Pages

Sunday, October 28, 2012

முதல் பார்வை



முதல் பார்வை

என்
கண்ணை வருடிச் சென்றது
கார்மேகமா? – அவள்
கருங்கூந்தலா? – இதை
எண்ணி முடிப்பதற்குள்
முன்னில் மின்னி நழுவியது
நாலெட்டு நட்சத்திரங்கள்!

கையில் தட்டோடும்
தட்டில் லட்டோடும்
கண்ணெதிரே வந்து நின்றாள்
வானவில்லின் மொத்த வண்ணமாய்!
கண் சிமிட்டும் நேரத்தில்
கையில் லட்டை திணித்துவிட்டு
காற்றோடு கடந்து சென்றாள்!

சின்னஞ்சிறு உடையணிந்து
அன்ன நடை நடந்து
வண்ணத்துப் பூச்சி போல
மேலும் கீழும் தவழ்ந்து – என்
கண்ணைவிட்டு மறையும் முன்னே
மேலிடையை மிளிரவிட்டாள் – எனை
மேகக்கூட்டத்தில் தொலைத்துவிட்டாள்!

என்ன வண்ணமது?
வானவில்லில் கண்டதில்லை!
வர்ணங்களில் காணவில்லை!
மனதில் பதிந்த அதை – எப்படி
நான் எழுதி வைப்பேன்?
புரியாமல் தயங்கி நின்றேன் 
புதிய வண்ணம் ஒன்றை தெரிந்திடவே!

Thursday, October 18, 2012

ரெக்கை முளைத்தேன்! ரெக்கை முளைத்தேன்! பாடல் வரிகள்



இந்த  பாடலில் ஸ்ரேயா கோஷல் குரல் கேட்க மிக இனிமையா இருக்கும். கேட்டுப்பாருங்க..

(பாடலை கேட்டுக்கொண்டே எழுதினேன் முதல் முயற்சி)



படம் : சுந்தரபாண்டியன் ( 2012)

இசை : என்.ஆர்.ரகுநநந்தன் 
பாடகர்கள் : ஜி.வி பிரகாஷ்குமார் , ஸ்ரேயா கோஷல்
வரிகள் : கார்க்கி
ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்!

தப்பித் தொலைந்தே
போகத் துடித்தாய்
உடன் யாரும் இல்லாத
தேசத் தேடிப் பிடித்தேன்!

எனக்கென பதுக்கிய கனவுகள்
முதன்முறை தரைவிட்டுப் பறக்குது உன்னாலே!
உனக்கென செதுக்கிய நினைவுகள்
முதன்முறை உயிர் வந்து துடிக்குது உன்னாலே!

எத்தனை வேகம் சென்றாலும்
நிற்பதாய் தோன்றும் உன்னாலே!
இத்தனை பக்கம் வந்தாலும்
வெட்கமே இல்லை உன்னாலே!

கண்களில் மின்னிடும் காதலை... நான்
அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை
நீயே சொன்னாய் மறுமுறை!

ரெக்கை விரித்தேன் 
ரெக்கை விரித்தேன்
எனை உடன் வா என்று 
வானம் ஏற அழைத்தாய்!

தப்பித் தொலைந்தே

போகத் துடித்தேன்

உடன் யாரும் இல்லாத

தேசம் தேடிப் பிடித்தாய்!

பகலிலே சுவரை வெறித்தேன்
தெருவிலே தனியே சிரித்தேன்
கழன்றதாய் பேரும் எடுத்தேன் எல்லாம் உன்னாலே!

இரவிலே தூக்கம் தொலைந்தேன்
படுக்கையை சுற்றி அலைந்தேன்
வகுப்பிலே தூங்கி வழிந்தேன் எல்லாம் உன்னாலே!

கட்டம் போட்ட ஒன்றா? - இல்லை
கோடு போட்ட ஒன்றா?
எந்தச் சட்டைப் போட? - என
முட்டிக்கொண்டேன் உன்னாலே!

பச்சை வண்ணப் பொட்டா - இல்லை
மஞ்சள் வண்ணப் பொட்டா
நெற்றி மேலே ரெண்டும் - நான்
ஒட்டிக்கொண்டேன் உன்னாலே!

கண்களில் மின்னிடும் காதலை... நான்

அன்றே கண்டேன் ஒருமுறை

நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை

நீயே சொன்னாய் மறுமுறை!

