"அப்பா!"
"ம்ம், சொல்லும்மா!"
"உலகம் அழியப்போகுதாம்! பயமா இருக்குப்பா! எப்படிப்பா உலகம் அழியும்? "
"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, உனக்கு யார் சொன்னா?"
"ஐயோ! அப்பா உங்களுக்குத்தான் ஒண்ணுமே தெரியவில்லை, எங்க ஸ்கூல்ல எல்லா பசங்களும் சொல்றாங்க, அதுமட்டுமில்லாம இன்டர்நெட், டிவி, செய்தித்தாள்கள், வார இதழ்கள் என எல்லாவற்றிலும் வருகிறதாம்."
"ஓ! அப்படியா! இன்னும் என்னென்னவெல்லாம் சொல்றாங்க?"
"அதுவா மாயன்கள் என்று ஒரு இனத்தவர்கள் இருந்தார்களாம், அவர்களின் காலண்டர் வருகிற டிசம்பர் 21 ம் தேதியோடு முடிவடைகிறதாம், அதுமட்டுமில்லாமல் அவர்களில் யாரும் இப்போது உயிருடன் இல்லையாம்."
"ம்ம்ம், அப்பறம்?"
"ஒரு சாரார்கள் அவர்கள் பூமியில் இருந்து மாற்றுகிரகத்துக்கு போய்விட்டதாகவும், ஒரு சாரார் அவர்கள் மாயமாக போய்விட்டதாகவும் கூறுகிறார்கள்."
"ம்ம்ம், பரவாயில்லையே உங்களுக்கு இவ்வளவு செய்திகள் தெரிந்திருக்கே! மேலே சொல்லும்மா?"
"பூமியை நோக்கி ஒரு கோள் வந்துகொண்டிருப்பதாகவும், அந்த கோள் பூமியில் மோதும்போது பூமி உடைந்து தூள்தூளாக நொறுங்கிவிடுமாம்."
"அச்சச்சோ! அப்பறம்?"
"அந்த கோள் பூமியிலுள்ள நீர் பகுதியில் மோதினால், அந்த நீர் பீச்சியடித்து 'சுனாமிபோல்' வரும்போது இந்த உலகம் நீரில் மூழ்கிவிடுமாம். அல்லது நிலப்பரப்பில் மோதினால் 'பூகம்பம்' வந்து இந்த உலகம் மண்ணில் புதைந்துவிடுமாம்."
"பயங்கரமா இருக்கே! பிறகு?"
"அவ்ளோதாம்பா சொன்னாங்க, இதைக் கேட்டவுடன் எனக்கு பயம் வந்துவிட்டது அதனால் ஓடி வந்துட்டேன்."
"நீதான் ரொம்ப தைரியமான பொண்ணாச்சே! இதைக்கேட்ட பயந்துட்டே!"
"ஆமாம்ப்பா!, சரி நாம இப்ப என்னப்பா செய்யறது?"
"என்ன செய்யனும் புரியலையே! புரியும்படி சொல்லும்மா?"
"ஐயோ! மக்கு அப்பா, இப்ப அந்த கோள் நீரில் மோதினால் 'சுனாமி' வரும். அல்லது நிலபரப்பில் மோதினால் 'பூகம்பம்' வரும். அந்த கோள் எங்கு மோதும் என்று முன்கூட்டியே தெரிந்துக்கொண்டால், அழிவு 'சுனாமியாக' வருமேயானால் நாம மொட்டைமாடியில் பொய் நின்னுக்கலாம். அல்லது நிலபரப்பில் மோதி 'பூகம்பம்' வருமேயானால் நாம மைதானத்தில் போய் படுத்துக்கலாம்."
"ஆஹா! ஐடியா சூப்பரா இருக்கே! நீ என் பொண்ணேதாம்மா!"
"காமெடி பண்ணாம சொல்லுப்பா என்ன செய்யலாம்ன்னு?
"வாம்மா இதைப்பற்றி நடந்துகிட்டே பேசலாம். எந்த விஷயத்தையும் தெரிந்துக்கொள்வதில் தவறே இல்லை, அது நன்மையாகவும் இருக்கலாம், தீமையாகவும் இருக்கலாம், கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளவேண்டும். அப்பதானே 'நன்மை' எது 'தீமை ' எதுன்னு நாம கண்டுபிடிக்க முடியும்."
"ஆமாம்ப்பா!, இப்ப அதுக்கெல்லாம் நேரம் இல்லை, சீக்கிரம் ஒரு முடிவு எடுங்கப்பா?"
" என்ன முடிவு எடுக்க சொல்ற...?"
"நாம எங்க போயி நிக்கனும்ன்னு?"
