Pages

Saturday, November 24, 2012

ஹைய்யா! நானும் பதிவராயிட்டேன்! நானும் பதிவராயிட்டேன்!.

 (படம் இணையத்தில் இருந்து)
{இரண்டு நண்பர்கள் கோபாலும், சிங்காராசும் உரையாடுவதைப்போல் ஒரு கற்பனை, இது யாரையும் குறிப்பிடுவன அல்ல.}

ஹைய்யா!!! "நானும் பதிவராயிட்டேன்! நானும் பதிவராயிட்டேன்!"

"டேய் மச்சி! கோபாலு என்னடா சொல்ற?"

"என்னது! டேய் கோபாலா? குற்றாலம் அருவி கோபாலு'ன்னு சொல்லுடா என் சிங்கி மாமா"

"என்னடா மச்சி! அது புனைப்பெயர்? அதுவும் "குற்றாலம் அருவி"ன்னு சொல்ற..."

"ஓ! அதுவா, அதுதான் எனக்கு கதை-கவிதைகள் எல்லாம் அருவிமாதிரி கொட்டுதே! அதான் என்னுடைய வலைப்பதிவிற்கு "குற்றாலம் அருவி"ன்னு பெயர் வச்சிகிட்டேன்."

 "நீ தமிழையே 'தமில்'ன்னு' எழுதுறவண்டா, நீயெல்லாம் எப்படிடா பதிவரான?"

"அட! அப்பாவி சிங்கி மாமா, நீ இன்னும் எந்த உலகத்துலடா இருக்க? தமிழ எப்பொழுதும் எழுத்துமூலமாவே பார்த்துகிட்டு."பேச்சித்தமிழும் இருக்குடே!"

"அப்போ! தப்புத்தப்பா எழுதலாம்'ன்னு சொல்றியா?"

"நான் அப்படி சொல்லவில்லையே, இப்படி எல்லாத்திலும் குற்றம் கண்டுபிடிக்கக்கூடாது'ன்னுதான் சொல்கிறேன். அதெல்லாம் பேச்சு மொழின்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்கனும்.".

"சரி மேட்டருக்கு வா! உனக்கு மொக்கை போடத்தானே தெரியும் எப்படிடா இப்படி திடீர்ன்னு பதிவரான?"

"சிம்பிள் மாமு, சுடுதண்ணி எப்படி வைக்கிறது'ன்னு சுடச்சுட சொன்னா அது மொக்கை, அதையே சுடுதண்ணி வைத்து சுலைமானி எப்படி போடுறதுன்னு சொன்னா அது சமையல் குறிப்பு."

"அப்போ! என்னைப்போல பக்கம் பக்கமா எழுதுனா அது பதிவில்லையா???"

"நீ எழுதுவது கட்டுரை மாமா அதைப்படிக்கவும் ஒருகூட்டம் இருக்கிறது, இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் பக்கம்பக்கமா எழுதினால் அதையெல்லாம் உட்க்கார்ந்து படிக்கிற அளவுக்கு நம்ம ஆளுங்களுக்கு நேரம் இல்லை."

"அப்படின்னா  எப்படி எழுதனும்னு சொல்ற?"

"எதைச்சொன்னாலும் நச்'ன்னு நாலு வார்த்தையில் சொல்லிடனும், அதே சமயம் வாசகர்களைக் கவரும் வகையிலும் இருக்கவேண்டும். அப்பறம் பாரு வாசகர்கள் பின்னூட்டம் வந்து குவியும்."

"நானும் நல்லாதாண்டா எழுதுகிறேன், ஆனால் ஒருவாசகர்கூட பின்னூட்டம் போடுவதேயில்லை, ரொம்ப கஷ்டமா இருக்குடா மச்சி!"

"டேய்! மாமா இதற்கெல்லாம் மனசு உடைந்துவிடக்கூடாது. நீ ஒரே மாதிரியான பதிவை மட்டும்தான் எழுதுற, நகைச்சுவை-கிண்டல்,கேலி'ன்னு பல ரகமான பதிவுகளை எழுது மாமு, அப்பறம் பாரு!.  இப்ப நீ எழுதுவது ஒரு விதமான வாசகர்களை மட்டுமமே கவருகிறது, வித விதமாக எழுதினால் பலவிதமான வாசகர்களையும் கவரும்."

