Pages

Monday, January 21, 2013

சமர் = சமர்ப்பணம் (திரை விமர்சனம்)

       
சமர் = சமர்ப்பணம்
        இயக்குநர் திரு அவர்களுக்கு எனது நன்றியை முதலில் சமர்ப்பணம் செய்கிறேன். ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு கிடைத்தது. நிறைய எதிர்பார்ப்புகள் அடுத்து என்ன நடக்குமோ என்பதை ஆவலுடன் பார்த்து ரசித்தேன். இரண்டு நாயகிகள் என்றதும் தீராத விளையாட்டுப்பிள்ளை போல்இருக்குமோ என்று நினைத்தேன், ஆனால் முற்றிலும் மாறாக காதலை மட்டும் சொல்லாமல் காதலோடு அருமையான கதையை மிக சிறப்பாக எழுதி இயக்கிய திருஅவர்களுக்கு மிக்க நன்றி.
     விஷால், திரிஷா, சுனைனா மற்றும் சம்பத், ஜெயபிரகாஷ், மனோஜ் பாஜ்பாய், ஜே.டி. சக்கரவர்த்தி ஆகியோர் நடித்து வெளிவந்த படம்தான் "சமர்" யுவன் சங்கர் ராஜா இசையில் இரண்டு பாடல்கள் மனதை கவர்ந்தது, ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம். நாதன் அருமையாக ஒவ்வொரு காட்சியையும் படமாக்கி இருக்கிறார், சுனைனா கொஞ்ச காட்சிகள் வந்தாலும் ரசிகர் மனதை புரிந்துகொண்டு நடித்துள்ளார். திரிஷா தனது உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொண்டு மீண்டும் கொஞ்சநாள் நடிக்கலாம் என்ற கனவோடு தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்திருக்கிறார், ஆனால் சினிமா உலகம் இவரை எப்படி ஏற்றுக்கொள்ளும் என்பதுதான் தெரியவில்லை. 

         கதை  முதலில் சாதரணமாக மலைக்காடுகளில் ஆரம்பித்தாலும் படம் முழுக்க நகரத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு காட்சியும் ஏதோ ஒரு புரியாத புதிராகவே இருந்தது. முதலில் ஊட்டியில் சுனைனாவை காதலிக்கும் விஷால் தனது காதலின் ஆழத்தை கணக்கு பார்க்காமல் இருப்பதாகவும், இவை ஒவ்வொன்றுக்கும் சுனைனா கணக்கு வைத்திருப்பதாகவும் சுனைனாவின் கேள்விகளுக்கு பதில் கூற இருவரும் பிரிகின்றனர். மூன்று மாத இடைவெளிகளுக்கு பிறகு சுனைனாவிடம் இருந்து ஒரு பார்சல் வர மீண்டும் தனது காதலியை பார்க்க "பாங்காக்" செல்கிறார், அங்கு செல்லும்போதுதான் திரிஷாவின் நட்பு கிடைக்கிறது, பிறகு அதுவே காதலாக மாறுகிறது. கடைசியில் யாரோடு இணைகிறார் என்பதுவே காதலின் கதை.

         வில்லன்களாக மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மனோஜ் பாஜ்பாய், மற்றும் ஜே.டி.சக்கரவர்த்தி இருவருக்கும் எனது பாராட்டுகள். இவர்கள் இருவரும் மிகப்பெரிய பணக்காரர்கள், இவர்களின் பொழுது போக்கிற்காக விளையாடும் விளையாட்டுதான் மீதி படமும். விஷால் தன்னைச் சுற்றி பின்னப்பட்ட சதிகளை புரியாமல் தவிப்பதுபோல் உள்ள காட்சிகள், அவரின் முக பாவனை கைதட்டலை பெறுகிறது. இதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் கதையின் கரு. மிக அருமையாக மக்கள் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார் இயக்குநர் திரு.

அழகோ  அழகு அவள் கண்ணழகு!
01. Oru Kannil vegam…Singers: K.G.Ranjith,Naveen Madhav,Suchitra
Lyricis : Na.Muthkumar
02. Azhago Azhagu…Singers: Naresh Iyer
Lyricis : Na.Muthkumar

     நா. முத்துகுமார் பாடல் வரிகள் இந்த இரண்டு பாடலும் என்னை கவர்ந்தது. கேட்டு மகிழுங்கள்.

      மொத்தத்தில் "சமர்" பார்க்கலாம் நல்ல படம். போர் இல்லாமல் கதை வேக வேகமாக நம்மையும் கூடவே இழுத்துச் செல்கிறது.   விஷால் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

************************நன்றி, மீண்டும் சந்திப்போம்.**************************
 

6 கருத்துகள்:

Anonymous said...

சரி அப்போ பார்க்கலாம் என்று சொல்றிங்க, ம்ம்ம் ஓகே பார்த்திடுவோம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல விமர்சனம்.சந்தர்ப்பம் அமைந்தால் பார்க்கலாம்.

Ponchandar said...

விஷால் முண்டா பனீயன் மேல சட்டை அணிந்து பட்டன் எதுவும் போடாமல் படம் முழுக்க வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் இன்னும் காஸ்ட்யூமில் அக்கறை செலுத்த வேண்டும் ! ! !

”தளிர் சுரேஷ்” said...

முதல் முறையாக இந்த படம் பற்றிய ஒரு நல்ல விமர்சனம்! ம்! பார்க்கலாம்! பகிர்வுக்கு நன்றி!

Jayadev Das said...

Thanks for unbiased review!!

Unknown said...

நல்ல விறுவிறுப்பான படம் நண்பா
அதே போல விமர்சனமும் அருமை

Post a Comment