நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் உங்களுடன் ஒருத்தகவலை பகிர்ந்துக்கொள்ள வந்துள்ளேன். நண்பர்கள் வருகைக்கும் தங்களுடைய பின்னுட்டதிற்கும் மிக்க நன்றி.
இப்போது நாம் வாங்கும் அனைத்து பொருட்களின் பின்புறமும் ஒரு பார்கோடு இருப்பதை நம்மில் எத்தினைப்பேர் கவனித்திருக்கிறிர்கள்.
ஆமாங்க ஒரு சட்டை வாங்கபோனால்கூட அதில் ஒரு பார்கோடு இருக்கும்,அதுமட்டுமில்லாமல் உணவுப்பொருட்களிலும் இருக்கும் பால், காபி, சக்கரை, பருப்பு, அரிசி, உப்பு, புளி, மிளகாய் என்று எந்தப் பொருட்களைக் கடையில் வாங்கச் சென்றாலும் அதில் ஒரு பார்க்கோடு இருக்கும், சரி பார்க்கோடு இருப்பதால் என்ன பயன்? என்று உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் இருந்தாலும் தெரியாதவர்கள் சிலருக்காக சொல்கிறேன். பார்க்கோடு பயன்படுத்துவது அதன் விலையை எளிதில் தெரிந்துக்கொள்ளவும், பிராண்ட் பெயர் மற்றும் அதன் வெயிட், இருப்பு எண்ணிக்கையை கணக்கிடவும், மிக ஈஸியாக விலைமதிப்பிடவும் இந்த பார்க்கோடு பயன்படுத்தும்முறை முக்கிய பங்களிக்கிறது.
ஒரு பொருளின் பின்புறத்தில் பார்க்கோடு மட்டும் இருந்தால் போதாது அதைத் தெரிந்துக்கொள்ள வேறு ஒரு கருவியும் தேவைப்படுகிறது.
Barcode Scanners
இதை பயன்படுத்திதான் மிக ஈஸியாக பொருட்களை விலைமதிப்பிட முடிகிறது. அப்படி என்றால் இதன் துணையில்லாமல் பார்க்கோடு பயன்படாதா? என்று கேட்பது புரிகிறது. முடியும், இந்த கருவிகளை பயன்படுத்தாமலும் பார்க்கோடு பயன்படுத்த முடியும். அதன் கீழ்புறம் பாருங்க
13 இலக்க (எண்களின் எண்ணிக்கை இடத்திற்கு தகுந்தாற்போல் மாறும்) எண்களும் இருக்கும் கவனியுங்கள் அதை வைத்தும் மேலே சொன்ன அனைத்தையும் தெரிந்துக்கொள்ளமுடியும். கொஞ்சம் சிரமமும், நேரமும் அதிகமாக தேவைப்படும். எண்களைப் பார்த்து பார்த்து பரிசோதிக்கப்பட்ட பிறகுதான் நிர்ணயிக்க முடியும்.
Barcode Scanners இருந்தால்போதும் எல்லா வேலைகளும் மிக ஈஸியாக முடிந்துவிடும், Scan செய்தால்போதும் வேலை முடிந்தது.
இப்படி நமது வாழ்க்கையில் தெரிந்தோ? தெரியாமலோ? தினம்தினம் பயன்படுத்தும் இந்த பார்க்கோடு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரியுமா? Wallace Flint அவர்களுக்கு 1932ம் ஆண்டு இப்படி ஒரு முறையை அறிமுகப்படுத்தினால் என்ன என்று தோன்றியது, ஆனால் அவரால் இதனை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போனது, அதன்பிறகு அவர் இந்த முயற்ச்சியை கைவிட்டுவிட்டார், பிறகு Joseph Woodland and Bernard Silver அந்த ஐடியாவை பயன்படுத்தி முயற்சியில் ஈடுபட்டனர் இவர்களின் விடாமுயற்ச்சியால் சில சோதனைகளில் Oct, 7, 1952 ல் தான் வெற்றிப்பெற்றது, ஆனால் பயன்படுத்த பல சிக்கல்கள் இருந்தன, இருந்தாலும் அவர்கள் வேறுபட்ட வழிகளில் பயன்படுத்திக் கொண்டிருந்தனர், அதன் பிறகு June 26th, 1974 ஆம் ஆண்டு ஒரு உணவு உற்பத்தி குழுவின் உதவியோடு ஒபாயோ சூப்பர் மார்க்கெட்டில்தான் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது. இப்படிதான் பார்க்கோடு பிறந்தது.
இன்று தனது 60 வயதைக்கடந்து 61 வயதில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.
Barcode Scanners பற்றி விரிவாகப் பார்ப்போம், வியாபாரிகள் கையில் எடுத்துக்கொண்டு ஆர்டர் செய்த பொருட்களை பார்க்கோடு ஸ்கேன் செய்து சரியானதுதானா என்று பார்த்து வாங்க ஈஸியாக இருக்கும், அதற்காகவே சிறிய சைஸில் கண்டுபிடித்திருக்கிறார்கள், மேலே உள்ள படத்தில் காணலாம். அடுத்ததாக பணம் செலுத்துமிடத்தில் பொருட்களை எடுத்து காண்பித்தாலே போதும் உடனே ஸ்கேன் ஆயிடும், இது மிகப்பெரியது கையில் எடுக்கமுடியாது, ஒரு இடத்தில் பொருத்தி வைத்திருப்பார்கள். இதனுடம் துணையாக சின்ன கருவியையும் வைத்திருப்பார்கள், காரணம் சில பொருட்களை தூக்கி இதன் அருகில் காண்பிக்க முடியாது அப்படி உள்ள பொருட்களை துணைக்கருவிமூலம் ஸ்கேன் செய்தும் விலையை மதிப்பிடுவார்கள். படங்கள் உங்கள் பார்வைக்காக..