"ஓ! இப்படி வேற இருக்கா? நான் என் மனதில் தோன்றும் உணர்வுகளை அப்படியே கட்டுரையா எழுதுகிறேன் மச்சி! வாசகர்களின் வருகையே இல்லை மச்சி!ரொம்ப பீலிங்கா இருக்கிறது."

"அப்படி இல்லை மாமா, மனசுல உள்ளதை அப்படியே எழுதினால் யாருக்கும் படிப்பதற்கு 'போர்' அடிச்சிடும். பாதியிலையே விட்டுட்டுப் போய்டுவாங்க. நகைச்சுவையையும் கற்பனையையும் கலந்து எழுதினால் அது காவியம், இப்பலாம் வாசகரை கவர மசாலாவையும் கலக்கனும் மாமு!"

"அப்ப நான் எழுதுவதெல்லாம் பதிவே இல்லை என்று சொல்கிறாயா?"

"நீ எழுதுவது பதிவுதான் மாமா, ஆனால் அதை முழுவதையும் படிக்க முடியலையே, பாதியிலையே நிறுத்திட வேண்டி இருக்கு, ஒரு விறுவிறுப்பும் இல்லை நகைச்சுவையும் இல்லை. பக்கம் பக்கமா சொல்லாமல் சொல்லவேண்டியதை சுருக்கமா சொல்லுங்கிறேன்."

"சரி எப்படி எழுதினால் வாசகர்கள் பின்னூட்டம் போடுவார்கள். சொல்லு அப்படியே செய்கிறேன்."

"திரும்பத்திரும்ப அதையேதான் கேட்க்கிறாய், மாமா வாசகர்கள் பின்னூட்டத்திற்காக மட்டும் பதிவு எழுதக்கூடாது. பதிவுகள் எல்லோரும் ரசிக்கும்படியாக இருக்கவேண்டும் என்றுதான் சொல்கிறேன். பிடித்தவர்கள் பின்னூட்டம் போடுவார்கள் மற்றவர்கள் படித்துவிட்டுப் போய்டுவார்கள".

"சரிடா மச்சி! வாசகர்கள் எப்படிப்பட்ட பதிவுகளை ரசித்து பின்னூட்டம் போடுகிறார்கள்?"

"மாமா, வாசகர்களில் பின்னூட்டம் போடுபவர்கள் பலவிதம். சிலர் முழுப்பதிவையும் படித்துவிட்டுப் பின்னூட்டம் போடுவார்கள், சிலர் மேலோட்டமாகவும், சிலர் பின்னூட்டத்தை மட்டும் படித்துவிட்டும் பின்னூட்டம் போடுவார்கள்."

"அடப்பாவிங்களா! இப்படி வேற செய்கிறார்களா? இப்படி படிக்காமல் வரும் பின்னூட்டத்தினால் என்ன பயன்? படிக்காமல் போடும் ஆயிரம் பின்னூட்டங்களை'விட , படித்துவிட்டுப் போடும் ஒரேயொரு பின்னூட்டமே போதும்டா மச்சி!"

"டேய், என் சிங்கி மாமா, பின்னூட்டம் என்பது ஊக்கமருந்து மாதிரி, அது எப்படி வந்தால் என்ன? சிலர் நல்லாருக்குன்னு சொன்னால்தானே , நீயும் சந்தோஷமா அடுத்தப்பதிவை எழுத போவ...அது எப்படி வந்தது என்று ஆராய்ச்சி செய்ய வேண்டாம், 'அனுபவி' அது போதும்."

"இப்படி  வரும் பின்னூட்டம், எழுத்தாளனின் உணர்வுகளைப் புரிந்துக்கொண்டது இல்லையே! அதனால் நான் இவ்ளோ கஷ்டப்பட்டு எழுதும் எழுத்துக்கு என்ன பயன்?"

"எழுத்தை மதிக்கிறார்களோ இல்லையோ! ஆனால் எழுத்தாளன் மதிக்கப்படனும், அவன் மனமுடைந்துப் போகக்கூடாது, எப்பவும் தொடர்ந்து எழுதணும், ஊக்கமது எந்த உருவத்தில் வந்தாலும் சரி அதையே படிக்கல்லாக நினைத்துகொண்டு தனது அனுபவங்களை எழுதணும் , இன்றைய எழுத்தாளனின் அனுபவம்தான் நாளைய இந்தியாவின் இலக்கியம்."

