அட! ஆமாங்க சாம்பார் வைப்பது ரொம்ப ரொம்ப ஈஸி! நமக்கு விருப்பமான காய்கறிகளைச் சேர்த்து சுவையான சாம்பார் ரொம்ப ஈஸியாக வைக்கலாம். அதிகம் எண்ணெய் சேர்க்காமலும், நேரத்தை மிச்சப்படுத்தியும் ஆரோக்கியமான சாம்பார் வைக்கலாம்.
இதை பெண்கள் மட்டும் இல்லைங்க ஆண்களும் வைக்கலாம், யாரோ! என்னை மனத்துக்குள் திட்டுவது இங்குவரை கேட்கிறது.
சரி வாங்க எப்படி வைப்பதென்று பார்ப்போம். இதுக்கு முக்கியமா குக்கர் இருக்கவேண்டும்.
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 100-150 கிராம்.
பெரிய வெங்காயம் - இரண்டு.
சின்ன வெங்காயம் - பத்து
பச்சைமிளகாய் - மூன்று.
புளி - எலுமிச்சம்பழம் அளவு, அல்லது ஒரு எலுமிச்சம்பழம் இரண்டு.
கடுகு உளுத்தம்பருப்பு - ஒரு சிட்டிகை.
சின்னச்சீரகம் - ஒரு சிட்டிகை.
பெருங்காயத்தூள் - சிறிதளவு.
காய்ந்த மிளகாய் - இரண்டு.
வெந்தயம் - சிறிதளவு.
மஞ்சள்த்தூள் - சிறிதளவு.
எண்ணெய் - தாளிப்பதற்கு மட்டும்.
சாம்பார் பொடி - 50 கிராம் (ஈஸ்டர்ன் சாம்பார் பவுடர் கடையில் கிடைக்கும்)
உப்பு தேவைக்கேற்ப, கருவேப்பிலையும், மல்லியிலையும்கொஞ்சம்.
(இவைகள் அனைத்தும் எப்பவும் சமையல் அறையில் இருக்கும்.)
காய்கறிகள்:
உருளைக்கிழங்கு - ஒன்று.
கேரட் - ஒன்று.
முருங்கைக்காய் - இரண்டு.
பச்சைக் கத்தரிக்காய் - ஒன்று
வெண்டைக்காய் - ஆறு.
கொவ்வைக்காய் - ஆறு.
பீன்ஸ் - ஆறு.
சேனைக்கிழங்கு - ஒருமுறி
(இவைகளை எல்லாம் தனித்தனியாக வாங்க முடியவில்லை என்றால் வாடிக்கையான கடைகளில் கேட்டு வாங்கவும், அவர்கள் அது அதிலும் இரண்டிரண்டு காய்களைச் சேர்த்து ஒரு கிலோவுக்கு கொடுப்பார்கள். நான் அப்படிதான் வாங்குகிறேன்.)
இந்த காய்கள் எப்படி இருக்கும் என்று கேட்பவர்களுக்கு: படங்கள். யாரோ சிரிக்கிராங்களே! சபாஷ்! சமைக்கும்போது சிரிப்பு முக்கியம்தான், அப்போதுதான் நாம் செய்யும் வேலையை முழுமனதோடு செய்யமுடியும்.
இந்த காய்கள் எல்லாமே கிடைக்கவில்லை என்றால், கிடைத்ததில் குறைந்தது நான்கு பச்சைக் காய்களும், ஒரு கிழங்கு வகையும் எடுத்துக்கொள்ளவும்.
(அல்லது)
உங்களுக்கு பிடித்த நான்கு அல்லது ஐந்து காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம்.
செய்முறை:
முதலில் துவரம்பருப்பை நன்றாகக் கழுவி, குக்கரில் பாதி அளவுக்கு தண்ணீரில் போட்டு அடுப்பில் வைக்கவும், தண்ணீர் சூடாவதற்குள் பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் பெரிய பெரிய அளவில் வெட்டு குக்கரில் போட்டு, சிறிது மஞ்சள்தூள் சேர்த்து மூடி வைக்கவும்.
