Pages

Friday, November 23, 2012

பதிவர்கள் அனைவருக்கும் வணக்கமும், நன்றியும்.

    பதிவர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் புதிய பதிவர் என்பது உங்கள் எல்லோருக்குமே தெரிந்ததுதான். உங்களிடம் சில உண்மைகளைப் பகிர்ந்துக்கொள்ள நினைக்கிறேன்.

                   என் மனதில் தோன்றும் எண்ண அலைகளை யாரிடம் சொல்லிப் பகிர்ந்துக்கொள்வது என்று தெரியாமல் சிலநேரம் எனது டைரியில் எழுதி வைப்பேன். கொஞ்சநாள் கழித்து ஆமாம் யார் இதைப் படிக்கப் போறாங்க என்று கிழித்தெறிந்து விடுவேன். இப்படிதான் எனது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தேன் கொஞ்ச நாட்களுக்குப்பிறகு எழுதுவதையே நிறுத்திவிட்டேன.

             எனது வேலையில் பல மொழிகள் பேசும் நண்பர்களை சந்திக்க நேர்ந்தாலும், மலையாளிகளுடன் சேர்ந்து ஒரு அறையில் வசிப்பதாலும், பிற மொழிகளைப் பேசிப்பழகியதாலும் தமிழின் உச்சரிப்பு மாறிவிட்டது. இதனை நான் உணரவே இல்லை. நண்பர்கள் நீ என்னடா பேசுற ஒண்ணுமே புரியவில்லை என்று கேலி-கிண்டல் செய்தபிறகுதான் உணர்ந்தேன். தமிழை மறந்தால் தாயை மறப்பதற்கு சமம் என்றெண்ணி தமிழை வளத்துக்கொள்ள முதலில் தமிழ் குழுமங்களில் இணைந்தேன். அங்கு நண்பர்கள் எழுதும் கவிதை-கட்டுரைகளை படித்தப்பிறகுதான் மீண்டும் என் மனதில் எழுதவேண்டும் என்ற எண்ணம் வந்தது.

              அதையும் முதலில் தமிழ் குழுமத்திலேயே தொடங்கினேன், நிறைய எழுத்துப்பிழைகள் இருந்தாலும் நண்பர்கள் ஊக்குவித்தார்கள். ஒன்று இரண்டு கதைகளை எழுதினேன், நண்பர்களின் பின்னூட்டங்கள் என்னை மேலும் எழுதத்தூண்டியது. அப்போதுதான் சேட்டைக்காரன் என்கிற வேணு அண்ணா '30 நாட்களில் நீங்களும் முன்னணிப் பதிவர் ஆகலாம்' என்று ஒரு பதிவை எழுதினர். அவரிடம் கற்ற பாடம்தான் பதிவுலகில் கால் எடுத்து வைக்கத்தூண்டியது. எப்படி வலைப்பதிவு உருவாக்குவது என்பதையே அவர்தான் சொல்லிக்கொடுத்தார்.

                  ஆகஸ்ட் 29,30 தேதிகளில் இரண்டு எனது பழைய பதிவுகளை வெளியிட்டேன். ஒரு பின்னூட்டமும் வரவில்லை,தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இருந்தும் யாரும் வரவில்லை, செப்டம்பர் 1 ஒரு பதிவு போட்டேன் அதற்கும் கருத்துகள் இல்லை. பிறகு செப்டம்பர் 22 ம் தேதி VIDEO GIF அனிமேஷன் உருவாக்குவது எப்படி?  இந்த பதிவிற்கு முதன்முதலில் எனது நண்பர்கள் பின்னூடம் வந்தது, பதிவுலகில் இருந்து எனது ஆசான் சேட்டைக்காரன் அவர்களின் முதல் பின்னூட்டம் வந்தது. முதன் முதலில் தமிழ்மணத்தில் எனது பதிவை பார்த்துவிட்டு பிரபல பதிவர் முனைவர்.இரா.குணசீலன்  அவர்களின் பின்னூட்டமும், மறுநாள் அவர்கள் உண்மைகள்  அவர்களின் பின்னூட்டமும் வந்தது. மிகவும் சந்தோசமடைந்தேன் தொடர்ந்து பலர் வருகையும், பின்தொடர்வதையும் கண்டு வியப்படைந்தேன்.

