Pages

Saturday, December 1, 2012

எழுத்தாளர்களை ஊக்குவிக்க பின்னூட்டம் மட்டும் போதுமா?

        எழுத்தாளர்களை ஊக்குவிக்க பின்னூட்டம் மட்டும் போதுமா? அல்லது இன்னும் என்னவென்ன செய்யவேண்டும். சும்மா ஒரு கற்பனை பதிவு.
இதற்கும் முன்பு ஒரு பதிவில் பதிவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று நகைச்சுவையாக எழுதியிருந்தேன் அதைப் படிக்க இங்கே.

         {அதே! இரண்டு நண்பர்கள் தொலைபேசியில் பேசிக்கொள்வதைப்போல் சும்மா ஒரு கற்பனை எனது மனதில்பட்டதை எழுதுகிறேன், இது யாரையும் குறிப்பிடுவன அல்ல}


"ஹலோ! டேய்,  மச்சி கோபாலு எப்படிடா இருக்க? மன்னிக்கவும் குற்றாலம் அருவி கோபாலு எப்படிடா இருக்க?"

"நால்லாருக்கேன் மாமா, நீ எப்படிடா இருக்க என் சிங்கி மாமா?"

"நல்லருக்கேண்டா! வீட்டுல எல்லோரும் நலமா? அம்மாவை ரொம்ப கேட்டதா சொல்லுடா?"

"சரிடா! சொல்கிறேன், அப்பறம் என்ன செய்தி?" வலைப்பதிவுகள் எல்லாம் எப்படி போகுது?"

"நல்லாபோகுதுடா! ஆனா.....................................!

"என்னடா  மாமா, என்னாச்சி என்ன ஆனா?????"

" வேண்டாம் விடுடா!"

"சொல்லு மாமா என்கிட்ட சொல்ல என்ன இப்படி யோசிக்கிற?"

"ம்ம்ம்ம், சொல்கிறேன் மச்சி! நீ சொன்னப்படி இப்பலாம் கதை, கவிதை, நகைச்சுவை, சமையல், அனுபவம் என்று பல பிரிவுகளில் எனக்கென்றே உள்ள 'ஸ்டைலில்' எழுதுகிறேன்"

" ம்ம்ம்ம் சபாஷ்! மாமா, நானும் படித்தேன் பின்னூட்டமும் போட்டிருக்கேன் பார்க்கவில்லையா?"

"பார்த்தேன் மச்சி! உன்னைப்போல் நிறையப்பேர் வந்து பின்னூட்டம் போட்டிருக்கிறார்கள் ஆனால் என் மனசு இன்னும் திருப்தியடையவில்லை"

"ஏன்டா! மாமா, என்ன ஆச்சி? இப்ப என்ன குழப்பம் தெளிவாச் சொல்லு"

"அதான் மச்சி, புதியதாக யாருமே! என்னை பின்தொடரவில்லை, என்னுடைய பதிவுகள் இன்னும் யார் மனதையும் திசை திருப்பவில்லை என்று நினைக்கிறேன்."

"மாமா இவ்வளவுதானா! கவலைய விடு, நான் சொல்வதைப்போல் செய்."

"ம்ம்ம், சொல்லு மச்சி, அப்படியே செய்கிறேன்."

" நீ தினமும் நண்பர்கள் பதிவை படிக்கிறியா? இல்லையா?"

"ம்ம்ம்ம், படிக்கிறேன் மச்சி, தினமும் நிறைய நல்ல நல்ல  வலைப்பதிவிற்குப் போகிறேன், படிக்கிறேன் நல்ல பதிவுகளுக்கு எனது பின்னூட்டமும் போடுகிறேன்."

"சரி நல்ல விஷயம்தான், அதில் நல்ல நல்ல வலைப்பதிவுகள்  என்பதை எப்படி தரம் பிரிக்கிற? நல்ல நல்ல பதிவுகள் என்று நினைத்து எப்படி பின்னூட்டம் போடுற. கொஞ்சம் விபரமா சொல்லு மாமா."