பருப்பு வெந்து தயாராகும் வரை காத்திருக்க வேண்டாம், காய்களை வெட்டி தயார் நிலையில் வைக்கவும் (காய்களை எப்பவும் சிறிது சிறிதாக வெட்டக்கூடாது, பெரியதாகவே இருக்கவேண்டும் (உதாரணத்துக்கு வெண்டைக்காயை அடியையும், நுனியையும் நீக்கிவிட்டு இரண்டாக வெட்டினாலே போதும்) குக்கர் இரண்டு 'விசில்' அடித்ததும் அடுப்பை அனைத்துவிடவும்.
இதை பெண்கள் மட்டும் இல்லைங்க ஆண்களும் வைக்கலாம், யாரோ! என்னை மனத்துக்குள் திட்டுவது இங்குவரை கேட்கிறது.
சரி வாங்க எப்படி வைப்பதென்று பார்ப்போம். இதுக்கு முக்கியமா குக்கர் இருக்கவேண்டும்.
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 100-150 கிராம்.
பெரிய வெங்காயம் - இரண்டு.
சின்ன வெங்காயம் - பத்து
பச்சைமிளகாய் - மூன்று.
புளி - எலுமிச்சம்பழம் அளவு, அல்லது ஒரு எலுமிச்சம்பழம் இரண்டு.
கடுகு உளுத்தம்பருப்பு - ஒரு சிட்டிகை.
சின்னச்சீரகம் - ஒரு சிட்டிகை.
பெருங்காயத்தூள் - சிறிதளவு.
காய்ந்த மிளகாய் - இரண்டு.
வெந்தயம் - சிறிதளவு.
மஞ்சள்த்தூள் - சிறிதளவு.
எண்ணெய் - தாளிப்பதற்கு மட்டும்.
சாம்பார் பொடி - 50 கிராம் (ஈஸ்டர்ன் சாம்பார் பவுடர் கடையில் கிடைக்கும்)
உப்பு தேவைக்கேற்ப, கருவேப்பிலையும், மல்லியிலையும்கொஞ்சம்.
(இவைகள் அனைத்தும் எப்பவும் சமையல் அறையில் இருக்கும்.)
காய்கறிகள்:
உருளைக்கிழங்கு - ஒன்று.
கேரட் - ஒன்று.
முருங்கைக்காய் - இரண்டு.
பச்சைக் கத்தரிக்காய் - ஒன்று
வெண்டைக்காய் - ஆறு.
கொவ்வைக்காய் - ஆறு.
பீன்ஸ் - ஆறு.
சேனைக்கிழங்கு - ஒருமுறி
(இவைகளை எல்லாம் தனித்தனியாக வாங்க முடியவில்லை என்றால் வாடிக்கையான கடைகளில் கேட்டு வாங்கவும், அவர்கள் அது அதிலும் இரண்டிரண்டு காய்களைச் சேர்த்து ஒரு கிலோவுக்கு கொடுப்பார்கள். நான் அப்படிதான் வாங்குகிறேன்.)
இந்த காய்கள் எப்படி இருக்கும் என்று கேட்பவர்களுக்கு: படங்கள். யாரோ சிரிக்கிராங்களே! சபாஷ்! சமைக்கும்போது சிரிப்பு முக்கியம்தான், அப்போதுதான் நாம் செய்யும் வேலையை முழுமனதோடு செய்யமுடியும்.
இந்த காய்கள் எல்லாமே கிடைக்கவில்லை என்றால், கிடைத்ததில் குறைந்தது நான்கு பச்சைக் காய்களும், ஒரு கிழங்கு வகையும் எடுத்துக்கொள்ளவும்.
(அல்லது)
உங்களுக்கு பிடித்த நான்கு அல்லது ஐந்து காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம்.
செய்முறை:
முதலில் துவரம்பருப்பை நன்றாகக் கழுவி, குக்கரில் பாதி அளவுக்கு தண்ணீரில் போட்டு அடுப்பில் வைக்கவும், தண்ணீர் சூடாவதற்குள் பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் பெரிய பெரிய அளவில் வெட்டு குக்கரில் போட்டு, சிறிது மஞ்சள்தூள் சேர்த்து மூடி வைக்கவும்.