கவிதைகள் கிறுக்கிட வேண்டாம்

கசக்கியும் எறிந்திட வேண்டாம்

எறிந்ததை மீண்டும் பிரித்து சிரித்திட வேண்டாமே!

காற்றிலே முத்தம் வேண்டாம்
வார்த்தையில் அர்த்தம் வேண்டாம்
சுற்றிலும் சத்தம் போடும் ஏதும் வேண்டாமே!

சாலை ஓரத் தேநீர் - அது 
கோப்பை ரெண்டில் வேண்டாம்
பேருந்தேரும் போதும் - இனி
டிக்கெட் ரெண்டு வேண்டாமே!

பாறை மேலே ஏறி - நம்
பேரைத் தீட்ட வேண்டாம்
எல்லை கொஞ்சம் மீற - இனி
அச்சம் ஏதும் வேண்டாமே!

கண்களில் மின்னிடும் காதலை... நீ

அன்றே கண்டாய் ஒருமுறை

நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை

அதை சொன்னாய் மறுமுறை!

ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன் .

தப்பித் தொலைந்தே!
போகத் துடித்தேன்
உடன் யாரும் இல்லாத
தேசம் தேடிப் பிடித்தாய்.
 
இனி இனி - தனித்தனி உலகினில் 

இருவரும் உலவிடும் நிலையே வேண்டாமே!

இனி இனி - மனதினில் தேக்கிட

காதல் உண்டாக்கிடும் வலியே வேண்டாமே!
 
ஓரக் கண் பார்வை வேண்டாமே!
ஓரடி தூரம் வேண்டாமே!
மாறிடும் நேரம் வேண்டாமே!
ஊரிலே யாரும் வேண்டாமே!

கண்களில் மின்னிடும் காதலை... நான்
அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை
நானே சொன்னாய் மறுமுறை!.

பாடலை  தரவிறக்கம் செய்ய: இங்கே

Tuesday, October 9, 2012

பார்கோடு(Barcode) பயன்படுவது எப்படி?

நண்பர்கள்  அனைவருக்கும் வணக்கம். நீண்ட  நாட்களுக்குப் பிறகு மீண்டும் உங்களுடன் ஒருத்தகவலை பகிர்ந்துக்கொள்ள வந்துள்ளேன். நண்பர்கள் வருகைக்கும் தங்களுடைய பின்னுட்டதிற்கும் மிக்க நன்றி.

இப்போது நாம் வாங்கும் அனைத்து பொருட்களின் பின்புறமும் ஒரு பார்கோடு இருப்பதை நம்மில் எத்தினைப்பேர் கவனித்திருக்கிறிர்கள்.
ஆமாங்க ஒரு சட்டை வாங்கபோனால்கூட அதில் ஒரு பார்கோடு  இருக்கும்,அதுமட்டுமில்லாமல் உணவுப்பொருட்களிலும் இருக்கும் பால், காபி, சக்கரை, பருப்பு, அரிசி, உப்பு, புளி, மிளகாய் என்று எந்தப் பொருட்களைக் கடையில் வாங்கச் சென்றாலும் அதில் ஒரு பார்க்கோடு இருக்கும், சரி பார்க்கோடு இருப்பதால் என்ன பயன்? என்று உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் இருந்தாலும் தெரியாதவர்கள் சிலருக்காக சொல்கிறேன். பார்க்கோடு பயன்படுத்துவது   அதன் விலையை எளிதில் தெரிந்துக்கொள்ளவும், பிராண்ட் பெயர் மற்றும் அதன் வெயிட், இருப்பு எண்ணிக்கையை கணக்கிடவும், மிக ஈஸியாக விலைமதிப்பிடவும் இந்த பார்க்கோடு பயன்படுத்தும்முறை  முக்கிய பங்களிக்கிறது.
 ஒரு பொருளின் பின்புறத்தில் பார்க்கோடு மட்டும் இருந்தால் போதாது அதைத் தெரிந்துக்கொள்ள வேறு ஒரு கருவியும் தேவைப்படுகிறது.
Barcode Scanners


இதை பயன்படுத்திதான் மிக ஈஸியாக பொருட்களை விலைமதிப்பிட முடிகிறது. அப்படி என்றால் இதன் துணையில்லாமல் பார்க்கோடு பயன்படாதா? என்று கேட்பது புரிகிறது. முடியும், இந்த கருவிகளை பயன்படுத்தாமலும் பார்க்கோடு பயன்படுத்த முடியும். அதன் கீழ்புறம் பாருங்க

