முதல்
பார்வை
என்
கண்ணை வருடிச் சென்றது
கார்மேகமா? – அவள்
கருங்கூந்தலா? – இதை
எண்ணி முடிப்பதற்குள்
முன்னில் மின்னி நழுவியது
நாலெட்டு நட்சத்திரங்கள்!
கையில் தட்டோடும்
தட்டில் லட்டோடும்
கண்ணெதிரே வந்து நின்றாள்
வானவில்லின் மொத்த
வண்ணமாய்!
கண் சிமிட்டும்
நேரத்தில்
கையில் லட்டை
திணித்துவிட்டு
காற்றோடு கடந்து
சென்றாள்!
சின்னஞ்சிறு
உடையணிந்து
அன்ன நடை நடந்து
வண்ணத்துப் பூச்சி
போல
மேலும் கீழும்
தவழ்ந்து – என்
கண்ணைவிட்டு மறையும்
முன்னே
மேலிடையை மிளிரவிட்டாள்
– எனை
மேகக்கூட்டத்தில்
தொலைத்துவிட்டாள்!
என்ன வண்ணமது?
வானவில்லில்
கண்டதில்லை!
வர்ணங்களில்
காணவில்லை!
மனதில் பதிந்த அதை – எப்படி
நான் எழுதி வைப்பேன்?
புரியாமல் தயங்கி
நின்றேன்
புதிய வண்ணம் ஒன்றை தெரிந்திடவே!
புதிய வண்ணம் ஒன்றை தெரிந்திடவே!
14 கருத்துகள்:
லட்டு கொடுத்ததோடு அல்வாயும் கொடுத்து விட்டாளா? :-)(சும்மா ஜோக்...!)
நல்லாருக்கு ஆகாஷ்!
ஹா ஹா ஹா !!!
நன்றி அண்ணா
அருமையான கவிதை
சொல்லிச் சென்றவிதம் நிகழ்வினை
பிம்பமாக உணரச் செய்தது
வாழ்த்துக்கள்
ரசிக்க வைக்கும் வரிகள்...
அருமை ஆகாஷ்
நன்றிங்க....
நன்றிங்க..நண்பரே
நன்றி நண்பா.
நண்பா...
வீட்டம்மாவுக்கு இந்த டாவு மேட்டர் தெரியுமா... நான் வேணும்னா பாஸ் மாம்ஸை விட்டு சொல்லச் சொல்லவா...
எனிவே காதல் பயணம் சிறக்க வாழ்த்துகள்...
மிகவும் அருமை நன்றி சகோ
நன்றி நண்பா! ஏன் இப்படி கிளம்பிட்டிங்க???:-))))))))
நன்றி சகோதரி!
நல்ல கவிதை நண்பா
வானவில்லில் கண்டதில்லை!
வர்ணங்களில் காணவில்லை!
மனதில் பதிந்த அதை – எப்படி
நான் எழுதி வைப்பேன்?
மனதில் பதிந்த இந்த வரிகளையும் நான் எப்படி வர்ணிப்பேன் ?
Post a Comment