பருப்பு வெந்து தயாராகும் வரை காத்திருக்க வேண்டாம், காய்களை வெட்டி தயார் நிலையில் வைக்கவும் (காய்களை எப்பவும் சிறிது சிறிதாக வெட்டக்கூடாது, பெரியதாகவே இருக்கவேண்டும் (உதாரணத்துக்கு வெண்டைக்காயை அடியையும், நுனியையும் நீக்கிவிட்டு இரண்டாக வெட்டினாலே போதும்) குக்கர் இரண்டு 'விசில்' அடித்ததும் அடுப்பை அனைத்துவிடவும்.
இப்போது குக்கரை திறந்து, வெந்திருக்கும் பருப்புடன் வெட்டி வைத்திருக்கும் காய்களையும் சேர்க்கவும். அதோடு தேவையான உப்பு, சாம்பார் மசாலாவையும், சிறிது பெருங்காயத்தூளையும் சேர்த்து மூடி, மீண்டும் அடுப்பில் வைக்கவும்.சிறிய தீயில் வேகவைக்கவும். ஒரு 'விசில்' அடித்ததும் அடுப்பை நிறுத்திவிடவும்.
காய்கள் எப்பவும், அரை, அல்லது முக்கால் அளவுக்கு வெந்திருந்தாலே போதும் அப்போதுதான் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கும். அதனால் அரைப்பதம் வெந்தால் போதும் என்பவர்கள் உடனே திறக்கவும், முக்கால் பாகம் வேகவேண்டும் என்பவர்கள், இரண்டு நிமிடத்திற்கு பிறகு திறக்கவும்.
{குக்கரை திறக்கும்போது கவனம் தேவை: உடனே திறக்கவேண்டுமானால்? குக்கரின் மேல் தண்ணீர் "டேப்" திறந்துவிடலாம், அதன் "பிரஷர்" குறைந்ததும் பாதுகாப்பாக திறக்கமுடியும், அதேபோல்தான் இரண்டு நிமிடம் கழித்து திறக்கவேண்டும் என்றாலும் "பிரஷர்" குறையவில்லை என்றால் அதன்மேல் தண்ணீர் "டேப்" திறந்துவிட்டால் போதும்.
நான் இப்படிதான் செய்கிறேன். காரணம் நேரத்தை மிச்சம் பண்ணவேண்டாமா? தண்ணீர் திறந்துவிட்டால் மேலும் பாதுகாப்பு அதிகம் என்பதால்தான்.
குக்கரிலிருந்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.
தாளிப்பதற்கு:
சின்ன வெங்காயத்தை இரண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
வாணலில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அடுப்பில் சிறிய தீயில் வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு போடவும், பொரிந்ததும் வெந்தயம் ,சின்னசீரகம், காய்ந்தமிளகாய் இவற்றையும் சேர்க்கவும் பொன்னிறமாக வந்ததும், கருவேப்பிலை சேர்த்து இறக்கிவிடவும். அதை சாம்பாரில் சேர்க்கவும்.
*****இவ்ளோதாங்க சுவையான சாம்பார் தயார்.*****
குறிப்பு:
- சோறு, இட்லி, சப்பாத்தி, இதனுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். காய்கறிகளில்தான் குழந்தைகளுக்கான அதிக சத்து இருக்கிறதாம். அதனால் கலர்கலரா காய்களை போட்டு இப்படி சாம்பார் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- புளி சேர்ப்பவர்கள் சாம்பார் மசாலா சேர்க்கும்போதே , புளியைக் கரைத்து கொஞ்சம் புளிச்சாரையும் சேர்த்தால் போதும்.
- எலுமிச்சம்பழம் சேர்ப்பவர்கள் கடைசியாக தாளிப்பதற்கு முன் பிழிந்துவிட்டால் போதும்.
*****நன்றி*****
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
**************************************************************************************************
47 கருத்துகள்:
Ennanka romba easy a sillittinka..! Naan naalaikku try panna poren..! Thanks very much for your receipie..!!