13 இலக்க (எண்களின் எண்ணிக்கை இடத்திற்கு தகுந்தாற்போல் மாறும்) எண்களும் இருக்கும் கவனியுங்கள் அதை வைத்தும் மேலே சொன்ன அனைத்தையும் தெரிந்துக்கொள்ளமுடியும். கொஞ்சம் சிரமமும், நேரமும் அதிகமாக தேவைப்படும். எண்களைப் பார்த்து பார்த்து பரிசோதிக்கப்பட்ட பிறகுதான் நிர்ணயிக்க முடியும்.

Barcode Scanners இருந்தால்போதும் எல்லா வேலைகளும் மிக ஈஸியாக முடிந்துவிடும், Scan செய்தால்போதும் வேலை முடிந்தது.


இப்படி நமது வாழ்க்கையில் தெரிந்தோ? தெரியாமலோ? தினம்தினம் பயன்படுத்தும் இந்த பார்க்கோடு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரியுமா? Wallace Flint அவர்களுக்கு 1932ம் ஆண்டு இப்படி ஒரு முறையை அறிமுகப்படுத்தினால் என்ன என்று தோன்றியது, ஆனால் அவரால் இதனை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போனது, அதன்பிறகு அவர் இந்த முயற்ச்சியை கைவிட்டுவிட்டார், பிறகு Joseph Woodland and Bernard Silver அந்த ஐடியாவை பயன்படுத்தி முயற்சியில் ஈடுபட்டனர் இவர்களின் விடாமுயற்ச்சியால் சில சோதனைகளில் Oct, 7, 1952 ல் தான் வெற்றிப்பெற்றது, ஆனால் பயன்படுத்த பல சிக்கல்கள் இருந்தன, இருந்தாலும் அவர்கள் வேறுபட்ட வழிகளில் பயன்படுத்திக் கொண்டிருந்தனர், அதன் பிறகு June 26th, 1974 ஆம் ஆண்டு ஒரு உணவு உற்பத்தி குழுவின் உதவியோடு ஒபாயோ சூப்பர் மார்க்கெட்டில்தான் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது. இப்படிதான் பார்க்கோடு பிறந்தது.
இன்று  தனது 60 வயதைக்கடந்து  61 வயதில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.

 Barcode Scanners பற்றி விரிவாகப் பார்ப்போம், வியாபாரிகள் கையில் எடுத்துக்கொண்டு ஆர்டர் செய்த பொருட்களை  பார்க்கோடு ஸ்கேன் செய்து சரியானதுதானா என்று பார்த்து வாங்க ஈஸியாக இருக்கும், அதற்காகவே சிறிய சைஸில் கண்டுபிடித்திருக்கிறார்கள், மேலே உள்ள படத்தில் காணலாம். அடுத்ததாக பணம் செலுத்துமிடத்தில் பொருட்களை எடுத்து காண்பித்தாலே போதும் உடனே ஸ்கேன் ஆயிடும், இது மிகப்பெரியது கையில் எடுக்கமுடியாது, ஒரு இடத்தில் பொருத்தி வைத்திருப்பார்கள். இதனுடம் துணையாக சின்ன கருவியையும் வைத்திருப்பார்கள், காரணம் சில பொருட்களை தூக்கி இதன் அருகில் காண்பிக்க முடியாது அப்படி உள்ள பொருட்களை துணைக்கருவிமூலம் ஸ்கேன் செய்தும் விலையை மதிப்பிடுவார்கள். படங்கள் உங்கள் பார்வைக்காக..



இது எல்லோரும் மிக ஈஸியாக பயன்படுத்தமுடியும், ஒருமுறை பார்த்தாலே போதும் அனைவரும் பயன்படுத்தலாம். மிக எளிமையானதும்கூட, சூப்பர் மார்கெட்டில் இதுபோல உள்ள பார்க்கோடு ஸ்கேனர்களே போதுமானது, இன்னும் பெரியப் பெரிய இடங்களில், அதாவது கார்கோ அனுப்பும் இடம், (ஏர்போர்ட்) விமானநிலையங்கள், துறைமுகங்கள் போன்ற இடங்களில் இதைவிடப் பெரியப் பெரிய ஸ்கேனர்கள் பயன்படுத்துகிறார்கள். பெரியப் பெரிய பார்சல்கள் வரும், அப்படி வரும் பொருட்களை பார்சல்களை பிரித்து ஒவ்வொன்றாக எடுத்து ஸ்கேன் செய்யமுடியாது அதனால் அதற்கு தகுந்தாற்போல் ஸ்கேனர்கள் பயன்படுத்துகிறார்கள். உங்கள் பார்வைக்காக ஒரு படம்
 