                      பதிவுலகம் எப்படி இருக்குமோ? யாராவது எதையாவது சொல்லி மனத்தைக் கஷ்டப்படுத்தி விடுவார்களோ?என்ற பயத்தில்  மேலும் பதிவுகளை வெளியிட்டேன். எனது பதிவு வெளிவந்த உடனே முதல் பின்னூட்டம் திண்டுக்கல் தனபாலன் அண்ணன் அவர்களுடையதாக இருக்கும். அவரைத்தொடர்ந்து  tamil Naththam, கவிதை வீதி... // சௌந்தர் //,அகிலா, Muruganandan M.K., அம்பாளடியாள், Ramani, பிரசாத் வேணுகோபால் ,  Balaji,    desiyam Divyamohan, மாற்றுப்பார்வைUngal Nanban, யோகன் பாரிஸ்(Johan-Paris)  பழனி.கந்தசாமி, T.N.MURALIDHARANLoganathan Natarajan, Syed Ibramsha, Jayadev Das, வேகநரி, நம்பள்கி, சிட்டுக்குருவி, ஹாரி.R, விமலன்புதுப்பாலம்,  உஷா அன்பரசு, இக்பால் செல்வன்,   அடுத்தடுத்து இத்தினை நண்பர்களும் வருகை தந்து பின்னூட்டம் அளித்து என்னை ஊக்கப்படுத்தினார்கள். எல்லோருக்கும் நன்றி என்ற ஒருவார்த்தை போதாது. இன்னும் யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.

இப்போது  இந்த பதிவை எழுத முக்கிய காரணம்:

         எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் நண்பர்களின் வலைப்பதிவு பக்கம் சென்று அவர்களின் பதிவுகளை படித்துவிட்டு பின்னூட்டம் இடுவது வழக்கம். அதேபோல்தால் நேற்றும் சென்றேன், நண்பர் கோடாங்கி அவர்கர்கள் அவரது பதிவில் புதுய பதிவர்களே இதையும் கொஞ்சம் கவனியுங்க இந்த பதிவைப் படித்தேன், அதில் சில விளக்கங்கள் கொடுத்திருந்தார் அதில் டெம்ப்ளேட் கவனம் என்பதை படித்தேன். ஆனால்  நான் எனது வலைப்பதிவு மற்றவர்களின் வலைபதிவைவிட வித்தியாசமாகவும், வண்ணமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக கருப்பு நிறத்தில் வெள்ளை எழுத்தால் எழுதப்பட்டதுபோல் கொடுத்திருந்தேன். அதனால்தான் எனது வலைப்பதிவிற்கு அதிக பதிவர்கள் வருவதில்லை என்பதை உணர்ந்தேன். மேலும் எனது வலைப்பதிவில் ஒரு பின்னூட்டத்தில் நண்பர் இக்பால் செல்வன்,   அவர்கள் அறிவுரைகள் கொடுத்திருந்தார்கள். அதன்படி நான் எனது வலைப்பதிவின் டெம்ப்ளேட்டை மாற்றிவிட்டேன்.

         பிறகு இன்று காலை தமிழ்மணம் பக்கம் சென்று பார்த்தேன் அங்கு ஐயா பழனி.கந்தசாமி அவர்கள் பதிவுகளின் வகைகள் என்ற தலைப்பில் வலைப்பதிவு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு  உதாரணம் கொடுத்தும், எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக எனது வலைப்பதிவையும் கொடுத்திருந்தார்.

       நான் புதியப்பதிவர் என்பதால் எனக்கு எப்படி வலைப்பதிவை வைத்திருக்கவேண்டும் என்று தெரியவில்லை, அதனை எப்படி வைத்திருக்கவேண்டும் என்று தங்களின் அன்பான பதிவுகளால் எனக்கு புரியவைத்த கோடாங்கி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய ஐயா பழனி. கந்தசாமி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பதிவர்கள் பல கருத்துகளையும், அறிவுரைகளையும் கொடுத்து என்னையும் தங்களோடு கை பிடித்து அழைத்துச்செல்லும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தலை வணங்குகிறேன். நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்பொழுது  எனது வலைப்பதிவின் டெம்ப்ளேட் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு, மேலும் மாற்றம் வேண்டுமா என்பதையும் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

38 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... said...

டெம்ளேட் நல்லா இருக்கு..

வாழ்த்துகள்

CS. Mohan Kumar said...

Template is good now. Keep writing

ஆத்மா said...

மிக அழகாக இருக்கிறது....
நண்பர்கள் அனைவரையும் அவர்கள் தள சுட்டியுடன் நினைவு கூர்ந்தது மிக நன்று...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இது நன்றாகவே உள்ளது.

ப.கந்தசாமி said...

இந்த டெம்ப்ளேட் நன்றாக இருக்கிறது.

திருவாரூர் சரவணா said...