சாம்பார் சூப்பர்.. நல்ல மணமாக இருக்கிறது... முருங்கை காயினை கடைசி குக்கரில் வைத்தால் ஒரு விசில் தான் வைங்க.. இல்லைனா முருங்கைகாய் குச்சி மட்டும் தான் இருக்கும்...
ஓட்டு பட்டை வைத்திருக்கிங்க ஏன் எதிலும் இணைக்கவில்லை..?
Boss what about Tamarine? when should we add that? or else lemon?.... please read once again from beginning before posting any thing... Tnx. B.MURALIDHARAN. +91 9488411861.
மறுபடியும் சரிபார்க்கவும்:
குக்கரை உடனே திறப்பது ஆபத்து! குறைந்தது பத்து நிமிடங்களாவது ஆக வேண்டும். இங்குள்ள குக்கைரில் மூன்று பாதுகாப்பு வசதி உண்டு. முதல் பாது காப்பு ராட்(rod) கீழே இறங்கினவுடன் (10 நிமிடங்கள் )ஆகும். அப்புறம் தான் அந்த எடையை மெதுவாக எடுக்கவேண்டும்; அப்புறம் குக்கர் மூடியை திறக்க் வேண்டும்.
[[ அதனால் அரைப்பதம் வெந்தால் போதும் என்பவர்கள் உடனே திறக்கவும், முக்கால் பாகம் வேகவேண்டும் என்பவர்கள், இரண்டு நிமிடத்திற்கு பிறகு திறக்கவும். ]]
//கோவைக்காய் - ஆறு.//
கோவைக்காய் அல்ல கொவ்வைக்காய் , ஏனோ எல்லோருமே கோவை எனவே கூறுகிறார்கள். ஈழத்தில் கொவ்வையே!
" குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்"- அப்பர் தேவாரம்.
சாம்பார் வைக்கத் தெரியும், ஈழத்தில் சாம்பார் பிரபலம் இல்லை. குழம்பு தான்.
//குக்கரைஉடனே திறக்கவும்// இது மிக ஆபத்து; நம்பள்கி சொல்வது மிக உண்மை!
அட! ஆமாங்க இதை ஆபத்து இல்லாமல் திறக்க சில முறைகள் இருக்கிறது அதை சொல்லாமல் விட்டுவிட்டேன். இதோ இப்ப மாற்றிவிட்டு மீண்டும் வந்து உங்களுக்கு பதில் சொல்கிறேன்.
செய்துபாருங்கள் நண்பரே! ரொம்ப ஈசிதான், சுவையும் அதிகம்.
உங்களுடைய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!
ஆமாங்க, ஒரு "விசில்"தான் சொல்லிருக்கேன், உங்ககிட்ட இருந்துதான் இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும். நான் அன்னைக்கே சொன்னேனே எனக்கு தெரிந்ததை நானும் சொல்லுவேன் என்று. இருந்தாலும் உங்க அளவுக்கு சொல்லமுடியாது என்பதை இங்கு ஒப்புக்கொண்டுதான் ஆகணும்.
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும் , பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.
ஆமாங்க சிலதில் சேர்க்கத் தெரியவில்லை, சிலதில் சேர்ப்பதற்குள் தூக்கம் வந்துவிட்டது தூங்கிட்டேன்.
ஹீ ஹீ ஹீ !!!
ஆமாம், முரளி மறந்துட்டேன் இதோ இப்போது சொல்லிருக்கேன், ஏன் பிறகு சொல்லலாம் என்று நினைத்தேன் என்றால் , வட இந்தியர்கள் எலுமிச்சம்பழம்தான் சேர்ப்பார்கள், நாம்தான் புளி சேர்க்கிறோம் அதை யோசித்து யோசித்து கடைசியில் சொல்லலாம் என்று நினைத்து மறந்துட்டேன்.
உங்களுடைய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!
இப்ப பாருங்க மாற்றிவிட்டேன். நான் இப்படிதாங்க செய்கிறேன், ரொம்ப பாதுகாப்பா இருக்கும் என்று கேரளா சகோதரிகள் சொன்னது. அதையே நானும் பின்பற்றுகிறேன். இங்கு நிறையப்பேர் திறப்பதற்காக இப்படிதான் செய்கிறார்கள் என்பதையும் பிறகுதான் அறிந்தேன். பத்துநிமிடம் வரை காத்திருந்தால் எந்த காய்களும் சாம்பாரில் இருக்காது எல்லாம் கரைந்துவிடும்.