சில பார்சல்களை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் அவற்றை ஸ்கேன் செய்து பார்க்க சிறிய சாதாரண கருவியை பயன்படுத்தினால் போதும்.
இப்படிதான் மிக ஈஸியாக எல்லா வேலைகளும் முடிகிறது, இப்போது பல மொபைல் போன்களின் மூலமாகவும் பார்க்கோடு ஸ்கேன் செய்யமுடியும், அவ்ளோ ஈஸியாகிவிட்டது. எங்கும் எதிலும் இப்போது பார்க்கோடு இல்லாமல் இல்லை என்பதே உண்மை, சரி பார்க்கோடு, மற்றும் பார்க்கோடு ஸ்கேனர்கள் பற்றி பார்த்தோம், பார்க்கோடு எப்படி உருவாக்குவது என்று பார்ப்போமா? பார்க்கோடு பிரிண்ட் செய்ய தனியாக பிரிண்டர் இருக்கிறது, அதைப் பயன்படுத்தினால் போதும், சாதாரண பிரிண்டர்ஸ்ல பிரிண்ட் செய்த பார்க்கோடுகள் சரியாக வேலை செய்யாது, நமக்கு பொருட்க்களின்மீது ஒட்டுவதற்கு சிறிய சைஸில் பார்க்கோடு பிரிண்ட் செய்து எடுக்கவேண்டும்,
இந்தமாதிரியான பிரிண்ட்செய்த பார்க்கோடுகள் பார்சல்கள் மற்றும் அட்டைப் பெட்டிகளில் ஒட்டுவதற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மிக எளிதில் ஸ்கேன் செய்துவிடமுடியும், பிராண்டட் பொருட்களில் அதன் லேபல்கூடவே பார்க்கோடு பிரிண்ட் செய்து வந்துவிடும், இப்படி செய்ய செலவு அதிகம், அதிக எண்ணிக்கையில் வேண்டும் என்றால் மட்டும் இப்படி பிரிண்ட் செய்வார்கள்.
சாதரணமாக பேக் செய்யப்பட்டப் பொருட்க்களின்மீது ஒட்டுவதற்கு சிறிய சைஸ் போதும், ஒரு பொருளின்மீது இரண்டு பார்க்கோடுகள் ஒட்டக்கூடாது, அப்படி ஒட்டிய பொருட்கள் செல்லாதத, சில பொருட்களில் இரண்டு பார்க்கோடுகள் இருக்கும் ஆனால் ஒன்றை கட் செய்திருப்பார்கள், இந்த பார்க்கோடுமீது மார்க்கர் பென் கொண்டு சிறிதாக ஒரு கோடு வரைத்தாலே போதும் அது வொர்க் ஆகாது. ஸ்பெஷல் ஆபார் கொடுப்பதற்காகவோ அல்லது அதன் விலையில் மாற்றம் இருந்தாலோ அதன்மீது புதிய பார்க்கோடு ஒட்டி இருப்பார்கள்.
இதுவரை  சூப்பர்மார்கெட்டில் பார்க்கோடு எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி பார்த்தோம், பொருட்கள் வாங்கும்போதும் விற்கும்போதும் மிக எளிமையாக அதன் விலையை நிர்ணயிக்க முடியும். என்பதையும் பார்த்தோம், இனி நேரம் கிடைக்கும்போது ஐடி கார்டு, ஐடிசிப், இன்னும் நிறைய இருக்கிறது ஒவ்வொன்றாக சொல்கிறேன்.

அனைவருக்கும் மீண்டும் வணக்கம்.
உங்களுடைய கருத்துக்களையும் பதியவும்.

Tuesday, October 2, 2012

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும், இலவச இணைப்புகளும். Gitex.



All "Gitex" Shoppers க்கும் வணக்கம்.