"அதுவா, நான் ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறேன், அவர்களுடைய பதிவுகளுக்கெல்லாம் தினமும் போவேன், நல்ல, பிடித்த பதிவுகள் என்றால் 'நல்லாருக்கு', 'பிடிச்சிருக்கு' என்று பதில் போடுவேன்."

"ம்ம்ம், இங்கதான் மாமா, தவறு இருக்கிறது. எப்போதும் பழைய நண்பர்கள் பதிவுக்கு மட்டும் போய் படிக்கிற, பின்னூட்டமும் போடுற....ஆனால்  நிறைய "புதிய பதிவர்கள்" தினம் தினம் வந்தவண்ணம் இருக்கிறார்கள், அவர்களுக்கு உனது வலைப்பதிவு எப்படித்தெரியும்? மேலும் உனது லிஸ்டில் இல்லாத பதிவர்கள் எல்லாம் நல்ல எழுதவில்லை என்று அர்த்தமா????"

"நான் அப்படி சொல்லவில்லை மச்சி, நம் கண்ணில் படதா எத்தினை எத்தினையோ எழுத்தாளர்கள் அருமையா எழுதிக்கிட்டுதான் இருக்கிறார்கள். மேலும் புதிய புதிய பதிவர்களும் வந்தவண்ணம்தான் இருக்கிறார்கள், நான் அந்த பக்கமெல்லாம் போவதில்லை, போவதற்கு நேரம் கிடைப்பதில்லை அதனால் போவதில்லை."

"நீ இப்படி இருந்தால் அரைத்தமாவையே அரைத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்."

"பின்ன என்னடா செய்யனும்?"

"உன்னை எப்பவும் இதே பொழப்பா இருக்க சொல்லவில்லை, உனக்கு நேரம் கிடைக்கும்போது அனைவர்கள் பதிவிற்கும் போகணும், முக்கியமாக புதிய பதிவர்களுக்கு அருமையான பின்னூட்டம் போட்டு ஊக்குவித்தும், அவர்களை பின்தொடரவும் செய்யனும், இன்னும் உனக்கு பழக்கமில்லாதவர்கள் பதிவிற்கும் சென்று பின்னூட்டம் போட்டு அவர்களையும் பின்தொடரவேண்டும்."

"இப்படி செய்தால் உடனே அவர்களும் நம்மளை பின்தொடர்வார்களா? பின்னூட்டம் போடுவார்களா?"

" டேய்! மாமா, எதையும் எதிர்பார்க்கக்கூடாது, இதெல்லாம் ஒரு விளம்பரம் மாமா."

"விளம்பரமா?  அது எப்படி?"

" ஆமாம் மாமா, நீ புதிய ஒருவரின் பதிவில் சென்று போடும் பின்னூட்டம் மூலமாகவும், அவர்களை பின்தொடர்வதின் மூலமாகவும் அவர்கள் கண்ணில் உனது பெயர் படும். மேலும் அவர்களின் வலைப்பதிவிற்கு வருகிற அவரது நண்பர்கள் கண்ணிலும் படும் அப்பொழுது அவர்களுக்கு இவர் யார் அடிக்கடி நமது பதிவில் பின்னூட்டம் அளித்து ஊக்குவிக்கிறார் என்று உனது பக்கமும் அவர்கள் வருவார்கள். அப்பொழுது உனது பதிவு பிடித்திருந்தால் பின்னூட்டமும் போடுவார்கள்."

"ஓ! இப்படி ஒன்னு இருக்கா?"

"ஆமாம், நீ எப்படி உனது பதிவுக்கு பின்னூட்டம் மற்றும், பின்தொடரவேண்டும் என்று எதிர்பார்க்கிராயோ? அப்படிதான் எல்லோருடைய மனநிலையும் இருக்கும்."

" நமக்கு அறிமுகமே இல்லாதவர்கள் வலைப்பதிவிற்கு சென்று அவர்களை பின்தொடர்வது  பற்றி உனது கருத்து என்ன மச்சி!"

