Pages

Wednesday, January 9, 2013

வேண்டும் என்றே யோசிப்போர் சங்கம் :-)

                       வணக்கம் நண்பர்களே! 
கொஞ்சநாள் இந்த பக்கமே வரவில்லை, என்னுடைய முந்தைய பதிவை படித்தவர்களுக்கு சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். படிக்காதவர்கள் இங்கே போய் படிச்சி தெரிந்துக்கொள்ளவும். நன்றி.

       சரி சரி வாங்க விஷயத்திற்குப் போவோம், நமது முன்னோர்கள் அனைவரும் சாதாரண தண்ணீரைத்தான் அதாவது கிணற்று நீர், ஆற்று நீர், ஏரி-குளத்து நீர் என அனைத்தையும்தான் காலம் காலமாக குடித்து வந்தார்கள், ஆனால் அவர்களை எந்த நோயியும் பெரியதாக பாதித்ததாக தெரியவில்லை, எனது தாத்தா 106 வயதில்தான் இறந்தார். அவர் இறப்பதற்கும் முந்தையநாள்கூட கிணற்றில் இறங்கி ஓரம்பாரம் முளைத்திருக்கும் சிறு சிறு புல்களை அகற்றிருக்கிறார்.

ஆனால்  நாம் இப்போது மினரல் வாட்டர்,"டேப்" வாட்டர் என்று குடிக்கிறேன் நமது ஆய்சு என்னவோ அவர்களைவிட குறைவாகவே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும் என்பதுதான் ரொம்ப நாட்களாகவே எனக்கு புரியாமல் இருக்கிறது. இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று நினைகிறிர்கள். இப்பொழுதும் கேரளாவில் வீடு கட்டினால் மறக்காமல் கிணறும் தோண்டுகிறார்கள் கிராமப்பகுதியில்தான், நகரங்களில் இல்லை.

***********************************************************************************

12 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல சிந்தனை நண்பரே..

ஒரு புள்ளிவிவரம்..

ஆண்டுதோறும் அசுத்தமான குடிநீரால் உயிரிழப்போர் எண்ணிக்கை 34இலட்சமாம்..

முனைவர் இரா.குணசீலன் said...

மினரல் வாட்டர்,"டேப்" வாட்டர் என்று குடிக்கிறேன் நமது ஆய்சு என்னவோ அவர்களைவிட குறைவாகவே காணப்படுகிறது.

சுத்தமான உணவுமுறைகளுக்கும் குடிநீருக்கும் நாம் மாற மாற நம் நோயெதிர்ப்பு ஆற்றலும் குறைந்துகொண்டே வருகிறது என்று கருதுகிறேன் நண்பரே..

தங்கள் இடுகையோடு தொடர்புடைய..
உலக தண்ணீர்தின சிறப்பு இடுகை..

http://www.gunathamizh.com/2011/03/blog-post_21.html

தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

ப.கந்தசாமி said...

நம் ஆயுள் அதிகரித்து இருக்கிறது. அந்தக் காலத்தில் 60 வயசில் இறந்தவர்கள் அதிகம். இன்று அந்த வயசு 80 ஆக மாறியிருக்கிறது.

கவியாழி said...

உண்மைதான் ,தண்ணீரில் இவ்வளவு சங்கதி உள்ளது

Jayadev Das said...

பழனிசாமி வாத்தியாரைய்யா தமாஷ் பண்ணியிருக்கார். அந்தக் காலத்தில் சிலர் அதிக ஆயுளுடன் வாழ்ந்தார்கள், பலர் சிறு வயதிலேயே இறந்தார்கள். தற்போது பலர் மித வயதுவரை வாழ்ந்து அதற்க்கப்புறம் உடல் நலம் போய்ச் சாகிறார்கள். இயற்க்கைக்கு மிஞ்சி செயற்கை வந்து விடாது. நமக்கு மிக நல்லது ஆற்று நீர்தான், அதற்ப்புரம் குளத்து நீர் கிணற்று நீர் எல்லாம் முக்கியம்மாகக் கவனிக்க வேண்டியது தூய மழை நேரை உண்டால் சிக்கிரம் எழுமுகள் கரைந்து செத்துவிடுவோம் ஆதலால் தேவையான அளவுக்கு கனிமங்கள் அதில் கலக்க வேண்டும். தற்போது தண்ணீரில் உள்ள உப்பின் அளவு ஊருபட்டதாகிப் போனதால் கிட்னியைக் காப்பாற்ற வேறு வழியே இல்லாமல் சுத்தீகரிக்கப் பட்ட நீரை காசு குடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய கட்டாயம். ஆனாலும் உடல் நலனுக்கு அது உகந்ததாக எனக்குத் தோன்றவில்லை எனினும், இருப்பதில் அதுதான் சிறந்த வழி.

உஷா அன்பரசு said...

ஜெயதேவ் கரெக்டா சொல்லிட்டாங்க! மெடிக்கலா அப்படிதான்!

semmalai akash said...

அப்படியா நண்பரே! எனக்கு புதிய தகவல், நன்றி நண்பரே!

semmalai akash said...

கண்டிப்பாக படிக்கிறேன், நன்றி நண்பரே!

semmalai akash said...

அப்படியா ஐயா, எனக்கு தெரிந்து அந்த காலத்தில்தான் ரொம்ப நாள் வாழ்ந்ததாக கேட்டிருக்கிறேன்.

semmalai akash said...

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க...

semmalai akash said...

இருக்கலாம் நண்பரே! நானும் உங்களைப்போலத்தான் உணர்கிறேன்.

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க...

semmalai akash said...

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க...

Post a Comment