வாழ்த்துக்கள்!
சிம்பிள் டெம்ப்ளேட். இதைப்போல் இருப்பதுதான் சரி.

தி.தமிழ் இளங்கோ said...

ஆரம்ப காலத்தில் புதிய பதிவர்கள் சந்திக்கும் அதே பிரச்சினைகளை நீங்களும் சந்தித்து இருக்கிறீர்கள். இப்போதைய உங்கள் வலைப் பதிவு அமைப்பு படிக்க எளிதாக கண்ணை உறுத்தாமல் உள்ளது. தொடருங்கள்! புதிய பதிவராக நான் தொடங்கிய நேரம் நான் எழுதிய கட்டுரையை நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.
http://tthamizhelango.blogspot.com/2011/10/blog-post_25.html

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாக இருக்கிறது நண்பரே... வாழ்த்துக்கள்...

ஐயா பழனி.கந்தசாமி அவர்களின் தளத்தில் சொன்னது போல், இதோ இந்த இரண்டையும் நேரம் இருந்தால் பார்க்கவும்...

வலைச்சரம் (ஒரு தொகுப்பு) ப்ளாக்கர் டிப்ஸ் 2012

கற்போம் தளம் : பதிவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்

Yaathoramani.blogspot.com said...

பிரமாதமாக இருக்கிறது
(சொல்லிச் சென்ற விதமும் )
இப்படியே தொடருங்கள்
வாழ்த்துக்கள்

JR Benedict II said...

தல இதெலாம் சகஜம் தல.. கீழுள்ள தளத்தில் இலகுவாக உபயோக்கிக்க கூடிய சிம்பிள் டெம்பிளேட்கள் இருக்கு.. பாருங்க http://www.deluxetemplates.net/category/blogger-template

Jayadev Das said...

\\நான் புதிய பதிவர் என்பது உங்கள் எல்லோருக்குமே தெரிந்ததுதான்.\\ எல்லோருக்கும் தெரிஞ்சவன் நான்னு சூசகமா சொல்றீரா!! எல்லோருக்குமே தெரிஞ்ச ஒருத்தர் புதிய பதிவரா எப்படி இருக்க முடியும்!! நான் Blogger ல் default Template, default settings மட்டும்தான் பயன்படுத்துகிறேன், சிறு சிறு widgets மட்டும் தான் சேர்த்திருக்கிறேன். அதனால இது பத்தி அதிகம் தெரியாது. பதிவுல மேட்டர் இருக்கோ இல்லையோ, தலைப்பை மட்டும் உஷாரா தேர்ந்தெடுக்கணும், எந்த மாதிரி தலைப்பு வாசகர்களை ஈர்க்கும்கிறது இன்னமும் எனக்கு பிடி படவில்லை, தப்பி தவறி நான் கொடுத்த சில தலைப்புக்கள் வாசகர்களை ஈர்த்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்!!

சென்னை பித்தன் said...

தொடர்ந்து சிறப்பாக கலக்குங்கள்

Unknown said...

அருமையாக இருக்கிறது

suvanappiriyan said...

நன்றாக இருக்கிறது நண்பரே... வாழ்த்துக்கள்...

வேகநரி said...

உங்க வலைப்பதிவு நல்லாகவே இருக்கு.

semmalai akash said...

நன்றி நண்பா.

semmalai akash said...

நன்றி நண்பா.

semmalai akash said...

அப்படியா! நன்றி நண்பா.

semmalai akash said...

ரொம்ப நன்றிங்க..

semmalai akash said...

நன்றி நண்பரே!

semmalai akash said...

கண்டிப்பாக சென்று படிக்கிறேன் ஐயா. வருகைக்கு ரொம்ப நன்றி ஐயா.

semmalai akash said...

இந்த பதிவுகளை ஏற்கனவே படித்துவிட்டேன் அண்ணா, மீண்டும் படிக்கிறேன்.

எப்பொழுதும் உங்களுடைய ஆதரவு கிடைக்கிறது. மிக்க நன்றி அண்ணா.

semmalai akash said...

ரொம்ப நன்றி ஐயா.

semmalai akash said...

சரி நண்பா , கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.
நன்றி நண்பா.

semmalai akash said...

என்னைத் தெரிந்தால்தானே என்னைப்பற்றியும் பதிவெல்லாம் எழுதுகிறார்கள் அதனால் சொன்னேன் நண்பரே, ரொம்ப நன்றி நண்பா.

semmalai akash said...

நன்றி ஐயா.

semmalai akash said...

ஆஹா! வாங்க வாங்க , நன்றி நண்பா.

semmalai akash said...