"ஆமாம், இப்ப என்னத்தாண்டா சொல்ல வர..."

"எழுத்தாளன் எழுதணும், அவரவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட 'திறமை'  இருக்கும், அதை வெளிக்கொண்டு வரவேண்டும். அவரவர்களுக்கென்று ஒரு 'ஸ்டைல்' இருக்கும் அப்படியே அதன்படியே எழுதவேண்டும். ஏகப்பட்ட குறிச்சொல் இருக்கிறது கதை, கவிதை, தொடர்கதை, சரித்திரம், அரசியல், தமிழ், நகைச்சுவை, சமையல், சினிமா, புனைவுகள், நிகழ்வுகள், மருத்துவம், கணினி, சாதி, மதம், சிந்தனை, பாடல்கள், பொது, நாவல்கள் என பலவகைகள் இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனின் மனதிலும் இப்படி ஏதாவது பிரிவில் எழுதும் திறமை இருக்கும். அதை மறைக்காமல் அப்படியே எழுதவேண்டும்.
அவரவர் சொந்த கற்பனையை யாரும் குறைச் சொல்லபோவதில்லை, நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும், அதனை காலபோக்கில் சரிசெய்துகொண்டு மீண்டும் எழுதவேண்டும் என்றுதான் சொல்கிறேன்."

"நன்றிடா மச்சி! இனி நான் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல், பின்னூட்டம் வந்தால்தான் எழுதவேண்டுமென்ற எண்ணத்தையும் மாற்றிக்கொண்டு எழுதுகிறேன். யார் என்னச்சொன்னாலும் சொல்லிட்டுப் போகட்டும், தவறென்றால் திருத்திக்கொள்கிறேன் தடையென்றால் மிதித்துச் செல்கிறேன், எனது எழுத்துப்பயணத்தை இனி யாருக்காகவும் எதற்காகவும் நிருத்தமாட்டேன்."

"ம்ம்ம்ம் சரி மாமா, இனி தன் மனதில் தோன்றுவதை தங்குதடையில்லாமல் எழுதுடா, எழுத்தாளர்கள்தான் தமிழின் வேர்கள் நாம் எழுதுவதை நிறுத்திவிட்டால் தமிழ் செத்துவிடும். நம் சிந்தனையை இழைத்து தாய்மொழியாம் தமிழ்மொழியின் உயிர்காப்போம்."

******நன்றி*******







33 கருத்துகள்:

Avargal Unmaigal said...

நல்லா புரிஞ்சுகிட்டு பதிவு எழுதினாப்பல போல இருக்கே

JR Benedict II said...

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி.. ஹா ஹா

சாரி தல சும்மா ஜாலிக்கு

//அடப்பாவிங்களா! இப்படி வேற செய்கிறார்களா? இப்படி படிக்காமல் வரும் பின்னூட்டத்தினால் என்ன பயன்? படிக்காமல் போடும் ஆயிரம் பின்னூட்டங்களை'விட , படித்துவிட்டுப் போடும் ஒரேயொரு பின்னூட்டமே போதும்டா மச்சி!//

இல்லைங்க அப்படி பொத்தாம் பொதுவா சொல்லிட முடியாது. பலருக்கு பல காரணங்கள் இருக்கும். நல்ல கருத்துக்கள் சொல்லும் போது அதை ஏற்று கொண்டவர்கள், ஒரு வேளை (அது குறித்து அன்று தான் அறிகிறார்கள் என்று வைத்து கொள்வோம்) என்ன தான் கருத்திட முடியும்.? சொல்லுங்கள். ஆரம்பத்தில் எனக்கும் அப்படி தான் இருந்தது. அப்புறம் தான் ஜாலியா இப்படி ஒரு பதிவு போட்டேன் நேரம் இருந்தால் பாருங்கள்..

http://ideasofharrypotter.blogspot.com/2012/09/comments.html

பல வர்ண முகங்கள், மனிதர்கள், எண்ணங்கள் அலையும் இடம்.. ஸோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி..