இது எல்லோரும் மிக ஈஸியாக பயன்படுத்தமுடியும், ஒருமுறை பார்த்தாலே போதும் அனைவரும் பயன்படுத்தலாம். மிக எளிமையானதும்கூட, சூப்பர் மார்கெட்டில் இதுபோல உள்ள பார்க்கோடு ஸ்கேனர்களே போதுமானது, இன்னும் பெரியப் பெரிய இடங்களில், அதாவது கார்கோ அனுப்பும் இடம், (ஏர்போர்ட்) விமானநிலையங்கள், துறைமுகங்கள் போன்ற இடங்களில் இதைவிடப் பெரியப் பெரிய ஸ்கேனர்கள் பயன்படுத்துகிறார்கள். பெரியப் பெரிய பார்சல்கள் வரும், அப்படி வரும் பொருட்களை பார்சல்களை பிரித்து ஒவ்வொன்றாக எடுத்து ஸ்கேன் செய்யமுடியாது அதனால் அதற்கு தகுந்தாற்போல் ஸ்கேனர்கள் பயன்படுத்துகிறார்கள். உங்கள் பார்வைக்காக ஒரு படம்
இப்படிதான் மிக ஈஸியாக எல்லா வேலைகளும் முடிகிறது, இப்போது பல மொபைல் போன்களின் மூலமாகவும் பார்க்கோடு ஸ்கேன் செய்யமுடியும், அவ்ளோ ஈஸியாகிவிட்டது. எங்கும் எதிலும் இப்போது பார்க்கோடு இல்லாமல் இல்லை என்பதே உண்மை, சரி பார்க்கோடு, மற்றும் பார்க்கோடு ஸ்கேனர்கள் பற்றி பார்த்தோம், பார்க்கோடு எப்படி உருவாக்குவது என்று பார்ப்போமா? பார்க்கோடு பிரிண்ட் செய்ய தனியாக பிரிண்டர் இருக்கிறது, அதைப் பயன்படுத்தினால் போதும், சாதாரண பிரிண்டர்ஸ்ல பிரிண்ட் செய்த பார்க்கோடுகள் சரியாக வேலை செய்யாது, நமக்கு பொருட்க்களின்மீது ஒட்டுவதற்கு சிறிய சைஸில் பார்க்கோடு பிரிண்ட் செய்து எடுக்கவேண்டும்,
இந்தமாதிரியான பிரிண்ட்செய்த பார்க்கோடுகள் பார்சல்கள் மற்றும் அட்டைப் பெட்டிகளில் ஒட்டுவதற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மிக எளிதில் ஸ்கேன் செய்துவிடமுடியும், பிராண்டட் பொருட்களில் அதன் லேபல்கூடவே பார்க்கோடு பிரிண்ட் செய்து வந்துவிடும், இப்படி செய்ய செலவு அதிகம், அதிக எண்ணிக்கையில் வேண்டும் என்றால் மட்டும் இப்படி பிரிண்ட் செய்வார்கள்.
சாதரணமாக பேக் செய்யப்பட்டப் பொருட்க்களின்மீது ஒட்டுவதற்கு சிறிய சைஸ் போதும், ஒரு பொருளின்மீது இரண்டு பார்க்கோடுகள் ஒட்டக்கூடாது, அப்படி ஒட்டிய பொருட்கள் செல்லாதத, சில பொருட்களில் இரண்டு பார்க்கோடுகள் இருக்கும் ஆனால் ஒன்றை கட் செய்திருப்பார்கள், இந்த பார்க்கோடுமீது மார்க்கர் பென் கொண்டு சிறிதாக ஒரு கோடு வரைத்தாலே போதும் அது வொர்க் ஆகாது. ஸ்பெஷல் ஆபார் கொடுப்பதற்காகவோ அல்லது அதன் விலையில் மாற்றம் இருந்தாலோ அதன்மீது புதிய பார்க்கோடு ஒட்டி இருப்பார்கள்.
இதுவரை சூப்பர்மார்கெட்டில் பார்க்கோடு எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி பார்த்தோம், பொருட்கள் வாங்கும்போதும் விற்கும்போதும் மிக எளிமையாக அதன் விலையை நிர்ணயிக்க முடியும். என்பதையும் பார்த்தோம், இனி நேரம் கிடைக்கும்போது ஐடி கார்டு, ஐடிசிப், இன்னும் நிறைய இருக்கிறது ஒவ்வொன்றாக சொல்கிறேன்.
அனைவருக்கும் மீண்டும் வணக்கம்.
உங்களுடைய கருத்துக்களையும் பதியவும்.
8 கருத்துகள்:
பார்க்கோடு விளக்கங்களுக்கு நன்றி... தொடர்கிறேன்...
நல்ல தகவல்.
ஆகாஷ், இந்த விஷயத்தில் இவ்வளவு சங்கதி இருந்தது என்று தெரியாது. அருமையாகப் பல தகவல்களைக் கோர்வையாக சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள்!
அருமையான விளக்கம்.
அருமையான விளக்கம்.
உதவியான தகவல்...
அருமையான விளக்கம்.
பயனுள்ள தகவலுக்கு பாராட்டுக்கள்..
Post a Comment