"இதில் கருத்துசொல்ல என்ன மாமா இருக்கு, பேசினால்-பழகினால்தான் நண்பர்கள் கிடைப்பார்கள். எல்லோரிடமும் நல்லா பேசிப்பழகுவோம், நடப்பை வளர்த்துக்கொள்வோம். அதிக நண்பர்கள் இருந்தால் அதைவிட வாழ்க்கையில் சம்பாதித்த எதுவும் பெரிதாகத் தெரியாது. எல்லோருடைய பதிவுக்கும் போ, அவர்களைப் பின்தொடர்ந்து நண்பராக்கிக்கொள்."

"இனிமேல் அப்படியே செய்கிறேன் மச்சி! முதலில் எனது லிஸ்ட கிழித்து கலையவேண்டும், இனி லிஸ்ட்ல உள்ளவர்கள் மட்டும் நண்பர்கள் இல்லை எல்லோரும் எனது நண்பர்கள்தான். எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அனைவர்கள் பதிவிற்கும் போவேன், என் மனதில் பட்ட கருத்துகளைச் சொல்லி ஊக்குவிப்பேன், பின்தொடர்ந்து மேலும்மேலும் ஊக்கமளிப்பேன். என்பதை இங்கு உன்னிடம் உறுதியளிக்கிறேன்."

"ம்ம்ம், சரி மாமா, நண்பர்கள் இருந்தால் எப்பவும் நமது வாழ்க்கைப்பயணம் அழகாக பிரகாசிக்கும். எல்லோரும் நமது நண்பர்களே! பின்தொடருங்கள் ஊக்கப்படுத்துங்கள். உங்களுக்கும் புத்துணர்ச்சி தானாகவே வந்துசேரும்."

"சரி  மச்சி! ஓகே பை பை"

"பை மாமா"

**********************************************நன்றி மீண்டும் சந்திப்போம்****************************************************
_________________________________________________________________________________________________



29 கருத்துகள்:

Avargal Unmaigal said...

உண்மையை கிண்டலா சொல்லி இருக்கிறீங்க இப்ப புரியுது என்னடா நிறைய பேர் நம்ம தளத்திற்குவந்து கருத்து சொல்லி இருக்காங்கன்னு ஆனா நாம அவங்களை ப்ளோ செய்த பின்பு படிப்படியாக குறைத்து கொண்டார்கள் என்று. நான் நினைச்சேன் நாம் எழுதுற பதிவுதான் மொக்கையாக இருக்கோன்னு நான் நினைச்சேன் இப்ப புரியுதுங்க....

ப.கந்தசாமி said...

Good.இப்படியே சொல்லி முன்னுக்கு வந்துட்டீங்க. வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குறுகிய காலத்தில் கவனிக்கப்படுபவராகிவிட்டீர்கள். தொடருங்கள்.

Jayadev Das said...

யோவ், எல்லாம் அத்துபடியா தெரிஞ்சு வச்சிருக்கியேய்யா ......!! இந்த ரெண்டு பதிவிலும் நான் சில டிப்ஸ் எடுத்துகிட்டேன்..... thanks .

tech news in tamil said...

அருமை எமக்கு சில குறிப்புகளும் கிடைத்தன நன்றி

settaikkaran said...

நீங்க இப்பவே பிரபலமான பதிவராகிட்டீங்க ஆகாஷ்! வாழ்த்துகள்! :-)

Unknown said...

இடுகைத்தலைப்பு:
எழுத்தாளர்களை ஊக்குவிக்க பின்னூட்டம் மட்டும் போதுமா?

உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!
உங்களின் அழைப்பை ஏற்று ..உங்களின் தளத்துக்கு வந்து இருக்கின்றேன் ..தொடர்ந்து என்னுடைய ஆதரவு உங்களுக்கு இருக்கும் நண்பரே !!!

மாதேவி said...

வாழ்த்துகள்.

semmalai akash said...

ஆஹா! நண்பரே நானெல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துகிட்ட கத்துக்குட்டி, நீங்க சரவெடியாக எழுதுகிற எழுத்துகள் எல்லோரையும் ரசிக்க வைக்கிறது. சிலருக்கு நேரம் கிடைக்காமல் போயிருக்கலாம் வருவார்கள். நான் முந்தைய பதிவில் சொன்னதுப்போல் நான் யாருக்காகவும், எதற்காகவும் மனமுடைந்து எழுதுவதை நிறுத்திவிடக்கூடாது. ஒரு சிலர் வரவில்லை என்றால் புதியதாக எத்தினை எத்தினையோ நண்பர்கள் வந்துவிடுவார்கள்.