ரொம்ப நன்றிங்க தவறுகளை சுட்டிக்காட்டி சொன்னதற்கு.
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க.
ஒ! அப்படியா! நான் இப்படி கூப்பிட்டு பழக்கப்பட்டுவிட்டேன் சகோ! அதான் நீங்க சரியான விளக்கத்தோடு சொல்லிவிடீர்களே! மாற்றிவிடுகிறேன், நேற்று சொன்னதையும் மாற்றிவிட்டேன். இதையும் மாற்றிவிடுகிறேன், அத்தோடு எப்பவும் நினைவில் வைத்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ!
அட... சுவையான பதிவு... அசத்துங்க நண்பரே... நாளை என்ன...?
நன்றி அண்ணா, ஹா ஹா ஹா !! என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்? ஏதாவது என்மனதில் தோன்றுவதை எழுதிகிட்டு இருக்கிறேன் அண்ணா. தரமான பதிவாக கொடுக்கவேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறேன்.
தொடர்ந்து உங்களுடைய வருகைதான் அண்ணா, என்னை மேலும் மேலும் எழுதவைக்கிறது. கண்டிப்பாக தொடர்வேன்.
ரொம்ப நன்றி அண்ணா.
சாம்பார் படமும் போட்டிருக்கலாம்-இதுதான் சாம்பார் என்று!
I like it! அப்படியே இவர் தான் அந்த சாம்பாரை சாப்பிடப்போகிறார் என்று ஒருவர் படமும் போடலாம்! கவனம் தேவை! ஜெமினி கணேசன் படம் போட்டு விடப்போகிறீர்கள்!
வருகைக்கு ரொம்ப நன்றி சகோ! போடலாம் என்றுதான் நினைத்தேன் பதிவின் நீளம் கூடுமே என்று நிறுத்திவிட்டேன்.
I like it! அப்படியே இவர் தான் அந்த சாம்பாரை சாப்பிடப்போகிறார்
ஹா ஹா ஹா !!! அவர் படத்தை வேண்டும் என்றால் போட்டுவிடுகிறேன்.
நான்தான் அதிலும் இணைத்திருக்கிறேன் பார்க்கவில்லையா? சகோ!
அடடே..காய்கறிகளைப் படம் போட்டு காட்டிவிட்டீர்களே..இப்போதுதான் முதல்முதலாக காய்கறிகளைப் பார்க்கிறேன்..ஹாஹாஹா
Udaney cooker rai open pannanum endral tap water i tiranthu cooker rai 2 mts vaiga. Aavi fulla adaki vidum apparam open pannalam. full heat poona pinbu thaan open pannuga
ஹா ஹா ஹா !!!
செம காமெடி பண்ணிட்டீங்களே! சூப்பர்.
உங்களுடைய முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி நண்பரே!
ஆமாம் சகோ! அப்படிதான்.
அட இப்பிடி வேற இருக்கா.......
எப்பிடித்தான் நீங்க சொல்லித் தந்தாலும் நமக்கு சிக்கன் மட்டுமே சுவையா சமைக்கத் தெரியும்...:)
ஆகாஷ் இத அப்படியே ஏன் வீட்டுக்காரிகிட்ட குடுத்துடறேன். நன்றி.
தமிழ் மண வாக்குப் பட்டியைச் சரி செய்து, எங்களை ஓட்டுப் போடா அனுமதிக்கவும், நன்றி.
please read:
http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html
ஹா ஹா ஹா ! கவலைப்படாதே சகோதரா அருமையான சிக்கென் வறுவல் ஒன்றும் என் கைவசம் இருக்கு சொல்லிடுறேன். என்ன ஒரு பிரச்சினை என்றால், சோதனை செய்து பார்த்ததில் ஆண்களுக்கு மட்டும்தான் மிகவும் பிடிக்கிறது, பெண்களுகளிடம் இருந்து நல்ல கருத்து வரவில்லை, சிலப்ப "பொறாமையா" இருக்கும்.ஹா ஹா ஹா
அதையும் நேரம் கிடைக்கும்போது பகிர்கிறேன். நீங்களும் உங்களுக்கு தெரிந்ததை பகிரவும்.