இந்த வருடம் துபாய் "Gitex" விற்பனையில் என்ன என்ன Electronics Item's புதிய வரவுகள், என்ன என்ன இலவசமாக கிடைக்கிறது, எந்த கடையில் அதிக இலவசங்கள் கிடைக்கிறது, எந்த Brand Electronics பொருட்கள் மிக குறைந்த விலையில் கொடுக்கிறார்கள் என்பதை விரிவாகப் பார்ப்போம்.


                                   New venue
இந்த"Gitex"ல  மக்கள்  மிகவும் எதிர்பார்த்ததுன்னு பார்த்தால் Apple I phone 5, Widows 8, Android (Whats new), ext.. இப்படி பல புதிய வரவுகளை எதிர்பார்த்தனர்.
  
Dubai World Trade Center              என்கிற மாபெரும் இடத்தில் நடைபெறுகிறது. அகல பார்க்கிங் வசதியும், வண்டி இல்லாதவர்களுக்கு மெட்ரோவில் வந்துவிட வசதியாகவும், இன்னும் பல எமிரேட்ஸ்ல் இருந்து வருபவர்களுக்கு மிக ஈஸியான இடமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. வழி தெரியாதவர்கள் இங்கு சென்று வீடியோவில் பார்க்கவும்.
                  


              
இங்கு மட்டுமில்லாமல் துபையில் உள்ள எல்லா ஷாப்பிங்க் மால்களிலும் இதே விலையில் கிடைக்கும், அவரவர்களுக்கென்று ஒரு "Offer" அறிவித்திருப்பார்கள். நமக்கு எங்கு அதிக லாபம் கிடைக்கிறதோ அங்கு சென்று வாங்கிக்கலாம், சரி வாங்க முதலில் துபாய் வேர்ல்ட் ட்ரேட் சென்டரில் உள்ள விபரங்களை பார்ப்போம். இங்கு உள்ளே செல்வதற்கு கட்டணமாக 30 திராம்ஸ்  செலுத்தவேண்டும். 5 வயது வரை இலவசம், 5 வயது முதல் ஒவ்வொருவருக்கும் 30 திராம்ஸ் கட்டணம் செலுத்தவேண்டும். "Students" பள்ளி, கல்லூரி மாணவர்கள் Visit ற்கு  சிறப்புச் சலுகைகள்  உண்டு. 30 செப்டம்பர் காலை 11 முதல், மதியம் 2 வரையும்,  4 அக்டோபர் காலை 11 முதல், மதியம் 2 வரையும் அனுமதிக்கப் படுகிறார்கள், இதற்கு மிக குறைந்த கட்டணமாக 10 திராம்ஸ், குறைந்தது பேர் கொண்ட குழுவாக இருக்கவேண்டும் என்பதுதான் நிபந்தனை.

 நேரம்:
Saturday29 September11am - 10pm
Sunday30 September11am - 10pm
Monday1 October11am - 10pm
Tuesday2 October11am - 10pm
Wednesday3 October11am - 10pm
Thursday 4 October11am - 11pm
Friday (OPEN EARLY THIS YEAR!)5 October11am  - 11pm
Saturday 6 October11am - 11pm

 Shop & Win;  Visit & Win and Mega Draw

இங்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு வின்னர்ஸ் தேர்ந்தெடுப்பார்கள், நாம் அங்கு சென்ற டிக்கெட் மூலமாகவும், நாம் ஏதாவது ஒரு பொருளை வாங்கினாலும், இன்னும் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தாலும் எதிர்பார்க்காத பலவிதமான பொருட்களை வென்றிட வாய்ப்பு இருக்கிறது.

Variety of products from 7 major categories available under one roof!
இங்கு Electronics பொருட்களை 7 பிரிவுகளாக வைத்திருப்பார்கள். நாம் எந்த மாதிரியான பொருள்கள் வாங்க போகிறோம் என்பதை முடிவுசெய்துவிட்டால் போதும், அங்கு சென்று பல "Brand" பொருட்களும்,பல பல விலைகளில் இருக்கும், நம்ம பட்ஜெட்க்கு தகுந்ததை தேர்வுசெய்துக் கொள்ளலாம். அந்த பொருட்கள்கூட சில இலவச இணைப்பையும் பெறமுடியும்.