நீங்க எனக்கு சொன்ன சில அறிவுரைகள் இன்னும் என் மனதில் இருக்கிறது நண்பரே!

உங்களுடைய கருத்துக்கும், தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

ஐயா வணக்கம்,
உங்களுடைய வார்த்தைகள் என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கிறது, என்னையும் ஒரு பதிவராக நினைத்து தொடர்ந்து வருகைத் தந்து ஊக்குவிக்கும் உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்.ஐயா.

semmalai akash said...

ஆஹா! நண்பரே! உங்களுடைய இந்த அழகான வார்த்தைகள் என்காதில் தேன்போல் பாய்கிறது, உங்களைப்போல் நண்பர்கள் இருந்தால், நான் எளிதில் நிலவை தொட்டுவிடுவேன்.

ஹா ஹா ஹா!
முடியாத ஆசைதான் இருந்தாலும், இருந்தாலும் உங்களைப்போல் நண்பர்கள் இருப்பதால் நம்பிக்கை இருக்கிறது. மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

தல! என்ன இப்படி சொல்லிட்டீங்க, நீங்களும் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறீர்கள், என் மனதில் இப்பவும் ஒலித்துக்கொண்டுள்ளது. நாமெல்லாம் நண்பர்கள் தல எப்பவும் ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பரிமாரிக்கொள்ளவேண்டும்.

தொடர்ந்து உங்களுடைய ஆதரவுக்கும், ஊக்கமளிப்பதர்க்கும் மிக்க நன்றி தல!

semmalai akash said...

வாங்க வாங்க நண்பரே,
உங்களுடைய வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!.

semmalai akash said...

ஐயா, குருவே! உங்களது வாக்குகள் எப்பவும் பலித்துவிடும், உங்களைப்போல் நல்ல உள்ளங்கள் ஊக்குவிப்பதால்தான் , என்னைப்போல புதிய பதிவர்கள் அருமையாக எழுதமுடிகிறது. வணக்கம் ஐயா.

எப்பவும் உங்களுடைய ஆதரவு எனக்கு இருக்கும் என்று தெரியும் ஐயா. நான் உங்களுடைய மாணவன். ரொம்ப நன்றி ஐயா.

semmalai akash said...

வாங்க வாங்க நண்பரே! உங்களது வருகை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது, அதோடு உங்களது வாக்குகளையும் வழங்கி மேலும் மேலும் ஊக்குவித்துவிட்டீர்கள். மிக்க நன்றி நண்பரே!

நாமெல்லாம் நண்பர்கள் ஒருவருக்கொருவர்தான் ஆதரவு. மீண்டும் நன்றி நண்பரே!

semmalai akash said...

வாங்க வாங்க, என்னங்க இப்படி ஒண்ணுமே புரியாம வாழ்த்து சொல்லிட்டு போயிட்டீங்க? இது எதற்கான வாழ்த்து என்று புரியவில்லையே?

உங்களுடைய வருகை என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கிறது மிக்க நன்றி சகோ!

திண்டுக்கல் தனபாலன் said...

அட... உரையாடல் பதிவு... கலக்குறீங்க...

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

semmalai akash said...

மிக்க நன்றி நண்பரே!

தொடர்ந்து உங்களுடைய வருகையும், ஊக்கப்படுத்தும் விதமும் அருமை நண்பரே!

மிக்க நன்றி .

குறையொன்றுமில்லை. said...


"இதில் கருத்துசொல்ல என்ன மாமா இருக்கு, பேசினால்-பழகினால்தான் நண்பர்கள் கிடைப்பார்கள். எல்லோரிடமும் நல்லா பேசிப்பழகுவோம், நடப்பை வளர்த்துக்கொள்வோம். அதிக நண்பர்கள் இருந்தால் அதைவிட வாழ்க்கையில் சம்பாதித்த எதுவும் பெரிதாகத் தெரியாது. எல்லோருடைய பதிவுக்கும் போ, அவர்களைப் பின்தொடர்ந்து நண்பராக்கிக்கொள்."

