Green Brinjal Fry
எல்லோரும் வைலேட் கலரில் உள்ள கத்தரிக்காயில் வறுவல் செய்வார்கள், எனக்கு
எப்பவும் பச்சைக் கத்தரிக்காய் என்றால் பயங்கர பிரியம், எனக்கு இதில்தான்
அதிக சுவை இருப்பதாக உணர்கிறேன், மேலும் கொஞ்சம் மொரு மொருன்னும்
இருக்கும், சாம்பார் செய்யும்போது இந்த கத்தரிக்காயை கோம்போடு நான்கு
பாகமாக வெட்டிப்போட்டால் போதும் அவ்வளவு சுவையாக இருக்கும். சரி பச்சைக்
கத்தரிக்காய் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சைக் கத்தரிக்காய்: 6,8
தேங்காய் துருவியது : 1/4 கப்பு.
பூண்டு : 2 பல்
காய்ந்த சிகப்பு மிளகாய்: 3,4
ஜீரகம்: 1 டேபிள்ஸ்பூன்.
பெருங்காயம் தூள்: சிறிதளவு.
எண்ணெய்: சிறிதளவு
உப்பு: சுவைக்கு தேவையான அளவு.
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை இவைகள் அனைத்தும் தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்.
(படம்: இணையத்தில் இருந்து)
செய்முறைகள்:
- கத்தரிக்காயின் கோம்பை நீக்கிவிட்டு, நான்கு துண்டுகளாக வெட்டி நீரில் ஐந்து நிமிடம் போட்டுவைக்கவும்.
- ஜீரகம், தேங்காய்த்துருவல், பூண்டு, காய்ந்த மிளகாய் இவற்றை ஒரு மிக்ஸ்யில் போட்டு அரைத்தெடுக்கவும்.
- வாணலில் எண்ணெய் விட்டு, அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையையும் போட்டுத் தாளிக்கவும், அதில் வெட்டி வைத்திருக்கும் கத்தரிக்காயையும் சேர்க்கவும்.
- ஓரளவுக்கு வணங்கியதும், அதில் அரைத்து வைத்திருக்கும் கலவையையும் சேர்க்கவும்.
- பெருங்காயத்தூள் சிறிதளவு தூவவும்.
- கடைசியாக தேவையான அளவுக்கு உப்பையும், சேர்த்து சிறிதளவு நீர் விட்டு சிறிய தீயில் கொதிக்கவிடவும்.
- நீர் சுண்டியதும் இறக்கிவிடவும்.
12 கருத்துகள்:
செய்து பார்த்திடுவோம்...
குறிப்பிற்கு நன்றி...
ஒட்டியில் பதிவுகளை வேகமாக தேர்ந்தெடுக்க முடிகிறது.
இதனால் எனக்கு ஒட்டி பிடிக்கும்
http://otti.makkalsanthai.com
பயன்படுத்தி பாருங்கள் உறவுகளே!! ஒட்டி உங்களுக்கும் பிடிக்கும்
அட வெங்காயம் தக்காளி இல்லாமல் புதுவிதமாக இருக்கிறதே....
அருமையான சமையல் குறிப்புக்கு அன்பு நன்றிகள் செம்மலை ஆகாஷ்...
நன்றி நண்பரே! தொடர்ந்து உங்களுடைய கருத்துகள் எனக்கு ரொம்ப ஊக்கமளிக்கிறது.
சரிங்க நண்பரே.
நன்றி சகோதரி.
சமையல் கலையில் கூட அசத்துகிறீர்களே!
நான் வெஜ் சமையலையும் கொஞ்சம் சொல்லி கொடுங்க
கத்துக்குறோம்
நான் வெஜ் சமையலையும் கொஞ்சம் சொல்லி கொடுங்க
கத்துக்குறோம்
நன்றி நண்பரே!
பச்சைக்கத்தரிக்காய் வறுவல் சுவையான சமையல் குறிப்பிற்குப் பாராட்டுக்கள்..
பொடி தூவிக் கறி என்று சொல்வோம்... இன்னும் பருப்புகள் சேர்த்தும் அரைத்துத் தூவுவோம்.
Post a Comment