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி நண்பரே!
தமிழ்மணம் வாக்குப்பட்டை வேலை செய்கிறது நண்பரே! இப்போது எல்லாமே வேலை செய்கிறது.
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!
நல்லா சமைப்பிங்க போல. அருமையா சொல்லிக்கொடுத்திங்க. ஆனா ஒன்று புரியவில்லை சின்ன பிள்ளைகளுக்கு சொல்லி தர மாதிரி படம் போட்டு காட்டிய விதம்.
\\தமிழ்மணம் வாக்குப்பட்டை வேலை செய்கிறது நண்பரே! இப்போது எல்லாமே வேலை செய்கிறது. \\ எங்கே என்னால் வாக்கு அளிக்க முடியலையே? அப்படியேதானே இருக்கு?
இதைக் கேட்டுவிட்டு மத்திக்காதேப்பா, பெண்களுக்கு படம் தேவையில்லை, ஒன்னும் தெரியாத ஆண்களுக்கு கண்டிப்பா தேவை.
சாம்பார் சுவையான குழம்பு தான் நன்றி சகோ!
நண்பா சாம்பார் மிகவும் சுவையாக உள்ளது.
தெரியவில்லை நண்பரே! என்ன செய்வது,
உங்களுடைய வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
இன்னும் எவ்ளோ ஆண்களுக்கும் பெண்களுக்கும், சில காய்கறிகள் தெரியாது சகோ! இதை ஆண்களும் செய்யலாம் என்று சொன்னதால், மிகத்தெளிவாக கூறியுள்ளேன்.
சரிங்க நண்பரே!
அந்த லின்க்கைப் பார்க்கவில்லையா?
http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html
எனக்கும் இதே பிரச்சினை இருந்தத, அதில் சொல்லியிருந்தபடி செய்தேன் இப்போது .in என இருந்தது .com ஆக மாறிவிட்டது, தமிழ்மணம் ஓட்டுப் பட்டையும் வேலை செய்கிறது. ரொம்ப எளிது. முயன்று பாருங்கள்.
ரொம்ப ரொம்ப நன்றி சகோ!
தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பா.
அதன்படி செய்துவிட்டேன் இப்போது முயற்சி செய்து பாருங்கள் நண்பா.
Super I voted!!
நன்றி நண்பா, இன்று ஒரு புதிய பதிவும் எழுதியுள்ளேன்.
சாம்பார் மீது ஆசையே வந்திருக்கு.
//இன்னும் எவ்ளோ ஆண்களுக்கும் பெண்களுக்கும் சில காய்கறிகள் தெரியாது சகோ! இதை ஆண்களும் செய்யலாம் என்று சொன்னதால் மிகத்தெளிவாக கூறியுள்ளேன்//
எல்லாம் தெரிஞ்சு வைச்சு இருக்கீங்க.படங்களுடன் விளக்கமாக சொன்னதிற்க்கு நன்றி நண்பர்.
sir today i tried with same Procedure.. And it came very well except i put more Masala and it made more spicy.. I will correct it next time and do perfect.. Thanks again Sir...
இங்கேயும் நல்ல சாப்பாடு தயாரிப்புகள் இருக்கிறதே!
samaiyalattakaasam.blogspot.com
wow nice one, neenga sonnathulaiya yenakku pudichathu padam pottu kaatunathuthaan. sir appadiye mudica intha masala podiyellam solringalla athayum padam pottu kattunga. naan oru M.E student ippa amma orla illa.
Good Afternoon,
sir i'm a student doing M.E i like your post. Particularly in this post i like your "PICTURE" explanation very much. Can you please post the "MASALA ITEMS WITH PICTURES".
wow nice one, neenga sonnathulaiya yenakku pudichathu padam pottu kaatunathuthaan. sir appadiye mudica intha masala podiyellam solringalla athayum padam pottu kattunga. naan oru M.E student ippa amma orla illa.
Post a Comment