ரொம்ப கரெக்ட். நீங்க இப்பதானே என்பக்கம் வந்து கருத்து சொன்னீங்க அப்பதானே உங்களபத்தி எனக்கும் தெரியவந்திச்சு இது நல்ல விஷயம் தானே.

வலையுகம் said...

இன்று தான் உங்கள் வலைத்தளம் பார்க்கிறேன் வாழ்த்துகள் சகோதரரே
தொடர்ந்து எழுதுங்கள்

Ranjani Narayanan said...

சரியான கருத்துக்கள். எந்தப் புதிய பதிவைப் படித்தாலும் பாராட்டாமல் வருவதில்லை நான். கூடவே என் வலைப்பதிவின் இணைப்பையும் கொடுப்பேன். எதற்கு? நான் வேர்ட்ப்ரஸ்-சில் எழுதுவதால்.
இதன்மூலம் அந்தப் பதிவைப் படிக்க வரும் அனைவருக்கும் என் வலைப் பதிவும் அறிமுகம் ஆகும், இல்லையா?
எழுத்துக்களால் மட்டுமே வரும் தோழமை வலைபதிவுத் தோழமை!

http://ranjaninarayanan.wordpress.com/

semmalai akash said...

நான் எழுதிய இந்த பதிவு எந்த அளவுக்கு உண்மை என்பதை நிருபித்து விட்டீர்கள், மேலும் நான் சொல்வதெல்லாம் உண்மையே என்று ஒரு சான்றிதழையும் அளித்துவிட்டீர்கள் ரொம்ப நன்றி அம்மா,

semmalai akash said...

வருக வருக நண்பரே! கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன் நண்பா.

நேரம் கிடைக்கும்போது உங்கள் பக்கமும் வருவேன்.

semmalai akash said...

ஆஹா! சபாஷ்! இப்படிதான் ஒரு எழுத்தாளரை ஒரு எழுத்தாளர்தான் முதலில் ஊக்குவிக்கவேண்டும். தொடரட்டும்.

கண்டிப்பாக உங்கள் பக்கமும் வருகிறேன். நன்றிங்க..

RajalakshmiParamasivam said...

உங்கள் பதிவு என்னைப் போன்ற புது பதிவர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக உள்லது.நான் இப்பொழுது தான் பதிவு எழுத தொடங்கி இருக்கிறேன்.வேறொரு வலைதளத்தின் மூலமாக உங்கள் தளத்திற்கு வந்து தொடர்கிறேன்.
நிறைய பின்னூட்டங்கள் வரும்போது கிடைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
என்னைப் போன்ற புது பதிவர்களின் சார்பாக பதிவு எழுதியதற்கு பாராட்டுக்கள்
நேரம் கிடைக்கும் போது என் வலைத்தளம் பக்கம் வருகை புரிந்தால் மகிழ்வேன்.

ராஜி

semmalai akash said...

மிக்க நன்றி ராஜி,

உங்களுடைய முதல் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

குட்டன்ஜி said...

ஊட்டமான பதிவு

ஜீவி said...

நினைப்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். புதுப்புது பதிவுகளுக்குப் போய் படிப்பது
பின்னூட்டத்திற்கான தூண்டில் மட்டுமில்லை; நிறைய மற்றவர்களின் எண்ணங்களையும் தெரிந்து கொள்கிறோம். அந்த எண்ணங்கள் விளைவாய் நம்மிடையே கிளர்ந்து எழுதும் எண்ணங்கள் நமக்கான இன்னொரு பதிவிற்கும் விதையாகலாம்; நம்முடைய எண்ண வளர்ச்சிக்கும் வழிகோலலாம். எல்லோரும் எல்லாம் தெரிந்தவர்கள் இல்லை; அதனால் தெரியாத பல செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அமைகிறது. இது தான் இணைய எழுத்துக்களின் ஆகப்பெரிய பலனும் உற்சாகமும்.

அருணா செல்வம் said...

இன்று தான் உங்களின் வலைக்குள் வருகிறேன்.
நன்றாக எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே.

Post a Comment