"இப்ப அதைத்தானே சொல்லிக்கிட்டு வரேன், உனக்கு ஒரு விஷயம் ஞாபகம் இருக்கா? இந்தோனேசியாவில் 'பூகம்பம்' வந்ததனால்தான் 'சுனாமி' வந்தது. "சோ" நீ சொல்வதைப்போல் அந்த கிரகம் பூமியில் மோதினாலே அழிவு நிச்சயம்தான்."
"அச்சோ! ஆமாம்ப்பா! மறந்துட்டேன். கண்டிப்பா உலகம் அழிந்தால் நாமெல்லாம் செத்துவிடுவோமா அப்பா?"
"ஆமாம், கடிப்பாக அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நாமெல்லாம் இறப்பது நிச்சயம். ஆனால்.....!"
"என்ன ஆனால்.....!"
"இப்படி ஒரு சம்பவம் சிலப்ப நடக்கலாம், நடக்காமலும் போகலாம். இதுவரைக்கும் "NASA"இதைப்பற்றி எந்த செய்தியையும் வெளியிடவில்லை. ஆனால் ஆபத்து இருப்பதாகவும், சில சமயம் எதாவது நேரலாம் என்றும் சில விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். "
" சரிப்பா, அப்படின்னா மாயன்கள் மட்டும் எப்படி உறுதியாக நம்புகிறார்கள்? அவர்கள் இந்த அளவுக்கு நம்புவதற்கான காரணங்கள் என்ன? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கப்பா?"
"வானவியல் மற்றும் கணிதத்தில் நிபுணத்துவம் பெற்ற மாயன்களிடம், நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகம் தோன்றியிருக்கிறது. இவர்களின் நாட்காட்டியின் கடைசி நாளாக 21.12.2012 இருப்பதனால் இந்தப் பூமியின் இயக்கம் அன்றுடன் முடிந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்."
"இதை யார்யாரெல்லாம் நம்புகிறார்கள்?"
"சில மதவாதிகளும், வானவியல், புவியியல் விஞ்ஞானிகளும், கல்வெட்டுக்களை ஆராட்சி செய்யும் நிபுனர்க்களும்தான். ஆனால் அவர்களிடம் இதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லை, இப்படி இருக்கலாம் அப்படி என்ற யூகமும், கொஞ்ச நாட்களுக்கு முன் வந்த சில சினிமாக்களின் தாக்கமுமேயாகும்."
"அது என்ன சினிமா அப்பா?"
" Indiana jones and the kingdom of the crystal skull" , என்ற படமும், "Independence day" என்ற படமும் இதற்கும் மேல் "2012 - The End of World" இந்த படமும் மக்கள் மனதில் மட்டும் இல்லை, விஞ்ஞானிகள் மனதிலும் நம்பிக்கையை வளர்த்துவிட்டது. சும்மாவே பல கதைகளை சொல்லும் நமது மக்கள், இப்படி சில ஆதாரங்களும் கிடைத்தால் என்ன செய்வார்கள். ஒரு ஆட்டம்தாம் எப்படியாவது அவர்கள் சொல்வதை நம்ப வைக்க இப்படி பல ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள்."
"சரிப்பா, இதுவெல்லாம் பொய்க்கதை என்று 'NASA' ஏன் சொல்லவில்லை?"
"'NASA' ரொம்ப நாட்களாகவே இதை சொல்லித்தான் பார்க்கிறது, ஆனால் வான்புவி விஞ்ஞானிகள் விடாமல் பல கதைகளை ஊடகங்கள் மூலமாகவும், இன்டர்நெட் மூலமாகவும் பரப்பி வருகிறது. 'NASA' எதிர்த்து ஏதாவது சொன்னால் 'NASA'பொய் சொல்கிறது என்றும் உலக மக்களை ஏமாற்றுகிறது என்று கதையை திருப்பிவிடுகிரார்கள்."
"ஓ! அப்ப இதெல்லாம் வெறும் வதந்திகள்தானா?"
"முழவதும் வதந்திகள் என்று சொல்லிவிடமுடியாது, அவர்கள் சில உண்மைகளை இதன்மூலம் வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். நம்புவதும் நம்பாததும் நமது விருப்பம். ஆனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் நாம் அவசியம் தெரிந்துக்கொள்ளவேண்டும்."
"ஏன் அப்பா?"
"இதைதான் முன்னவே சொன்னேனே, நன்மை - தீமை இரண்டையும் தெரிந்துக்கொள்ளவேண்டும் அப்போதுதான் நாம் சரியான முடிவு எடுக்கமுடியும்."
