பாலக்கீரையை எப்படி சமைப்பது என்று தெரியாததால் பாலக் வாங்குவதேயில்லை, இதுமட்டும் இல்லை பாலக் கொண்டு இன்னும் நிறைய வித விதமாக சமைக்கலாம். சமைக்கத் தெரியாது என்ற ஒரே காரணத்தால் ஹோட்டலில் எப்படி சமைத்து கொடுத்தாலும் சாப்பிட்டுவிட்டு வந்துடுவேன் என்ன இருந்தாலும் நாம் சமைத்து சாப்பிடுவதைப்போல் வருமா? இதை எப்படி சமைப்பது என்று பார்ப்போம் வாங்க...இதில் எவ்வளவு சத்துக்கள் இருக்கிறது என்று கூகுள் கூகுள் செய்து படித்தது.
பாலக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் கீரை வேறெதுவும் இல்லை. இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலை போக்கிறது.
இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.
ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது.
ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது.
இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.
இவ்வளவு சத்துக்கள் இருக்கும் பாலக்கீரையை வாரத்தில் ஒருநாள் சாப்பிட்டால் உடலுக்கு ரொம்ப நல்லதுங்க... நான் எப்பொழுதும் ஆண்களுக்கு சுவையாக இருக்கும்படி சொல்லிகொடுக்கிறேன். இதையும் ஆண்களுக்காகதான் பகிர்கிறேன்.
பாலக்ரைஸ் தேவையானப்பொருட்கள்:
பாலக் : 2 கட்டு
கொத்தமல்லி : 1 கட்டு
தக்காளி : 2 எண்ணிக்கை
பச்சமிளகாய் : 5 எண்ணிக்கை
மஞ்சள்தூள் : 1 சிட்டிகை
வெங்காயம் : 2 பெரிய வெங்காயம்.
பூண்டு :மூன்று பல்
புளி : சிறிய எலுமிச்சை அளவு.
உப்பு : தேவையான அளவு
காய்ந்தமிளகாய் : 5 எண்ணிக்கை
எண்ணெய் : தேவையான அளவு
கடுகு/உளுத்தம்பருப்பு : 1 சிட்டிகை
செய்முறை:
சூடு குறைந்ததும் மிக்ஸ்யில் போட்டு அரைக்கவும், அதிகம் மைந்து போகாமல் இருக்கவேண்டும். இப்போது ஒரு வாணலில் எண்ணெய்/நெய் விட்டு கடுகு/உளுத்தம்பருப்பு , காய்ந்தமிளகாய் சேர்த்து தாளிக்கவும். இவ்ளோதாங்க பாலக் தயாராகிவிட்டது.
இனி இதை வைத்து எப்படி பலவகையானமுறைகளில் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
முதலில் பாலக்ரைஸ்.
இதனுடன், இரண்டு கப்பு வேகவைத்த சாதத்தை சேர்த்தால் பாலக்ரைஸ் ரெடி!
பாலக் பனீர்
இதனுடன், தேவையான அளவு பனீர் சேர்த்தால் பாலக் பனீர் ரெடி!
ஆலுபாலக் (பாலக் உருளைகிழங்கு )
இதனுடன் இரண்டு மூன்று உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கிவிட்டு கொஞ்சம் பெரிய பெரிய சைஸில் நறுக்கு சேர்த்தால் பாலக் உருளைக்கிழங்கும் ரெடி!
பாலக் மிக்ஸ் வெஜிடபிள்:
இதனுடன், பீன்ஸ், கேரட்,உருளைக்கிழங்கு இவற்றை சிறிது சிறிதாக நறுக்கி பேபிக்கோர்ன் மற்றும் பச்சைப் பட்டாணியையும் சேர்த்து வேகவைத்து தேவையான அளவு உப்பும் சேர்த்தால் பாலக் மிக்ஸ் வெஜிடபிள் ரெடி!
பாலக்தோசை:
அரிசி மாவுடன், சிறிது பாலக் கிரேவியும் சேர்த்து தோசை சுட்டால், பாலக் தோசை ரெடி!
இவ்வோதாங்க, இதை வைத்துக்கொண்டு நமக்குவிருப்பமானதை விதவிதமாக செய்து சாப்பிடலாம். இப்படிதான் இங்குள்ள ஹோட்டல்களிலும் செய்கிறார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

பாலக்கீரையை நன்றாக நீரில் சுத்தம் செய்து சிறுது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். நறுமணம் ரொம்ப முக்கியம் அதனால் கொத்தமல்லி இலையையும் நன்றாக நீரில் கழுவி சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் வைத்து அதனுடன் தண்ணீர் சேர்க்கக்கூடாது அதற்கு பதிலாக அரை டம்ளர் நீரில் புளியைக் கரைத்து இந்த நீரை சேர்த்து கூடவே பச்சமிளகாய், தக்காளி, வெங்காயம், பூண்டு அனைத்தையும் சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து வேகவைக்கவும். தேவையான அளவு உப்பும் சேர்க்கவும். இப்போது மஞ்சள்பொடியும் சேர்க்கவும். (எந்தவொரு பொருளிலும் சிறிதளவு மஞ்சள்பொடி சேர்த்தால் விஷம் முறியும் என்று எனது பாட்டி சொன்னது ஞாபகம் இருக்கிறது) இது மட்டும் இல்லை நமக்கு தேவையான கலரும் கிடைக்குமே! இன்னும் கொஞ்சம் நறுமணம் வேண்டும் என்று நினைப்பவர்கள் சிறிது பொதினா இலையையும் சேர்த்துக்கொள்ளவும். பத்து நிமிடம் வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, கீரையில் சூடு குறையும்வரை காத்திருக்கவும்.
