை அறவே ஒழிக்கப்பட அனைவரும் பாடுபடவேண்டும்
//வணக்கம் நண்பர்களே! கொஞ்சநாள் வேலைப்பளுவின் காரணமாக எந்த பதிவும் எழுதவில்லை. மேலும் நண்பர்களின் வலைப்பதிவு பக்கமும் வரமுடியவில்லை//
நிம்மதியாக இருந்தோம்.
நீங்க சொல்லி இருப்பதெல்லாம் உண்மைதான். நான் எங்க வீட்டு விஷயம் பத்திமட்டும் சொல்லிக்கரேன் எனக்கு 3-பசங்க மூவருக்குமே எந்தவிதமான சீர் செனத்தியோ வரதட்சிணையோ எதுவும் வாங்காம தான் கல்யாணம் செய்தோம். அதுமட்டுமில்லே கல்ய்யாணசெலவுகள் அதாவது மண்டபம், சாப்பாடு புரோகிதர்,
பெண்ணுக்கு கூறைப்புடவை தாலி முதல் கொண்டு நாங்களே செலவு செய்துதான் பெண் எடுத்தொம்ம். அவர்களுக்கும் இன்று திருமணம் முடிந்து 20 வருடங்கள் ஆகிரது எல்லாரும் சந்தோஷமாக சௌகரியமாகத்தான் இருக்கிரார்கள்.
3 வது தான் சரியான காரணம் என்றே எனக்கும் தோன்றுகிறது. இது மாதிரியான மூடநம்பிக்கைகளை நமக்கு நாமே விட்டொழிய வேண்டும்.
முனைவர் குணசீலன் அவர்கள் சொன்னது சரியே! படிக்காத பெண்களை கூட அதிகமாக வரதட்சணை கொடுத்து நல்ல வேலையில் உள்ள மாப்பிள்ளைக்கு கொடுக்கதான் பெண் வீட்டார் நினைக்கின்றனர். ஆமாம் கெட்ட பழக்கமா? கேட்ட பழக்கமா ? இப்படி எல்லாம் அவசரத்துல தமிழ் எழுத்தை பிழையா எழுதரது ரொம்ப கெட்ட பழக்கங்க!
விரைவில் இந்த வரதட்சனை கலாச்சாரத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்
வணக்கம்,ஆமாங்க.. என்ன செய்ய..இப்படிதான் இப்போதெல்லாம் நடக்கிறது.
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!
ஆமாம் நண்பா. வரதட்சனை குறைந்தால் இதுவும் குறையும். நல்ல மணமகனுக்கு நல்ல மணமகள் கிடைப்பாள்.
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பா.
ஹா ஹா ஹா !!! என்ன நண்பா இப்படி சொல்லிட்டிங்க.. செம சிரிப்பு நண்பா உங்ககிட்ட..
அதிக வரதட்சினை கிடைக்கும் பொண்ணா பார்க்க சொல்லுங்க உடனே கிடைத்துவிடும். நகை விக்கிற விலைக்கு கிலோ கணக்குல நகை போடவும் சில பெண் வீட்டுக்காரர்கள் ரெடி.எப்படித்தான் அவங்களுக்கு பணம் கிடைக்குதோ தெரியவில்லை!
இப்பலாம் வரதட்சினை கேட்கவில்லை என்றால் பெண் வீட்டார்கள் குறை இருப்பதாக சொல்லி ஆண்களை தள்ளி வைத்துவிடுகிரார்களே? இதற்கு உங்களுடைய பதில் என்னங்க?
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!
ஓ! அப்படியா! சரி நண்பரே அதைப்பற்றியும் எழுதுவோம்.
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!
கிடைத்துவிடும் அவருக்கு... நல்ல அறிவுரை சொல்லிருக்கேன்,:-)))))))
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!
ஆஹா! நிறைய விஷயங்களை தெரிந்துக்கொண்டேன்.
ரொம்ப நன்றிங்க..
ஆமாங்க...
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!
ஹா ஹா ஹா !!!
அந்தளவுக்கு எனது பதிவும் பின்னூட்டமும் இருக்கிறதா???????
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!
வாங்க அம்மா,
ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க...
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!
ஆமாங்க இதுதான் எல்லா இடத்திலும் நடக்கிறது.
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!
தவறை திருத்திவிட்டேன் :-) தூக்கத்தில் எழுதியது.
அருமையான ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள்.
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!
ஆமாம் நண்பரே!
உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!
பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் வரதட்சணை பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்விடும் என்று நினைக்கிறேன்.
ஆமாங்க அப்படிதான் நானும் நினைக்கிறேன்.
ஆகாஷ்,
நீங்கள் சொல்வது போல் மணமகனுக்குத் தான் ஏதோ குறை என்று தான் எண்ணுகிறார்கள்.
என்க்குத் தெரிந்த பையன் வீட்டில் எதுவும் வேண்டாம் என்கிறார்கள்.
இஞ்சினியர்,கைநிறைய சம்பளம். ஆனாலும் இரண்டு வருடமாக பெண் தேடுகிறார்கள். இன்னும் கிடைக்கவில்லை.நாம் எப்பொழுது மாறப் போகிறோம்?
உங்கள் கவலையை அழகாக பதிவிட்டுள்ளீர்கள்.பகிர்விற்கு நன்றி.
ராஜி
உங்கள் கவலையை அழகாக பதிவிட்டுள்ளீர்கள்.பகிர்விற்கு நன்றி.
ஹா ஹா ஹா !!!
என்னுடைய கவலை இல்லைங்க..நண்பர்களின் புலம்பல்!
எனக்கு கல்யாணம் முடிந்துவிட்டதுங்க......பார்த்த முதல் பெண்ணையே மணந்தேன், ஒரே வாரத்தில் நிச்சயம் , ஒரு மாதத்திற்குள் திருமணமும் முடிந்தது, எனக்கு எந்த சிரமமும் இல்லை.
உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் நன்றிங்க..
சரியான அலசல்
உங்கள் கவலை என்று நான் கூறியது உங்கள் சொந்த கவலை என்ற அர்த்தத்தில் இல்லை.சமுதாயத்திற்காக நீங்கள் அங்கலாய்க்கிறீர்கள் என்பதைத்தான் அப்படி எழுதினேன்.
உங்கள் குடும்பத்திற்கு என் ஆசிகள் பல.
ராஜி
@ முனைவர்.இரா.குணசீலன்
வெளுத்துக் கட்டிட்டீங்க போங்க!! I 100% agree with you.
வரதட்சினை வேண்டாமென்றால் பெண் வீட்டுக்காரங்க ஆணிடம் குறை ஏதாவது இருக்குமோ என நினைப்பது முக்கியமான பாயிண்ட். அதுக்கும் மேல பெண் வீட்டுக்காரங்களும் சும்மா இல்லை. பையன் படித்திருக்கிறான் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான் என்றாலும், சந்தையில் ஆட்டை தரகர்கள் காலைப் பிடித்து இழுப்பது போல ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்கிறார்கள், மேலும் நம்மிடம் சொத்து எவ்வளவு உள்ளது என்றும் நொண்டுகிறார்கள். இதை எங்கே போய்ச் சொல்வது?
அருமையான அலசல்..
Post a Comment