//"அப்படி இல்லை மாமா, மனசுல உள்ளதை அப்படியே எழுதினால் யாருக்கும் படிப்பதற்கு 'போர்' அடிச்சிடும். பாதியிலையே விட்டுட்டுப் போய்டுவாங்க. நகைச்சுவையையும் கற்பனையையும் கலந்து எழுதினால் அது காவியம், இப்பலாம் வாசகரை கவர மசாலாவையும் கலக்கனும் மாமு!"//

இது சூப்பர் தான். ஆனாலும் இதையும் தாண்டி உங்கள் கருத்துக்களை, சரியோ பிழையோ சரியாக கொண்டு சேர்த்தாலே வெற்றி காண்பீர்கள் என்று நினைக்கிறேன். மிக பெரிய உதாரணம் "கோடங்கி" இக்பால் அண்ணா. அவருடைய மதம் சார்ந்த பதிவுக்களுக்கு நான் மிக தூரமானவன் தான் என்றாலும் அவருடைய சில சமுக, அறிவியல் பதிவுகள் தனி தன்மையோடு இருக்கும். சில பதிவுகளுக்கான தேடல்களே மிக வித்தியாசமாய் இருக்கும். என்ன கோடங்கி மதம் சார்ந்த பதிவுகளுக்குளையே சுற்றி சுற்றி வருகிறார். (இவரை குறிப்பிட காரணம் மிக குறுகிய காலத்தில் பிரபலமானவர்)

பதிவை பொறுத்த வரை உங்களுக்கான தளமே மற்றும் நீங்கள் நினைப்பது போல //ஆனால் அதை முழுவதையும் படிக்க முடியலையே, பாதியிலையே நிறுத்திட வேண்டி இருக்கு, ஒரு விறுவிறுப்பும் இல்லை நகைச்சுவையும் இல்லை. பக்கம் பக்கமா சொல்லாமல் சொல்லவேண்டியதை சுருக்கமா சொல்லுங்கிறேன்// அப்படியெல்லாம் எனக்கு தோணவே இல்லைங்க.

//"நீ எழுதுவது கட்டுரை மாமா அதைப்படிக்கவும் ஒருகூட்டம் இருக்கிறது, இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் பக்கம்பக்கமா எழுதினால் அதையெல்லாம் உட்க்கார்ந்து படிக்கிற அளவுக்கு நம்ம ஆளுங்களுக்கு நேரம் இல்லை."//

அப்படியும் சொல்ல முடியாது தல.. காரணம் பல பதிவர்களின் தளங்களை விடிய விடிய படித்து இருக்கிறேன். (சமுத்ரா, வரலாற்று சுவடுகள், மாணவனில் இருந்து அறிவியல் பதிவுகள் பதிவுகள் வரை, அதே போல் அட்ராசக்கவில் (2000 போஸ்ட் 600 காப்பி பேஸ்ட் தவிர்த்து) இருந்து அதிஷா வரை, அதிரடிக்கரனில் இருந்து கேபிள் வரை, மோகன்குமாரில் இருந்து திடன்கொண்டு , பிளாக்கர் நண்பன் வரை) கிட்டதட்ட 40 பிளாக்குகளுக்கு மேல் முழுமையாக படித்து இருக்கிறேன். காரணம் பிடித்த ஜெர்னர்.

அதே நேரம் வரலாற்று சுவடுகள் போய் அட்ராசக்கவாக மாற நினைத்தால் தடுமாற்றமே மிஞ்சும். பதிவுலகில் தன்க்கென்ற தனித்துவத்தையும் இழக்க நேரிடலாம்..

ஸோ உங்க ஜேனர்ல கலக்கலா எழுதுங்க தல.. உங்கள் மசாலாவை கட்டுரை அமைப்பிலும் ஏற்ற படங்கள் தேர்விலும் காட்டுங்கள்.

//"ம்ம்ம்ம் சரி மாமா, இனி தன் மனதில் தோன்றுவதை தங்குதடையில்லாமல் எழுதுடா, எழுத்தாளர்கள்தான் தமிழின் வேர்கள் நாம் எழுதுவதை நிறுத்திவிட்டால் தமிழ் செத்துவிடும். நம் சிந்தனையை இழைத்து தாய்மொழியாம் தமிழ்மொழியின் உயிர்காப்போம்."//

kalakkal punch.. அய்யய்யோ தமிழ்லயே சொல்லிடுவோம்.. கலக்கல் பஞ்ச்யா.. (பஞ்ச் - இதை நட்புக்காக தமிழ் என கொள்க)

Anonymous said...

ம். தெரிந்து கொண்டேன் தோழரே. நல்லதொரு பதிவு. தொடருங்கள்.

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...