"சரிப்பா, இதைப் பற்றி மேலும் எங்கு தெரிந்துக்கொள்வது?"
"'ராஜ்சிவா, இதைப்பற்றி 202 பக்கங்கள் கொண்ட ஒரு கட்டுரையை எழுதி இருக்கார், உனக்கு நேரம் கிடைக்கும்போது அதை படித்துப்பார் என்ன சொல்லிருக்கார் என்று புரியும்."
"சரிப்பா அது எங்கு கிடைக்கும்?"
"இதோ அதற்கான PDF லிங்க் கொடுக்கிறேன். தரவிறக்கம் செய்துக்கொண்டு நேரம் கிடைக்கும்போது நிதானமாகப் படித்துப்பார்."
"சரிப்பா, இப்பதான் பதட்டம் குறைந்துள்ளது" அப்பான்னா அப்பாதான் உம்ம்மாஆஆ...."
"உம்ம்மாஆஆஆ... சரிம்மா."
***********************************************************************************
21 கருத்துகள்:
நல்ல தகவல்.தொடர்ந்து சொல்லுங்கள் உலகம் அழியாது என்று
நல்ல கட்டுரை. உலகம் இந்த வருடம் அழியப் போகிறது என்பதெல்லாம் கட்டுக் கதை. இதில் நேரத்தை வீணடிப்பதற்கு பதில் வாழும் காலங்களில் மனித குலத்துக்கு நம்மால் முடிந்த நன்மைகளை செய்ய முயற்சிப்போம்.
நல்ல பதிவு. மனிதன் கற்பனையிலே வாழ்ந்து சுகித்தவன். இப்ப கற்பனையிலேயே மனிதரை கொல்லும் கதை தான் பூமியழிவது. சரியான பதிவு,தொடர்க உங்கள் பணி
நல்ல எழுதி இருக்கீங்க ஆகாஷ்.
ஆஹா.....அற்புதமான விளக்கங்கள்
குழந்தைக்கு மட்டுமல்ல எமக்கும் புரிந்துவிட்டது
நல்ல தகவல். கட்டு கதையால் பயம் கொள்பவர்களுக்கு நம்பிக்கை தரும் கட்டுரை. அச்சம் அச்சமில்லை..! நன்றி
மிக அழகா பயம் விளக சொன்னீங்க ..தொடருங்க.
உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான கருத்துக்கும் மிக்க நன்றி..
உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான கருத்துக்கும் மிக்க நன்றி..
உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான கருத்துக்கும் மிக்க நன்றி..
உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான கருத்துக்கும் மிக்க நன்றி..
உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான கருத்துக்கும் மிக்க நன்றி..
#"Independence day" என்ற படுமும் # எழுத்துப் பிழைக்கு கண்டனங்கள். நல்ல தகவலை அருமையாக பேச்சு நடையில் சொல்லி இருக்கிறீர்கள். ரசித்தேன். பதிவை என் தளத்திலும் பகிர்ந்துள்ளேன். நன்றி.
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் ஆகாஷ் உங்க கிட்ட
உங்க கிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன் ஆகாஷ்
ஆஹா! எழுதும்போது இடையில் வரும் தடங்கல்களினால் மறந்து விடுகிறேன் ஐயா. இப்போது மாற்றிவிட்டேன் மிக்க நன்றி.
உங்கள் வலைப்பதிவில் இணைத்ததற்கு மிக்க நன்றி ஐயா.
என்ன எதிர்பார்கிரிங்க? உலகம் அழியாது நண்பா கவலைவேண்டாம். தைரியமாக இருங்க...வதந்திகளுக்கெல்லாம் ஆதாரம் இல்லை, ஆனால் தற்போது உலகம் அழியும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதை நினைக்காமல் சந்தோஷமாக இருக்கவும். இந்த வரிகளைத்தானே எதிர் பார்த்தீர்கள். இதோ சொல்லிட்டேன்.
நல்ல கட்டுரை நண்பரே... தொடர்கிறேன்.
//ஏதாவது சொன்னால் 'NASA'பொய் சொல்கிறது என்றும் உலக மக்களை ஏமாற்றுகிறது என்று கதையை திருப்பிவிடுகிரார்கள்." //
நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் கூட இதே போல விஷயங்கள் உண்டு. உலகப் பணக்காரர்கள் தப்பிக்க என்றே ஒரு மறைவிடத்தைக் கட்டி வருவதாக...இத்யாதி...இத்யாதி...
அருமையான விளக்கம் !
தொடர வாழ்த்துகள்...
மிக நன்றாக எளிமையாக எழுதப் பட்டுள்ளது ஆகாஷ்! இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
Post a Comment