மன்னிக்கவும் இந்த பிரிவுகளில் உள்ளவற்றை தமிழில் சொல்வதைவிட ஆங்கிலத்தில்தான் வெகு எளிமையாக புரிந்துகொள்ள முடியும் என்பதால் இவற்றை ஆங்கிலத்தில் படிக்கவும்.
                                                 Home world 
 Air Conditioners, Air Purifiers & De-Humidifiers, Bread Makers, Cooking Ranges, Dishwashers, Electronic Equipment, Food Processors, Freezers, Home Appliances, Irons, Kettles, Kitchen Equipment, Microwaves, Refrigerators, Toasters, Vacuum Cleaners, Ventilation Systems, Washers & Dryers, Washing Machines, Water Filters & Dispensers, Water Heaters

                                                 Consumer Electronics 
Acoustic Equipment & Systems, Audio/Video Equipment, Hi-Fi Systems, Home Electronics, Intelligent Homes, Karaoke, LCD/Plasma, Musical Instruments

                                                  IT 
Accessories & Peripherals, Computer Equipment, Computer Furniture, Communications, Components, Data Storage Media, Desktops, Education & Training, Electronic Media, Hardware, Keyboards, Laptops, Logistics, Monitors, Online Resources, Personal Computers, Publishing, Software

                                                   Digital Mobility 
Digital Imaging, Digital Technology Products, Mobile Phones & Accessories, Navigation Systems, Notebooks, Palmtops, PDAs, Pocket PCs, Telecommunication Equipment

                                                   Office Automation 
Conferencing Equipment, CCTV & Surveillance Equipment, Networking, Office Equipment, Photocopy Equipment, Printers, Scanners, Security Equipment, Stationery, Teleconferencing, Online Resources, Wireless Technology, Work Stations

                                                    Leisure & Lifestyle 
 Automotive Enhancements, Calculators & Memory Banks, Cameras & Photographic Equipment, Clocks & Watches, Corporate Gifts & Requisites, Dental Care, Digital Receivers, Electronic Fashion Accessories, Electrical Grooming Products, Electronic Gadgets & Equipment, Fibre Optics, Games & Puzzles, Global Positioning Systems, Health & Beauty Products, Lifestyle Products & Accessories, Laser, Plug’n’Play, Remote Control Gadgets, Special Needs Aids, USB Gadgets, Wireless Devices

                                                  Gaming 
Animation, DVD/VCD/MP3/AV/I-pods, Blue-Ray, Electronic Games & Entertainment. Gaming Consoles, Game Developers & Resellers, Gaming Hardware/Software, High Definition Formats, Game Packages, Media Sound Cards, Mobile Gaming, Movies, Multimedia, Online Gaming, PC Games, Video Games

இப்படி  அனைத்து வகையான பொருட்களையும் தனித்தனிப் பிரிவுகளாக பிரித்து வைத்திருப்பார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக வரும் காட்சிகள். சில படங்கள் உங்கள் பார்வைக்காக...இந்த வருடம் இதுவரையில் பிஸ்னஸ்ல அவ்ளோ முனேற்றம் இல்லை என்பதே கடைக்காரர்களின் கருத்து.


Windows 8
HP, ASUS இந்த பிராண்ட் லேப்டாப்பில் VISION AMD Procerssor உள்ள லேப்டாப்பில் மட்டும்தான் வெளியிட்டுள்ளார்கள், அதன் முழுவிபரங்கள் இன்னும் தெரியவில்லை. மற்ற லேப்டோப்களில் பெரிய மாற்றங்கள் ஒன்றும் இல்லை, Beats Audios, Blue Ray Drive, 3D LED இப்படிதான் முனேற்றம் காணமுடிந்தது, அவரவர்களுக்கென்று சில  இலவசத்துடன் விற்பனைக்கு இறங்கி இருக்கிறார்கள்.


Sharaf DG 


இவர்கள் "SHOP ALL YOU CAN AED 20 MILLION WORTH OF FREE GIFTS! இவர்கள் இப்படி ஒரு விளம்பரத்தோடு விற்பனைக்கு வந்திருக்கிறார்கள், துபாய் வேர்ல்ட் ட்ரேட் செனட்டர்க்கு அப்பறம் இங்குதான் கூட்டம் அலைமோதுகிறது, காரணம் இவர்களின் அறிவிப்புகள்தான் Samsung Galaxy nexus phone