எழுத்து மற்றும் எழுத்தாளர்கள் மீதான தங்களின் அக்கறை நன்றிக்குரியது. மற்றபடி எழுத எழுத எல்லாம் மாறும். மாறுதலுக்குள் புகும் சமூக அக்கறை மேன்மையைப் பயக்கும்..

பேச்சு நடையிலான ஒரு கண்ணாடியில் உங்களின் மனசு நன்றாகத் தெரியத் தக்க பதிவு. பாராட்டுக்கள்..

வித்யாசாகர்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்லா தேறிட்டீங்க ஆகாஷ்.22 பதிவிலேயே நல்ல முன்னேற்றம் இருக்கு.நீங்க நினைச்சதை எழுதுங்க.தொடர்ந்து கலக்குங்க!

Anonymous said...

@ ஹாரி - /என்ன கோடங்கி மதம் சார்ந்த பதிவுகளுக்குளையே சுற்றி சுற்றி வருகிறார்./ ஹிஹி, நான் எதை எழுதக் கூடாது என நினைத்தேனோ அதையே நம் சகோக்கள் எழுத வைத்துவிடுகின்றார்கள். இனி கொஞ்சம் பெரிய வட்டத்துக்குள் (மதம் தாண்டி ) சுற்றுவோம். :)

G.M Balasubramaniam said...


அதென்னவோ ஆகாஷ், டாகடர் கந்தசாமி மூலம் , கோடங்கியின் பதிவுக்குப் போய், அங்கு பின்னூட்டத்தில், உங்களுக்குப் பின்னூட்டமே வருவதில்லை என்று எழுதி இருந்தது பார்த்தேன்.என் பதிவு ஒன்றுக்கும் உங்கள் பின்னூட்டம் ஒன்று பார்த்தேன். இங்கு உங்கள் இரண்ர்டு பதிவுகளையும் படித்தேன். நிறையவே ரெஸ்பான்ஸ் இருக்கிறதே. WISH YOU ALL THE BEST. இப்போதுதான் பதிவுகளும் வாசகர்களும் என்னும் பதிவு எழுதி இங்கு வந்தேன். வந்தால்.......!!!

இராஜராஜேஸ்வரி said...

, எனது எழுத்துப்பயணத்தை இனி யாருக்காகவும் எதற்காகவும் நிருத்தமாட்டேன்."//


வாழ்த்துகள்...

ப.கந்தசாமி said...

ஹையா, நீங்கள் வெறும் பதிவர் இல்லை, பிரபல பதிவர் ஆகிட்டீங்க.

ஆத்மா said...

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..
கடைசியில் அழகான கருத்தும்
சூப்பர் பாஸ்

உஷா அன்பரசு said...

// சிலர் பின்னூட்டத்தை மட்டும் படித்துவிட்டும் பின்னூட்டம் போடுவார்கள்." // அந்த சிலரை பார்த்து இன்னும் பலருக்கு ஐடியா சொல்லிட்டிங்களே?! நான் அப்படி இல்லைங்க நல்ல ரசனையான விஷயங்களை தேடி பிடித்து முழுமையாக படிப்பேன். அப்படி படித்ததால்தான் உங்க தொடர்கதை அப்படியே ஞாபகம் இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

அட... இந்த உரையாடல் பாணி எழுதுறது கொஞ்சம் சிரமம்... நல்லாவே எழுதி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

என்னைப் பொறுத்தவரை :

நாம் வாழ்வது நமது சந்தோசத்திற்கு தான்... அடுத்தவர்கள் சொல்வதற்கேற்ப எல்லாம் நம்மை மாற்றிக் கொள்ள முடியுமா...? உங்களின் தரம் / திருப்தி நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்... அதே போல் தான் இதுவும்... அதிலும் இந்த பதியுலகம் நிஜ வாழ்க்கைக்கு ஒப்பிடும் போது மிகவும் சிறிது... உங்கள் எழுத்துக்கள் உங்களை சிந்திக்க / சிரிக்க வைத்தால் அதுவே போதும்... தொடர வாழ்த்துக்கள்...

நன்றி...

semmalai akash said...

ஆமாம், நண்பரே! உங்களைப்போல எழுத்தாளர்களின் அனுபவத்தை சொல்லும்போது கேட்க்காமல் இருக்கமுடியுமா??

semmalai akash said...