சூடு குறைந்ததும் மிக்ஸ்யில் போட்டு அரைக்கவும், அதிகம் மைந்து போகாமல் இருக்கவேண்டும். இப்போது ஒரு வாணலில் எண்ணெய்/நெய் விட்டு கடுகு/உளுத்தம்பருப்பு , காய்ந்தமிளகாய் சேர்த்து தாளிக்கவும். இவ்ளோதாங்க பாலக் தயாராகிவிட்டது.
இனி இதை வைத்து எப்படி பலவகையானமுறைகளில் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
முதலில் பாலக்ரைஸ்.
இதனுடன், இரண்டு கப்பு வேகவைத்த சாதத்தை சேர்த்தால் பாலக்ரைஸ் ரெடி!
பாலக் பனீர்
இதனுடன், தேவையான அளவு பனீர் சேர்த்தால் பாலக் பனீர் ரெடி!
ஆலுபாலக் (பாலக் உருளைகிழங்கு )
இதனுடன் இரண்டு மூன்று உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கிவிட்டு கொஞ்சம் பெரிய பெரிய சைஸில் நறுக்கு சேர்த்தால் பாலக் உருளைக்கிழங்கும் ரெடி!
பாலக் மிக்ஸ் வெஜிடபிள்:
இதனுடன், பீன்ஸ், கேரட்,உருளைக்கிழங்கு இவற்றை சிறிது சிறிதாக நறுக்கி பேபிக்கோர்ன் மற்றும் பச்சைப் பட்டாணியையும் சேர்த்து வேகவைத்து தேவையான அளவு உப்பும் சேர்த்தால் பாலக் மிக்ஸ் வெஜிடபிள் ரெடி!
பாலக்தோசை:
அரிசி மாவுடன், சிறிது பாலக் கிரேவியும் சேர்த்து தோசை சுட்டால், பாலக் தோசை ரெடி!
இவ்வோதாங்க, இதை வைத்துக்கொண்டு நமக்குவிருப்பமானதை விதவிதமாக செய்து சாப்பிடலாம். இப்படிதான் இங்குள்ள ஹோட்டல்களிலும் செய்கிறார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
*****************************நன்றி, மீண்டும் சந்திப்போம்.****************************
15 கருத்துகள்:
healthy palak recipes..
ongoing event: http://www.en-iniyaillam.com/2013/02/announcing-passion-on-plate-giveaway.html?m=1
சமையலில் கில்லாடியாக மாறிவிட்டீர்களே
பாருங்கப்பா... எத்தனை விதங்கள்... அப்படியே சப்பாத்தி மாவு செய்யும் போது இந்த பாலக்கையும் சேர்த்து பிசையுங்கள்...
சூப்பர் பாலக் சப்பாத்தி ரெடி... (முக்கியமாக குழந்தைகளுக்கு)
பயனுள்ள குறிப்புகள் !
தொடர வாழ்த்துகள்...
பயனுள்ள குறிப்புகள் !
தொடர வாழ்த்துகள்...
என்ன தங்களை வெகு நாட்களாக காணவில்லை. அருமையான டிப்ஷ் இன்னும் ஒன்று கீரை கடைய ஒரு சட்டி உண்டு அதில் இட்டு கடைந்தால் சுவை நன்றாக இருக்கும். மிக்ஸி வேண்டாமே.
// இதையும் ஆண்களுக்காகதான் பகிர்கிறேன். // - இதெல்லாம் ஓவர்ங்க.. சமைக்கிறதுல கடைசி பென்ச்செல்லாம் இருக்காங்க சில பெண்கள்( என்னை மாதிரி) அவங்களும் படிச்சி தெரிஞ்சிகிட்டா என்னவாம்? அது சரி டிஸ்ப்ளே எல்லாம் அழகழகா யாரோ சமைச்சதை எல்லாம் போட்டிட்டிங்க.. அதெல்லாம் ஒத்துக்கப்படாது. நீங்க சமைத்ததை சாப்பிட்டு பார்த்துதான் சொல்ல முடியும்.. ஹா.. ஹா..!
ஆனாலும் பாலக்கீரையில் இத்தனை சத்து இருக்கறதை தெரிஞ்சிகிட்டேன்.. நிச்சயம் ட்ரை பண்றேன். " கீரைக்கார பாட்டி பாலக்கீரை ஒரு கட்டு கொடுங்க......."
அசத்தலான சமையல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
கொஞ்ச நாட்களாக உங்களைக் காணவில்லை ?
வந்தவுடன் சத்துள்ள உணவை சாப்பிடச் சொல்லியிருக்கிறீர்கள் .
செய்து விடுவோம்.
நன்றி,
ராஜி
வாழ்த்துக்கள் நண்பா நூறு பேர் தொடர்வதற்கு
ஆகாஷ் நல்ல சத்தான கீரைக்கு வித விதமான சுவை கொடுத்திருக்கிறீர்கள்.
இப்பதான் காலையில் வந்து இதை படிக்கறேன், உடனே மதிய சாப்பாடு சாப்பிட வேண்டும் என்பது போல பசியை தூண்டி விட்டு விட்டீர்கள். நல்லா இருங்க சார்........
பாலக் பனீர் எனக்கு ரொம்ப பிடிக்கும்!
அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் ( 24.02.2013 ) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 24.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!
நிறைவான பதிவிற்க்கு நிறைந்த பாராட்டுக்கள் ்
Post a Comment