ரொம்ப நன்றி நண்பரே!

Unknown said...

உங்கள் வலைப்பூவுக்கு வந்துவிட்டேன்... வலைப்பூ நன்றாக இருக்கிறது.. நல்ல நல்ல பதிவுகள் தொடர்ந்து எழுதுங்கள்... தொடர்ந்து வருகிறோம்...

Avargal Unmaigal said...

டெம்ளேட் நல்லா இருக்கு..


///பதிவுலகம் எப்படி இருக்குமோ? யாராவது எதையாவது சொல்லி மனத்தைக் கஷ்டப்படுத்தி விடுவார்களோ?என்ற பயத்தில் மேலும் பதிவுகளை வெளியிட்டேன்///

யாருக்கும் எதற்கும் பயப்படாமலும் கவலைப்படாமலும் மனதில் நினைப்பதை பதிவு இடுங்கள் ஒரே மாதிரி பதிவுகளை இட வேண்டாம். பதிவுகளில் நக்கல் கிண்டல் கேலி இருக்கலாம் ஆனால் யாரையும் மரியாதைக் குறைவாக எழுதவேண்டாம், உதாரணமாக தமிழக தலைவர்களைப் பற்றி நான் அதிகம் கிண்டல் கேலி நக்கல் பண்ணி பதிவுகள் எழுதி இருக்கிறேன், ஆனால் அவர்களை கிண்டல் பண்ணும் போது அவன் இவன் அவள் இவள் என்று எழுத்துவதில்லை அது போல மரியாதை குறைவாக தலைவர்களை சொல்லி வரும் பின்னுட்டங்களையும் அனுமதிப்பதில்லை. அது போல செயல்படுங்கள்

மேலும் பின்னுட்டத்திற்காகவும் தமிழ்மண ஒட்டுக்காகவும் எழுதாதீர்கள் அப்படி எழுதினால் ஒரு சிறு வட்டத்திற்குள் அடைபட்டு போய்விடுவீர்கள்..மேலும் அந்த வட்டத்திற்குள் உள்ளவர்கள் மட்டும் உங்கள் பதிவுகளை படித்து உங்கள் பதிவுகள் அருமை அருமை என்ற பின்னுட்டம் மட்டுமே வந்து சேரும் அதுவே போதுமென்று நினைத்தால் அப்படியே தொடருங்கள்.

பதிவுகள் ஏதும் இடாமல் ஆனால் பதிவுகளை மட்டுமே படிக்க வரும் சைலண்ட் ரீடர்கள் அநேகம் அவர்கள் விரும்பும்படியும் பதிவுகளை எழுதிவாருங்கள் அப்போது பாருங்கள் உங்கள் வளர்ச்சியை...

ஏதோ என் மனதில் பட்டதை தெரிந்தை சொல்லி உள்ளேன். நான் சொல்லியதில் தவறுகள் ஏதும் இருந்தால் மன்னிக்கவும்

vimalanperali said...

நிறைய எழுதுவது,நிறைய படிப்பதும் இதை சரி செய்து விடும்,சிதிரமும் கைப்பழக்கம்,செந்தமிமிழும் நாப்பழக்கம்,பதிவும் எழுத்துப்பழக்கம்தானே?நன்றி வணக்கம்/

vimalanperali said...

டெம்ளேட் நன்றாகவே உள்ளது,தொடருங்கள்.

semmalai akash said...

ஆஹா! வந்துட்டீங்களா? வாங்க வாங்க, இனி சமையல் குறிப்புகளை போட்டு கலக்குங்கோ, நான் சமைத்துப் பார்த்துவிட்டு நல்லாயில்லை என்றால் சொல்கிறேன்.:-))))))))

நன்றிங்க..

semmalai akash said...

ரொம்ப முக்கியமான அறிவுரைகளைப் பகிர்ந்துள்ளீர்கள். கண்டிப்பாக யாரையும் மரியாதைக் குறைவாக எழுதமாட்டேன். கண்டிப்பாக நல்ல நல்ல பதிவுகளை கொடுப்பேன்.

ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே!

semmalai akash said...

ஆமாம் நண்பா.ஆமாம்.
இப்பதான் நிறைய படிக்கிறேன் எழுதுகிறேன்.

semmalai akash said...

நன்றி நண்பா.

Balaji said...

டெம்ப்ளேட் ரொம்ப அழகாக இருக்கின்றது தம்பி.

குறையொன்றுமில்லை. said...

நிறைய எழுத நினச்சா நிறையா படிக்கனும். எல்லார்பக்கமும் வாங்க

Post a Comment