உங்களுக்கு நான் சொன்ன காரணங்கள் பொருந்தவில்லை என்று நினைக்கிறேன் நண்பா. நீங்கள் வித்தியாசமானவராக இருப்பதை உணர்கிறேன். அருமையான கருத்துகளை சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி நண்பா.

semmalai akash said...

நன்றி நண்பரே! வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி.

semmalai akash said...

ஆஹா! நீங்களுமா? ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. வருகைக்கும் அழகான பதிவிற்கும் ரொம்ப ரொம்ப நன்றி நண்பா.

semmalai akash said...

ஐயா, உங்களைப்போன்றோரின் வருகையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன், அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

semmalai akash said...

ஹா ஹா ஹா !!!

semmalai akash said...

ஐயா, நான் இதற்கு உங்களுடைய பதிவில் பதில் சொல்லிருக்கேன். வருகைக்கும் இதுபோல் சந்தோஷமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

semmalai akash said...

வாங்க வாங்க, உங்களுடைய வருகை மிக வித்தியாசமானது, வந்த நாளிலேயே எல்லாப் பதிவுகளையும் படித்துவிட்டு அனைத்திற்கும் பின்னூட்டம் அளித்து என்னை மேலும் மேலும் வியக்க வைத்துவிட்டீர்கள்.

ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. மிக்க நன்றி சகோ!

semmalai akash said...

ஐயா, உங்களுடைய சொல் பலிக்கட்டும், மிகப்பெரிய வார்த்தையை சொல்லி என்னை கௌரவ படுத்திவிட்டீர்கள் ஐயா.

அதற்கான முயற்சியில்தான் இருக்கிறேன் ஐயா. ரொம்ப நன்றி.

semmalai akash said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி நண்பரே!

semmalai akash said...

ஹீ ஹீ ஹீ !!! உங்களை ஒன்றுமே சொல்லவில்லை, மன்னிச்சுடுங்க:-)
வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் மிக மிக நன்றி.

semmalai akash said...

அண்ணா, ஆமாம் அண்ணா. உங்களுடைய ஆதரவு எப்பவும் கிடைக்கிறது, மேலும் மேலும் ஊக்கத்தை கொடுக்கிறது. நன்றி அண்ணா.

Unknown said...

சூப்பரா எழுதி இருக்கீங்க ஆகாஷ்

semmalai akash said...

ரொம்ப நன்றி நண்பா.

கதம்ப உணர்வுகள் said...

அட ஆகாஷ் என்னப்பா இது :)

நிதானமா எழுதனும் இதுக்கு கருத்து.. முழுதும் படிச்சுட்டேன்.. மேம்போக்கா கருத்து போட என்னால் முடியாது...

நாளை வந்து எழுதுறேன்பா.. கருத்து எழுதாம இருக்கக்கூடாது.. பிள்ளை என்னமா எழுதி இருக்கு... ரொம்ப ரசித்து வாசித்தேன்பா ஆகாஷ்....

நாளை என் கருத்து எழுதுவேன்பா....

semmalai akash said...

ஆஹா! வாங்க வாங்க வருகைக்கு நன்றி.
சொல்லுங்க எதிர்பாத்து காத்திருக்கேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நகைச்சுவைக்கு எங்கும் தனிமதிப்பு உண்டு. அதைப் பிடித்து விட்டீர்கள்.
கலக்குங்கள்!

Jayadev Das said...

யோவ், நீ எங்கியோ போயிட்டே!! எனக்கும் ஒண்ணுமே தெரியாது, அது இதுன்னு சும்மா பாவ்லா பண்றியா.... பிச்சுபுடுவேன் பிச்சு.............

semmalai akash said...

மிக்க நன்றி சகோ! ஏதோவொரு வகையில் எழுதிகிட்டு இருக்கேன்.

semmalai akash said...

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க! சரிங்க, இப்படி மிரட்டீங்களே!

ரொம்ப நன்றீங்க என்மீது இவ்ளோ நம்பிக்கை வைத்திருக்கீங்க, உங்கள் நம்பிக்கையை காப்பாற்றதான் போராடுகிறேன்.

குறையொன்றுமில்லை. said...

ஆகாஷ் இந்தப்பதிவும் படிச்சுட்டேன். கோபாலு குற்றாலம் அருவியாதான் கொட்டுரார்.
அதிகும் நல்ல விஷயங்கள் இருக்கு.

Post a Comment