Samsung GTI9250 Galaxy Nexus Smartphone

: SAMSUNG
SAMSUNG GTI9250 GALAXY NEXUS SMARTPHONE TITANIUM SILVER
Old Price : AED 2449, Now  : AED 999.00
 
இப்படி ஒரு விளம்பரத்தை பார்த்தவுடன் மக்கள் கூட்டம் அங்குதான் முதலில் சென்றது, ஒரு மணி நேரத்தில் தீர்ந்துவிட்டதாம், இப்ப எந்த கடையில் கேட்டாலும் ஸ்டாக் இல்லை என்றே பதில் வருகிறது. இது இல்லாமல் இன்னும் நிறைய இருக்கு.
Nikon D3200 Digital SLR, 24.2 Megapixel, 4 frames per second, Expeed 3 Processing, Full HD
இந்த கேமராவுடன் Apple Ipad 2, 16 GB WiFi முற்றிலும் இலவசம் +4GB card,Case இதுவும் இலவசமாக கிடைக்கும். விலை AED 3499 , கேமரா விலையில் ஐ பாடு இலவசம், எந்த லேப்டாப் வாங்கினாலும் + Mouse+Headset+Carry Case+antivirus free.
லேப்டாப்  வாங்குபவர்களுக்கு திராம்ஸ் AED 2799 and Above 
Carry Case+Mouse+Headset+Bit Defender+ 7" Tablet இலவசமாக கிடைக்கும், திராம்ஸ் 2499 லிருந்து 2798 வரையில் உள்ள லேப்டாப்க்களை வாங்குபவர்களுக்கு
Carry Case+Mouse+Headset+Bit Defender+ Nikon Camera வும்,  AED 1999 லிருந்து 2498 வரையில் உள்ள லேப்டாப்க்களை வாங்குபவர்களுக்கு Carry Case+Mouse+Headset+Bit Defender+500GB External Hard Drive ம், AED 1599லிருந்து  1998 வரையுள்ள லேப்டாப்களுக்கு Case+Mouse+Headset+Bit Defender+ Microsoft Office 2010 ம் இலவசமாக கிடைக்கும். இது இல்லாமல் சில கிப்ட் பொருட்களும் கிடைக்கிறது.



சில படங்கள் உங்கள் காட்சிக்காக..இன்னும் போன் வாங்கினால், சிம் கார்டு இலவசம்+ ஒரு சின்ன போன் இலவசம்+ ப்ளூடூத் இப்படி நிறையவே இருக்கிறது. LED, 3D LED TV களும் மிக குறைந்த விலையிலும், புதிய மாடல்களும் கிடைக்கிறது. குளிர்சாதனப் பெட்டிகள், வாங்கும்போது மைக்ரோ ஓவன் இலவசமாக கிடைக்கிறது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த நாளின் வருகைக்காக மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள், போன் வாங்கனுமா? லேப்டாப் வாங்கனுமா? குளிர்சாதனப்பெட்டி வாங்கனுமா? கொஞ்சம்வெயிட் பண்ணுங்க Gitex வரட்டும் ஏதாவது இலவசமாகக் கிடைக்கும் அல்லது விலை குறைவாக கிடைக்கும் என்றுஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வார்கள். அப்படி ஒரு திருவிழாதான் இப்போது துபையில் நடைபெறுகிறது. இன்னும் எழுத நிறைய இருக்கு எதை எழுதுவது எதைவிடுவதென்றே தெரியவில்லை.

APPLE I PHONE 5

இதன் விலை என்ன இருந்தாலும் பரவாயில்லை இந்த போனைத்தான்  வாங்குவேன் என்று காத்திருந்தவர்கள் எதிர்ப்பார்த்ததைவிட அதிகம் என்றுதான் சொல்லவேண்டும், காரணம் அதன் விற்பனை சூடு பிடித்திருந்தது



இதன் விலை 3900 முதல் 5500 வரை அதன் மெமரி மற்றும், கலர் அடிப்படையில் விற்கப்பட்டது. இந்த போனை பற்றி எல்லோருக்கும் தெரிந்ததே அதிகம் சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். 

இதுபோல் பல ஷாப்பிங் மால்களிலும் பல பல இசவசங்களுடன் விற்பனை தொடர்கிறது. சில மால்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் இணைத்திருக்கும் இலவசங்களும் படம் மூலம் உங்கள் பார்வைக்கு. 
(படங்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து)
எழுத  நிறைய இருக்கு, இப்போதைக்குப் போதும் என்று நினைக்கிறேன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இன்னும் இதுபோல் பலவிதமான பொருட்களின் விற்பனைகள் நடப்பதை உங்களுடன் பகிர்கிறேன்.
வணக்கம்.