Pages

Wednesday, November 28, 2012

Team Viewer மென்பொருள் மிகவும் பயனுள்ளவை!

           Team Viewer (Remote Control) மென்பொருளை யார் யாரெல்லாம் பயன்படுத்தி வருகிறீர்கள்? மிகவும் பயனுள்ளதாகக் கருதுகிறேன். உங்களிடமும் பகிர்கிறேன்.

      இந்த மென்பொருளைக் குறித்து எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதுபோல் பல மென்பொருட்கள் இருந்தாலும், ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் இருக்கும் கணினியை எளியவகையில் சிக்கலின்றி கட்டுபடுத்த இதுவே சிறப்பான மென்பொருளாகும். தெரியாத சிலருக்காகவும் எனது நண்பரின் வேண்டுகோலுக்காகவும் இந்த பதிவை இங்கு மிகத் தெளிவாகப் பகிர்கிறேன். 
                   இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமானது, புதிய 'வெர்சன்' தேவைபட்டால் மட்டும் பணம் செலுத்தவேண்டும்.

          இந்த  மென்பொருள் விண்டோஸ், ஆப்பிள் மேக், லினக்ஸ், ஆன்ட்ராய்டு, ஐ-போன், என அனைத்து இயங்குதளத்திலும்  இயங்கக்கூடியவை. 'இன்டர்நெட் இணைப்பு' இருந்தால் ஓரிரு வினாடியில் எந்த கணினியையும் நாம் இருக்கிற இடத்தில் இருந்து இந்த 'ரிமோட் கண்ட்ரோல்' மூலம் கட்டுப்படுத்தமுடியும்.

       இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி., இணையதள முகவரிக்கு
தரவிறக்கம் செய்து, கணினியில் பொருத்திக்கொள்ளவும்.அதனை கிளிக் செய்தால் கீழேயுள்ள விண்டோ கணினியில் தோன்றும்.
      எதிர்முனையில் இருப்பவரின் ID நம்பரை இங்கு பதியவும், அல்லது உங்களது கணினியை எதிமுனையில் இருப்பவர் இயக்கவேண்டும் என்றால் உங்களுடைய ID நம்பரை அவரிடம் கொடுக்கவும் Connect to Partner என்பதை தேர்வு செய்ய கீழே உள்ள விண்டோ தோன்றும்.
     இதில் Password கொடுக்கவும், அதாவது Partner ன் Password கொடுக்கவும். அவ்ளவுதான் இப்போது உங்களது பார்ட்னரின் கணினியை நீங்கள் இயக்கலாம்.
 
        இப்போது  Team Viewer 7 இலவசமாக கிடைக்கும். இதில் 25 பேர்வரை இணைந்து ஒருவர் கணினியை ஒருவர் இயக்கலாம். இப்போதெல்லாம் பெரிய பெரிய கம்பேனியில் இந்த முறையை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மேலும் பெண்கள் வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலைகளையும் செய்யமுயத்கிறது. நிறைய வேலைப்பளுவைக் குறைக்கிறது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்களேன்.

இதன் பயன்கள்:
  • Online Meetings – have up to 25 participants 
  • Online Presentation – boost your sales potential   
  • Training Session – cut costs by conducting training online  
  • Online Teamwork – collaborate online on documents in real-time 
 *****நன்றி நண்பர்களே! மீண்டும் அடுத்தப் பதிவில்சந்திப்போம்.*****
=====================================================================================


12 கருத்துகள்:

Jayadev Das said...

கணினியின் ID நம்பர் என்றால் என்ன? அதை எப்படி தெரிந்துகொள்வது?

semmalai akash said...

தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தவுடன் ஓபன் செய்தால் படத்தில் உள்ளதுபோல் தானாகவே வரும் நண்பரே!

திண்டுக்கல் தனபாலன் said...

பல நண்பர்களிடம் பயன்படுத்தியது தான்...

விளக்கம் பலருக்கும் உதவும்... நன்றி நண்பரே...
tm3

Balaji said...

அருமையான மென்பொருள்...

அருமையான பதிவு...

வாழ்த்துகள் தம்பி...

ஆத்மா said...

நான் இதுவரை பயன்படுத்தியது கிடையாது ஆனால் கேள்விப்பட்டது மட்டும் தான்
இனிமேல் பயன்படுத்துகிறேன்
மிகவும் உபயோகமாக இருக்கும்

semmalai akash said...

நன்றி நண்பரே!

semmalai akash said...

அப்படியா நண்பரே! ரொம்ப சந்தோஷம், மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

நீங்களும் பயன்படுத்துகிறீர்களா? ரொம்ப சந்தோஷம் அண்ணா.

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி அண்ணா.

semmalai akash said...

வருக வருக நண்பரே, அப்படியா பயன்படுத்திப்பாருங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

மிக்க நன்றி நண்பரே!

உஷா அன்பரசு said...

பயனுள்ள தகவலை பகிர்ந்திருக்கிறீர்கள் நன்றி!

Anonymous said...

It will expire within a period. After that you have to buy. Even if you reinstall it will disconnect every 2 minutes. Try AMMYY.com. Same like Team Viewer.

Regards,
Christo.A

ANBUTHIL said...

பயனுள்ள மென்பொருளை பற்றி அனைவருக்கும் புரியும் படி விளக்கியிருக்கிர்கள் நன்றி நண்பரே

Post a Comment